You are on page 1of 5

அதிர்ஷ்ட வரம் பெற்ற ஓர் ஏழை சிறுவன்

மலையில் இருக்கும் மரங்களின் செழிப்பான காட்சி கண்களைக் கவர்ந்தது.

சில்லென்ற காற்றில் பறவைகள் கீ ச்சிடும் ஓசை காதுக்கு இனிமையாக

இருந்தது. அங்குள்ள பூந்தோட்டத்தில் பூத்த பூக்களின் மணம் மூக்கை

துளைத்தன. மாமரத்தில் காய்த்த மாம்பழங்களின் சுவையை ருசிக்கும் போது

வாய் ஊறியது.

திடீரென்று, கிராமத்தில் கடல் சுனாமி ஏற்பட்டது. கடற்கரையில்

விளையாடியவர்களில் சிவாவின் குடும்பத்தினரும் இருந்தனர். சுனாமி

தாக்கியபோது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டனர். சிவாவும்

அவனது பாட்டியும் ஒரு பக்கம் மற்றும் அவனது பெற்றோர் மற்றும் அவனது

தம்பியும் மற்றொரு பக்கம்.

இரண்டு வருடங்கள் கழித்து, சிவாவின் பாட்டி எண்ணத்தில் கண்ண ீர் விட்டார்.

பள்ளி முடிந்ததும் நாளிதழ்களை விற்பனை செய்து சிவா, தன்னுடைய பாட்டி

அழுவதைக் கண்டதும் வாசலில் இருந்து ஓடி வந்தான்.

"ஏன் பாட்டி அழுறிங்க?" சிவா சோகமாக கேட்டான். "ஒன்னும்மில்லப்பா....

நம்ப குடும்பத்திற்கு என்ன ஆனது ஞாபகம் இருக்கா?" என்று பாட்டி

அழுதப்படியே கேட்டார். "அதையெல்லாம் விட்டுவிடுங்கள் பாட்டி,

உங்களுக்காக விறகு வெட்டிட்டு வரச் சொன்னிங்க!" சிவா விறகுகளைக்

காட்டினான்.

"நீ இவ்வளவு கஷ்டப்படுறியே உன் அப்பா அம்மா இருந்தந்தா?" என்று மீ ண்டும்

பாட்டி முடிந்த கதையை திரும்ப ஆரம்பித்தார்.

"ஐயோ பாட்டி!!! அத விடுங்க பாட்டி" என்று கவலையாகச் சிவா கூறினான்.


பள்ளி முடிந்து சிவா,வரும் வழியில் நாளிதழ்கள் விற்று ஒரு காட்டில் விறகு

வெட்டி அங்குள்ள ஓர் ஆலமரத்தடியில் விட்டு தூங்கி பிறகுதான் வடு


திரும்புவான்.

அந்த அடர்ந்த காடு மயான அமைதியுடன் இருக்கும்.அவ்வப்போது பறவைகள்

கீ ச்சிடும் சத்தம்,சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் என்றுப் பலவிதமான சத்தங்கள்

கேட்கும்.

ஒரு நாள், சிவா வழக்கம்போல் விறகு வெட்டி விட்டு, அவன்

எப்பொழுதும் தூங்கும் ஆலமரத்தடியில் தூங்கி கொண்டிருந்தான்.

திடீரென்று,மழை பெய ஆரம்பித்தது வேகமாக ஓடி பக்கத்தில் உள்ள ஒரு

குகையில் நுழைந்து மழையிருந்து நழுவினான் சிவா.

எப்பொழுதும் சிவா தூங்கும் ஆலமரத்தடியின் பக்கத்தில்தான் அக்குகை

இருக்கும். அக்குகையிலிருந்து ஒரு வினோதமான குரல்

கேட்கும்.வினோதமாக இருந்தாலும் அக்குறல் மிகவும் இனிமையாக

இருக்கும்.

அங்கு சிவா நடந்து போனாலே அக்குரல் சிவாவை அழைக்கும்.இன்று

அவன் குகையினுள் இருப்பதனால், யார்தான் அவனை அழைப்பது என்று

அறிவதற்கு ஆர்வமுடன் சிவா குகையினுள் இன்னும் ஆழமாக

நுழைந்தான்.

நுழைய நுழைய குகை இன்னும் இருட்டாகிறதே நான் என்ன செய்வேன்?"

என்று மனபடபடப்புடன் கூறிக்கொண்டே நடந்தான் சிவா.அவன் பேசுவதை

வௌவால்கள் பயத்தில் அங்கும் இங்கும் பறந்தன.

பயத்தில் கத்திய சிவா "ஐயோ ...அம்மா ....அப்பா ..." என்று

கதறினான்.இருட்டில் வௌவால்களின் கண்கள் சிவப்பாக இருந்ததால்


சிவா இன்னும் சத்தமாக கத்தினான்.அதன்பிறகு மௌனமாகவே

குகையினுள் நடந்து சென்றான்.

குகை தொடர்ந்து ஆழமாக சென்றது. சிவா நடந்து நடந்து களைத்து

போனான், இருந்தாலும் அக்குரல் அழைக்கும் ஓசை தொடர்ந்து கேட்டுக்

கொண்டுதான் இருந்தது.

இறுதியாக, குகையின் இறுதிக்கு வந்த பிறகு, அங்கே ஓர் அழகான குளம்

இருந்தது. அதன்னுள் ஓர் அற்புத விளக்கு இருந்தது. பயந்தவாறு கையை

அந்த சுத்தமான நீர் குளத்தினுள் விட்டான் சிவா.குளத்தினுள் உள்ள அற்புத

விளக்கை எடுக்க முயற்சித்தான். குளத்தின் நடுவில் இருந்த அற்புத விளக்கை

சிவா தொட்டவுடன் அந்த குளம் ஒளிர ஆரம்பித்தது.

"ஆஹா! என்ன அதிசயம்? என்ன அற்புதம்?" என்று வியந்தான் சிவா.

அவனின் தாகத்தைத் தீர்ப்பதற்கு குளத்தில் உள்ள நீரை குடித்தான்.பிறகு,

அற்புத விளக்கு நனைத்திருப்பதைக் கண்ட சிவா தனது சட்டையால் அதை

துடைத்தான்.அவனின் சட்டையால் அதை துடைத்தவுடன் அந்த அற்புத

விளக்கு ஒளிர்ந்தது.

திடிரென்று, ஒர் அழகான தேவதை பறந்து வந்தாள். "சிறுவனே மிக்க நன்றி,

நான் கடந்த 12 வருடங்களாக இவ்விளக்கினுள் மாட்டியிருதேன். சூனியக்காரி

ஒருத்தி என்னை மந்திரத்தால் கட்டுப்படுத்தி இந்த அற்புத விளக்கினுள்

பூட்டினாள். மிக்க நன்றி. நீதான் என்னைக் காப்பாற்றினாய், நன்றி...!" என்று

அந்த அழகான தேவதை இனிமையான குரலில் தன்னைப் பற்றியும்

தன்னுடைய நன்றியையும் கூறினாள்.

"வணங்குகிறேன் தேவதையே, உங்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சி

அடைகிறேன்" என்று கூறிய சிவா, தேவதையை வணங்கிவிட்டு மழையின்


நிலையை அறிய வேகமாகக் குகையின் நுழைவாய் பகுதிக்கு ஓடி

வந்தான்.கனத்த மழை பெய்துக் கொண்டேதான் இருந்தது.

"ஐயோ, இன்னும் தான் மழை பெய்யுது! இப்ப எப்படி நா வட்டுக்கு


ீ போய்

பாட்டிக்கு உதவி செய்வேன்?" என்று சிவா வருந்தினான்.

அற்புத தேவதை அவனை அழைப்பதை உணர்ந்தான் சிவா. வேகமாக குகையின் இறுதி வரை ஓடி

வந்து, "தேவதையே ஏன் என்னை அழைத்தரீ ்கள்?" என்றுக் கேட்டான்.

"சிறுவனே என்னைக் காப்பாற்றிய உனக்கு என்ன வரம் வேண்டும் என்னிடம் கேள், நான் அதை

நிறைவேற்றுகிறேன்." என்று கூறினாள் தேவதை.

"தேவதையே, எனக்கு எந்த ஒரு வரமும் வேண்டாம். என்னையும் என் பாட்டியையும் ஆரோக்கியத்துடன்

் ாதம் செய்யுங்கள், அது போதும்." என்று கூறிவிட்டு திரும்பினான்.


நலமாகவும் இருக்க ஆசீரவ

“சிவா நில்! எனக்கு உன்னை பற்றி எல்லாம் தெரியும். பேராசை இல்லாத உன் மனதிற்கு நான் இந்த

அற்புத பையை உனக்கு பரிசாக தருகிறேன். இந்த பையில் செல்வங்கள் உள்ளது. உதாரணத்திற்கு,

வைரம், வைடூரியம், தங்கம், பொற்காசு, வெள்ளி மற்றும் நீ எதிர்பார்காத அளவிற்கு பணம் உள்ளது."

என்று கூறினாள் தேவதை.

தொடர்ந்து அவள் "நீ உன்னுடைய கையை இதில் விடும் போதெல்லாம் செல்வம் வரும். இதனால், நீ

நாளிதழ் விற்கும் வேலையோ விறகு வெட்டும் வேலையோ செய்ய தேவையில்லை” என்று சிவாவை

விடாத சொல்லி முடித்தாள் தேவதை.

"உன் குடும்ப உறுப்பினர்கள் இன்னும் இறக்கவில்லை அவர்களும் நீயும் உன் பாட்டியையும் போல் கடலுக்கு

மறுபக்கம் சென்றுவிட்டார்கள், இப்பொழுது இந்த காட்டிற்கு மறுபக்கம்தான் இருக்கிறார்கள்.

இப்பொழுது நான் ஒரு மானாக மாறுவேன். நீ என்னை பின்தொடர்நது


் வா!!..." என்று கூறிய தேவதை

மானாக மாறினாள்.

"நன்றி தேவதையே, மிக்க நன்றி!" என்று கூறிவிட்டு மானாக மாறிய தேவதையைப் பின்தொடர்ந்து

சென்ற சிவா களைத்துப் போனான்.


"தேவதையே உங்களிடம் உணவு ஏதாவது உண்டா?" என்று களைத்து போன சிவா கேட்டான். மானாக

மாறிய தேவதை இரண்டு சுவையான மாம்பழங்களை கொடுத்தாள். 2 மாம்பழங்களையும் சாப்பிட்ட

சிவா, "இன்னும் உண்டா" என்று பசியில் மீண்டும் கேட்டான் தேவதையும் அவனுக்கு கொடுத்தாள்.

3 மணி நேரத்தில் சிவாவின் பெற்றோர்களின் வீடு வந்தது. மாளிகையைப் போல் உள்ள வீட்டின் வாசலில்

சிவாவும் தேவதையும் நின்றனர். "சிவா இதுதான் உன் வீடு" என்று கூறிவிட்டு தேவதை மறைந்து

போனாள்.

"நன்றி தேவதையே" என்று கூறிவிட்டு வீட்டினுள் நுழைந்து "அம்மா.... அப்பா.... நா சிவா

வந்துருக்கேன்" என்றான் சிவா. "சிவா!!!" என்று இருவரும் அவனை கட்டி அணைத்து முத்தமிட்டனர்.

"எங்கப்பா பாட்டி?" என்று அம்மா கேட்டார். "அம்மா பாட்டி வீட்டுல இருக்காங்க" என்று கூறினான் சிவா.

"சரி நம்ப பொய் பாட்டிய கூட்டிட்டு வரலாம்." அரை மணி நேரத்தில் வீட்டின் முன் அவர்கள் நின்றனர்.

சிவாவை கண்ட பாட்டி "எங்கப்பா போனே? ஏன் இவ்வளவு நேரம் ஆச்சு?" என்று ஒரே நேரத்தில் 100

கேள்விகளை கேட்டார் பாட்டி. சிவாவின் பின் அவனின் பெற்றோர்களையும் அவனின் தம்பியையும்

பார்த்ததும் பாட்டியின் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது. சிவா அக்காசு பையைப் பற்றி

குடும்பத்தினர் அனைவரிடமும் சொன்னான். அனைவரும் அதிர்சச


் ியில் மூழ்கி, இது கடவுளின் செயல்

என்றனர்.

மீண்டும் சேர்தத ் வந்தனர்.


் அக்குடும்பம் அதிக செல்வாக்குத்துடனும் அதிக மகிழ்ச்சியுடனும் வாழ்நது

You might also like