You are on page 1of 3

அரவிந்தன் கணேசன் (எஸ் 6)

சீனி நைனா முகமதுவின் கவிதையில் யாப்பும் அணியும்.

நாகப்பட்டினம் மரு. வெங்கடாசலம் பிள்ளை அவரே மலேசிய மரபுக்கவிதைகளின்


முன்னோடியாவார். இவரைத் தொடர்ந்து வந்தவர்களில் செ. சீனி நைனா முகமதும் ஆவார்.
இவர் கரும்பன், அபூபரிதா, இபுனுசைய்யீது, நல்லார்க்கினியன் ஆகிய புனைப்
பெயர்களாளும் அறியப்பட்டவர். கவிதை இலக்கணத்தை முறையாகக் கற்று அதனைப்
பிறருக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். சிறந்த இலக்கியச்
சொற்பொழிவாளராவார். இவர் எழுதிய மரபுக்கவிதைகளின் தொகுப்பே ‘தேன்கூடு’ ஆகும்.

மேலும், இந்த நூலில் ஒவ்வொரு தலைப்பிலும் கவிதைகள் காலவரிசையில்


வைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் மலேசிய வானொளியில் முதன்முதலாகப் புத்தாண்டுப்
பாடலாக வெளிவந்தக் கவிதையே ‘பூக்கும் காலம்’ ஆகும். இப்பாடலில் காணப்படும்
கருபொருள், நன்நெறிப்பண்பு, மொழிநடை, கலைச்சொற்கள் அனைத்துமே
ஆய்வுக்குட்பட்டவையாகத் திகழ்கின்றன.

பூக்கும் காலம்

புவிஎங்கும் புதுமையடி பூக்கும் காலம் இனிமையடி

கவிபாடும் காலம் இதுதானடி – தோழி

கவலையெல்லாம் நமக்கினிமேல் ஏதடி

ஓடிவிட்ட காலத்தோடு ஓடுதுபார் துன்பம்

உயர்வேதான் தாழ்வில்லை உள்ளமெல்லாம் இன்பம்

பாடுபட்ட நெஞ்சுக்கெல்லாம் பயனைக்கையில் கொண்டு

பாசத்தோடுவந்ததிதோ பாரடி புத்தாண்டு

பூத்தறியாகக் கொடிகளெலாம் பூத்ததனைப் பாராய்

புன்மையோடு கவலையெலாம் போனதடி நீறாய்

ஆர்த்தெழும்பும் கடலலைகள் அழைக்குதடி வாராய்

அவைகூறும் புதியகதை அருகிருந்து கேளாய்

பூக்கும் காலம் கவிதையின் கருபொருள் புதிய ஆண்டை வரவேற்றல் ஆகும்.


துன்பங்களை மறந்து, இன்பத்தோடு புத்தாண்டை வரவேற்போம் என்பதை இக்கவிதையைக்
குறிக்கிறது. ‘கவிபாடும் காலம் இதுதானடி தோழி! கவலையெல்லாம் நமக்கினிமேல் ஏதடி’
எனும் வரி புதிய ஆண்டை வரவேற்பதிலிருக்கும் இன்பத்தை எடுத்துரைக்கின்றது. சீனி
ஐயா பொருள் மயக்கத்திற்குப் பெயர்போனவர். கவிதையின் உண்மைப் பொருள்
அறியாமல் வாசித்தால் பாலையில் தலைவனுக்காகத் தலைவி ஏங்கி குறிஞ்சியில்
அரவிந்தன் கணேசன் (எஸ் 6)

கூடலுக்காக காத்திருக்கும் வகையிலே அமைந்திருக்கும். வாசகர்களின் எண்ணங்களை


அளைய வைப்பது கவிஞர்களின் கைவண்ணமேயாகும்.

பூக்கும் காலம் கவிதை மலேசிய வானொளியில் புத்தாண்டுப் பாடலாக


ஒலியேறியது. இந்தக் கவிதை ‘புளிமாங்காய் புளிமாங்காய் தேமா தேமா புளிமாங்காய்’
என்ற வாய்ப்பாட்டில் தொடங்குகிறது. சுருங்கக்கூறின், இக்கவிதை வெண்சீர், மாச்சீர்,
வஞ்சிஉரிச்சீர் கொண்டு தொடங்குகிறது. மேலும், இக்கவிதையில் முரண் தொடை (
இன்பம் – துன்பம் ) பயன்பாட்டினைக் காணலாம். அதுமட்டுமின்றி, இக்கவிதையில் அடி
மோனை, பொழிப்பு மோனை, அடி எதுகை, இயைபு ஆகிய யாப்பிலக்கணத்தையும் சீனி
ஐயா பயன்படுத்தியுள்ளார். காட்டுகள் கீழ்வறுமாறு;

அடி மோனை

பாடுபட்ட நெஞ்சுக்கெல்லாம் பயனைக்கையில் கொண்டு

பாசத்தோடு வந்த்தோ பாரடி புத்தாண்டு

பொழிப்பு மோனை

ஓடிவிட்ட காலத்தோடு ஓடுதுபார் துன்பம்

உயர்வேதான் தாழ்வில்லை உள்ளமெல்லாம் இன்பம்

அடி எதுகை

புவியெங்கும் புதுமையடி பூக்கும் காலம் இனியதடி

கவிபாடும் காலம் இதுதானடி – தோழி

முரண் அணி

ஓடிவிட்ட காலத்தோடு ஓடுதுபார் துன்பம்

உயர்வேதான் தாழ்வில்லை உள்ளமெல்லாம் இன்பம்

இயைபு

புவிஎங்கும் புதுமையடி

பூக்கும் காலம் இனியதடி

கவிபாடும் காலம் இதுதானடி

கவலையெல்லாம் நமக்கினிமேல் ஏதடி


அரவிந்தன் கணேசன் (எஸ் 6)

கவிதையென்றாலே எங்காவது ஒரு இடுக்கில் நன்நெறிப்பண்பு ஒட்டியிருக்கும்.


ஆனால், இக்கவிதையே நற்பண்பினால் பாடப்பட்டதாகும். மனிதனை மனிதன் மதிப்பது
ஒருபக்கப் பண்பாக அமைந்தாலும், மனிதன் காலத்தை மதிப்பது தலைவணங்கவேண்யப்
பண்பாகும். இக்கவிதையானது புத்தாண்டை மதித்து பண்போடு வரவேற்கும் கவிதையாகும்.
கடமையாற்றுப் பண்பும் இதில் வெளிப்படுகிறது. முடிந்த ஆண்டின் கசப்புகளை எண்ணி
வருந்தாமல் புதிய ஆண்டில் ஆற்ற வேண்டிய கடமையை எண்ணி மகிழ்ந்துப் பாடும்
பண்பு மேன்மைக்குறியதாகும்.

இக்கவிதையில் கலைச்சொற்களின் பயன்பாடு அதிகமாகக் காணப்படல்லை.


கரணியம் எளிய முறையிலும் மக்களுக்கு விளங்கும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டக்
கவிதை இது. இருப்பினும் கவிதை நயன்மையெண்ணி கவிஞர் ஒருசில கலைச்சொற்களைப்
பயன்படுத்தியுள்ளார். காட்டாக, பூமியைப் புவியெனக் கூறியுள்ளார். அலையடிப்பதை
ஆர்த்தெழுப்பும் என அழகூட்டியுள்ளார்.

You might also like