You are on page 1of 3

2/9/2020

செம்மொழியாம் தமிழ் மொழி

I.பொருள் தருக:

1. தொன்மை - பழமை

2. செம்மொழி- செம்மையான மொழி

3. தீந்தமிழ் - இனிமையான தமிழ்

4. கேளிர் - உறவினர்

5. பண்பாடு - ஒழுக்கம்

6. விருந்தோம்பல் - விருந்தினரைப் பேணுதல்

7. நவிலல் - கூறுதல்

II.பிரித்து எழுது:

1. செம்மொழி = செம்மை + மொழி


2. ஆறாயிரம் = ஆறு + ஆயிரம்
3. என்றுணராத = என்று + உணராத
4. தண்டமிழ் = தண்மை + தமிழ்

III.சேர்த்து எழுது:

1. பத்து + பாட்டு = பத்துப்பாட்டு


2. தீம் + தமிழ் = தீந்தமிழ்
3. யாம் + அறிந்த = யாமறிந்த
4. எ + நாட்டவருக்கும் = எந்நாட்டவர்க்கும்
5. விருந்து + ஓம்பல் = விருந்தோம்பல்

IV.நிரப்புக :

1. உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.


2. முத்தமிழ் என்பது இயல் , இசை , நாடகம்.
3. திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப் படுகிறது

V.வினாக்கள்:

1. தமிழ் மொழி பற்றித் தேவநேயப் பாவாணர்

கூறுவது யாது ?

தமிழே உலகின் முதல் மொழி, மூத்த மொழி எனக்


கூறுகிறார்.

2. தமிழ் இலக்கியங்களின் வகைகள் சிலவற்றைக்

கூறுக ?

எட்டுத்தொகை

பத்துப்பாட்டு

பதினெண் கீழ்க்கணக்கு

ஐம்பெரும்காப்பியங்கள்
ஐஞ்சிறுகாப்பியங்கள்

சிற்றிலக்கியங்கள்.

3. தமிழ் மொழி எவ்வாறெல்லாம் போற்றப் படுகிறது ?

அருந்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ்,


அன்னைத்தமிழ் போன்ற நூற்று முப்பது சிறப்பு அடை
மொழிகள் உள்ளன.

4. தமிழின் இனிமை பற்றி பாரதியார் கூறியவை யாவை ?

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது


எங்கும் காணோம்” என்று கூறுகிறார்.

You might also like