You are on page 1of 11

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


ãyt, òu£lhá - 27 òj‹ 13.10.2021 ky® - 2, ïjœ - 190

M®.v°.v°
gy¥gL¤j¥glnt©L«
É#aghuj«
கேரள மாநில ஆர்.எஸ்.எஸ் எடப்பள்ளி நகர் ஏற்பாடு
செய்திருந்த விஜயதசமி விழாவில் உரையாற்றிய பாட்னா உயர்
நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதிபதி பெஞ்சமின்
க�ோஷி, ‘நமது அண்டை நாடுகளில் செயல்படுவது ப�ோன்ற
பயங்கரவாத நடவடிக்கைகள் பரவாமல் தடுக்க ஆர்.எஸ்.
எஸ் பலப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மையினரை
வேண்டுமென்றே தவறாக வழிநடத்தவும், நாட்டின் சில
பகுதிகளில் வன்முறையை நிகழ்த்தி அதன் ப�ொறுப்பை ஆர்.
எஸ்.எஸ் அமைப்பின் மீது சுமத்தவும் ஒரு கட்டமைக்கப்பட்ட
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
ஆர்.எஸ்.எஸ் என்பது ஒட்டும�ொத்த நாட்டின்
முன்னேற்றத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உழைக்கும்
தேசபக்தர்களின் ஒரு சிறந்த அமைப்பு. அது, இளைஞர்களுக்கு
அப்படியான பயிற்சியைதான் அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் எந்த
அரசியல் கட்சி அல்லது அமைப்பின் ஆதரவாளரும் அல்ல.
ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த நான் ஒரு
கிறிஸ்தவன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆர்.எஸ்.
எஸ் ஒரு தேசிய பார்வையுடன் வளர்ந்து வருகிறது, அது நம்
கலாச்சாரத்தை அடிப்படையாகக் க�ொண்டது. கடவுளின் அன்பு
மற்றவர்களுக்குப் பரவ வேண்டும் என்று நம்பப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பல்வேறு மாநிலங்கள், பல்வேறு
பழக்கவழக்கங்கள், மதங்கள், ஜாதிகள் ப�ோன்றவற்றைப்
பாதுகாத்து, நாடு முழுவதையும் முன்னோக்கி நகர்த்த
முயல்கிறது. இந்த ந�ோக்கத்திற்காகவே இளைஞர்கள்
ஊக்குவிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.
சேவா பாரதி அமைப்பு மழை, வெள்ளம், க�ொர�ோனா
பாதிப்பு காலங்களில் அனைவருக்கும் உதவியது. இன்னும்
அதிகமாக வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நவராத்திரி க�ொண்டாட்டங்கள் நம் மனதை மறைக்கும்
இருளை அகற்றட்டும் என கூறினார். ஆர்.எஸ்.எஸ்
அமைப்பின் தேசிய ப�ொதுச் செயலாளர் தத்தாத்ரேயா
ஹ�ோசபலே இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.
rKjha ešÈz¡f¤ âd«
நமது பாரத தேசம் 'வசுதைவ குடும்பகம்' என்று உலகையே
ஒரே குடும்பமாக பார்க்கும் தன்மைக் க�ொண்டது. ஈசாவாஸ்யம்
இதம் சர்வம்' எனும் அந்த இறைவனே அனைத்து உயிர்களிலும்
வாசம் செய்கிறான் என்ற நம்பிக்கையைக் க�ொண்டுள்ளது.
அப்படி இருக்கும் நம் தேசத்தில் ஆங்காங்கு தீண்டாமை
எனும் க�ொடிய ந�ோய் நிலவுகிறது. இதனை கலைவதும்
சமுதாய நல்லிணக்கத்தை கடைபிடிப்பதும் நம் தலையாய
கடமை. இதனை வலியுறுத்தும் விதமாக, உலகின் மிகப்பெரிய
த�ொழிலாளர் அமைப்புகளில் முதன்மையான பாரதிய மஸ்தூர்
சங்கம் (பி.எம்.எஸ்) அதன் ஸ்தாபகர் தத்தோபந்த் பாபுராவ்
தெங்கிடி அவர்களின்
நினைவு தினமான அக்டோபர்
14 அன்று 'சாமாஜிக்
சமரசதா' எனப்படும் சமுதாய
நல்லிணக்க தினமாக
க�ொண்டாடுகிறது. É#aghuj«

kh‰w«
Jt§»aJ
É#aghuj«

கர்நாடக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சமீபத்தில் தனது


சட்டமன்ற உரையில், தனது தாய் கிறிஸ்தவ மிஷனரிகளால்
மூளைச்சலவை செய்யப்பட்டு மதமாற்றம், செய்யப்பட்டார்.
ஹ�ோசதுர்கா பகுதியில் பெரிய அளவிலான மதமாற்றங்கள்
நடைபெறுகின்றன. சமீபத்தில் சுமார் 20,000 பேர் கிறிஸ்தவ
மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மிஷனரிகள், பட்டியல்
வகுப்பினர், பழங்குடி சமூகத்தினரை குறிவைக்கின்றனர்.
இதனை எதிர்ப்பவர்களை கற்பழிப்பு, ஜாதிக் க�ொடுமை
ப�ோன்ற ப�ொய் வழக்குகளில் சிக்க வைக்கின்றனர். மதம் மாறிய
கிறிஸ்தவர்கள் பழைய சலுகைகளைப் பெற்றால் அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது
கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,
சில நாட்களாக அவர் தாய் மதம் திரும்பும் பிரச்சாரத்தை
துவக்கினார். சித்திரதுர்காவின் ஹ�ொசதுர்கா தாலுகாவில் உள்ள
ஹாலுரமேஸ்வரா க�ோயிலில் தாய் மதத்திற்கு திரும்புவதற்கான
சடங்குகள் நடத்தப்பட்டன. இம்முயற்சியின் பலனாக தற்போது
அவரின் தாயார் உட்பட நான்கு குடும்பங்களை சேர்ந்த ஒன்பது
பேர் தங்கள் தாய் மதத்திற்கு திரும்பியுள்ளனர் என அவர்
தெரிவித்தார்.
etuh¤âÇ bfhY ngh£o
சம்ஸ்கார் பாரதி அமைப்பு, சென்னை
மாநகரில் நவராத்திரி திருவிழா
க�ொலுப்படி ப�ோட்டி ஒன்றை நடத்துகிறது.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள்,
குறைந்தபட்சமாக 5 படிகள் க�ொண்டு
அலங்கரித்த க�ொலுப்படிகளை, அதன்
அலங்காரம், ப�ொம்மைகளுடன் ஒரு நிமிட
வீடிய�ோவாக எடுத்து அனுப்பலாம். அதனை
பார்வையிட அழைப்பவர்களின் வீட்டிற்கே
நேரில் சென்று க�ொலுவை பார்வையிடவும் É#aghuj«
இவ்வமைப்பினர் தயாராக உள்ளனர். இப்போட்டியில்
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 2 ஆயிரம்,
2ம் பரிசாக 1,500, 3ம் பரிசாக 1,000 மற்றும் 2 நபர்களுக்கு
தலா 500 வழங்கப்படும். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும்
சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 9884173502 / 9840349875 என்ற
எண்களில் த�ொடர்புக�ொள்ளலாம்.

blšÈÆš ga§futhâ ifJ


டெல்லி காவல்துறையின் சிறப்புப்
பிரிவு நேற்று டெல்லியின் லக்ஷ்மி
நகர் பகுதியில் பாகிஸ்தானின்
பஞ்சாப் பகுதியை சேர்ந்த முகமது
É#aghuj« அஷ்ரப் என்ற பயங்கரவாதியை
கைது செய்தது. அவனிடம் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கியும்
அதற்கான 60 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், ஒரு
கையெறி குண்டு, இரண்டு கைத்துப்பாக்கிகள் அவற்றுக்கான
50 துப்பாக்கி குண்டுகளும் மீட்கப்பட்டன. அவன், ப�ோலி
ஆவணங்கள் மூலம் ப�ோலி இந்திய அடையாள அட்டைகளைப்
பெற்றுள்ளான். டெல்லியில் நவராத்திரி அன்று ஒரு பெரிய
பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தான்
என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
K¥bgU« ÉHh
விஜயபாரதம் பிரசுரம் வரும் 15
அக்டோபர் 2021 அன்று விஜயதசமி
அன்று மாலை 5.00 மணிக்கு தனது
முப்பெரும் விழாவை க�ொண்டாடுகிறது.
இதில், 'நம�ோ மாத்ரு பூமி' என்ற
டிஜிட்டல் கேம்பஸ், 'தமிழகம் தந்த É#aghuj«
தவப் புதல்வர்கள்' டிஜிட்டல் ஆக்டிவ் புத்தகம் வெளியீடு,
விஜயபாரதம் பிரசுரத்தின் புதிய இணையதளத் துவக்கம் மற்றும்
புத்தக வெளியீடு நடைபெற உள்ளது. இதில் இணையதளம்
வழியாக கலந்துக�ொள்ள விரும்புவ�ோர் Zoom link: https://bit.
ly/3oOSLOz எனும் இணைப்பின் மூலமாக கலந்துக�ொள்ளலாம்.

áWgh‹ikÆd® mtru cjÉ v©


ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த
சில நாட்களில் 7 ஹிந்துக்கள்
க�ொல்லப்பட்டதைத் த�ொடர்ந்து
அங்குள்ள சிறுபான்மையினரின்
அச்சத்தை ப�ோக்கும்விதமாக
மத்திய மாநில அரசுகள்,
É#aghuj« காவல்துறை, ராணுவத்துடன்
இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறை, அங்குள்ள
ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான
0194-2482626 என்ற அவசர கால உதவி எண்ணை
அறிமுகப்படுத்தியுள்ளது.

V.ã.É.ã nfhÇ¡if
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கடந்த 2019,
2020களில் நடைபெற்ற இரண்டு வளாக வன்முறைகளில்,
சுவாமி விவேகானந்தரின் சிலையை சேதப்படுத்திய
குற்றவாளிகள் மீதும் 'விவேகானந்த் மார்க்' மற்றும் 'சாவர்க்கர்
மார்க்' வழிகாட்டுப் பலகைகளை சேதப்படுத்தியவர்கள் மீதும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி
பரிஷத் (ஏ.பி.வி.பி) மாணவர் அமைப்பு, அப்பல்கலைக்
கழகத்தின் துணைவேந்தர் எம் ஜெகதீஷ்குமாரிடம் கடிதம்
அளித்துள்ளது. அதில், இச்செயல் மாணவர்களின் உணர்வுகளை
புண்படுத்தி உள்ளது. பல்கலைக் கழக வளாகத்தில்
பதற்றத்தை ஏற்படுத்த இடதுசாரி
மாணவர்கள் இந்த வன்முறையில்
ஈடுபட்டுள்ளனர். இது, ஜே.என்.
யு’வின் மதிப்பை குறைத்துவிட்டது.
அவர்கள் மீது நிர்வாகம் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும்
என க�ோரியுள்ளது.
É#aghuj«
á£u° gH¤ jahÇ¥ò V‰Wkâ
சிட்ரஸ் வகைப் பழங்கள் மற்றும் அதன்
துணைத் தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கு
மத்திய சிட்ரஸ் ஆராய்ச்சி மையம் É#aghuj«
(ஐ.சி.ஏ.ஆர்) மற்றும் வேளாண் பதப்படுத்தப்பட்ட உணவுப்
ப�ொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபேடா) இடையே
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இரு
நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுறவு ஏற்றுமதியின்
பன்முகத்தன்மையை அதிகரிக்கும். வேளாண் தயாரிப்புகளின்
ஏற்றுமதியை அதிகரிக்கும். இதன் மூலம் பல்வேறு பாரதத்
தயாரிப்புகள் சர்வதேசச் சந்தையை எட்டும். இந்தப்
புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சாலைப்போக்குவரத்து
மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி,
அபேடா தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து இடையே நாக்பூரில்
சமீபத்தில் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்,
விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள், விவசாய உற்பத்தியாளர்
நிறுவனங்களுக்கு வழிகாட்டுவத�ோடு அவற்றை சர்வதேச
சந்தையுடன் இணைக்கும், சிட்ரஸ் வகைப் பழங்களை
உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்.

Û‹ fÊîfŸ _y« tUthŒ


கடல�ோரப் பகுதிகளில் வசிக்கும்
மீனவக் குடும்பங்களின் முக்கியத்
த�ொழிலாக மீன்பிடித்தொழில் உள்ளது.
இவர்களின் மாத வருமானம் அவர்களின்
É#aghuj« வாழ்வாதாரத் தேவைகளுக்கு
ப�ோதுமானதாக இல்லை. அதேவேளையில் மீன்பிடித்தல் மற்றும்
விற்பனை மூலம் வரும் மீன்கழிவுகள் அருகில் உள்ள கடல�ோரப்
பகுதிகளில் மற்றும் உப்பங்கழிகளில் குவிக்கப்படுவதால்
சுற்றுச் சூழல் மாசடைகிறது. இப்பிரச்சினையைப் ப�ோக்க
ஐ.சி.ஏ.ஆர் - மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம்
(சிபா) மீன் கழிவுகளைச் சுத்திகரித்து, பிளாங்டன் ப்ளஸ்
என்ற நுண்ணுயிரி, ஹார்ட்டி ப்ளஸ் என்ற த�ோட்டக்கலை
உரமாக மாற்றும் த�ொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நம்பிக்கை மீனவர்குழு,
மீன்கழிவுகளைச் சுத்திகரிக்கும் ஆலையை கடந்த 2019ல்
ஐசிஏஆர்- சிபா த�ொழில்நுட்ப உதவியுடன் அமைத்தது. இதன்
மூலம் உள்ளூர் மீன் சந்தைகளின் கழிவுகள் பிளாங்டன்
ப்ளஸ், மற்றும் ஹார்ட்டி ப்ளஸ்ஸாக மாற்றப்படுகின்றன.
சிபா வழிகாட்டுதலுடன் நம்பிக்கை மீனவர்குழு தங்கள்
தயாரிப்புகளை கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், குஜராத்
மற்றும் மேற்கு வங்க மீனவ விவசாயிகளிடம் விற்பனை
செய்தனர். இதன்மூலம் இந்தக் குழு ஆண்டுக்கு 15 லட்சம்
வருவாய் ஈட்டியுள்ளது. இந்தத் த�ொழில்நுட்பம் சென்னையில்
நாற்பதுக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு வேலை
வாய்ப்பை உருவாக்கியது. இதனால், அவர்களின் சமூகப்
ப�ொருளாதார நிலையும் உயர்ந்துள்ளது. 355க்கும் மேற்பட்ட
மீனவர்களுக்கு மீன்கழிவுகளைச் சுத்திகரிக்கும் பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பின் மூலம் நம்பிக்கை
மீனவர் குழுவைச் சேர்ந்த வேளாங்கன்னி என்ற பெண், வி
எஸ் ஃபிஷ் வேஸ்ட் ஹைட்ரோலிசேட் என்ற நிறுவனத்தைத்
த�ொடங்கி புதிய த�ொழில் முனைவ�ோராக உருவெடுத்து
உள்ளார். இந்நிறுவனத்தை ஐசிஏஆர் - சிபா இயக்குநர் டாக்டர்
கே.பி ஜிதேந்திரன் த�ொடங்கி வைத்தார்.
kjkh‰w¤ jL¥ò¢ r£l«
விஷ்வ ஹிந்து பரிஷத் அகில
உலக செயல் தலைவர் அல�ோக்குமார்
சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில்,
'பாரதத்தில் கட்டாய மதமாற்றத்தின்
É#aghuj« மூலம் மதம் மாறுபவர்களின்
எண்ணிக்கை ஆண்டுத�ோறும் அதிகரிக்கிறது. அதனைத் தடுக்க
11 மாநிலங்கள் சிறப்பு சட்டம் இயற்றியுள்ளன. இத்தடைச்
சட்டம் தேசம் முழுவதும் க�ொண்டு வரப்பட வேண்டும்.
இதற்காக மத்திய அரசை வி.ஹெச்.பி வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில், ப�ோலி வாக்குறுதிகள், பணம், மிரட்டல்
மூலம் மதமாற்றம் நடக்கிறது. அதனை தடுக்க தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹிந்துமதத் தலைவர்களை
சந்தித்து வலியுறுத்துகிற�ோம். தமிழக அரசு ஹிந்து க�ோயில்
நகைகளை உருக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது. இது
பக்தர்களின் மத நம்பிக்கையை சார்ந்தது. இதனை தி.மு.க
அரசு கைவிட வேண்டும். மாநில அரசு ஹிந்து க�ோயில்கள் மீது
உரிமை க�ொண்டாடக்கூடாது. ஹிந்து க�ோயில்கள், மடங்களை
ஹிந்து சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான
நாடு தழுவிய முயற்சியை வி.ஹெச்.பி மேற்கொள்ளும்'
என கூறினார். அவரது சுற்றுப் பயணத்தின்போது, காஞ்சி
சங்கராச்சாரியார், தமிழக கவர்னர், உட்பட பல சமயப்
பெரிய�ோர், சமூகப் பெரிய�ோர்களை சந்தித்தார்.

vŒ«°
ïa¡FeU¡F
ÉUJ
É#aghuj«
க�ொர�ோனா காலத்தில் சிறப்பான செயல்பாட்டிற்காக
எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு, லால்
பகதூர் சாஸ்திரி தேசிய விருதை குடியரசு துணைத்தலைவர்
எம் வெங்கய்யா நாயுடு வழங்கினார். அப்போது பேசிய
அவர், லால் பகதூர் சாஸ்திரியின் தைரியமான தலைமை
வரலாற்றையும், சர்வதேச சமுதாயத்தையும் மாற்றியது, தனது
குறுகிய கால பிரதமர் பதவியில் பல திடமான முடிவுகளை
எடுத்தார். சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக புதிய
பாரதத்தின் பிரகாசத்தைக் கண்டது என லால் பகதூர்
சாஸ்திரிக்கு புகழாரம் சூட்டிய வெங்கையா நாயுடு, 'க�ொர�ோனா
பெருந்தொற்றுக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதில்
எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா முக்கிய
பங்காற்றினார். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
அச்சத்தைப் தனது பேச்சு மூலம் டாக்டர் ரன்தீப் குலேரியா
ப�ோக்கினார். க�ொர�ோனாவுக்கு எதிரான ப�ோராட்டத்தில்
தன்நலம் இன்றி பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு
அவர் ராணுவத் தளபதி ப�ோல் வழிகாட்டினார்' என ரன்தீப்
குலேரியாவை பாராட்டினார்.
Ãy¡fÇ Ru§f§fŸ Vy«
11 நிலக்கரிச் சுரங்கங்களை
ஏலம் விடுவதற்கான இரண்டாம்
கட்ட முயற்சியை நிலக்கரித்துறை
அமைச்சகம் த�ொடங்கி உள்ளது.
இவற்றை ஏற்கனவே ஏலம் விடும்
முயற்சி கடந்த மார்ச் 25ம் தேதி
நடந்தது. இந்த முயற்சி வெற்றி
பெறாததால் இவற்றை இரண்டாம் É#aghuj«
முறையாக ஏலம் விடுவதற்கானக் கூட்டத்தை நிலக்கரித்துறை
அமைச்சகம் நடத்தியது. இதில் ஏலம் விடுவதற்கான
நடைமுறைகள் குறித்து ஆல�ோசிக்கப்பட்டது. வருவாய்
பங்கு சதவீத அடிப்படையில் இந்த ஏலம் ஆன்லைன் மூலம்
வெளிப்படையாக நடத்தப்படும். இவற்றை ஏலம் எடுப்பவர்கள்
இணையதளம் மூலம் பதிவு செய்து ஒப்பந்த ஆவணங்களைப்
பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

t.c.á. JiwKf«
தென் தமிழகத்தின் ப�ொருளாதாரத்தை ஊக்குவிப்பதில்
முக்கிய இடம்பிடித்துள்ள வ உ சிதம்பரனார் துறைமுகம்,
தனக்குள்ள வசதி வாய்ப்புகளான ரயில், சாலை இணைப்பு,
முக்கிய கடல் வழி அருகாமை, அனைத்து பருவநிலைகளிலும்
செயல்படக் கூடிய தன்மை, கிழக்கு மற்றும் மேற்கு கடல�ோரப்
பகுதிகளுக்கு இணைப்பாக விளங்கக் கூடிய புவியியல்
ரீதியிலான அமைப்பு ஆகியவற்றின் காரணமாக பன்னோக்கு
ப�ோக்குவரத்து பூங்கா திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
தென்தமிழகத்தில் மிகப்பெரும் உற்பத்தி மையங்களாக திகழும்
க�ோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈர�ோடு, மதுரை உள்ளிட்ட
பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் இத்துறைமுகம்
இந்த முயற்சிக்கு இயற்கையிலேயே ப�ொருத்தமான
துறைமுகமாகவே அமைந்துள்ளது. சரக்குகளை தடையின்றி
கையாள பன்னோக்கு ப�ோக்குவரத்து கட்டமைப்பு, குளிர்பதன
வசதியுடன் கூடிய சேமிப்புக் கிடங்கு, இயந்திர வசதியுடன்
சரக்குகளை கையாளும் திறன் க�ொண்ட கிடங்குகள்,
கண்டெய்னர்களை இடமாற்றம் செய்யக் கூடிய முனையங்கள்,
பெருமளவிலான சரக்குகளை கையாளும் திறன் க�ொண்ட
பெரிய கிடங்குகள் ஆகியவற்றை ஒருங்கே க�ொண்டதாக இந்த
பன்னோக்கு ப�ோக்குவரத்து பூங்கா அமையும்.
É#aghuj«
Ä‹ ïH¥ig Fiw¡f Ka‰á
தற்போது நடைமுறையில்
உள்ள மின்துறை
சீர்த்திருத்தங்களின் முக்கிய
நடவடிக்கையாக, குறிப்பிட்ட
கால இடைவெளி அடிப்படையில்
எரிசக்தி கணக்கிடுதலை மின்சார
விநிய�ோக நிறுவனங்களுக்கு É#aghuj«
மின்சார அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. இதற்கான
விதிமுறைகள் எரிசக்தித் திறன் குழுவால் வெளியிடப்பட்டது.
அதன்படி, எரிசக்தி விநிய�ோக நிறுவனங்கள் 60 நாட்களுக்கு
ஒருமுறை சான்றிதழ் பெற்ற எரிசக்தி நிர்வாகி மூலம்
எரிசக்தியை கணக்கிடுதல் கட்டாயம். இதே ப�ோல் அரசு
அங்கீகாரம் பெற்ற சுயேச்சையான எரிசக்தி கணக்குத்
தணிக்கையாளர் மூலம் வருடாந்திர எரிசக்தி கணக்கீடும்
செய்யப்பட வேண்டும். இந்த 2 அறிக்கைகளும் ப�ொதுத்
தளத்தில் வெளியிடப்பட வேண்டும். நுகர்வோரின் பல்வேறு
வகையினரால் பயன்படுத்தப்படும் மின்சாரம் பற்றிய
விரிவான தகவல்கள், பல்வேறு பகுதிகளில் மின்சாரம்
க�ொண்டு செல்லுதல், விநிய�ோகத்தில் ஏற்படும் இழப்புகள்
பற்றிய தகவல்களும் இந்த அறிக்கையில் இடம்பெறும்.
அதிகபட்சமான இழப்பு, திருட்டு நடைபெறும் பகுதிகள்
இதன் மூலம் கண்டறியப்பட்டு சரிசெய்யும் நடவடிக்கைகள்
மேற்கொள்ள இயலும். இதற்கு ப�ொறுப்பான அதிகாரிகளை
கண்டறியவும் இவை உதவும்.

mjhÅ ÃWtd« m¿É¥ò


குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம்
3,000 கில�ோ ஹெராயின் ப�ோதைப்பொருள் பறிமுதல்
செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 21 ஆயிரம்
க�ோடி. இந்த ப�ோதைப்பொருள் ஈரானில் இருந்து வந்ததாக
தகவல் வெளியானது. இச்சம்பவம் நாடு முழுதும் பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கை தேசிய
புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்நிலையில்,
இதுத�ொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், நவம்பர் 15ம் தேதி முதல் ஈரான், பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை
அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள்
கையாளாது என தெரிவித்துள்ளது.
É#aghuj«
tiyÆš á¡»a Û«fŸ
gªjÈš fhyÂfŸ
க�ொல்கத்தாவின் டம் டம்
பகுதியில் துர்கா பூஜை பந்தலை
அலங்கரிக்க காலணிகள் மற்றும்
செருப்புகள் பயன்படுத்தப்பட்டு
உள்ளது. இது குறித்து டம் டம்
பார்க் பாரத் சக்ரா சமிதியின்
அதிகாரி கூறுகையில், ‘விவசாய É#aghuj«
ப�ோராட்டத்தை பிரதிபளிப்பதாகவே இந்த காலணிகள்
அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என கூறினார். இதற்கு பா.ஜ.க,
விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. துர்கா
தேவியை ‘கலை சுதந்திரம்' என்ற பெயரில் அவமதிக்கும்
இந்த க�ொடூரமான செயலை ப�ொறுத்துக்கொள்ள முடியாது என
கூறியுள்ள பா.ஜ.கவை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து
அதிகாரி, பந்தலில் இருந்து காலணிகளை அகற்றுவதற்கு
மாநில உள்துறைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இத்தகைய அலங்காரங்கள் ஹிந்துக்களின் மத உணர்வுகளை
புண்படுத்துகிறது, இது வகுப்புவாத நல்லிணக்கத்தை
அழிக்கும் முயற்சி, ஹிந்துக்களை அவமதிக்கும் இந்த
துர�ோகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
என வி.ஹெச்.பி கூறியுள்ளது.

Clf Kjä£L¡F¤ jil


சீனாவின் தேசிய மேம்பாடு மற்றும் சீர்திருத்த
ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு ப�ொது
ஆல�ோசனைக் கட்டுரையின் படி, தனியார் செய்தி சேகரிப்பு
மற்றும் விநிய�ோக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும்.
செய்தி நிறுவனங்கள், செய்தித்தாள் வெளியீட்டாளர்கள்,
ஒளிபரப்பாளர்கள் உட்பட செய்தி நிறுவனங்களை
நிறுவுதல், செயல்படுத்துவதில் தனியார் முதலீடுகள்
கட்டுப்படுத்தப்படும். வெளிநாட்டு ஊடக செய்திகளை
உள்நாட்டு செய்தி நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என
தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், விரைவில் சீனாவின்
அனைத்துத் தனியார் செய்தி நிறுவனங்களும் அரசின் முழு
கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதில் ச�ொல்லப்பட்டுள்ள இந்தத் தடைகள் பரந்த
ஆவணத்தின் ஒரு பகுதிதான். அக்கட்டுரையில், நிதி
நிறுவனங்கள், இணையம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு
த�ொழில்களிலும் தனியார் முதலீடு, வெளிநாட்டு முதலீடு
ப�ோன்றவைகளுக்குத் தடைகளை விதிக்க வலியுறுத்தப்பட்டு
உள்ளது. É#aghuj«
rnfhjÇ Ãntâij
மார்க்கரெட் எலிசபெத்
ந�ோபில் 1867ல் அயர்லாந்து
நாட்டில் பிறந்தவர்.
கிறிஸ்துவக் மத ப�ோதகருக்கு
மகளாகப் பிறந்த இவருக்கு
இயல்பிலேயே ஆன்மிகத்
தேடல் இருந்தது.
இங்கிலாந்தில் ஆசிரியராகப்
பணியாற்றினார். தலை
சிறந்த கல்வியாளராகத் É#aghuj«
திகழ்ந்தார்.
சிகாக�ோ சர்வ சமய மாநாட்டில் விவேகானந்தரின்
உரையைக் கேட்டார். அந்த உரை அவருக்குள் நிறையக்
கேள்விகளை உருவாக்கியது. அதற்கான பதில்களைத்
தேடி விவேகானந்தரை சந்தித்தார். அவரின் பதில்களால்
தெளிவடைந்தார். விவேகானந்தரே தன் குரு என உணர்ந்து,
அவரின் வழிகாட்டலில் பாரதம் வந்தார். அவருக்கு நிவேதிதா
என்ற பெயரைச் சூட்டினார் விவேகானந்தர்.
பெண்களும் படிக்க வேண்டும் என்பதற்காக,
க�ொல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளியைத் த�ொடங்கினார்.
அன்னை சாரதா தேவி அப்பள்ளியைத் த�ொடங்கி வைத்தார்.
த�ொழில் கல்வி, நுண் கலைகளையும் பயிற்றுவித்தார்.
அந்நேரத்தில் க�ொல்கத்தாவில் பிளேக் ந�ோய் பரவியது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவேதிதா தலைமையில்
நிவாரணக் குழு அமைத்தார் விவேகானந்தர். அப்பணியை
முழு ஈடுபாட்டுடன் செய்தார்.
அவரின் பள்ளி நிதி நெருக்கடியைச் சந்திக்கவே, நிதி திரட்ட
இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்குப் பயணப்பட்டார்.
நியூயார்க்கில் 'ராமகிருஷ்ணா த�ொண்டர் சங்கம்' எனும்
இளைஞர்களான அமைப்பை நிறுவினார். தம் ஆன்மிகக் குரு
விவேகானந்தர் மறைவுக்குப் பிறகு, ச�ோர்ந்துவிடாமல் அவரின்
கருத்துகளைப் பரப்பினார். பாரதியார் க�ொல்கத்தாவில் சக�ோதரி
நிவேதிதையை சந்தித்தப�ோது, "உங்கள் மனைவியை ஏன்
அழைத்து வர வில்லை?" என பாரதியை கேட்டார் நிவேதிதா.
"எங்களின் சமூக வழக்கப்படி பெண்களை வெளியில்
அழைத்துச் செல்வதில்லை. என் மனைவிக்கு அரசியலும்
தெரியாது" என்றார் பாரதி.
அதற்கு, நிவேதிதா, 'உங்கள் மனைவிக்கே சம உரிமை
க�ொடுக்காத நீங்கள் எப்படி தேசத்திற்கு விடுதலைப் பெற்றுத்
தருவீர்கள்?' என்று கேட்டது, பாரதியின் மனதில் பெரிய
மாற்றத்தை ஏற்படுத்தியது அதன் பின் நிவேதிதாவை
தம் குருவாக ஏற்றார் பாரதி. பாரத விஞ்ஞானி ஜெகதிஷ்
சந்திரப�ோசின் நூல்கள் வெளிவர உதவி புரிந்தார்.
1911 அக்டோபர் 13 அன்று தனது 44 வது வயதில்
மறைந்தார். அவர் ஆற்றிய சேவைகள் மூலம், இன்றும் நமக்கு
வழிகாட்டியாக இருக்கிறார் நிவேதிதா.

You might also like