You are on page 1of 11

2 டிசம்பர் - 2021 gVs_

ªêŒFñì™

 
இறைவா, பூரண உணர்விற்காக நாங்கள்
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் ஆர்வமுறுகின்றோம். ஜீவன் முழுவதும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. (கள்ளாமை 288) பலவிதப் பூக்களை நெருக்கமாக வைத்து அழகுறக் கட்டிய
நெறியறிந்து வாழ்வார் நெஞ்சில் அறம் நிலைபெறும்; களவு ஒரு பூ மாலையைப் ப�ோலிருக்கிறது. பூக்களைச் சேகரித்த
அறிந்தார் நெஞ்சில் வஞ்சகம் நிலைபெறும். . . கையும் இச்சா சக்தி. மாலை கட்டிய நாரும் இச்சா சக்தியே.
உரை: கவிஞர் சிற்பி இப்பொழுது அதை நறுமணங்கொண்ட நிவேதனமாக
நின்னிடம் அளிப்பதும் அந்த இச்சா சக்தியே. சலிக்காமல்
தடுமாறாமல் அது நினக்காகவே அளிக்கப்படுகிறது.
 ஸ்ரீஅன்னை

உலக மகள் என்று பார்த்தால் பனைமரங்களெல்லாம் வெட்டப்பட்டு

ம ழை ப�ொழியும் வானம். எங்கும்


அனைவருக்கும் வணக்கம். ஆங்கில ஆண்டு
2021 ஊசி மருந்து மாத்திரைகளை வழங்கிவிட்டு
ஈரம்.
“ஓ“ என்று மணல்பரப்பு வெம்பரப்பாய் கைம்மை
பூண்டிருக்கிறது.
ஆற்றின் கரைய�ோரம் சென்றால் நுரை அழுக்கில்
ஒரு வழியாக விடைபெற்று ஏகுகிறது. க�ொஞ்சம் மீன்கள் அழுகி மிதக்கின்றன. தெருக்குழாயில்
பாவமாகத்தான் இருக்கிறது. அதே நேரம் க�ோபமாகவும் சாய்க்கடை நீர்.! நன்றாகவே வாழ்ந்து க�ொள்கிற�ோம்.
வருகிறது. எத்தனை இழப்புகள். எத்தனை ப�ோங்கள்! யாருக்கு வேண்டும் இந்தத் தலைகுனிவு
நெருக்கடிகள். எத்தனை ஏச்சுப் பேச்சுகள். தேர்தல் வாழ்க்கை? தங்கம், வைரம், வெள்ளி விற்பனை
களங்கள், வெற்றி த�ோல்விகள். நல்லன தீயன என்று மட்டும் எப்படிய�ோ படுஜ�ோராய் க�ோரஸ் பாடுகிறது.
மாறி மாறி ஊரெல்லாம் உருமாறி… குழந்தைகள் பள்ளி என்னென்ன விதமான விளம்பரப் பாடல்கள்- படங்கள்
செல்லமுடியாமல் வெளிவிளையாட்டுகள் இல்லாமல் – புன்னகைகள் – அத்தனையும் காசுக்காகத்தான்.!
அலைபேசிகளில் விரல்களினால் நர்த்தனமிட்டு நம்மில் சிலர் மட்டும் விசனப்படுகிற�ோம். நாம்
கண் ஒளி மங்கி, காது ஒலி பேதலித்து அப்படி இப்படி மெய்யாக உருக்கமுடன் வேண்டும்பொழுது
எனப் ப�ோயிற்று வல்லுயிர்ச் சாபத்துடன் 2021. சரி. தெய்வம் சில மனிதர்களின் மனதிலே இறங்கி,
எதிர்வரும் 2022 எப்படி இருக்கப் ப�ோகிறதாம்? நம் மீது இரங்கி, புதிய நம்பிக்கை விதைகளை
யூகிக்க முடியவில்லை. விதைத்துச் செல்லும் அருட்செயலை இயற்ற
பூமியின் பசுமை மண்டலத்தைப் பழுது மறப்பதில்லை. அத்தகைய ஒரு நம்பிக்கை நிகழ்வின்
பார்த்துக்கொண்டிருக்கும் சகமனிதர்கள் முகங்களில் அகல் விளக்கொளியாகவே பார்க்கிறேன் செல்வி
புன்னகைக் கீற்றுகளைக் காண�ோம். குப்பைக் வினிஷா எனும் இளம் தமிழச்சியை! மேதகு அப்துல்
குவியல்களை அகற்றவும் முடியாமல் குழித�ோண்டிப் கலாம் அவர்களின் ஆசிர்வாதத்தின் நீட்சிதான்
புதைக்கவும் முடியாமல் எரிப�ோட்டுக் க�ொளுத்தவும் வினிஷா. மீட்சி அம்மை. தமிழ்நாட்டின் மூத்த மலை
முடியாமல் குப்பை க�ொட்டிக்கொண்டிருக்கும் நமது அக்னிமலை திருவண்ணாமலையில் 10 ஆம் வகுப்பு
இன்றைய உடல் வளர்ந்த மக்களைப் பார்த்து மாணாக்கி வினிஷா இந்திய மனச்சான்றின் விழிப்பு.
இளையவர்கள் கண்மலர்த்திக் கேட்கிறார்கள் இந்தப்பெண்மகள் அண்மையில் ஸ்காட்லாந்து
“அப்பா அம்மா எங்களுக்கான உலகத்தை எப்படி பகுதியில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26
விட்டுச்செல்லப்போகிறீர்கள்? வான் வெளியையும் ஆவது பருவநிலை மாற்றம் பற்றிய அனைத்துலக
ராக்கெட் குப்பைகளால் நிரப்பி விட்டீர்கள். எங்கள் தாத்தா மாநாட்டில் அறிவார்ந்த உரையாற்றியிருக்கிறார்.
பாட்டி எங்களுக்காக வைத்து விட்டுப்போன அழகான நவம்பர் மாதம் 2ஆம் நாள் இந்திய நாட்டின்
பூமிப்பந்தினை எங்களிடம் முழுமையாக அப்படியே இளைய தலைமுறையினரின் சார்பாளராகப் பசுமை
ஒப்படைத்துச் செல்வீர்களா?“ அவர்களின் கூரிய மண்டலம் பூமிப்பரப்பில் விடியலாக மலரச்செய்ய
பார்வையின் ஊடாக மெய்ம்மை நம்மை தகிக்கிறது. இம்மலைமகளின் உரை ஆழமானது அர்த்தமுள்ளது.
நிழலில்போய் குளிரப்பண்ணிக் க�ொள்ளலாம் ‘’நான் பாரதத்தாயின் மகள்தான் என்றாலும்
என்றால் எல்லாமே சீமைக்கருவேலன்கள். கிணற்றில் இந்நீள்நிலத்தின் உலகமகள் என்பதாலும் பெருமிதம்
தண்ணீர் இறைத்துக் குடிக்கலாம் என்றால் க�ொள்கின்றேன். பூமிக்குள் புதைந்துகிடக்கும்
மண்ணெண்ணெய் வாசம். நுங்கு கிடைக்குமா எரிப�ொருள்களின் அன்றாடப் பயன்பாட்டால்
3 டிசம்பர் - 2021 gVs_
ªêŒFñì™

மாற்று வழிகளினாலும் கூடுதலான எரிசக்தியினைப்


பெறமுடியும். இதற்குத் தடையாக இருப்பது எது?
பேராசை, ப�ொறாமை, ஆடம்பரம்.
மனிதரை மனிதர் சுரண்டும் கீழான தரகு வர்த்தகப்
ப�ொருளாதாரத்தை அடிய�ோடு களைந்துவிட்டு
’தர்மகர்த்தா’ முறையைக்கொண்டு வருவமேயானால்
ரூபாய்த்தாளில் சிரிக்கும் மகாத்மா காந்தியின்
புன்னைகைக்குப் புதிய க�ௌரவம் கிடைக்கும்.
அறிவியல�ோடு இதய சுத்தியையும் இணைத்துப் பேசி
நமது சிந்தனையைப் புதுப்பித்துள்ள வினிஷாக்கள்
சேனை மேலும் வளர்க! இப்போது 2022 – புத்தாண்டு
நம்பிக்கை அளிக்கிறதல்லவா வாசகப் பெருமக்களே!
நல்ல ஆண்டு வரவு.
நமது நாற்றாங்கால்
பயிர்ச் செழிப்பு.
அழகிய மனிதரின் நற்செய்தியுடன் வாழ்த்துக் கூறும்
அன்பு
இரா.மீனாட்சி.

பூமியின் மேல்பரப்பில் புகைமண்டுகிறது. மாசு


தலைதூக்குகிறது. இதனை அடிப்படையாகக்கொண்ட
மாசுபட்ட ப�ொருளாதார வாழ்க்கையை முற்றாக வாசகர் மடல்
ஒழிக்க வேண்டும். உலக அரசியல் அரங்கில்
தலைவர்கள் முழங்கும் வாக்குறுதிகள் பயனற்றவை.
தலைவர்களே! உங்களது செல்லுபடியாகாத
த ங்கள்
ஆர�ோவில்
கைவண்ணத்தில்
செய்திமடல்
மாதந்தோறும்
சுவையாக வந்து
சேர்ந்துக�ொண்டிருக்கிறது. வாழ்த்துகள் குறிப்பாக
வெற்றுச் ச�ொற்களைக் கேட்டுக்கேட்டு எம்போன்ற தமிழ்மொழிப்பயிற்சி பகுதியை நான் த�ொடர்ந்து
இளைய தலைமுறையினர் க�ோபமும், மனத்தாபமும் படித்து வருகிறேன். அதைத் த�ொகுத்து ஒரு சிறு
அடைந்துள்ளோம். இவ்வுலகம் வாழத்தகுந்தத�ோர் நூலாக்கினால்கூட பயன்தருவதாக அமையும். மேலும்
பரப்பாக மாறவேண்டுமானால் வெற்றுரை சாக்பீஸ் த�ொழில் நசிந்து வருவது குறித்தும் உள்ளூர்
வாக்குறுதிகளைவிட ஆற்றல் மிகுந்த செயல்வழியே த�ொழில்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை
உடனடித் தேவையாகிறது’’ என்று உரத்த குரலில் வலியுறுத்தும் டாக்டர் இலட்சுமி நரசிம்மன்
உரையாற்றினாள். அவள் குரலில் கவிபாரதியே (க�ோயமுத்தூர்) கட்டுரை சிறப்பு.
த�ோன்றினான்.
லெனின் பாரதி புதுச்சேரி.
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீர�ோ.?
ப�ோற்றி ப�ோற்றி ஜய ஜய ப�ோற்றி
புதுமைப்பெண்ணொளி வாழிபல்லாண்டிங்கே
ஆ ர�ோவில் மடலைத் தவறாமல் வாசித்து
மகிழ்பவர்களில் நானும் ஒருவன். அருமையாக
இளஞர்களை வழி நடத்துகிறீர்கள். பாராட்டுக்கள்.
ச�ொல் அனலின் நறும்புகை மேலெழுந்தது. இம்மடலில் தலையங்கம் அருமை. ‘நற்றிணைப்’
கூடியிருந்த அரங்கத்தினர் எழுந்துநின்று கரவ�ொலி பாடலைப் ப�ொருத்தமாக இணைத்துத் தலையங்கம்
எழுப்பினர். அந்தப் பன்னாட்டவர் அவையிலே எழுதியிருக்கிறீர்கள். எனக்கு ‘ஆன வயதுக்கோர்
பாரதப்பிரதமர் நரேந்திரம�ோடி, பிரிட்டன் பிரதமர் அளவில்லை’. இருந்தும் வாசிப்பை நிறுத்தவில்லை.
ப�ோரிஸ் ஜான்சன், அமெரிக்க தேசத்தின் ஜனாதிபதி இறைவன் அருள். வாழ்த்துக்கு வயதுண்டு.
ஜ�ோ பைடன் ப�ோன்ற ஆளுமைகள் வியப்பிலே வாழ்த்துகிறேன். .
ஆழ்ந்தனர்; பாராட்டினர். பத்மஸ்ரீ இந்திரா பார்த்தசாரதி, சென்னை.
உலகத்தார்க்கு ஒரு புதிய ப�ொருளாதாரக் க�ொள்கை
தேவை. இயற்கையில் சூரியன், காற்று, கடல்நீர்
எல்லாம் மாசு அதிகம் விளைவிக்காத அடிப்படை டிசம்பர் 11 பாரதியாரின் 139ஆவது
சக்தியினைத் தர வல்லவை. அவை நமக்கு இயற்கை பிறந்தநாளினைக் க�ொண்டாடுகிற�ோம்.
அன்னை அளித்துள்ள க�ொடைகள். நாம் உருவாக்கும் ஆடுவ�ோமே! பள்ளுப் பாடுவ�ோமே!
குப்பைகளில் இருந்தும், மறுசுழற்சி முறைகளினாலும்,
4 டிசம்பர் - 2021 gVs_
ªêŒFñì™
டெடியின் நான்காம் வகுப்பு ஆசிரியரின் குறிப்பு:
ஒரு நல்லாசிரியரின் கதை ‘’டெடி படிப்பில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
படித்ததில் பிடித்தது

அ ன்று பள்ளி திறந்த முதல் நாள். 5 ஆம் வகுப்பு


ஆசிரியை ஒருவர் தன் வகுப்பிற்கு முன்
நின்று, அனைத்து மாணவர்களையும் பார்த்து
அவனுக்குப் பள்ளியில் அதிக நண்பர்கள் இல்லை,
சில நேரங்களில் அவன் வகுப்பில் தூங்கிவிடுகிறான்.’’
இப்போது, டெடியின் பிரச்சனையை முழுவதுமாக
உணர்ந்த திருமதி. தாம்சன் அவனிடம் தான்
முதல் நாளிலேயே ஒரு ப�ொய்யைக் கூறுகிறார். நடந்துக்கொண்ட விதத்தை எண்ணி வருத்தப்பட்டார்.
பெரும்பாலான ஆசிரியர்களைப் ப�ோலவே, அவரும் கிறிஸ்துமஸ் பரிசாக ஒவ்வொரு மாணவரும்
தனது மாணவர்களிடம், தான் அவர்கள் அனைவரையும் திருமதி.தாம்சன் அவர்களுக்கு வண்ணக்
எவ்வித பாரபட்சமின்றி ஒரே மாதிரியாக நேசிப்பதாகக் காகிதங்களில், அழகான ரிப்பன் கட்டி பரிசுகளை
கூறினார். இருப்பினும், அதற்கு சாத்தியமில்லை. க�ொடுக்க, டெடிய�ோ மளிகைக் கடையில் கிடைத்த
ஏனெனில், அதற்குக் காரணமானவன் வகுப்பின் ஒரு கனத்த, பழுப்பு நிறப்பையில் தனது பரிசைச் சுற்றி
முன் இருக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த, டெடி அழகற்ற முறையில் அவருக்குக் க�ொடுத்தான். மற்ற
ஸ்டோடார்ட், என்ற ஒரு குட்டிப்பையன். பரிசுகளுக்கு மத்தியில் அதைத் திறக்க திருமதி.தாம்சன்
திருமதி. தாம்சன் ஒரு வருடத்திற்கு முன்புதான் மிகவும் சங்கடப்பட்டார். அதில் சில கற்கள் இல்லாத
டெடியைப் பார்த்தார். டெடி தன்னுடன் பயிலும் மற்ற ஒரு ரைன்ஸ்டோன் வளையலும், ஒரு பாட்டிலில்
குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடவில்லை கால்வாசி அளவே இருந்த வாசனை திரவியம் ஒன்றும்
என்பதையும், அவனுடைய ஆடைகள் துவைக்காமல் இருந்தது. அவனது பரிசுகளைப் பார்த்து சிரித்த சில
அழுக்காக இருப்பதையும் அவன் தினந்தோறும் மாணவர்களை ஆசிரியை கண்டித்தார். மிக அழகாக
குளிக்க வேண்டும் என்பதையும் கவனித்தார். மேலும், இருந்த அந்த வளையலை ஆச்சர்யத்துடன் பார்த்த
டெடி மகிழ்ச்சியற்று காணப்படுவதையும் உணர்ந்தார். ஆசிரியர் அதை கையில் ப�ோட்டுக்கொண்டு, அந்த
அவனது ஒழுங்கற்ற தன்மைகள், படிப்பில் வாசனை திரவியத்தை மணிக்கட்டில் க�ொஞ்சம்
தேங்கியிருப்பது ப�ோன்ற பல காரணங்கள், திருமதி. பூசிக்கொண்டார். அன்று பள்ளி முடிந்த பிறகு டெடி
தாம்சனை அவனது தேர்வுத் தாள்களில் “அவன் ஸ்டோடார்ட் திருமதி. தாம்சனின் வருகைக்காக
தேர்ச்சியடையவில்லை” என்று எழுத வைத்தது. வெகுநேரம் காத்திருந்து அவரிடம் “திருமதி. தாம்சன்
திருமதி. தாம்சன் வேலை செய்த பள்ளியில், இன்று என் அம்மாவிடம் வரும் அதே வாசனையை
பணியின் ப�ொருட்டு ஒவ்வொரு குழந்தையின் உங்களிடம் உணர்கிறேன்” என்று கூறினான்.
கடந்த காலப் பதிவுகளையும் மீண்டும் அலசிப் அனைத்துக் குழந்தைகளும் சென்ற பிறகு,
பார்க்க வேண்டியிருந்தது, அவ்வாறு அவர் டெடியின் அவன் கூறியதை நினைத்து, நினைத்து அந்த
பதிவுகளைப் பார்த்து ப�ோது மிகுந்த ஆச்சரியமடைந்தார். ஆசிரியை குறைந்தது ஒரு மணிநேரமாவது
டெடியின் முதலாம் வகுப்பு ஆசிரியரின் அழுதுக�ொண்டிருந்தார். கற்பித்தல், படித்தல், எழுதுதல்
குறிப்பு: “டெடி, எப்பொழுதும் சிரித்த முகத்துடன் ப�ோன்றவற்றை அன்றுடன் விட்டுவிட்டு அவர்
காணப்படும் ஒரு புத்திசாலிக் குழந்தை, அவன் தனது டெடியிடம் அதிகக் கவனம் செலுத்தத் த�ொடங்கினார்.
வேலையை நேர்த்தியாகச் செய்வதுடன் நல்ல அவனுடன் திருமதி .தாம்சன் செலவிட்ட ஒவ்வொரு
பழக்கவழக்கங்களையும் க�ொண்டிருக்கிறான்”. ந�ொடியும், அவனது மனம் புத்துயிர் பெறுவது ப�ோல்
அவனது இரண்டாம் வகுப்பு ஆசிரியரின் குறிப்பு: அவனுக்குத் த�ோன்றியது. ஆசிரியை அளித்த
“டெடி ஒரு சிறந்த மாணவன், அவனுடைய வகுப்பு ஊக்கத்தினால் அவன் விரைவிலேயே மிகவும்
த�ோழர்களுக்கு அவனை மிகவும் பிடிக்கும். ஆனால், சூட்டிகையான மாணவனாக மாறினான். ஆண்டின்
அவனது தாய் தன் வாழ்நாளின் கடைசி நாட்களை இறுதியில், வகுப்பில் புத்திசாலிக் குழந்தைகளில்
நெருங்கி க�ொண்டிருப்பதால், அவன் மிகவும் ஒருவனாக டெடி மாறிவிட்டான். டெடி அவரது
கவலையுற்று காணப்படுகிறான். மேலும், வீட்டில் செல்லப்பிள்ளைகளில் ஒருவனானான்..
அவனுடைய வாழ்க்கை ப�ோராட்டம் நிறைந்ததாக ஓராண்டு கழித்து, திருமதி.தாம்சன் தன்
இருக்கக் கூடும்”. வீட்டுக்கதவின் கீழ் ஏத�ோ ஒரு குறிப்பு இருப்பதைக்
மூன்றாம் வகுப்பு ஆசிரியரின் குறிப்பு: “அவனது கண்டார். டெடியிடமிருந்து வந்திருந்த அக்குறிப்பில்
தாயின் மரணம் அவன் மனதில் பெரும் பாதிப்பை அவன், தன் வாழ்நாளில் இதுவரை தனக்குக் கிடைத்த
ஏற்படுத்தியுள்ளது. எனினும், தன்னால் முடிந்ததை ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் திருமதி
செய்ய முயற்சிக்கும் அவனுக்குத் தன் தந்தையின் தாம்சன்தான் என்று குறிப்பிட்டிருந்தான்.
அக்கறையும், உதவியும் கிடைக்கவில்லை. இதற்காக பின் ஆறு ஆண்டுகள் கழித்து மற்றொரு குறிப்பு
உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அவனது வந்திருந்தது. அதில் டெடி தனது உயர்நிலைப் பள்ளிப்
வீட்டுச் சூழ்நிலை விரைவில் அவனைப் பாதிக்கும்.’’ படிப்பை முடித்துவிட்டதாகவும், வகுப்பில் மூன்றாவது
5 டிசம்பர் - 2021 gVs_

ªêŒFñì™
இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தான். மேலும், ங்கிலாந்து நலவாழ்வு அறிவியல் துறை
இப்பொழுதும் அவர் தான் தன் வாழ்நாளில் இதுவரை தூக்க இயல் பிரிவு வழங்கும் ஆய்வு
தனக்கு கிடைத்த ஆசிரியர்களில் மிக சிறந்த ஆசிரியர் முடிவின்படி இரவு 10 மணியிலிருந்து 11 மணிக்குள்
என்று குறிப்பிட்டிருந்தான். உறங்கச் செல்வதுதான் நல்லது. பத்துமணிக்கு
மீண்டும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முன் செல்வதும் நள்ளிரவிற்குப் பின் செல்வதும்
ஆசிரியருக்கு இன்னொரு கடிதம் வந்தது, விரைவில் உடலுக்குச் ச�ோர்வினையே தரும் என்று 80,000
கல்லூரியிலிருந்து மிக உயர்ந்த சிறப்புகளுடன் பட்டம் பேரிடம் ஆய்வு நடத்திய முடிவினை அண்மையில்


பெற இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தான். இப்பொழுதும், வெளியிட்டுள்ளனர்.
திருமதி. தாம்சன் அவர்களே தன் வாழ்நாளில் தனக்குக் லகத்திலேயே மகிழ்ச்சியான வாழ்விற்குரிய
கிடைத்த மிகச் சிறந்த, தனக்கு மிகவும் பிடித்தமான நாடாக முதலிடத்தில் டென்மார்க்கும் 118
ஆசிரியர் என்று உறுதியாகக் கூறியிருந்தான். ஆவது இடத்தில் இந்தியாவும் இருப்பதாக ஐ.நா.
பின்னர், மேலும் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, சபையின் ஆய்வு தெரியப்படுத்துகிறது.
மற்றொரு கடிதம் வந்தது. இம்முறை இளங்கலைப்
பட்டம் பெற்றுவிட்டான். இருப்பினும் அக்கடிதத்தில்
ஸ்ரீ அரவிந்தர்- 150 முன்னிட்டு நவம்பர் 6
சனிக்கிழமை மாலை இந்திய நேரம் இரவு
எவ்வித மாற்றமும் இன்றி திருமதி. தாம்சன் 8 முதல் 9 மணிவரை ஆர�ோவிலியர் திரு.
அவர்களே இப்பொழுதும் தனக்குப் பிடித்த மிகச்சிறந்த க�ோதண்டராமன், கவிஞர் இரா.மீனாட்சி இருவரும்
ஆசிரியர் என்று குறிப்பிட்டிருந்தான். ஆனால் இணைந்து ஸ்ரீஅரவிந்தரின் புதுச்சேரி வருகை
ஒரு சிறிய மாற்றம் என்னவென்றால் இப்போது அதன் தாக்கம் என்பது பற்றி ஒரு பகிர்ந்துரை
அவனுடைய பெயர் க�ொஞ்சம் நீளமாக இருந்தது. ஆம், நிகழ்த்தினார்கள். ஆர�ோவிலியர் கவிஞர் எழுத்தாளர்
அக்கடிதத்தில் திய�ோடர் F. ஸ்டோடார்ட், M. D. என்று அனுமஜூம்தார் வழிநடத்தினார். உலகின் பலவேறு
கையெழுத்திடப்பட்டிருந்தது நாடுகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஸ்ரீஅரவிந்த
கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. டெடியிட அன்னை அன்பர்கள் இந்த வெப்மினார் நிகழ்வு
மிருந்து மற்றொரு கடிதம் வந்தது. அதில் அவன் தான் குறித்து ஆர்வத்துடன் தங்களுடைய பாராட்டுகளைப்
ஒரு பெண்ணை சந்தித்ததாகவும், திருமணம் செய்யப் பதிவு செய்துக�ொண்டிருக்கிறார்கள். You tube இல்
ப�ோவதாகவும் குறிப்பிட்டிருந்தான். தனது தந்தை (https://youtu.be/m9auW22-aYc)பார்க்கலாம்.!
இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார்
என்றும், எனவே தனது திருமணத்தில் மணமகனின்
தாய் ஸ்தானத்தில் திருமதி. தாம்சன் அமர சம்மதிப்பாரா
என்றும் கேட்டிருந்தான். திருமதி தாம்சன் அதற்கு
ஒப்புக்கொண்டத�ோடல்லாமல், பள்ளியில் கிறிஸ்துமஸ்
பரிசாக டெடி தனக்களித்த சில கற்கள் இல்லாத அந்த
ரைன்ஸ்டோன் வளையலையும், அவனது தாயை
நினைவுபடுத்திய அவ்வாசனை திரவியத்தையும்
பூசிக்கொண்டு வந்தார்.
அவர்கள் ஒருவரைய�ொருவர் கட்டியணைத்துக்
க�ொண்டனர். பின் டாக்டர். ஸ்டோடார்ட் “என்
மீது நீங்கள் க�ொண்ட நம்பிக்கைக்கும், என்னை
முக்கியத்துவம் வாய்ந்தவனாக உணர வைத்ததற்கும்,
என்னால் மாற்றத்தைக் க�ொண்டுவரமுடியும் என்று
நிரூபித்ததற்கும் மிக்க நன்றி“ என்று திருமதி.
ந வம்பர் 18 – குயிலாப்பாளையம் யாத்ரா
கலை நிறுவனத்தில் வேலூர் புற்றுமகரிஷி
தாம்சனின் காதில் கிசுகிசுத்தான். நிலையத்தின் பாரம்பரிய மருத்துவர் சித்தர் அமரர்
திருமதி தாம்சன், கண்களில் கண்ணீர் ததும்ப, கே.பி.அருச்சுனனின் இளவல் மருத்துவர் டாக்டர்
“டெடி நீ கூறுவது அனைத்தும் தவறு. என்னால் கே.பி. செல்வம் அவர்கள் எழுதியுள்ள ‘சீரான
மாற்றத்தைக் க�ொண்டு வரமுடியும் என்பதை எனக்குக் வாழ்விற்கு சித்த மருத்துவம்’ நூல் வெளியிடப்பெற்றது.
கற்றுக்கொடுத்ததே நீதான். உன்னைச் சந்திக்கும் எழுத்தாளர் திரு. பாவண்ணன் நூலினை
வரை ஒரு குழந்தைக்குக் கற்பிக்கும் சரியான முறை வெளியிட்டார். முனைவர் தி. சிவக்குமார் நூல்
என்னவென்பதையே நான் அறியாமல் இருந்தேன்“ அறிமுகம் செய்தார். யாத்ரா சீனுவாசன் வரவேற்புரை
என்று டெடியின் காதில் அவர் கிசுகிசுத்தார். நல்கினார். கவிஞர் இரா.மீனாட்சி அழகுற நடத்தித்
தந்தார். ஆசிரியர் பா. ஆனந்து நன்றி நவின்றார்.
நன்றி- ஸ்ரீஅரபிந்தோ ஆக்க்ஷன் யாத்ரா கலைக்குழுவினரின் இசைவரவேற்பு பெரும்
தமிழில்:- சாய்பிரியா சிவகுமார் மழையினையும் வெற்றிக்கொண்டதே சிறப்பு.
6 டிசம்பர் - 2021 gVs_
ªêŒFñì™

குறள் மலை
கட்டுரை

த மிழுக்குப் பெருமை
திருவள்ளுவருக்கு
சேர்த்த
முதலிடம்
புலவர்களில்
உண்டு,
அவருடைய 1330 குறட்பாக்களும் இன்றளவும் மனித
சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக விளங்குகின்றன,
திருக்குறள் நூல் வடிவில் பல்வேறு பதிப்புகளாக
வெளிவந்துள்ள ப�ோதிலும் அது மட்டும் ப�ோதாது,
அவற்றைக் காலத்தால் அழியாத வகையில்
கற்களில் செதுக்கி வைக்கவேண்டும் என்ற பேரவா
தமிழர்களின் நெஞ்சில் பல காலமாக துளிர்விட்டு
வந்துள்ளது. தற்போது அதற்கான காலம் பிறந்துள்ளது.
திருக்குறள் 1330 ஐயும் உரிய விளக்கங்களுடன்
கல்வெட்டுகளாக ஒரு மலையில் ப�ொறித்து
வைக்க முயன்றனர் சில ஆர்வலர்கள். இதற்காக
குறள்மலைச்சங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பு
உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் தமிழக
அரசுக்கு வேண்டுக�ோள் வைக்கப்பட்டது. தமிழகத்தில்
உள்ள பல மலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக ஈர�ோடு மாவட்டம் ‘மலையப்ப
குறள்மலை உருவாக்கப்பட்ட பின், திருக்குறள்
பாளையத்தில்’ உள்ள மலை தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆராய்ச்சிக்கூடம் நிறுவியும், விழா மண்டபங்களை
இந்த மலை ஒரே கல்லால் ஆன பாறையாகவும், வட்ட
உருவாக்கியும், ஆண்டு முழுவதும் திருக்குறள் விழா
வடிவில் சுமார் 100 அடி உயரமுடையடைதாகவும், 20.5
மற்றும் தமிழ் விழாக்களைத் த�ொடர்ந்து நடத்தவும்
ஏக்கர் பரப்பளவு க�ொண்டதாகவும் அமைந்துள்ளது.
முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது ஒரு பெரிய
மலை உச்சியில் தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஒரு
சுற்றுலாத் தலமாக விரிவடைந்து புகழ்பெறும் என்பதில்
ஆலயம் அமைந்துள்ளது. இது 800 ஆண்டுகள்
ஐயமில்லை. விரைந்து செயல்பட மன்றமும், மக்களும்
பழமையானதாகும். இது ஸ்திரத்தன்மைக�ொண்ட
ஆர்வமுறவேண்டும். இன்று குறள்மலை உருவாக்கம்
கல்லாகவும் உள்ளதால், இந்த மலையே குறள் பதிக்க
எந்த அளவு முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது
ஏற்றதாக முடிவு செய்து, அதை அனுமதிக்க அரசுக்கு
என்பதை அறிந்து க�ொள்ள நாம் ஆவலாயிருக்கிற�ோம்.
விண்ணப்பித்தனர். அரசு கவனமாகப் பரிசீலித்து,
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்
உரிய அனுமதி வழங்கியது, குறள் பாக்களை
க�ொண்ட தமிழ்நாடு!”
கல்வெட்டுகளில் ப�ொறிக்கத் தேவையான உதவிகள்
செய்யவும், இந்த இடத்தை வரும் காலங்களில் தகவல் – டாக்டர் இலட்சுமி நரசிம்மன்
சிறந்த சுற்றுலாத்தலமாக உருவாக்கவும் முயற்சிகள் க�ோயமுத்தூர்
மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்ப் பழம�ொழிகள்
கடந்த 2013 ஜனவரி மாதம் மாதிரி கல்வெட்டுகள்
ப�ொறிக்கப்பட்டன, இதில் சுமார் 30 அடி தூரத்தில்
இருந்துப் பார்த்துப் படிக்குமளவிற்கு எழுத்துகள்
உருவாக்கப்பட்டுள்ளன. எழுத்தின் நீள அகலம் 3 நே
அங்குலமாகவும் 1 அங்குல கனத்திலும் இருக்கும். 1. நேசம் உள்ளவர் வார்த்தை நெல்லிக்கனி தின்றது
இதை அமைப்பதில் மாமல்லபுரம் சிற்பி திரு. அரவிந்தன் ப�ோல.
தலைமையில் ஒரு குழு ஈடுபடும் என்று அறிகிற�ோம்.
திருக்குறள் கல்வெட்டுகள் மாநாடு ஒன்றினையும் 2. நேர்வழி நெடுக இருக்கக் க�ோணல் வழி குறுக்கே
கூட்டி க�ோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் வந்ததாம்.
அறிஞர் பெருமக்கள் விவாதித்தனர். மாநாட்டில் ஓர் 3. நேற்று இருந்தவனை இன்றைக்குக் காண�ோம்.
ஆய்வு நூலும் வெளியிடப்பட்டது. இதில் கல்வெட்டு
4. நேற்று பெய்தமழையில் இன்று முளைத்த காளான்.
ஆராய்ச்சியாளர் செ. ராசு, சந்திராயன் மயில்சாமி
அண்ணாதுரை, இலண்டன் புதுயுகன், கவிஞர் சிற்பி 5. நேற்று வந்தாளாம் குடி; அவள் தலைமேல்
பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் கட்டுரைகள் விழுந்ததாம் இடி.
எழுதிச் சிறப்பித்திருந்தனர். சு. சண்முகசுந்தரம் – சாகித்ய அகாதெமி வெளியீடு.
7 டிசம்பர் - 2021 gVs_
ªêŒFñì™

இச்சிறுமி ஷீலுவின் கதை, வட்டத்தில் அமர்ந்திருந்த


குழுவிளையாட்டில்
சிறுவர் இலக்கியம்

15 வயதிற்குட்பட்ட சுமார் 20 ஆண் பெண் குழந்தைகள்


குழந்தைகள் நெய்த கதை ஒவ்வொருவரும் ஒரு வரியாகச் ச�ொல்லிச் ச�ொல்லி,

ஓ ர் ஊரில் ஷீலு என்ற பெண் இருந்தாள். அவள்


எப்பொழுதும் துறுதுறு என்று இருப்பாள். ஷீலு
நெய்து முடிக்கப்பட்டதாகும். ஆசிரியப் பயிற்சியாளர்
செல்வி சுஹாஸினி நடத்திய இலக்கியப் பயிற்சிப்
பட்டறையின் வெளிப்பாடு இது. அதிகம் சிந்திக்க
விளையாடிக்கொண்டிருந்தப�ோது திடீரென்று இயலாத- விரும்பாத- மறுப்புத் தெரிவித்த
அவளைக் காணவில்லை. அப்போது ஷீலுவின் குழந்தைகள்கூட இரண்டாம் சுற்றில் உற்சாகமாகக்
பெற்றோர். மிகவும் அவதிப்பட்டார்கள். ஷீலு காட்டுக்குச் கலந்து க�ொண்டனர். அவர்கள் கதைகளில்
சென்றாள் அப்போது அங்கு ஒரு சிங்கம் சத்தம் படித்த கதாபாத்திரங்கள், வீடிய�ோ, சினிமாத்
கேட்டது. ஷீலு சிங்கத்தைப் பார்த்து பயந்து வேகமாக திரைகளில் பார்த்த காட்சிகளின் பாதிப்புடன் ச�ொந்த
ஓடி விட்டாள். திடீரென்று வேறுபக்கத்திலிருந்து அனுபவங்களையும், கேட்டிருந்த கதைகளையும்
புலி வருகிறது. புலியைப் பார்த்து மீண்டும் கலந்து ஓர் அவியலாகப் பரிமாறியிருக்கிறார்கள்.
வேகமாக ஓடி விட்டாள். ஒரு காட்டுவாசி அங்கு எப்படியிருந்தாலும் ஷீலுவிற்குப் பெற்றோர்களே
வேட்டையாடிக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு அரண் என்பதை கதைப்போக்கிலே
ஷீலுவைப் பார்த்ததும் காட்டுவாசி மரத்தின்மேல் நிறுவியிருக்கிறார்கள் அதுவும் இந்தக் க�ோவிட்
நின்று வலையை வீசினார். காட்டுவாசி ஷீலுவைக் காலத்தில் வீட்டிற்குள்ளேயே அதிக நேரம் இருக்கும்
காட்டுராஜாவிடம் ஒப்படைத்தார். காட்டுவாசி காலகட்டம் என்பதை வாசிப்பாளர்கள் கணக்கிலே
ராஜாவிடம் “இந்தப் பெண்ணை நாம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் எதிர்பார்த்தபடி
சேர்ந்து சாப்பிடலாம்” என்று கூறினார் அதற்கு சிங்கம், புலி, காட்டுவாசி, படகு, காவலர்கள்
காட்டுராஜா வேண்டாம் என்று கூறினார். ஷீலுவை வந்தாலும் அலைபேசி இல்லாமலா? அது காலத்தின்
வைத்து அவளுடைய பெற்றோர்களிடம் ஏதேனும் கட்டாயம். ஆனாலும் பாருங்கள் காட்டுவாசித்
ப�ொருள் வாங்கலாம் என்று கூறினார். அவர்கள் தலைவர், காவலர்கள், படகு ஓட்டி எல்லாருமே நல்ல
காவலர்களிடம் தகவல் கூறினார்கள். எங்களிடம் மனிதர்களாகத் தெரிகிறார்கள். இச்சமூகப் பாதுகாப்பு
ஒரு சிறு பெண் வந்திருக்கிறாள் என்று கூறினார்கள். நமது குழந்தைகளுக்கு எப்போதும் எங்கும் கிடைக்க
அங்கு வந்த காவலர்கள் ஷீலுவை பெற்றோர்களிடம் வேண்டுமே! நம் கவலை நமக்கு! தைரியமான
ஒப்படைத்துவிட்டனர். குழந்தைகளை வளர்த்து வாழ்க்கைக் கல்வி தந்து
ஷீலு விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒருநாள் ஆளுமையைப் பேணிப்போற்ற வேண்டிய கடமை
மறுபடியும் த�ொலைந்துவிட்டாள். ஷீலுக்கு மிகவும் நம் எல்லோருக்கும் உண்டு.
பசித்தது. அங்கு ஒரு உணவகம் இருந்தது ஆனால்
- சுமித்ரா மனு
ஷீலுவிடம் கையில் பணமில்லை. எட்டியதூரம் ஒரு
படகு எதிரில் வந்தது. அந்தப் படகில் ஷீலு உடன்
ஏறிச்சென்றாள். அவள் சென்ற இடத்தில் படகில்
ஒரு இலவச உணவகம் இருந்தது. அங்கு சென்று TO KNOW IS GOOD
சாப்பிட்டாள். ஷீலுவுடன் ப�ோய்க்கொண்டிருந்தப�ோது TO LIVE IS BETTER
ஒரு பெரிய பாறையில் ம�ோதி படகு இரண்டாகப் TO BE, THAT IS PERFECT
பிளந்தது. அந்தப் படகு ஓட்டி பாதிப்படகில் ஷீலுவை
அமரவைத்து கூட்டிச் சென்றார். அவள் “நான் என் - THE MOTHER
பெற்றோரிடம் பேசவேண்டும்.“ என்று அழுதாள். அந்தப் அறிந்து க�ொள்ளுதல் நன்று
படகு ஓட்டி தனது செல்போனைக் க�ொடுத்து உதவினார். வாழ்தல் மிக நன்று
உடனே ஷீலுவிற்கு சமிக்ஞை கிடைக்கவில்லை.சிறிது அதாக இருத்தல் என்பதே முழுமை
நேரம் கழித்து சமிக்ஞை வந்தது. ஆனால் அவளுக்குத்
ஸ்ரீஅன்னை
தன் தந்தையின் த�ொலைபேசி எண் மறந்து ப�ோயிற்று
அதனால் காவலர்களிடம் நாம் தகவல் கூறலாம் என்று “இந்த நாட்டில் இந்தத் தட்ப வெப்ப
கூறினாள். காவலர்களிடம் தகவல் கூறினார்கள். நிலையில் ந�ோயைத் தவிர்க்க பரிபூரண சுத்தம்
அவர்கள் மீட்ட பிறகு ஷீலுவை பெற்றோரிடம் வந்து இன்றியமையாதது. மிகுந்த எச்சரிக்கையுடனும்
ஒப்படைத்துவிட்டார்கள். ஷீலு தன் பெற்றோரிடம் நான் இருக்க வேண்டும்.“
இதற்கு மேல் தனியாக எங்கும் ப�ோகமாட்டேன் என்று ஸ்ரீ அன்னை - 1971
கூறினாள். அவள் தன் அப்பா அம்மாவைப் பார்த்ததும்
மகிழ்ச்சியாக இருந்தாள். பாதுகாப்பாக உணர்ந்தாள்.
8 டிசம்பர் - 2021 gVs_
ªêŒFñì™

விளையாட்டிலே தன் காலத்தையெல்லாம் கழித்தான்.


மருதிருவர் புகழ்வாழ்க!
பா
சுதந்திரம் 75 - சிறப்புக் கட்டுரை

அவன் வாழ்க்கையே ஒரு வீர விளையாட்டுதான்.


ரதத்தின் பெருமை தென்னகம் எனப்படும் கணையமரம் ப�ோன்ற கைகளையும், ஓங்கி உயர்ந்த
தமிழகம் என்றால், தமிழகத்தின் பெருமை கற்சிலை ப�ோன்ற த�ோற்றத்தையும், முறுக்கி விட்ட
தென்பகுதியையே சேர்கிறது. பண்டைய இரும்புக் கம்பிகள் ப�ோன்ற தசை நார்களையும்,
மன்னர்களாகிய பாண்டியர்கள் ஆண்ட பகுதி இது. பருத்த முண்டாக்களையும், மலை ப�ோல உயர்ந்த
முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்ந்த நிலம். அந்தப் த�ோள்களையும், கூர்வாள் ப�ோலத் திருகி விட்ட
பண்டைய மரபிலேயே வீரத்திலும் தீரத்திலும் மீசையையும், பரந்து விரிந்த மார்பையும், சிங்கம்
தமிழைப் பேணும் வேகத்திலும் முன்னின்றவர்கள் ப�ோன்ற பார்வையையும் படைத்திருந்த வெள்ளை
மாவீர சக�ோதர்களாகிய மருதுபாண்டியர்களேயாவர். மருதைப் பார்த்தாலே ஒரு வகையான அச்சம் கலந்த
வியப்புணர்ச்சி எவர் மனத்திலும் ஊடுருவிப்பாயும்.
இந்திய தேசத்தில் ஆங்கிலேயரின் க�ொடி எங்கும்
அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த உறுதியான
பறந்தப�ோதும் தென்பகுதியாகிய சிவகங்கைச்
ஆர்க்காட்டு ரூபாயை ஒரு ந�ொடியில் வளைத்துக்
சீமைக்குள்ளே நுழைய முடியாதபடி முதன்
காட்டக் கூடிய ஆற்றல் அவன் கைவிரல்கட்கே
முதலில் அவர்களை எதிர்த்து வீரப் ப�ோர் புரிந்த
இருந்தது (மானங்காத்த மருதுபாண்டியர், ப. 26)
வெற்றியாளர்கள் அவர்கள்.
என்று வரலாற்றாசிரியர் சஞ்சீவி குறிப்பிடுகிறார்.
கி.பி. 17ஆம் நூற்றாண்டின் நிறைவில்
மேலும், பின்னாளில்தான் ஆங்கிலேயர�ோடு
புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய
வெள்ளை மருதுவுக்குப் பகை நேரிட்டது. ஆனால்
பகுதிகளைத் தன்னுடைய ஆளுகைக்கீழ் க�ொண்டு
இளம்வயதில் அவர்கள�ோடு நெருங்கிய நட்புக் க�ொண்டு
சிறப்புற ஆட்சி செய்தவர் சேதுபதி மன்னர்களின்
விளங்கினார் என்பதும் வரலாற்றின் அதிசயமே.
வழித்தோன்றலாகிய கிழவன் சேதுபதி ஆவார்.
இவருக்குப் பின்னர் இப்பகுதி தகுந்த மன்னரில்லாது எப்போதாவது வெள்ளை மருது தன்பால்
தவித்தது. ஒருபுறம் புறப்பகையும் மறுபுறம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிற ஐர�ோப்பிய
உட்பகையுமாக நாடு தத்தளித்துக் க�ொண்டிருந்தது. நண்பர்களைச் சந்திக்கத் தஞ்சைக்கும் திருச்சிக்கும்
1772ஆம் ஆண்டு ஜெனரல் ஸ்மித் தென்னாட்டின்மீது வருவது வழக்கம். வெள்ளை மருதுவின் நண்பர்களில்
படையெடுத்தப�ோது இராமநாதபுரத்தில் அரசனாக 9 யாருக்கேனும் பெரிய வேட்டைக்குப் ப�ோகத்
வயதில் இளம்சேதுபதி அமர்ந்திருந்தார். அவரையும் த�ோன்றினால், இவனுக்கு ஒரு செய்தி அனுப்பிவிடுவது
அவரது தாயையும் திருச்சிக் க�ோட்டையில் சிறை ப�ோதும் ஆஜானுபாகுவான த�ோற்றமுடைய
வைத்தான் ஸ்மித். ஆனால், சிவகங்கைப் பகுதியை மருதுவை அங்கே காணலாம். அவ்வாறே எவ்வித வீர
ஆங்கிலேயரால் நெருங்கவே முடியவில்லை. விளையாட்டிலும் யார் கலந்து க�ொள்ள நினைத்தாலும்
காரணம் சிவகங்கைச் சீமை முத்துவடுகநாதரின் சரி, அவர்களை முன்னின்று அழைத்துச் சென்று,
ஆட்சிக்குட்பட்டிருந்தது. அவருக்கு இருகண்களாகவும் வெற்றியும் புகழும் தேடிக் க�ொடுத்து, அவர்கள்
கரங்களாகவும் விளங்கியவர்களே மாவீரர்களாகிய உடம்புக்கும் உயிருக்கும் தீங்கில்லாமல் க�ொண்டு
மருது சக�ோதரர்கள் ஆவர். மூத்தவர் வெள்ளை மருது. வந்து சேர்க்கும் ப�ொறுப்பு நம் பெரிய மருதுவையே
இளையவர் சின்ன மருது. சார்ந்தது. வேட்டைக்குச் செல்லும் ப�ோது பேழ்வாய்ப்
புலி ஒன்று எதிர்ப்பட்டால் பெரிய மருது அடையக் கூடிய
வெள்ளை மருதுவை நம்மவர்கள் மட்டும் ப�ோற்றிப்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன் நண்பனாய் இருந்த
புகழ வில்லை. அவர�ோடு பழகிய ஐர�ோப்பியர்களும்
ஐர�ோப்பிய துரை, வில்லும் வேலும் வாளும் ஏந்திய
புகழ்மொழிகள் பலகூறி வருணிக்கிறார்கள்.
பலம் நிறைந்த வீரர் படை சூழ, உடலும் உள்ளமும்
வெள்ளை மருது மாவீரன், வீரர்களை எல்லாம் நடுங்கி நிற்கும் நேரத்தில் பெரிய மருது பாய்ந்து
தலைவணங்கச் செய்த பெருவீரன். அவனைச் சென்று சீறி வரும் புலியின் வாலை இரு கைகளாலும்
சந்தித்த ஐர�ோப்பியர் அனைவரும், குஷ்வமிசத்தின் பிடித்து, இருபதடி தூரம் பரபர என்று இழுத்துச்
வழி வந்தவன், மாபெரும் வேட்டை நிபுணன், சென்று. இரு பின்னங் கால்களையும் இறுகப் பற்றிக்
பாபில�ோனியப் பேரரசின் தந்தை எனப் ப�ோற்றப்படும் கவண் ப�ோலச் சுழற்றி, ஓங்கித் தரைமீது அடிப்பான்.
‘நிம்ராடு’ ப�ோன்ற பெருவீரன் இவனே தமிழகத்திற்கு ஆத்திரத்தோடு அவனைக் கடித்தெறிய அப்புலி
என்று எண்ணி, வியந்து மதிப்புக் காட்டினர். தன் பேழ்வாயைத் திறக்கும். அப்போது பற்களை
அத்தகைய வீரத்தலைவனாய் விளங்கிய வெள்ளை நறநறவென்று கடித்துக் க�ொண்டே தன் கால் தினவு
மருதுவுக்கு வேட்டை என்றால் பெரு விருப்பம். தீர, புலி சாவ, அதைத் தன் காலின் கீழே ப�ோட்டுத்
அவ்வீரப் பெருமகன் அடர்ந்த காடுகளில் நுழைந்து, துவைப்பான், பின்பு அதன் வாயை இரு பிளவாகக்
க�ொடிய விலங்குகளை வேட்டையாடும் வீர கிழித்துப் பற்களை ஆட்டிப் பிடுங்கி, அவற்றைக்
9 டிசம்பர் - 2021 gVs_
ªêŒFñì™
க�ொண்டு வந்து நண்பர்கட்கு எல்லாம் காட்டி, எளிதில் எவர்க்கும் காட்சி தரக் கூடிய இயல்பும்
நாற்றிசையும் அதிர வெற்றி நகை புரிவான் என்று படைத்தவன். தன் தலையின் அசைப்பே நாட்டின்
குறிப்பிடும் வெல்ஸ் துரைதான் முன்னர் மருதுவிடம் சட்டமெனக் கருதும் மக்களின் தலைவனாய் அவன்
மனம் பறிக�ொடுத்த நண்பனாகவும் பின்னாளில் உயிர் விளங்கிய ப�ோதிலும், தனி ஒரு காவலாளியும்
குடித்த பகைவனாகவும் மாறியவன். மேலும், “பெரிய பாதுகாப்புக்கு இல்லாமல் திறந்த வெளியில் வாழ்ந்து
மருதுவின் இத்தகைய வாழ்க்கை பாதுகாப்பு நிறைந்த வந்தான். 1795 ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள், நான்
நகர வாழ்க்கை வாழ்கிறவர்க்குப் ப�ொருளற்றதாகவும் அவனைக் காணச் சென்ற ப�ோது அவன் இல்லத்தின்
ச�ோம்பேறித்தனம் நிறைந்ததாகவும் த�ோன்றும்; உள்ளே நுழைய விரும்பிய எவர்க்கும் சுதந்தரமாக
ஆனால், உண்மையில் அடர்ந்த காடுகள் செறிந்ததும், உள்ளே புகவும் வெளியே ப�ோகவும் எவ்விதமான
மக்களைக் க�ொன்று குவிக்கும் க�ொடிய விலங்குகள் தடையும் இல்லை என்பதை நேரில் கண்டறிந்தேன்.
நிறைந்ததுமான ஒரு நிலப்பகுதியில் பெரிய மருதுவின் அச்சமயத்தில் குடிமக்களின் தந்தையாய் விளங்கிய
இத்தகைய வீர வாழ்க்கை பெரும்பயன் நிறைந்து அந்த மாவீரனுக்குக் கடவுள் கருணை புரிய வேண்டும்
விளங்கியது” என்னும் அவனுடைய கூற்றிலிருந்து என்பதே அவன் நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய
புலப்படுகிற மற்றும�ோர் உண்மை, மக்களைக் வேண்டுக�ோளுமாய் இருந்தது. அவன் நாட்டு
க�ொன்று குவிக்கும் க�ொடிய விலங்குகளைப் ப�ோலத் வழியாகச் செல்லும் ப�ோது ஏற்பட்ட சாதாரணமான
திரிந்த வெள்ளையர்களிடமிருந்து பெரிய மருதுவின் ஒரு சந்திப்புக் காரணமாகவே அவன் எனக்கு
வீரமே தென்னகத்தைக் காத்தது என்பதேயாகும். நண்பனாகிவிட்டான். அதிலிருந்து நான் மதுரையில்
இவ்வாறு பகைவராலும் ப�ோற்றப்படக்கூடிய இருந்த காலமெல்லாம் அவன் எனக்கு உயர்ந்த வகை
வலிமையையும் பெருமையையும் மருதுபாண்டியர்கள் அரிசியையும் சுவை மிக்க பழங்களையும் அனுப்பத்
பெற்றிருந்தனர். தவறியதில்லை. சிறப்பாகக் கெட்டியான த�ோல�ோடு
கூடிய சுவைமிக்க பெரிய ஆரஞ்சுப் பழங்களை அவன்
பெரிய மருதுவின் பெருமையை இவ்வாறு எனக்கு அன்போடு அனுப்பி வந்தான். அத்தகைய
சுட்டும் வெல்ஸ்துரையைப் ப�ோலவே மற்றொரு அருமையான பழங்களை நான் இந்தியாவின் வேறு
ஆங்கிலத் துரையும் சின்னமருதுவைப் பற்றியும் பதிவு எப்பகுதியிலும் கண்டதில்லை.”
செய்துள்ளான். தனக்கு நண்பனாகவம் குருவுமாக
இருந்த, சின்னமருதுவை நிறைவுக் காலத்தில் பாரெல்லாம் பறந்த மாவீரர் புகழைத் தமிழாய்ந்த
த�ொடையில் சுட்டவன் அவன். தாத்தா உ.வ�ோ.சா. அவர்களும் தாம் பழந்தமிழ்
ஓலைச்சுவடிகளைத் தேடிய காலத்தில் (குன்றக்குடித்
“மூத்தது ம�ோழை இளையது காளை, திருவண்ணாமலை ஆதினத்தின் மூலமாக)
என்பது பழந்தமிழ்ப் பழம�ொழி. ஆனால், மூத்தது அறிந்தனவற்றைப் பின்வருமாறு வரலாற்றில் பதிவு
காளையானால், இளையதைப் பற்றிச் ச�ொல்லவும் செய்துள்ளார்.
வேண்டுமா? சின்ன மருது கார் வண்ணன்,
ஆனாலும், கட்டழகன்; அண்ணனைப் ப�ோல சிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக
அவ்வளவு பெரிய உருவமுடையவன் அல்லன். ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத
ஆயினும், எவர்க்கும் இளைக்காத த�ோற்றப் ப�ொலிவு சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய
படைத்தவன். கம்பீரமான த�ோற்றம், சிரித்த முகம், பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும்
எளிய க�ோலம், எவருடனும் கர்வம் இன்றிப் பழகும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று
கள்ளமற்ற சுபாவம் - இத்தகைய சிறப்புகள் யாவும் வழங்கி வந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட்
அமைந்தவன் சின்ன மருது. அண்ணனைக் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை
காட்டிலும் உலகியல் அறிவிலும் ராசதந்திரத்திலும் ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார்.
வல்லவனாய் விளங்கினான் சின்ன மருது. காட்சிக்கு தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்கள�ோடு
எளியனாய், கடுஞ்சொல் அற்றவனாய் இருந்த அவன் ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப்
நா அசைந்தால் நாடு அசையும் அவன் இட்டது சட்டம்” பேசுதலும் அவர்கள் கூறுவனவற்றைக் கேட்டு மகிழ்ந்து
என்று பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உடனுடன் பரிசளிப்பதும் அவருக்கு இயல்பு. அவர் மீது
வித்துவான்கள் பாடிய பிரபந்தங்களும், சமயத்திற்கேற்பப்
அதுமட்டுமல்ல, தன்னைக் க�ொல்ல வந்த பாடப் பெற்ற பல தனிப் பாடல்களும் அங்கங்கே வழங்கி
எதிரியையும் நன்றி பாராட்டிய பெருந்தன்மை சின்ன வருகின்றன. சிறந்த வீரர். அவர் ஆட்சியின் எல்லையில்
மருதுவுக்கு உண்டு. இதனையும் ஆங்கிலேயத் திருட்டுப் பயம் முதலியன கிடையா. அவருடைய
துரையே பதிவு செய்கிறான். ஆணைக்கு அஞ்சி யாவரும் நடந்து வந்தனர்.
“சின்னமருது கம்பீரமும் கட்டழகும் வணக்கமும் அவர் தெய்வ பக்தி உடையவர். தம் ஆட்சிக்குட்பட்ட
நிறைந்த வியத்தகு மனிதன் நல்ல நடத்தையும் ஆலயங்களில் நித்திய நைமித்திகங்கள்
10 டிசம்பர் - 2021 gVs_
ªêŒFñì™
விதிப்படி காலத்தில் நடந்து வரும் வண்ணம் பிளவுபட்டிருக்கும் மக்களுக்கும் முகமதியருக்கும்,
வேண்டியவற்றைச் செய்து வந்தார். பல தலங்களில் ப�ொதுவான நலன்களைக் கருத்திற்கொண்டு இந்தப்
அவர் திருப்பணிகள் செய்துள்ளார். ஆலயங்களுக்குத் ப�ோர் முழக்கம் வெளியிடப்படுகிறது.
தேவ தானமாக நிலங்களை அளித்திருக்கின்றார்.
முருகக் கடவுள் க�ோயில் க�ொண்டெழுந்தருளியுள்ள மாட்சிமை்பட்ட நவாப் முகமது அலி முட்டாள்தனமாக
முக்கிய ஸ்தலமாகிய குன்றக்குடியில் திருவீதிக்குத் உங்களுக்கு மத்தியில் ஆங்கிலேயருக்கு இம்மண்ணில்
தென்பாலுள்ள ஒரு தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து இடமளித்ததால் இம்மண்ணில் கைம்மை நிலை
படித்துறைகள் கட்டுவித்தனர். அக்குளம் மருதாபுரி உருவாகிவிட்டது. ஆங்கிலேயர்கள் நேர்மைக்குப்
என்று அவர் பெயராலேயே வழங்கும். அதனைச் புறம்பாக நவாப்பினுடைய ஆட்சியுரிமையைக்
சூழ அவர் வைத்த தென்னமரங்களிற் சில இன்றும் கைப்பற்றிக் க�ொண்டனர். உள்நாட்டு மக்களை
உள்ளன. காளையார் க�ோவிலிலுள்ள மிகப் பெரிதான நாய்களாகக் கருதி அவ்வாறே நடத்துகின்றனர்.
யானைமடு என்னும் தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து மேலே ச�ொல்லப்பட்டபடி பல்வேறு அடிப்படையில்
நாற்புறமும் படித்துறை கட்டுவித்தார். அந்த ஸ்தலத்தில் பிரிந்திருக்கக்கூடிய நீங்கள் உங்களுக்குள்
க�ோபுரமும் கட்டுவித்தார். அப்பொழுது மிக்க ஒற்றுமையையும் நட்பையும் வளர்த்துக் க�ொள்ளாமல்
தூரத்திலிருந்து செங்கற்கள் வரவேண்டி யிருந்தன. ஆங்கிலேயர்கள் உங்கள் மத்தியில் ஆடுகின்ற
அதற்காக வழி முழுவதும் சில அடிகளுக்கு ஒவ்வொரு இரட்டை நாடகத்தையும் புரிந்துக�ொள்ளாமல் உமக்குள்
மனிதராக நிற்க வைத்து ஒருவர் கை மாற்றி ஒருவர் தீராப் பகைமையைப் பெருக்கிக் க�ொண்டதுடன்
கையிற் க�ொடுக்கும் வண்ணம் செய்து செங்கற்களை ஆட்சியையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.
வரவழைத்தனர். அவ்வாறு மாற்றுபவர்களுக்கு அவல் அத்தகைய இழி பிறவிகளுடைய கைகளில்
கடலை முதலிய உணவுகளையும் தண்ணீரையும் சிக்கிக்கொண்ட பகுதிகளில் மக்களுடைய வாழ்க்கை
அடிக்கடி க�ொடுத்து அவர்களுக்குக் களைப்புத் ஏழ்மையடைந்து உண்ணும் உணவுகூட அரிதாகிப்
த�ோன்றாமல் செய்வித்தார் என்று அவர்தம் வீர ப�ோய்விட்டது. மக்கள் பலவாறான துன்ப, துயரங்களுக்கு
வரலாற்றை பதிவு செய்கிறார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. ஆட்பட்டப�ோதிலும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான
யாவற்றையும்விட மருதுபாண்டியர்களின் வழிவகைகளையும் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
உயர்வீரத்திற்கும், தேசபக்திக்கும் பெருஞ்சான்றாய் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட மனிதன்
விளங்குவது ஆங்கிலேயருக்கு எதிராக அவர்கள் ஒருநாள் மடியப் ப�ோவது உறுதி. அவர்கள் ஈட்டக்கூடிய
விடுத்த ஜம்புத் தீவுப் பிரகடனமேயாகும். புகழ், சந்திர சூரியர்கள் உள்ளவரை நிலைத்திருக்கும்.

ஜம்புத் தீவு பிரகடனம் தென்னிந்தியாவில் குறிப்பாக ஆகவே இழந்துவிட்ட மரபு உரிமைகளை


தமிழகத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆற்காட்டு மீட்டெடுக்கும் விதத்தில் திட்டங்கள் வகுக்கப்பட்டு
நவாப்பிடமிருந்து பெற்று நேரடியாக வரித் திரட்டலை உறுதிப்படுத்தப்பட்டன. அதாவது மாட்சிமைப்பட்ட
நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக நவாப்பிற்கும் விஜய ராமநாத திருமலை நாயக்கருக்கும்
எதிர்ப்புத் தெரிவித்து அங்காங்கே ஆங்கிலேயரை தஞ்சாவூர் ராஜாவுக்கும் ஏனைய மன்னர்களுக்கும்
எதிர்த்துப் ப�ோர் நடத்தினர். மதுரை நாயக்கர்கள் அவரவர்களுடைய அரசுரிமை முழுமையாக
72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செய்த பகுதியில் ஒப்படைக்கப்படும். அனைவருக்கும் அவரவர்களுக்கும்
சிவகங்கைப் பாளையக்காரர் முத்துவடுகநாதர் உரிய உரிமைகள் சமய நம்பிக்கைக்கும் மரபு வழிப்பட்ட
க�ொல்லப்பட்டபின் அவருடைய தளபதிகள் பழக்கவழக்கங்களுக்கும் முரணற்ற விதத்தில்
மருதிருவர் ஆட்சிப் ப�ொறுப்பேற்றனர். அக் காலம், முறையாக ஒப்படைக்கப்படவுள்ளன. நவாப்பைச் சார்ந்து
ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட சேவையாற்றுவதுடன் ஆங்கிலேயர்கள் தம்மைக்
அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்து திருச்சியில் சின்ன கட்டுப்படுத்திக்கொண்டு அதன்மூலம் அவர்களுடைய
மருது வெளியிட்ட மறுப்பு அறிவிப்புதான் ஜம்புத் நிரந்தர மகிழ்ச்சிக்குக் குறைவின்றி வாழலாம்.
தீவு பிரகடனம். இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயருடைய ஆட்சி முற்றாக அழித்தொ
சூன் மாதம் 16ஆம் தேதி திருச்சிக் க�ோட்டையில் ழிக்கப்பட்டு விடுவதால் நவாப்பினுடைய ஆட்சியின்
ஒட்டப்பட்டது. இத�ோ அந்தப் பிரகடனம், கீழ் நாமும் துயரங்களற்று நிம்மதியாக வாழலாம்.
“இந்தச் சுவர�ொட்டியைக் காண்போர் யாராயினும் ஆகவே இந்த மண்ணில் வாழும் ஒவ்வொருவரும்
கவனமாகப் படியுங்கள் தாம் வாழுகின்ற ஊர்களிலும் பாளையங்களிலும்
ஜம்புத்தீபா நாட்டிலும் அதன் தீபகற்பத்திலும் ஆயுதங்களை இறுகப் பற்றிக்கொண்டு ஒன்றிணைந்து
வாழுகின்ற அனைத்து இனத்தவருக்கும், அந்த இழிபிறவிகளுடைய பெயரைக்கூட இம்மண்ணில்
உள்நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், பிராமண, இல்லாதபடி செய்ய உறுதி பூண வேண்டும். அப்போதுதான்
சத்திரிய, வைசிய, சூத்திர சாதிகளாகப் ஏழை எளியவர்கள் உயிர் வாழவே முடியும். எச்சில்
11 டிசம்பர் - 2021 gVs_
ªêŒFñì™

வாழ்க்கை வாழுகின்ற நாய்களைப் ப�ோல அத்தகைய த�ொடுத்தது ஆங்கிலப்படை. 150 நாட்கள் இடைவிடாது
இழிபிறவிகளுக்குக் கீழ்படிந்து உயிர் சுமந்து திரிய நடைபெற்ற இந்தப் ப�ோரில் வஞ்சகமும் துர�ோகமும்
யாரேனும் ஆசைப்படுவார்களேயானால் அவர்களைக் அளவு கடந்தன. தலைமறைவாக இருந்தும் த�ொடர்ந்து
கருவறுக்க வேண்டும். அந்த இழிபிறவிகள் எத்தகைய ப�ோராடிய மருதுபாண்டியரைப் பிடித்துக் க�ொடுப்போ
சூழ்ச்சிகளால் இங்குள்ளவர்களைத் தம் வசப்படுத்திக் ருக்குப் பரிசில் ஆசை காட்டி ஆங்கிலப் படைகள்
க�ொண்டு இந்த மண்ணை அடிமைப்படுத்தியுள்ளனர் தூண்டி விட்டன. இறுதியாகத் துர�ோகமே வென்றது.
என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆகவே 24-10-1801 அன்று மருதிருவரும் திருப்புத்தூர்க்
பிராமணர்கள், சத்திரியர்கள், வைஸ்யர்கள், க�ோட்டையில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு வீரமரணம்
சூத்திரர்கள், முகமதியர்கள் என்றெல்லாம் பிளவுண்டு அடைந்தனர். அவர்கள�ோடு அவர்தம் குடும்பத்தினர்
கிடக்கின்ற எம்மக்களே! திசை தவறிப் ப�ோய் இந்த இழி சிலர் தவிர சுமார் 500க்கும் மேற்பட்டோர் எந்தவிதமான
பிறவிகளுடைய படையில் சுபேதார்கள், ஹவில்தார்கள், விசாரணையுமின்றி உடன் தூக்கிலிடப்பட்டனர்.
நாயக்குகள், சிப்பாய்கள் என்று பட்டங்களைச் தங்களின் விருப்பப்படியே மருதுபாண்டியர்களின்
சுமந்தலுத்த, ஆயுதமேந்த வல்லவர்களே உங்களுடைய தலைகள் காளையார்கோயில் க�ோபுரத்தைப்
வீரத்தையும் தீரத்தையும் இப்படி வெளிப்படுத்துங்கள். பார்த்ததுப�ோலப் புதைக்கப்பட்டதாக இன்றும் மக்கள்
இந்தச் சுவர�ொட்டியைப் படிப்போரும் கேட்போரும் நம்பி வருகின்றனர். வெள்ளையர்களிடம் பிடிபட்ட
தமது நண்பர்களுக்கும் ஏனைய�ோருக்கும் பரப்புங்கள். சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின்
இதே ப�ோன்ற சுவர�ொட்டிகளைத் தயாரித்துப் பரப்புரை தளபதிகளும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்க்கு (இன்றைய
செய்யுங்கள். பினாங்கு) நாடு கடத்தப்பட்டனர்
இந்தச் சுவர�ொட்டியை இந்தச் சுவரிலிருந்து சங்ககாலத்தில் வாழ்ந்த முடியுடை மூவேந்தருக்கு
நீக்க முற்படுபவன் பஞ்சமா பாதகங்களைப் புரிந்த இணையான பேராற்றலும் பெருங்கொடையும்
பாவத்திற்கு ஆளாவான். ஒவ்வொருவரும் இதனைப் க�ொண்டு விளங்கிய மருதுசக�ோதரர்கள் இருநூறு
படித்து நகலெடுத்துக் க�ொள்ளுங்கள் ஆண்டுகளுக்கு முன்பாக நம் தென்தமிழகத்தை
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியச் சூழ்ச்சியிலிருந்து
இப்படிக்கு காப்பதற்குப் ப�ோராடியிருக்கிறார்கள். இன்னும் அவர்
மருதுபாண்டியன் வீர வாழ்க்கையைக் குறித்த அறியாத பல மர்மங்களும்
பேரரசர்களின் ஊழியன் ஒளிந்திருக்கின்றன. ii
ஐர�ோப்பிய இழிபிறவிகளுக்குச் சென்ம எதிரி.
அடுத்துவரும் தலைமுறைக்கு மாவீரர் மருது
ஸ்ரீரங்கத்தில் வாழும் சமயகுருக்களுக்கும் பாண்டியர்களின் வரலாற்றை எடுத்துச் ச�ொல்ல
பெரிய�ோர்களுக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேண்டிய கடமை நமக்குண்டு.
மருதுபாண்டியன் பாதம் பணிந்த வணக்கங்களை
மருதுபாண்டியர் புகழ் ப�ோற்றும் முதல் நூல்கள்
உரித்தாக்குகிறேன். மகாராஜாக்கள் க�ோட்டைகளைக்
1. ந.சஞ்சீவி - மானங்காத்த மருதுபாண்டியர்
கட்டியெழுப்பிப் பாதுகாத்தார்கள்; களிமண்ணால்
2. ந. சஞ்சீவி - மருதிருவர்
முன் முகப்புகளை வடிவமைத்தனர். க�ோட்டைக்
க�ோவில்களையும் தேவாலயங்களையும் மசூதிகளையும் கட்டுரைகள்
எழுப்பினர். அத்தகைய மகாராஜாக்களும் மக்களும் 1. இராஜவேலு, கு. - வீரமருதுபாண்டியர்
இந்த இழிபிறவிகளுடைய ஆட்சியில் வறுமையில் 2. சஞ்சீவி, ந. - சிவகங்கைச் சிங்கங்கள்
வாடுகிறார்கள். எப்படியெல்லாம�ோ வாழ்ந்த நீங்கள் 3. சஞ்சீவி, ந. - பெரிய மருது சின்ன மருது
இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டீர்கள். எனக்கு 4. சுத்தானந்த பாரதியார் - மருதுபாண்டியர் வீரம்
உங்களுடைய நல்லாசிகளை வழங்குங்கள்” 5. பாஸ்கரத் த�ொண்டைமான் - காளையார் க�ோவில்
கதைகள்
என்று முடிகின்றது அந்தப் பிரகடனம். அதன்பின்னர்
1. ச�ோமு (ச�ோமசுந்தரம், மீ.ப.) - மருதுபாண்டியன் க�ோட்டை
நடந்த க�ொடுமைகளை உலகமே அறியும். 1857
2. பார்த்தசாரதி ந. - காளையார் க�ோவில் புரட்சி “
சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்குமுன்
நடந்த இந்திய தென்னிந்திய புரட்சியே முதல் நாடகம்
ஒருங்கிணைந்த விடுதலைப் ப�ோராட்டமாக பல 3. சிதம்பர இரகுநாதன் - மருது பாண்டியன்’
வரலாற்றாய்வாளர்களால் கருதப்படுகிறது. பாட நூல்
4. சுப்பிரமணிய ஐயர், எம்.எஸ்.
கும்பெனி எதிரியாகிய வீரபாண்டியக் கட்டப்
ப�ொம்மனுக்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பெற்று திரைப்படம்
1801 மே 28 சிவகங்கைச் சீமையின் மீது பெரும்போர் 1. கவியரசு கண்ணதாசன் - சிவகங்கைச் சீமை
- முனைவர் ச�ொ. அருணன்
12 டிசம்பர் - 2021 gVs_
ªêŒFñì™

ஸ்ரீஅரவிந்தர் – 150… ந�ோக்கி தமிழ்மொழிப்பயிற்சி – 91


ஆர�ோவில் தில்லைகணபதி படைத்தளிக்கும் அரவிந்தம் இச்சொற்களுக்கு சரியான ப�ொருள் கூறுக.
இந்த ஆன்மிக இயக்குநருக்கு வெ
பதினாறாம் வயதில் I. வேகசரம் (1) குதிரை
ஒரு திருப்புமுனை (2) காளை
பின்னாளில் (3) ஒட்டகம்
II. வேதனம் (1) சம்பளம்

(2) ச�ொத்து
முதற்கவிதை பிரசவம் (3) உண்டியல்
அவரது III. வேமம் (1) நூல் உருண்டை
மாபெரும் காப்பியமாம் (2) நெய்வோர் தறி
“சாவித்திரியின்“ (3) இராட்டை
முத்திரைக்கு IV. வேயுள் (1) நிலைவாசல்
முதல் ஒத்திகை (2) மாடம்
(3) கூடம்
பெற்ற தாய்நாடும் V. வேற்றலம் (1) அக்னி
பேணி வளர்த்த தந்தையும் (2) மழை
அடிமைப்பட்டது (3) காற்று
டில்லி பாதுஷாவிடம். பயிற்சி – 91 சரியான விடைகள்
மீட்க, குதிரை ஏறி சவாரி செய்தார் 1. வேகசரம் (3) ஒட்டகம், a camel
தேசிங்கு ராஜா. 2. வேதனம் (1) சம்பளம், salary, wages
அடிமைப்படுத்தும் 3. வேமம் (2) நெய்வோர் தறி, a loom
ஆங்கிலேயரிடம் 4. வேயுள் (2) மாடம், a small niche
ஐசிஎஸ் வேலையா? 5. வேற்றலம் (3) காற்று, wind
சுதேசி எண்ணத்தால்
குதிரைச் சவாரித் தேர்வை மறுத்தார்.
ஒரு ச�ொல் பல ப�ொருள்
இந்த அரவிந்த ராஜா.
வேலை
அரபிக்கடலில் 1) த�ொழில் - work
சத்தமிடும் வெண்ணலைகளை 2) செய்பொருள் - workmanship
முத்தமிடும் கடற்கரை 3) கடல் - sea, ocean
பாரதத்தின் கடல்வழி நுழைவாயில் 4) கடற்கரை - sea shore
5) வேளை - time, opportunity
வாணிபத் தலைநகரம்
6) நிகழ்காலம் - the present time
வர்த்தகத் துறைமுகம் பம்பாய் 7) எல்லை - boundary
1893, பிப்ரவரி
நீண்ட தூரப்பயணம் A Tamil English Dictionary
பயணிகளின் சுமை By V. Visvanatha Pillai
களைப்பால் தனிச்சுற்றுக்கு மட்டும்
ஓய்வெடுத்துக்கொண்டது
கார்தேஜ் கப்பல். ªõOf´ : ÝCKò˜ °¿
புராதன இலக்கியங்கள் Ý«ó£M™ ªêŒFñì™
Unit of Sri Aurobindo
வேத விற்பன்னர்கள் Þ¬÷ë˜èœ è™M ¬ñò‹
International Institute
ய�ோக முனிவர்கள்
of Educational
Ý«ó£M™ - 605101
உதித்தத் திருநாட்டில் Research M¿Š¹ó‹ ñ£õ†ì‹
ஏழிரண்டு ஆண்டுப் îI›ï£´
பூக்கள் பூத்தபின் I¡ù…ê™ : tamil@auroville.org.in
அப்போல�ோ பந்தரின் ªî£¬ô«ðC : 0413-2623773
அருமைக் கடற்கரையில் ÝCKò˜ : Þó£.eù£†C
அரவிந்த பாதங்கள்.. õ®õ¬ñŠ¹ : ªê£.ܼí¡, ¹¶¬õ.
(மேலும் மலரும்) அச்சு : சூர்யா பிரிண்ட் ச�ொலூசன்ஸ், சிவகாசி.

You might also like