You are on page 1of 2

செய்யுளும் மொழியணியும்

1
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு.

விளக்கம் :

கொக்கானது வாய்க்காலில் ஓடுகிற சிறுமீன்கள் ஓடிக்கொண்டிருக்க, அவற்றைப் பிடிக்க


எண்ணாமல் தன் இரைக்கு ஏற்ற பெரிய மீன்கள் வரும்வரை அடங்கிக் காத்திருக்கும். அதைப்
போன்று அடக்கமாயிருப்பவரை அவரது வலிமைய அறியாது அறிவற்றவரென்று கருதி,
அவரை வெல்வதற்கு முயலக்கூடாது.அதனால், துன்பமே வந்து சேரும்.

2
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

விளக்கம்:

இறைவன் ஆகாயமாகவும் நிலமாகவும் காற்றாகவும் வெளிச்சமாகவும் உடலாகவும் அந்த


உடலில் உறையும் ஆன்மாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்; தன்னை உ
ணர்ந்தவர்களுக்கு உள்ளவனாகவும் தன்னை
நம்பாதவர்களுக்கு இல்லாதவனாகவும் விளங்கி நம்மை அரசாளுகின்றான். நான், எனது என்ற
செருக்குடையவரை அவரவர் விருப்பம்போல் ஆடவிட்டு இறுதியில் இறையாற்றலை
அவர்கள் உணரும்படி செய்யும் இறைவனின் தன்மையைப் போற்றிப் புகழ்வதற்குச் சொற்களே
கிடையாது.

3
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புப் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.

விளக்கம்:
ஒருவர் தான் நினைத்த செயலை முடித்திடும் மனவுறுதி பெற்றவராக இருப்பின் அச்செயல்
முடிவுறும் வரை உடல் நோயையும் பசிநோயையும் பசியையும் துக்கத்தையும்
பொருட்படுத்தாததோடு பிறர் தனக்குச் செய்யும் தீங்கினையும் காலத்தின் அருமையையும்
கருதாது அச்செயலிலே கருத்தூன்றி இருப்பார். செயலில் வெற்றியடைய உறுதியான எண்ணம்
கொண்ட ஒருவர் வேறு எதையும் கருதார்.

You might also like