You are on page 1of 1

நாயன்மார்கள் என்பவர்கள் கி.

பி 400-1000 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த


சிவனடியார்கள் சிலர். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத்தொகையில் அறுபத்தி இரண்டு
நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில்
கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்து மூவரின்
வரலாற்றை ”திருத்தொண்டர் புராணம்” என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.12
திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
நாயன்மார்களில் சிலரே சமய நூல்களில் புலமை பெற்றவர்கள். மற்றவர்களெல்லாம் மிகச் சிறந்த
பக்தர்கள் மட்டுமே! அதுபோல, கண்ணப்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்கள் பெரிதும்
மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.

You might also like