You are on page 1of 7

India Youth for Christ, Coimbatore

Prayer Newsletter - October 2022

“இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்”


என்ற இந்த வசனத்தின்படி கர்த்தர் நம் எல்லாரையும்
ஆசீர்வதிப்பதற்கு பிரியமுள்ளவராயிருக்கிறார். ஆனால்
ஆசீர்வாதத்தை சில நிபந்தனைகளோடு கொடுக்கிறார்.
நிபந்தனைகளுக்கு நாம் கீழ்ப்படியும் போது இந்த பத்தாவது
மாதத்தில் கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதத்தை பெற்றுக்
கொள்ள முடியும். மூன்று விதமான ஆசீர்வாதத்தைக்
குறித்து நாம் தியானிக்கலாம்.

மூன்று மடங்கு ஆசீர்வாதம்: லேவியராகமம் 25: 21, 22

நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு


ஆசீர்வாதத்தை அநுக்கிரகம் பண்ணுவேன். அது
உங்களுக்கு மூன்று வருடத்தின் பலனைத் தரும்.
அதாவது ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மாதம் மட்டும்
சாப்பிடுவதற்கு ஆசீர்வதிக்கிறார். கட்டளை ஏழாம்
வருஷம் நிலம் ஓய்ந்திருக்க வேண்டும் மற்றும்
நாமும் கர்த்தருடைய பாதத்தில் ஓய்ந்திருக்க
வேண்டும். ஓய்வு என்பது கர்த்தர் நமக்கு தந்த ஈவு (or)
கட்டளை. அந்த கட்டளையை கர்த்தரோடு இணைந்து
செய்யும் போது மூன்று மடங்கு ஆசீர்வாதத்தை
பெற்றுக் கொள்ள முடியும். ஏசாயா 58: 13, 14 ஓய்வு
நாளில் எதைச் செய்ய வேண்டும், எதை
செய்யக்கூடாது என்பதை தெளிவாக வேதம் கற்றுக்
கொடுக்கிறது.
நூறு மடங்கு ஆசீர்வாதம்: ஆதியாகமம் 26:12

தேசத்தில் பஞ்சம் இருக்கிற சூழ்நிலையில் ஈசாக்கு


கர்த்தர் சார்ந்து விதை விதைத்தான். கர்த்தர்
அவனை ஆசீர்வதித்ததினால் நூறுமடங்கு பலன்
அடைந்தான். நம்முடைய வாழ்க்கையில்
சூழ்நிலைகள் சாதகமில்லாமல் இருந்தாலும்
கர்த்தரை சார்ந்து நாம் வாழும் போது நூறு மடங்கு
பலனை நாமும் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கிலாந்தின் பிரபல ஊழியக்காரர் சார்லஸ்
ஸ்பர்ஜன் ஊழியத்தில் ஒருமுறை காணிக்கையாக
300 பவுண்டு கிடைத்தது. அந்த காணிக்கையை
தன்னுடைய விடுதி பிள்ளைகளுக்கு செலவு
செய்வதற்கு விருப்பப்பட்டார். ஆனால் கர்த்தர்
ஊழியக்காரனாகிய ஜார்ஜ் முல்லர் நடத்தி வரும்
அனாதைப் பிள்ளைகளுக்கு கொடுத்து வரும்படி
கூறினார். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து
சார்லஸ் ஸ்பர்ஜன் அதை எடுத்துக்கொண்டு ஜார்ஜ்
முல்லரிடம் கொடுத்தார். கொடுத்துவிட்டு திரும்பி
வரும்போது சார்லஸ் ஸ்பர்ஜனுக்கு கர்த்தர் 330
பவுண்ட் காணிக்கையை திரும்பக் கொடுத்தார்.
இன்று விதைக்கிறது என்பது கொடுப்பது. நாம்
திருச்சபைக்கும், ஊழியத்திற்கும், ஏழைகளுக்கும்
தாராளமாய் கொடுக்கும் போது நூறு மடங்கு
பலனைத் திரும்ப பெறுவோம்.
ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்: உபாகமம் 1: 11

நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும்


ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி கர்த்தர்
ஆசீர்வதிக்கிறார். இந்த ஆசீர்வாதத்தை நாம்
சுதந்தரிப்பதிற்கு உபாகமம் 1:36 சொல்லியபடி
எப்புன்னேயின் குமாரனாகிய காலேப், யோசுவா
கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினதுபோல நாமும்
உத்தமமாய் பின்பற்றும்போது ஆசீர்வாதத்தை
பெற்றுக் கொள்வோம். இன்று நாமும், நம்முடைய
பிள்ளைகளும் கர்த்தரை உத்தமமாய்
பின்பற்றுகிறோமா, கர்த்தரை விட்டு விலகச்
செய்கிற சோதனைகளில் நாம் சிக்கிக் கொள்ளாமல்
யோசுவாவைப் போல் நானும் என்
வீட்டாருமோயென்றால் கர்த்தரையே சேவிப்போம்
என்று நாமும் செல்லுவோம். கர்த்தர் நம்மை இந்த
மாதத்தில் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களினால் நிரப்பி
நடத்துவாராக.

இப்படிக்கு,
கிறிஸ்துவின் பணியில்,
L ஜார் ஜ் முல் லர் .
துதிப்போம்:

செப்டம்பர் 10 அன்று கிணத்துக்கடவு T.E.L.C


ஆலயத்தில் நடைபெற்ற உபவாச கூடுகையை கர்த்தர்
ஆசீர்வதித்தார்.
அக்டோபர் 1 முதல் 5 வரை டெல்லியில் நடைபெற்ற
தேசிய வாலிபர் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார்.
600 வாலிபர்கள் கலந்து கொண்டு கர்த்தருடைய
வார்த்தையைக் கேட்டு தங்களை அர்ப்பணித்தார்கள்.

ஜெபக்குறிப்புகள்:

நவம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ள “Sponsors


get together” க்காக.
கடந்த 3 ஆண்டுகளாக நம்முடைய மாவட்டத்தில்
ஊழியம் செய்து வந்த திரு.பாக்யராஜ் அவர்கள்
திருப்பூர் மாவட்டத்திற்கு இந்த மாதம் மாறுதலாகி
செல்லுகிறார்கள். அவருடைய ஊழியத்திற்காக
திருமணத்திற்காக ஜெபிப்போம்.
செப்டம்பர் - 2022 மாதவிடைகள் (I இராஜாக்கள்):

1.9:15-19 ஆலயம், அரண்மனை, லீபலோன் வனம்,


மீலலோ, 2. ஆசாரியன் - சாதோக் - கீகோன் -13:8, 39, 45. 3.
கேசேர் - 9:16, 4. அன்னிய தேவர்களை பின்பற்ற
வேண்டாம் 11:9,10, 5. தயை - பர்சிலாவின் குமாரன்
துக்கத்தோடு - யோவாப், சீமேயி-2:7, 2:5,8,9
6. பரலோகம்-8:39, 7. இருப்புக் காளவாய்-8:51, 8. அந்நிய
ஜாதியிைைர 6 அடிமைப்படுத்தினான் இஸ்ரவேலரை
அடிமைப்படுத்தவில்லை - 9:21,22 9. பிதாககளின்
சுதநதிரம் -21:3,4 10. 8 தீர்க்கதரிசிகள். 11. 16:24 சேமேரின்
பெயர்: 12 யெரோபெயாமின் மனைவி-142, இஸ்ரவேரின்
ராஜா(ஆகாப்) 13 யோசபாத், ஈராம். யெகூ அகியா. 14 a)
எலியா-பாகாவின் தீர்க்கதரிசிகள்டம்-182526, b).ஆகாப் 7-
பெனதாத்தின் ஊழியக்காரரிடம்-20:32. c). ஓபதியா -
எலியாவைப் பார்த்து-187-8, d) சாஹெமோன்
கர்த்தரிடம்-8:46. e).கர்த்தர்-எலியாவிடம்-199.

September மாதம் விடை எழுதி அனுப்பினவர்கள்:


Mrs. Kalpana
Mrs. Juli
R Jeba kiruba
Miss. Jancy
Mrs.Valarmathi
Mrs. Christy
Mrs. Leela Joseph
Mrs. Malar Johnson
Mrs. Anbu
Mrs. Jeya
Mr. David
குறிப்பு:

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்


25.10.2022. அனுப்ப வேண்டிய Whatsapp No:
8825989586.
விடைகள் வேத வசன இருப்பிடத்துடன் தெளிவாக
இருக்க வேண்டும்.
12 மாதங்களும் தொடர்ந்து எழுத வேண்டும்

வேதம்

அக்டோபர் 2022 II இராஜாக்கள்


க ர் எ சே க் கி யா த் தா வே

ச இ பூ ல் அ க சி யா வ  ன்

ன பா ஆ கா ஸ் வா யோ ரி ர் க்  

கெ பெ கூ யெ கு ம் ச ச ப டி  

ரி க் ஏ லா இ வ பா அ ன் க  

ப் கா ஆ ச கே ல் த் ம ண் பி  

க ளை மே சா து வீ தா த் த் ஆ  

தி உ சி யா செ ஓ னா சி ற சா 

த யா கி க் தே சி பெ யா ந் ப்  

ரு ம னா சே ஞ ம் சா லொ மோ ன்  
மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டகளில் 25நபர்கள்
இருக்கிறார்கள் அவர்களை கண்டு பிடித்து அவர்கள்
பெயர்களை வேத ஆதாரத்துடன் எழுதவும். மேலும்,
கீழும், வலது, இடது புறமாக காணப்படுகிறது. ஒரே
எழுத்தை தொடர்புள்ள பெயரோடு சேர்க்கலாம்,
மீதமுள்ள எழுத்துக்களைச் சேர்த்தால் இப்பகுதியில்
உள்ள ஒரு வசனத்தின் ஒரு பாகம் காணப்படும். அந்த
வசனத்தை கண்டுபிடித்து எழுதி (5-10 அதிகாரம்) வேத
ஆதாரம் தருக.

You might also like