You are on page 1of 5

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்ப்படங்களைத் துணைகொண்டு 80 சொற்களுக்குக் குறையாமல் ஒரு

சிறுகதை எழுதுக.

யோசிக்காமல் மின்னலென பறக்க ஆயுத்தமானான் குமரன். ராமுவோ தலை தெறிக்கும் வேகத்தில்

மிதிவண்டியை ஓட்ட் ஆரம்பித்தான். தன் நண்பர்களின் செயலைக் கண்ட ரவி, உடனே அவர்களை

எச்ரித்து மிதிவண்டியைக் கேட்டு, மகுடிக்கு அடங்கிய பாம்பைப் போல் ராமுவும் குமரனும்


தங்களின் மிதிவண்டியைக் கவனமாகவும் பாதுகாப்பாகவும் செலுத்திக் கொண்டிருந்தனர்.

இதமான இயற்கை காற்றைச் சுவாசித்தபடியே மூவரும் மிதிவண்டியைச் செலுத்துகையில்


திடீரெனக் கட்டுபாட்டை இழந்த ஒரு மகிழுந்து மோட்டர் சைக்கிளில் வந்த பெரியவரை மோதியது.
அவ்விடமே பெரும் சத்தத்தில் அதிர்ந்தது. அச்சம்பவத்தைக் கண்ட முவரும் ஒரு நிமிடத்தில்
அதிச்சியில் ஆடி போயினர். ஆனால், மோதிய வாகன்மோ ஒன்றும் நடந்திராதது போல சிட்டாய்
பறந்தது.

அதிர்ச்சியில் மூழ்கியிருந்த மூவரும் உடனே சூழ்நிலையைச் சுதாகரித்துக் கொண்டு


பெரியவருக்கு உதவ முனைந்தனர். அவ்வழியே வந்த வாடகை வண்டியை நிறுத்த முற்பட்டான்
ராமு. பெரியவரின் உடல் முழுவதும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது. இரத்தம் கசிந்த
வண்ணமாக அப்பெரியவரை வாடகை வண்டியில் அமர வைத்து மின்னலாய் மருத்துவனை
நோக்கி விரந்தனர்.

வாடகை வண்டி ஓட்டுனர் விபத்துக்குள்ளானவரை விரைவாக அருகில் இருந்த


மருத்துவமனையில் சேர்த்தார். அப்பெரியவருக்குக் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்
கூறினார். பின் அவருக்குக் காலில் கட்டுப் போடப்பட்டது. மற்ற காயங்களுக்கும் மருந்துகள்
போடப்பட்டன. சுயநினைவு வந்தவுடன் அப்பெரியவர் முவருக்கும் மனதார் நன்றி நவிழ்ந்தார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிப்படத்தைத் துணைகொண்டு 80 சொற்களுக்குக் குறையாமல் ஒரு


சிறுகதை எழுதுக.
அது ஓர் இதமான மாலை பொழுது சூரியன் தனது கரத்தை நீட்டி இரவு பொழுதை வா! வா! என்று
அழைத்தது. சில்லென்ற காற்று இதமாக இருந்தது. வேலை நேரம் முடிந்து மாலை சந்தையிலிருந்து மக்கள்
வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பறவைகள் கூட்ட்ம் கூட்டமாகப் பறந்து தத்தம் கூடுகளுக்குத் திரும்புவது
போல மாலை நேரப் பள்ளி முடிந்து மாணவர்களும் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

வழக்கம் போல ரகு, முகில், பராம் ஆகிய மூவரும் இணைந்தே ஆசிரியர் கொடுத்த வீட்டுப்
பாடங்கள் சார்ந்து பேசிக் கொண்டே நடந்தனர். அப்பொழுது ஒரு பெண்மணி சந்தையிலிருந்து ஒரு கூடை
நிறைய புத்தம் புதிய பசுமையான காய்கறிகளோடு தள்ளாடி சாலையில் விழுவதைக் கண்டனர்.

“இவர் என் அண்டை வீட்டார் போலத் தெரிகிறதே” என்று சந்தேகத்தோடு அப்பெண்மணியை நோக்கி
ஓடினான் முகில்.

”பாவம் இந்தப் பெண்மணி இவருக்கு நாம் உதவி செய்வதுதான் சிறப்பு” என்று கூறினான் பராம்.

“நான் தாமதமாக வீட்டிற்குச் சென்றால் அம்மா கோபம் கொள்வார்” என்று கவலை பட்டான் ரகு. தான்
நல்ல நோக்கத்திற்காகத்தான் தாமதமாக வீடு திரும்பினால் கண்டிப்பாக அம்மா கோபம் கொள்ளாமல்
பாராட்டுவார் என்று மனதிற்குச் சமாதானம் கூறி அப்பெண்மணிக்கு உதவ முனைந்தான்.

முகிலன் அப்பெண்மணியைத் தூக்கி விட்டான். ரகு சிதறிய காய்கறிகளைக் கூடையில் போட்டான்.


பராம் அப்பெண்மணிக்கு அருந்த நீர் கொடுத்தான். அப்பெண்மணி சற்று தலை சுற்றலாக இருந்ததாகக்
கூறினார். தற்போது சரியாகி விட்டதாகக் கூறியவுடன்தான் முகில் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
அப்பெண்மணி அம்மூவருக்கும் நன்றி கூறி பாராட்டினார பின்னார், நால்வரும் பேசிக் கொண்டே தத்தம்
இல்லங்களுக்குத் திரும்பினர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்ப்படங்களைத் துணைகொண்டு 80 சொற்களுக்குக் குறையாமல் ஒரு
சிறுகதை எழுதுக.

உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. “பசி தாங்க முடியவில்லை, வீடு திரும்பியது அம்மா
சமையலை ஒரு வெட்டு வெட்டிடனும்” என்று ஒரே மூச்சாக ஓட்டமும் நடையுமாகப் பரபரப்பாக வீடு
திரும்பிக் கொண்டிருந்தான் கதிரவன். அப்பொழுது கறும் புகையுடன் வேகமாகத் தீப்பற்றி எரியும் வீட்டைக்
கண்டான் கதிரவன். கதிரவன் செய்வதறியாது சிலையானான், சூழ்நிலையைச் சுதாகரித்துக் கொண்டு
சமயொசித புத்தியுடன் செயல்பட தீர்மானித்தான். அறிவுக்கு விஷயம் மெல்ல மெல்லப் புரியத்
தொடங்கியது. மன மாற்றத்திற்கு விதை விதைத்தது.

உடனே, சுற்றும் முற்றும் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. சற்று
தொலைவில் இருக்கும் பொது தொலைபேசியின் மூலம் தீயணைப்பு நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு
விபரத்தைக் கூற முடிவெடுத்தான். இரண்டெட்டில் ஓடி அவசர எண் 999 என்ற இலக்கத்தை அழுத்தி
பதற்றத்திலும் விபரத்தைத் தெளிவாகத் தெரிவித்தான். அம்பு போல் தீயணைப்பு வண்டியும் விரைந்து
சம்பவம் நடக்கும் இடத்தை நோக்கி வந்தடைந்தது. தீயணைப்பு வீரர்களும் தங்களின் அயராத பணியைச்
செவ்வனே செய்ய மின்னல் வேகத்தில் களம் இறங்கினர். வீட்டு உரிமையாளர் தனது வேலை முடிந்து வீடு
திரும்பியதும் தமது வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு கண்கள் அகல விரிந்தன. அதில் வியப்புக்குறியும்
கேள்விக்குறியும் தென்பட்டன. அவருடய மனைவியின் கண்ணீர் துளிகள் கன்னங்களை நனைத்தன.
கதிரவனால் பார்ப்பதற்கே முடியவில்லை. பின்னர், கதிரவன் நடந்தவற்றை வீட்டு உரிமையாளரிடம்
கூறினான்

வீட்டு உரிமையாளர் திரு.கார்த்திக் கதிரவனுக்கு நன்றி கூறினார். தீயணைப்பு அதிகாரி கதிரவனின்


சமயோசிதச் சிந்தனைக்கு வாழ்த்து கூறினார். கதிரவன் ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினான். தன்
தந்தையிடம் சொல்லி திரு.கார்த்திக் அவர்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் என தீர்மானித்தான். பசியில்
வாடிய வயிறு கதிரவனுக்கு இப்பொழுது வயிறு நிரம்பி விட்டது போல தோன்றியது. நற்காரியம் ஒன்றை
செவ்வனே செய்த திருப்தியில் வீடு கதிரவன்.

You might also like