You are on page 1of 13

எந்த ஒரு ஜாதகத்தின் கணிப்பின் தொடக்கத்தில் இந்த வரிகள்

எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்....

‘ஜனனி ஜன்ம சவுக்யானம், வர்த்தனி குல சம்பதம்


பதவம்
ீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா”

இதன் பொருள்: இந்த ஜன்மத்தில் ஒரு மனிதன் அடையக்கூடிய நன்மை


தீமைகள் அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்யத்தை கணக்கிட்டே
நம்முடைய ஜாதகக் கட்டத்தில் சங்கேதமாக குறிக்கப்பட்டிருக்கும்.
முந்தைய பிறவியில் நம்முடைய பாவ புண்ணிய கணக்கு தான்
நம்முடைய ஜாதகம். அதை கழிக்க தான் இந்த கர்ம பூமியில் பிறவி
எடுத்துள்ளோம்.

அதனால் ஜாதகம் என்பதே நம்முடைய பூர்வ புண்ணிய கணக்கு என்று


சொல்லலாம். “ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு.,,,,,இறைவன்
போட்ட கணக்கு மாறவில்லை...”ன்னு ஒரு பாட்டே வரும்...கேட்டு
இருக்கீ ங்களா?

அப்படிப்பட்ட மாற்ற முடியாத கணக்கு நோட்டான ஜாதகப்படி ஒருவரின்


தொழிலை கணிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலை தான். வேத
கால முனிவர்கள் அதற்கான சூத்திரங்களை ஜோதிடத்தில் மறைத்தே
வைத்திருகிறார்கள்.அந்த புதிரை விடுவிக்க “புத்தி காரகன்” எனப்படும்
புதன் பகவானின் அனுக்கிரகம் தேவை. அதற்க்கும் முன்னதாக ஜோதிடம்
அறிந்துக் கொள்ளவே புதனின் அருளாசி வேண்டும். அது இல்லாது
ஜாதகம் கணித்தால் பிழை ஏற்படும் காரணம் இதுவே. ஈஸ்வரனின்
கருணையினால், புரிந்து கொள்ளும் ஞானம் இருக்குமானால், வேத கால
நாடி ஜோதிடம் வெகு எளிமையாகவே இருக்கும்.

ஒருவர் செய்யும் . தொழிலைக் குறிக்கும் பத்தாவது வட்டோடு


ீ எந்தக்
கிரகம் தொடர்பு கொள்கிறது என்பதை கொஞ்சம் நுணுக்கமாக ஆராய
வேண்டும். எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற அவரின் லக்னம்,
லக்னாதிபதி நல்ல அமைப்பில் இருக்க வேண்டும். லக்னாதிபதி
வலுவிழந்து இருந்தால், அதன் அடுத்த இணை அமைப்பான ராசியாவது
வலுவாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டும் வலுவாக இல்லை என்றால் ?


வேறென்ன... வாழ்க்கையில் எதையும் சாதிக்க வேண்டும் என்கின்ற
முனைப்பு இருக்காது. தன்னம்பிக்கையின்றி, ஒரு குறிக்கோள் இல்லாமல்
காலத்தை கழிப்பார்.
அதை விட முக்கியமானது ஒன்று...ராசி , லக்கினத்தில் எது
கெட்டிருக்கிறதோ இல்லையோ ... ஜோதிடத்தில் பிதாகாரகன்,
மாத்ருகாரகன் எனப்படும் சூரியனும் சந்திரனும் மட்டும் வலுவிழந்து
இருக்க கூடாது. இந்த பிரபஞ்சமே சூரியனை தான் மையமாக கொண்டு
சுற்றி வரும்போது, அதன் ஒளியை பிரதிபலிக்கும் சந்திரனும் ஆன, இந்த
இரண்டு கிரகங்களும் வலுவின்றி போனால், ஜாதகரின் வாழ்வும்
அப்படியே.ஆகும்...ஏனென்றால், தொழில் விஷயத்தில் ஒருவருக்கு
தேவையான விடாமுயற்சியையும், ஊக்கத்தையும்
தன்னம்பிக்கையையும் கொடுப்பது சூரியன் என்றால் சந்திரன் இதற்கு
உறுதுணையான மனோபலத்தை அருள்பவர். ஒருவர் ஜாதகத்தில் இந்த
இரண்டு ஒளிக் கிரகங்களும் வலுவிழக்கவே கூடாது.

.சூரியன் ஒரு இயற்கை பாபர். அவர் சுபத்துவம் பெற்று, அவருக்கு மிகவும்


வலுத்தரக் கூடிய திக்பலம் எனும் பத்தாமிடத்திற்கு அருகில்
இருந்தாலோ, அல்லது தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தை சூரியன்
தொடர்பு கொண்டாலோ, இளம்வயதில் எவ்வளவு ஏழ்மை நிலையில்
இருந்தாலும் சொந்த முயற்சியால், முன்னேறிவிடுவார்கள். இதனாலேயே
சூரியனுக்கு “தொழில்காரகன்” என்ற பெயருண்டு. இவரின் உதவியின்றி,
இவரின் வடான
ீ சிம்மத்தின் உதவியின்றி, யாரும் தொழிலில் சோபிக்க
முடியாது.

எந்த தொழில் என்றாலும் அதன் காரகத்துவ கிரகம் ஒன்றும் அதற்கு


துணையாக இருக்கும் மற்றொரு கிரகமும் இருக்கும். மூன்றாவது
கிரகமாக இந்த சூரியனும் இருப்பார். இவை சுபத்துவமாக வலுவாக இருக்க
வேண்டும். சூரியன் தலைமை பண்பை கொண்டவர் என்பதால் அவரின்
ஆளுமை திறன், தொழிலை லாபகரமாக நடத்துவதற்கும், ஆட்களை
வேலை வாங்குவதற்கும் உரிய திறனை தருபவர் சூரியன். தான்

ஒரு ஜாதகத்தின் மூல ஆதாரங்களாக சொல்லப்படும் 1,5,9 மூன்று


பாவகங்களும் சுப வலு பெற்றிருந்தாலே ஒருவர் அதிர்ஷ்டத்தை
அனுபவிக்க கூடியவராகத்தான் இருப்பார்.. அவை நல்ல நிலையில்
இருந்தால். தனிப்பட்ட தொழில்திறமை இல்லையென்றாலும், முன்னோர்
சொத்தை அனுபவித்து, யோகமாகவே வாழ்வார்

ஆனாலும் திரிகோண அதிபதிகளாக இயற்கை பாபிகளான சனி, செவ்வாய்


இருந்து, ஆட்சி/ உச்சம் பெற்றிருந்தாலும் கூட, சுப கிரகங்களின்
தொடர்புகளை, அதாவது இணைவு அல்லது பார்வையை நிச்சயமாக
பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், தனியாக நின்று சுபத்துவமோ, சூட்சும
வலுவோ இன்றி ஜாதகத்தில் வலுத்திருப்பது யோகத்தை தராது. .
யோகங்களை பொறுத்தவரையில் 3 ௦௦ வகையானது உண்டு. எந்த
ஜோசியரை பார்த்து ஜாதகத்தை காட்டினாலும், ஏகப்பட்ட யோகம்
ஜாதகருக்கு உண்டு என்பர். அனால் வாழ்க்கை புரட்டி போடும் கோலத்தில்,
ஒரு யோகமும் இருப்பது போலவே தெரியாது. ஏன் அப்படி?

ஒருவர் எந்த மாதிரி யோகங்களை அனுபவிப்பார் என்பதை காட்டுவதே


1 ௦ம இடம் தான். .அவர் என்ன தொழில் செய்து பிழைப்பார்? அல்லது
தொழில் செய்யாமல் முன்னோர் சொத்தை வைத்து பிழைப்பு நடத்துவாரா
எனக் காட்டும்.

 ஜாதகப்படி லக்ன, கோணாதிபதிகள் வலுவாக இருந்தாலும் இரண்டு,


பத்தாம் பாவகங்கள் (ராசி, லக்கினத்தில் இருந்து) கூடுதலாக வலுப்
பெற்றிருந்தால் மட்டுமே, சொந்த முயற்சியால் தொழிலில் முன்னேற
முடியும். இத்தோடு, ஒருவரை வேலை பார்த்து சம்பாதிக்க வைக்கும்
ஆறாம் பாவகத்தின் சுப வலுவையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட
ஜாதக அமைப்பு உள்ளவரால் தான், பரம்பரை தொழிலை கையில்
எடுத்தாலும், அதை மேலும் வளர்ச்சியுறச் செய்பவராக இருப்பார். அவை
வலிமை குறைந்திருக்கும் நிலையில் அவர் முன்னோர்களின் சொத்தை
விரயம் செய்பவராக இருப்பார்.

வழக்கறிஞர் தொழிலுக்கு தொடர்புடைய சட்ட துறைக்கு காரகத்துவன்


சனி பகவான். சனி என்றாலே அவர் கெடுதலை மட்டுமே தர கூடியவர்
என்று பொதுவான கருது உண்டு, உண்மை தான். கடன், நோய், வம்பு
வழக்கு, சிறை என்று நாம் வேண்டாம் என்கின்ற அனைத்தையும் தரும்
வித்தியாசமானவர இவர். ஆனால் சுபத்துவம் பெற்ற சனி, பொய்யை
தொழிலாக செய்ய வைப்பார்.

ஒரு மனிதனை பொய் சொல்ல வைப்பவர் சனிஅரிச்சந்திரனை பொய்


சொல்ல வைக்க தூண்டிக் கொண்டே இருந்தவர் சனி. . பொய்
சொல்லாதவர்கள் யாருமுண்டா? நாம் தினசரி தெரிந்தே சில பல
பொய்களை சொல்லித் தான் நாட்களை கடத்துகிறோம். ஆனால்
சிலருக்கு தொழில் ரீதியாக பொய் சொல்ல வேண்டிய கட்டாயம்
ஏற்படுகிறது. ஒவ்வொரு தொழில் செய்பவரும் ஏதாவது ஒரு வகையில்
பொய் கணக்கு எழுதத் தான் செய்கின்றனர். அதே போல அதை சரியாக
போட்டுக் கொடுக்கும் ஆடிட்டர்களும் இருக்கின்றனர். வியாபாரம்
செய்பவர்கள் வெற்றி பெற சாமர்த்தியமாக பொய் சொல்லத்தான்
வேண்டும். அதேபோல விற்பனை பிரதிநிதிகள் ஏதாவது ஒரு வகையில்
பொய்யைச் சொல்லித்தான் அந்தப் பொருளை விற்கிறார்கள். அதை
போன்றது தான் வழக்கறிஞர் தொழிலும்.

பொதுவாக வழக்கறிஞர் குறித்த ஒரு தாழ்வான எண்ணம் நம் மக்களுக்கு


உண்டு. “பொய்யை மட்டுமே பேசி பிழைப்பு நடத்துபவர்கள் என்று...” நடிகர்
நம்பியார் கொடூரமான வில்லனாக நடித்தவர். ஆனால் நிஜ வாழ்வில்
நிறைய நற்குணங்களை பெற்றிருந்தவர். அது போல,
ஒரு வழக்கறிஞர் தனிப்பட்ட வகையில் உண்மை மட்டுமே பேசக் கூடிய
மனசாட்சியுள்ள மனிதராக இருக்கலாம். ஆனால் தொழிலுக்காக அவர்
பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். அதுவும் தன்னுடைய கட்சிக்காரர்
திருடனாகவும் கொலைகாரனாகவும் இருந்தாலும், அது அவருக்குத்
தெரிந்திருந்தாலும், இவர் இதனைச் செய்யவில்லை என்று வாதாடி,
அல்லது இன்ன காரணத்தினால் தான் இதை செய்ய நேர்ந்தது என்று
விதிவிலக்கில் அந்த கட்சிகாரரை கொண்டு வர வைத்து, அவரை\ தப்பிக்க
வைக்கும் பணியையே ஒரு வழக்கறிஞர் செய்கிறார்..

உண்மையில் நம்முடைய சட்ட அமைப்பே, ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு


நீதிமன்றத்தில் நிறுத்தபடுவாரேயானால், அவர தரப்பில் அந்த
குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் கட்சி செய்ய வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
அவரால் வழக்கறிஞர் அமர்த்தி கொள்ள வாதி இல்லையென்றாலும், அரசே
அதற்கென செலவு செய்து ஒரு வழக்கறிஞரை அவருக்காக வாதாட
ஏற்பாடு செய்கிறது. அப்சல் குருவுக்கு வழக்கறிஞர் யாரும் ஆஜராகக்
கூடாது என்று முடிவு செய்து ஆஜராக மறுத்தும், அரசு தலையிட்டு ஒரு
வழக்கறிஞரை அமர்த்தியதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஏனெனில்
எந்த குற்றம் சாட்டப்பட்டவரும் தன தரப்பைத் சொல்வதற்கு சந்தர்ப்பம்
கொடுக்காமல் நீதி வழங்கக்கூடாது என்பது நம் நீதி தர்மத்தின்
அடிப்படை விதி. எனவே ஒரு வழக்கறிஞர் என்றாலே தன கட்சிக்காரரின்
நலனுக்கு உழைப்பவர். ஒருவருக்கு மனப்பூர்வமாக பொய் சொல்ல
விருப்பமில்லை என்றாலும் அதனை தொழிலுக்காக வலுக்கட்டாயமாக
சொல்ல வைப்பவர் சுப மற்றும் சூட்சும வலுப்பெற்ற சனி. ( ஸ்தூல வலு
கொண்ட கிரகத்தை விட சூட்சும வலு கொண்ட கிரகம் தான் அதிக வலு
கொண்டது)

வழக்கறிஞர் தொழிலுக்கு சனியின் சூட்சும வலுவோடு, அதனோடு


இணையும் அல்லது தொடர்பு கொள்ளும் மற்ற கிரகங்களின்
காரகத்துவங்களையும் பொறுத்தது வழக்கறிஞர் தொழிலுக்கு முக்கிய
தேவை வாக்கு வன்மை.
ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம எனப்படுவது இரண்டாம் பாவம. சிலரை
நாமே பார்த்திருப்போம். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பார்களே அது
போல புழுகுவார்கள். அப்படியே நம்புவது போல அவர்கள் பேச்சு
அலங்காரமாக இருக்கும். கடைசியில் நம் காதில் பூ சுற்றியது தெரியும்.,
அப்பேர்ப்பட்டவர்களின் ஜாதகத்தில் சனி பாபத்துவமாக அந்த வாக்கு
ஸ்தானத்துடன் தொடர்பில் இருப்பார். அதாவது 2 ம் பாவத்தில் சனி
அமர்ந்தோ பார்வை பெற்றோ, ஆட்சி]அதிபதியாகவோ இருக்கும்போது,
ஒருவன் வாயில் வருவது அனைத்தும் மகா பொய்யாக இருக்கும். அவன்
அண்டப் புளுகனாக, துளியும் மனசாட்சியின்றி மற்றவர்களை ஏமாற்றுவதே
நோக்கம் கொண்டவனாக இருப்பான். அப்படிப்பட்டவர் வழக்கறிஞர் ஆகும்
போது எப்படிப்பட்ட கொலை குற்றவாளியையும் காப்பாற்றி விடுவதுண்டு.

ஒரு வழக்கறிஞருக்கு, தன்னை நாடி வரும் கட்சிக்காரரை அந்த


வழக்கிலிருந்து காப்பாற்ற வேண்டி சில் பொய்களை சொல்ல வேண்டிய
அவசியம் தொழில் ரீதியாக ஏற்படுகிறது. அதை எந்த அளவிற்கு
நீதிமன்றம் நம்பும்படி செய்து வழக்கிலிருந்து கட்சிக்காரரைக்
காப்பாற்றுகிறார் என்பதில் தான் அவர் தொழிலின் வெற்றியே இருக்கிறது.
இதற்காக சட்டத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் நுழைந்து அதன்
ஓட்டைகளை தன கட்சிக்காரருக்கு சாதகமாக நுழைப்பதில் தான்
அவருக்கு குரு பகவானின் துணை வேண்டும். ஏனென்றால் குரு
வலிமையாக வாக்கு ஸ்தானத்தில் இருந்தால் ஜாதகர் புத்திசாலியாக
இருப்பார். அதே சமயம் புலனடக்கத்தில் வல்லவராக, முகத்தில் எந்த
உணர்ச்சியும் வெளிக்காட்டிக்கொள்ளாதவராக இருப்பார்.

அதனால் ஒருவர் வழக்கறிஞராக வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில்


சட்டத்துறைக்கு காரகனான சனி முதன்மை வலுப் பெற்று, அவர் தொழில்
செய்ய வேண்டிய நீதித்துறைக்கு காரக கிரகமான குருவின் தொடர்போடு,
இரண்டு, பத்தாம் பாவகங்களை தொடர்பு கொண்டிருக்க வேண்டும். 6ம
பாவமான சத்ரு பாவம் வழக்குகளை குறிப்பது, இதையும் சட்ட
தொழிலின் காரகனான சனியும், கர்ம பாவமான 1 ௦ம் பாவமும் இருக்கும்
அமைப்பை பார்த்தே ஒருவர் வழக்கறிஞர் ஆவதற்கு உரிய தகுதி
கொண்டிருக்கிறாரா என்று சொல்லிவிட முடியும்.
.
ஒருவரின் ஜாதகத்தில் ராசி, லக்னத்திற்கு 12-ல் சனி சுபத்துவமாக
அமர்ந்து, தனது மூன்றாம் பார்வையால், வாக்குஸ்தானமான 2-ஆம்
வட்டையோ
ீ அல்லது ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவகத்தில் சுபத்துவ,
சூட்சும வலுவோடு அமர்ந்து இரண்டாம் பாவகத்தோடு தொடர்பு
கொள்ளும் போதோ அல்லது வேறு எந்த வகையிலேனும் சுபத்துவம்
பெற்று இரண்டு, பத்தாமிடங்களை சனி தொடர்பு கொள்ளும் நிலையில்
ஒருவருக்கு வழக்கறிஞர் தொழில் அமையும்.

வாக்கு ஸ்தானாதிபதியான இரண்டாம் அதிபதி வலுக் குறைந்திருக்கும்


அமைப்பில் வாதத்திறமை குறைந்து எழுத்தில், ஆவண சமர்ப்பிப்புகளின்
மூலம் வெற்றி பெறுபவராக இருப்பார்

கடன், கொலை, இறப்பு, விபத்து, என்று குற்றங்களைக் குறிக்கும்


செவ்வாயின் தொடர்புகளை சனி அதிகமாக பெறும்போது, அவர் கிரிமினல்
லாயராக இருப்பார். சுப கிரகங்களான சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன்
சனியுடன் அதிகமாக தொடர்பு கொள்ளும்போது கிரிமினல் இல்லாமல்
சிவில் வழக்குகளை மட்டும் கவனிக்கும் வக்கீ லாக இருப்பார்..

.
இதில் சில வழக்கறிஞர்கள் மட்டும் புகழ் பெறுவதும் மற்றவர்கள்
கவனிக்கும் அளவில் வாதத் திறமை கொண்டவர்களாக ஏன்
இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் புதன் கிரகம். அவர் தான் புத்தி
கூர்மையையும் ஞானத்தையையும் அளிக்க கூடியவர். சனியின் சுப,
சூட்சும வலுவோடு, ஜாதகத்தின் இரண்டாம் அதிபதியும், அந்த பாவகமும்,
புதனும் அதிக வலுவோடு இருக்கும் போது, தனது வாதத் திறமையால்
பிறரால் கவனிக்கப் படக்கூடிய வகையில் அவர் இருப்பார்.

அடுத்து அரசு வழக்கறிஞர்களாக ஆபவர்கள் நீதிபதியாக உயர்பவர்கள்


ஜாதகத்தில் சூரியனின் ஆதிக்கம் இருக்கும். சூரியன் தான்
அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள வைப்பவர். வாக்குஸ்தானமான
இரண்டாமிடம் மற்றும் தொழில் பாவகமான பத்தாம் வட்டோடு
ீ சனி,, குரு,
சூரியன் தொடர்பு கொள்ளும் போது, ஜாதகர் சட்டத்துறையில்
பணியாற்றுவார்.. சிம்மம் வலுவாகி, சூரியன் சுபத்துவம் பெற்று, ராசி,
லக்னத்திற்கு பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டால் அரசு பனி உறுதி.

சட்டத்துறைக்கு சனி, குரு, சூரியன் முதன்மை வகிப்பார்கள். அதற்கு


ஜாதகருக்கு தேவையான புத்திகூர்மையை வழங்கி புதன் அடித்தளமாக
இருப்பார். ஒருவர் வக்கீ லாக பணியாற்றுவதற்கு சட்டத்துறைக்கு
முதன்மை கிரகமான சனி, இரண்டாம் நிலை கிரகமான குரு, அடுத்து அரசு
தொடர்பை குறிக்கும் சூரியன் ஆகியோர் சனி, குரு, சூரியன் என்ற சுபத்
தொடர்பு வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்
ஒருவர் நீதிபதியாக இருக்கிறார், இன்னொருவர் வக்கீ லாக இருக்கிறார்.
சிலர் நீதிபதி பதவி வந்தாலும், வழக்கறிஞராய் இருக்கும்போது வரும்
பணத்தை கருத்தில் கொண்டு மறுத்து விடுவதும் உண்டு. அவர்களது
ஜாதகத்தில் குருவை விட சனியின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும்.
ஆனால் பொதுவில் ஒரு வழக்கறிஞராக இருப்ப்பவர் தான் நீதிபதியாக
முடியும். இது குறித்து நடிகர் ராதா ரவி சொன்னதாக சொல்வார்கள்
“பொய்யே சொல்லிக்கிட்டு இருந்த வக்கீ ல் ஒருத்தர் நீதிபதியானா மட்டும்
மாத்தி சொல்லப்போறாரான்னு”

ஆனால் இருவருக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. பலவிதமான


முரண்பாடுகளும் இந்த பதவிகளில் இருக்கின்றன. ஆனால் நீதிபதிக்கும்,
வழக்கறிஞருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, இருவரும் சட்டம்
படித்திருக்கிறார்கள் என்பதுதான். அந்த சட்டத்தை படிக்க வைப்பவர் சனி.
.சட்டத்துறைக்கு சனியே முதன்மைக் கிரகம் என்றாலும் நீதித்துறைக்கு
குருவே முதன்மைக் கிரகமாவார். சட்டம் என்பது பொதுவாக இருந்தாலும்
சட்டமும், நீதியும் வேறு வேறு. ஒரு வக்கீ லின் இறுதிக் கனவு நீதிபதியாக
வேண்டும் என்பதாக இருந்தாலும், எல்லா வழக்கறிஞர்களும் நீதிபதியாக
விரும்புவதில்லை. நீதிபதியாக விரும்பும் வழக்கறிஞர்கள் எல்லோரும்
ஆவதில்லை.இதற்கெல்லாம் குரு மற்றும் சூரியனின் சுபத் தொடர்பு
இல்லாததே காரணம்.

ஜாதகர் சீருடை அணிந்த தொழிலுக்கு போவாறா இல்லையா என்பதை


அவர் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் சொல்லி விடுவார். ஏனெனில் சீருடை
அணியும் பணிகளுக்கு காரகத்துவரே அவர் தான்.
.
வழக்கறிஞர் என்றாலும் நீதிபதி என்றாலும் கருப்பு கோட் மற்றும் கவுன்
அணிய வேண்டும். சனிக்கும் கருப்பு நிறத்துக்கும் உள்ள தொடர்பை
எல்லோரும் அறிவர்.

இந்த பிரம்பஞ்சத்தில் உள்ள கோள்களின் அமைப்பை பார்த்தாலே ஒன்று


புரியும். சூரியனின் ஒளியை பெரும் சுற்றுப்பாதையில் மிகவும் தூரத்தில்
அதுவும் கடைசியாக இருப்பவர் சனி தான்
.

நம் ஜோதிட அமைப்பை பார்த்தாலே புரியும். சூரியனை நடுநாயகமாக


கொண்டு நீள வட்டப் பாதையில் வரும் நம் பூமிக்கு மிக அருகில்
இருக்கும சந்திரனை சூரியனுக்கு அடுத்து தாய் தந்தை ஸ்தானத்தில்
வைத்து, அதனை அடுத்து சூரியனுக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தை
இரண்டு ராசிக் கட்டமான மிதுனம், கடகத்தின் ஆட்சி நாயகனாக வைத்து,
அதை அடுத்து உள்ள சுக்கிரனுக்கு ரிஷபம் மற்றும் துலாம் ராசி ஆட்சியை
கொடுத்து, பூமிக்கு இந்த பக்கத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தை
ஆட்சிநாயகனாக மேஷதிற்கும் விருச்சிகத்திற்கும் வைத்து அதை
தொடர்ந்து சுற்றி வரும் குருவுக்கு மீ னத்தையும் தனசு ராசியையும்
ஆட்சி செய்ய வைத்தால் மிச்சமிருப்பது கடைசியில் உள்ள சனிக்கிரகம்.
இததான் மகரதிற்கும் கும்பத்திற்கும் அதிபதியாக்கினார்கள் வேத கால
முனிவர்கள்..

ஒருவிதத்தில் பார்க்கும் போது, சனி கடைசியில் இருக்கிறது என்றும்


சொல்ல முடியாது. ஏனெனில், நீள வட்டப்பாதையில் இருக்கும் சனிக்கிரகம்
தான், முதலும் முடிவுமாக இருக்கும். இந்த பிறவியே முன் ஜென்ம கர்ம
வினையினால் தானே. அதை கழித்து, அல்லது இன்னும் சில கர்ம
வினைகளை கூட்டி (ஏனெனில் இந்த பிறவியில் செய்யும் பாவம் மட்டும்
இல்லாது புண்ணியமும் அதை கழிக்க இன்னொரு பிறவி எடுக்க
வைக்கும்) மீ ண்டும், எங்கிருந்து பிறவி தொடங்கியதோ அங்கேயே சென்று
சரண் அடையும் விதத்தில் தான் இந்த ராசிக்கட்டங்களை வேதங்களை
பயின்ற நம் முன்னோர் வகுத்துள்ளனர். அந்த நிலைய அடைய
தூண்டுவது சனியின் காரகத்துவமாகும்.

சனி கருப்பு நிறமுள்ளவரா என்றால் இல்லை. கருப்பு என்பது நிறமல்ல.


வெளிச்சம் இல்லாத நிலை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒளி
குறைந்தது என்றும் சொல்லலாம். ஏனெனில் இதற்கும் பின்னால், மூன்று
கிரகங்கள் உள்ளன. ஒளி முழுவதும் அற்ரவை என்று ராகு-கேதுக்களை
தான் சொல்ல வேண்டும். ஒளி மிகவும் குறைந்த கிரகமான சனிக்கு
கருப்புக்கு வெகுஅருகில் உள்ள கருநீல நிறம் சொல்லப்பட்டதன் காரணம்
இதுவே.

அந்த கருப்பு நிற அங்கியை அணிந்து தன கர்மா நிச்சயித்த தொழிலை


செய்யும் வழக்கறிஞர்களும் வெள்ளை உள்ளம் கொண்டவர்களே !!
அதே போல, மூல விதியை சரியாகப் புரிந்துக் கொண்டு, பின்பு அதன்
துணை விதிகளை ஆராய்ந்தால், ஜாதகர் எந்தத் துறையில் எந்தப் பிரிவில்
பணிபுரிகிறார் என்பதைக்கூட மிகத் துல்லியமாக பாரம்பரிய ஜோதிடத்தில்
சொல்லிவிட முடியும். நம் வேத கால முனிவர்கள் என்றும் மகான்களே!!
குருவே போற்றி!!

சனி சூரியன்
சுக்கிரன் புதன்

செவ்வாய் குரு
சந்திரன் கேது
எனக்கு கிடைக்கப்பட்ட இந்த ஜாதகத்தில், சிம்ம லக்னமாகி, வழக்கறிஞர்
தொழிலுக்குரிய முதன்மை கிரகமான சனி,
 தனது பகை வடான
ீ ஒன்பதாம் வடான
ீ மேஷத்தில் அமர்ந்து நீசம்
அடைந்துள்ளது.. சனிக்கு செவ்வாய் பகை வடு
ீ என்றாலும்
செவ்வாய்க்கு சனி சம கி\ரகம் மட்டுமே. அந்த ராசிக்கு
ஆட்சிநாதன் செவ்வாய் ஆகையால், சனியின் நீசம் பங்கப்பட்டு நீச
பங்க ராஜ யோகம் உண்டாகிறது. எனவே ஜாதகருக்கு சனியின்
காரகத்துவம் அதன் 1 ௦௦ சதவத
ீ நிலையையும் மீ றி 12 ௦ சதவதம்

காரகத்துவம் செய்வார். சனி இயற்கை பாபர் என்றாலும்,
திரிகோணத்தில் நின்று சுக்கிரனுடன் இணைவு பெற்றதால், சுப
காரகத்துவம் பெறுவார். எனினும் அவருடைய தசா காலத்திலேயே
அதற்குரிய பலனை ஜாதகர் பெறுவார்
 மேலும் சனி அமர்ந்திருக்கும் ராசியின் அதிபதியான செவ்வாய்
நான்காம் பாவத்தில் அமர்ந்து, அனுஷம் நட்சத்திரத்தில் சாரம்
பெற்றுள்ளார். அதன் அதிபதியான சனி செவ்வாய் ஆட்சி செய்யும்
ஒன்பதாம் பாவத்தில் உள்ள்ளார்.. செவ்வாயும் பத்தாம் பாவத்தை
தன சொந்த வடான
ீ விருச்சிகத்தில் இருந்து பார்க்கிறார்.
 . சனி /சுக்கிரன் நிற்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் சாரத்தின்
அதிபதியான ஞானக்காரகன் கேது, குருவுடன் இணைவு பெறுகிறார்.
குரு 2 ம ஸ்தானத்தில் அமர்ந்து ஏழாம் பாவத்தில் உள்ள சனி,
சுக்கிரனை பார்க்கிறார் சனி, குருவின் 7ம பார்வையால்
சுபத்துவமாகி, செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்று வலு
பெறுகிறார். . கேது செவ்வாயின் காரகதன்மை கொண்டவர் என்பது
நாம் அறிந்ததே. எனவே சனி சூட்சம வலுவும் கொண்டு இந்த
ஜாதகத்தில் உள்ளார்.
 லக்னத்திற்கு இரண்டுக்குடைய வாக்குஸ்தானாதிபதி புதனுடன்
சூரியன் , தொழில் ஸ்தானமான 10-மிடத்தில் இனைந்துள்ளார்.
இந்த 1 ௦ ம பாவத்தின் அதிபதியான சுக்கிரன சனியுடன் ஒன்பதாம்
பாவத்தில் இணைவு பெறுகிறார். ,
 அதே போல நவாம்சத்தில் மிதுன லக்னத்தின் அதிபதியான புதனின்
வட்டில்
ீ சூரியன் இருக்க,2 ம வடான
ீ கடக ராசியான
வாக்குஸ்தானத்தில் சனி இருந்து 7 ம பார்வையாக சனியின் சொந்த
வடான
ீ கும்பத்தில் இருக்கும் குருவை பார்க்கிறார். குருவும் தன
7 ம பார்வையில் சனியை பார்க்கிறார்
 நவாம்சத்தின் பத்தாம் வடான
ீ மீ னத்தில் அதிபதி குரு, சனியின்
சொந்த வடான
ீ கும்பத்தில் உள்ளார்..
 அதே போல 1௦ ம வடான
ீ சந்திரனின் வடான
ீ கடகத்தில் சனி
இருக்க, சனி தன 1௦ ம பார்வையால் மேஷத்தில் இருக்கும்
புதனையும் சுக்கிரனையும் பார்க்கிறார்.
 “கெட்டவன் பகை வட்டில்
ீ இருப்பதால் வலிமை குறையும்.
பாபக்கி\ரகமான சனியின் வலிமை கடகத்தில் இருக்கும்போது
குறைவது நல்லது தானே. ஏனெனில் வாக்கு ஸ்தானத்தில் சனி
அமரும்போது , ஜாதகரின் பேச்சில் கடின வார்த்தைகளும்,
அவதூறான பேச்சுகளும் இருக்கும். அதுவே அவரின் பகை வடு

என்னும்போது, அவரின் வலிமை 1௦ சதவதமே
ீ இருக்கும். உச்ச
வட்டில்
ீ ஒரு கிரகம் இருக்கும்போது 1 ௦௦ %, ஆட்சி வட்டில்

இருக்கும்போது 80%, நட்பு வட்டில்
ீ இருந்தால் 40%, சமமான வலிமை
கொண்ட வட்டில்
ீ இருக்கும்போது 2 ௦%,பகை வட்டில்
ீ 1 ௦%, நீச்சத்தில்
௦%..என்பது நம் வேத கால ரிஷிகள் வகுத்த ஜோதிட விதி.
 அதே போல நவாம்சத்தின் பத்தாம் வடான
ீ மீ னத்தில் உள்ள
சந்திரனின் சொந்த வட்டில்
ீ சனி இருக்க, சனி இருக்கும் வட்டில்
ீ குரு
அமர, குருவின் வட்டில்
ீ சந்திரன் அமர என்று இந்து மூன்று
கிரகங்களுக்குள் பரிவர்த்தனை பெற்றுள்ளன.
 செவ்வாய் தன எட்டாம் பார்வையால் புதனின் ஆட்சியில் உள்ள
லக்கினத்தில் உள்ள சூரியனை பார்க்கிறார்.. அதே போல தன
நான்காம் பார்வையால் சனியின் வடான
ீ மகரத்தில் உள்ள கேதுவை
பார்க்கிறார்.
அதே நிலையில் முதன்மை கிரகமான சனி இங்கே ராசி, லக்னம்
இரண்டின் ஜீவன ஸ்தானத்திற்கும் சுபத்துவமாக, சூட்சும வலுவுடன்
தொடர்பு கொண்டிருக்கிறார்.சனி, ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவமும்,
சூட்சும வலுவும் அடையும் கிரகத்தின் அமைப்பில் தொழில் அமையும்
என்ற விதிக்கேற்ப, இந்த ஜாதகத்தில் சனி மட்டுமே அதிக வலுவுடன்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சட்டத் துறைக்கு முதல் நிலை கிரகம் சனியும், நீதித்துறைக்கு
முதல் நிலைக் கிரகம் குருவும் ராசி, லக்னத்தின் இரண்டு, பத்தாமிடங்கள்
குரு, சனியின் தொடர்புகளை கொண்டிருக்கின்றன. ராசிக்கு வாக்கு
ஸ்தானமான ராசிக்கு 2 ல் இருந்து, குரு சனியை பார்த்து சுபத்துவப்
படுத்துகிறார். நிறைவாக ராசிக்கு பத்தில் சூரியன், குரு பார்வையில்
இருக்கிறார்.
குரு, சனி இரண்டின் சுப ஆளுகையில் ஜாதகர் உள்ளதால், இளம் வயது
முதல் குரு, சனி தசைகளில் சட்டத்துறை, நீதிமன்றம் என்ற
அமைப்புகளுக்குள் இவர் இருக்க வேண்டியதாயிற்று
பொதுவாக ஒருவர் பணம் புரளும் அமைப்புகளில் இருக்க
வேண்டுமானால், ராசி, லக்னம் இரண்டிற்குமான பத்தாமிடத்தை குரு
தொடர்பு கொள்ள வேண்டும் என்பது விதி. அதன்படி இவருக்கு ராசிக்கு
பத்தில் குரு, கேதுவுடன் கேளயோகத்தில் அமர்ந்து,உள்ளதால் இவருக்கு
வசதிக்கு குறைவிருக்காது.. .
எனவே சனி, குரு சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய்
தொடர்பினாலும், பத்தாம் பாவம் ராசியிலும் நவாம்சத்திலும் வலுவாக
உள்ளதால் ஜாதகர் சட்டப்பிரிவில் நீதி துறையில் அரசுடன் தொடர்பு
கொண்டு இருப்பார் என்று நான் கணித்து கொடுத்ததற்கேற்ப இருந்தது.
.

You might also like