You are on page 1of 7

முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி

விரதம். ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விழாவின் போதே


லட்சக்கணக்கானர்கள் விரதம் இருந்து, முருகனை
வழிபடுவார்கள். ஆனால் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி
மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளிலும் முருகனுக்கு விரதம்
இருந்து வழிபடலாம்.

பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று


சொல்வார்கள். ஆனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால்
முருகப் பெருமான் அவர்களின் கஷ்டத்தை தீரத
் ்து வைப்பார் என்பது பலரும் அனுபவ
ரீதியாக கண்ட உண்மை.

முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். ஐப்பசி மாதத்தில் வரும்
கந்த சஷ்டி விழாவின் போதே லட்சக்கணக்கானர்கள் விரதம் இருந்து, முருகனை
வழிபடுவார்கள். ஆனால் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதந்தோறும் வரும் சஷ்டி
திதிகளிலும் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடலாம். வளர்பிறை திதியில் ஒன்று , தேய்பிறை
திதியில் ஒன்று என மாதத்திற்கு இரண்டு முறை சஷ்டி வருவதுண்டு.

பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.


ஆனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால் முருகப் பெருமான்
அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை.
மாதந்தோறும் வரும் சஷ்டி விரதத்தை யாரெல்லாம் இருக்கலாம், விரதம் இருக்கும் முறை
என்ன, என்ன பாடல் பாராயணம் செய்து முருகப் பெருமானை வழிபட வேண்டும் என்பது பற்றி
இங்கே பார்க்கலாம்.

திருவெம்பாவை பதிகம் 02 - பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்

கஷ்டத்தை தீர்ப்பான் கந்தன்


யாரெல்லாம் சஷ்டி விரதம் இருக்கலாம்?
குழந்தை இல்லாதவர்கள், வறுமையில் வாடுபவர்கள், தொழிலில் வளர்ச்சி அடைய வேண்டும்
என்பவர்கள், நோய் குணமாக வேண்டும் என்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வியில்
மேன்மை பெற வேண்டுபவர்கள், எங்கு சென்றாலும் யாரோ ஒருவரால் பிரச்சனை இருந்து
கொண்டே இருக்கிறது என்பவர்கள் மாதந்தோறும் சஷ்டி விரதம் இருக்கலாம். இன்னும்
என்னவெல்லாம் பிரச்சனை உள்ளதோ அந்த குறை, பிரச்சனை தீர சஷ்டி விரதம் இருக்கலாம்.

எப்போது துவங்க வேண்டும் ?


பிரச்சனைகள் தேய வேண்டும் என்பவர்கள் தேய்பிறை சஷ்டியிலும், நல்ல விஷயம்
துவங்குகிறோம் அது வளர வேண்டும் என்பவர்கள் வளர்பிறையிலும் சஷ்டி விரதம் இருக்க
துவங்கலாம் என்பார்கள். ஆனால் எந்த காரணத்திற்காக சஷ்டி விரதம் இருந்தாலும் வளர்பிறை,
தேய்பிறை என எந்த திதியில் வேண்டுமானாலும் சஷ்டி விரதம் இருக்கலாம்.

திருப்பாவை பாடல் 02 - வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவை

சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டியது


விரதம் இருக்கும் முறை :
* சஷ்டி விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்த உடன் குளித்து விட்டு, விளக்கேற்றி, வீட்டில்
உள்ள முருகனின் திருவுருவப் படத்திற்கு செவ்வந்திப் பூ அல்லது ஏதோ ஒரு வெள்ளை நிறப் பூ
அணிவிக்க வேண்டும்.

* நைவேத்தியமாக காய்ச்சிய பாலுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து வைக்கலாம். அதோடு


இரண்டு வாழைப்பழங்கள் அல்லது என்ன பழம் கிடைக்கிறது ஏதாவது ஒரு பழம், வெற்றிலை
பாக்கு வைத்து, மனமுருகி நமது பிரார்த்தனையை முருகப் பெருமானிடம் முறையிட்டு,
வேண்டிக் கொண்ட விரதத்தை துவக்க வேண்டும்.

* அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும்.

* ஒரு வேளை சாப்பிடாமலோ அல்லது இரண்டு வேளையும் சாப்பிடாமலோ அல்லது பழம் மற்றும்
பால் மட்டும் சாப்பிட்டுக் கொண்டோ விரதம் இருக்கலாம். உடல்நிலையை பொருத்து எந்த
முறையில் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம்.

* மாலையில் வீட்டில் சட்கோண கோலம் அமைத்து அதில் 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்ற
வேண்டும். ஆறும் நெய் தீபமாக ஏற்றலாம் அல்லது ஒரு தீபமாவது நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

மார்கழியில் மாதத்தில் நடக்கும் அரிய உற்சவங்கள் : முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்

என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் ?


* நைவேத்தியமாக காய்ச்சிய பால், பழம் வைத்து வழிபட வேண்டும்.

* பூஜைகளை முடித்த பிறகு நைவேத்தியமாக வைத்துள்ள பாலை குடித்து விரதத்தை முடித்துக்


கொள்ளலாம்.

என்ன பாடல் பாராயணம் செய்ய வேண்டும்?


குழந்தைப் பேறு வேண்டி விரதம் இருப்பவர்கள் அதற்குரிய திருப்புகழ் பாடலை காலை, மாலை
இரு வேளையும் பாராயணம் செய்ய வேண்டும். மற்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் அவரவருக்கு
உரிய பிரச்சனைகளுக்கு ஏற்ற பாடலை பாராயணம் செய்யலாம். அல்லது பொதுவாக கந்தசஷ்டி
கவசம் பாராயணம் செய்யலாம். கந்தசஷ்டி கவசம் யார் வேண்டுமானாலும் பாராயணம்
செய்யலாம்.

எத்தனை காலம் விரதம் இருக்கலாம்?


எந்த காரணத்திற்காக விரதம் இருக்கிறீர்களோ அந்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு
மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டிகளில் விரதம் இருக்கலாம். குழந்தை
வரம் வேண்டுபவர்கள் குழந்தை பிறக்கும் வரை இந்த விரதத்தை தொடர்ந்து இருக்கலாம்.

குழந்தை வேண்டுவோருக்கான பாடல்


குழந்தை வரம் வேண்டுவோர் சொல்ல வேண்டிய திருப்புகழ் பாடல் :

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த

திருமாது கெர்ப்ப முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்

திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்

மலைநேர்பு யத்தி லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த

மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு


முலைமேல ணைக்க வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்

மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த

தனியேர கத்தின் முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்

சமர்வேலெ டுத்த பெருமாளே

You might also like