You are on page 1of 2

RETHA NADARAJAH / PK KOKU 2022/ SJK T TAMAN MELAWATI

விரும்பிடு விஞ்ஞானம் !

நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் தாக்கம் மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும், எல்லா அம்சங்களிலும்
வந்து விட்டது. விஞ்ஞான சிந்தனை வளர்ச்சி என்பது கடந்த 300 ஆண்டுகளாக படிப்படியாக வளர்நத
் ஒரு
மனித சிந்தனையின் முதிர்ச்சி என்று கூறலாம்.

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இன்று மனிதன் எண்ணிலடங்கா பயன்களை அனுபவித்து


வருகின்றான்.

மனித வாழ்வும் விஞ்ஞானமும் இரண்டறக் கலந்தே இன்றைய நவீன உலகம் இயங்கி வருகின்றது என்றால் அது
மிகையல்ல. அதற்கு என்னதான் காரணம் ? நாம் சிந்தித்ததுண்டா ?

கணிதத்தை விட, அறிவியல் பாடம் மிகவும் கடினம் என நம்மில் பலர், அதாவது பல மாணவர்கள் சொல்லக்
கேட்டிருப்போம்.

அறிவியல் பாடத்தில் நிறைய படிக்க வேண்டும். அதிகமாக மனனம் செய்ய வேண்டும். வரிசையாக எழுத
வேண்டும். இப்படி எத்தனை எத்தனை சவால்கள் ?

இப்படித்தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறில்லைதான். ஆனால், அதன் பொருட்டு


அப்பாடத்தத் ின் மீது அச்சப்படுவதும் வருத்தப்படுவதும், நிச்சயமாக அவசியமில்லாததுதான் !

அறிவியல், அன்றாடம் நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் வழி உணர்வதும் அறிவியல்தான், அது
கட்டாயம் விரும்பிட வேண்டிய ஒன்று. ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று,

எனவே, விரும்பிடு விஞ்ஞானம் !

அறிவியலைப் பொறுத்தமட்டில், நம்மில் பலருக்கு ஏற்படும் பயமானது அதனைப் புரிந்து கொள்ள


முயற்சிக்காகததும், புரிந்து கொண்டதை அதற்குரிய சொற்களஞ்சியங்களோடு எழுதிப் பழக்கப்படுத்திக்
கொள்ளாததும் தான். அறிவியலை நேசித்து விட்டால், விஞ்ஞானத்தை விரும்பி விட்டால், இது எல்லாமே
சாத்தியம்தான்.

இன்றைய மாணவர்களாக இருக்கும் நாம் அடிப்படை அறிவியல் அறிவு பெற தவறினால் எதிர்காலத்தில் எந்தத்
துறையையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அந்த அறிவியலை நேசித்து, விரும்பி
படிக்கின்ற பொழுது, எல்லாத் துறைகளும் நமது வசமாகி விடும். எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம்,
சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சியை முடிவு செய்யக் கூடிய ஆற்றல் இன்றைய மாணவர் சமுதாயமான நம்மிடம்
இருக்கின்றது என்பது மறக்கவோ மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாததாகும்.

இதற்கு அடிப்படை, விஞ்ஞானத்தை விரும்புகின்ற நிலையில் ஏற்படுகின்ற மாறுபாடுகள்தான்.


விஞ்ஞானத்தை விரும்பிகின்றபோது அதனை நாம் எதிர்கொள்வதும் கையாள்வதும் சற்றே மாறுபடும்.
முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கும்.

விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சி ஏதோ ஒரு மனிதனின் மனதில் எங்கோ ஒரு மூலையில் விஞ்ஞானத்தின் மீது
அவனுக்கு ஏற்பட்ட விருப்பத்தால் ஏற்பட்டதுதான். விரும்பப்படாமல் செய்கின்ற எதுவுமே முழுமையான
வெற்றியைத் தந்து விடாது என பல அறிஞர்கள் கூறி வந்திருக்கிறார்கள்.
RETHA NADARAJAH / PK KOKU 2022/ SJK T TAMAN MELAWATI

அதே சமயம், ஒரு துறையில் அல்லது ஒரு செயல்பாட்டில் ஏற்படும் ஆரவம் , ஈடுபாடு, விருப்பம் இதனை
அடிப்படையாகக் கொண்டு எடுத்துக் கொண்ட துறையில் சாதனை செய்த, செய்கின்ற பல வெற்றிக்
கதைகளும் நாம் அறிவோம்.

எதிர்காலத்தில் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கின்ற இடத்தில் இன்றைய மாணவச் சமுதாயம்


இருக்கின்ற அதே வேளையில், அந்தத் தலையெழுத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆளுமையில்
விஞ்ஞானம் வீற்றிருக்கின்றதையும் நாம் மறந்து விடக் கூடாது.

மனிதன் கருவில் தோன்றிய காலம் முதல் அவனது வாழ்வு முடிந்த பின்பும் விஞ்ஞானத்தின் பணி
தொடர்வதை காண்கிறோம். விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது நன்மை, தீமை இரண்டையும் கலந்தாகவே
உள்ளது. எனினும் விஞ்ஞான வளர்ச்சி விண்ணைத்தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

விஞ்ஞானத்தின் சரியான பாவனை அல்லது சரியான திசையை நோக்கிய நகர்வு என்பது உலகின்
தொடர்ச்சியான நிலவுகைக்கு துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை.

ஆக, விஞ்ஞான வளர்ச்சியில் நாட்டையும் சமுதாயத்தை வழி நடத்த, விஞ்ஞானத்தில் ஆளுமை செலுத்த,
அதனை விரும்பிடுவோம். உலகளாவிய நீரோட்டத்தில் கலந்திட விஞ்ஞானப் பாதையிம் விரும்பி பயணிப்போம் !

You might also like