You are on page 1of 3

அதிபத்த நாயனார்

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க.

அவைத்தலைவர் அவர்களே, சிறப்பாக நீதி வழங்க வந்திருக்கும் வீட்டுருக்கும்

நீதிமான்களே, நேரத்தை இமைப்போல் காக்கும் மணிக்காப்பாளரே மற்றும் என்

அன்பிற்கினிய சகோதர சகோரிகளே, உங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்,

வணக்கம். என் பெயர் தீபிகா என் பிரகாஷ். இன்று இந்த இனிய பொழுதில் நான்

பேசப் போகும் தலைப்பு அதிபத்த நாயனார்.

அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து

மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன் பிடிப்பதை தொழிலாக

கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும்

மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக

கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை

சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார்.

இதனால் வறுமையால் வாடினார்.

சிவபெருமான் மேல் கொண்ட பக்தியின் காரணமாக, தன்னால்


இயன்ற இந்த செயலை சிவத் தொண்டாக புரிந்து வந்தார்.
அதிபத்தரின் இறைபக்தியை உலகறியச் செய்யும் விதமாய்
சிவபெருமான் ஒரு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி, அதிபத்தர்
வீசும் வலையில் மீன்கள் சிக்குவது குறைய ஆரம்பித்து. இதனால்,
அதிபத்தரின் குடும்பம் வறுமையில் வீழத் தொடங்கியது. சிவபக்தியில்
மட்டும் அதிபத்தருக்கு சிறிதளவும் பக்தி குறையவில்லை.

ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி

அதிபத்தர் ஒரு நாள் மீன் பிடிக்கச் செல்கையில், ஒரு மீனும் பிடிபடாத

நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார்.

வலையில் விலை மதிப்பற்ற ஒரு தங்க மீன் சிக்கியது. அந்த தங்க மீன் தக

தவென மின்னியது, அவருடன் மீன் பிடிக்க வந்தவர்கள் உன்னுடைய

கஷ்டத்திற்கு விடிவு காலம் வந்து விட்டது என்று கூறினார்கள். அதிபத்தர்,

அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்காமல்,

சிவபெருமானுக்கு அளிக்க தங்க மீன் கிடைத்ததே என்ற மட்டில்லா

மகிழ்ச்சியோடு சிவனை நினைத்தவாறு வலையில் சிக்கிய விலை

மதிப்பற்ற அந்த ஒரே ஒரு தங்க மீனையும் எந்தவித தயக்கமும் இன்றி

சிவபெருமானுக்காக கடலிலேயே விட்டு விட்டு திரும்ப முனைந்தார்.

அவருடைய உயர்ந்த தூய பக்தியை மெச்சி சிவபெருமான், பார்வதி

சமேதராக அதிபத்தருக்கு “ரிஷபாரூடராக” காட்சியருளினார். செய்யும்

தொண்டில் இருந்து சிறிதும் பிறழாது வாழ்ந்த அதிபத்தருக்கு இறுதியில்

முக்தி கொடுத்தார்.
இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும்

இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமை தவறாத பக்தியை கொண்டவராக

அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக

போற்றுகின்றார்கள். இவரை

"விரி திரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்" (x3) என்று திருத்தொண்டத்

தொகையில் 7 சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுகிறார்.

தென்னாடுடைய சிவனே போற்றி. 'எந்நாட்டவர்க்கும்

இறைவா போற்றி. '

You might also like