You are on page 1of 3

தமிழ்

1. இந்தியாவில் உள்ள நான்கு மொழிக்குடும்பங்கள் யாவை?

★1 இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பம்

★2 திராவிட மொழிக் குடும்பம்

★3 ஆஸ்திரோ- ஆசிய மொழிக் குடும்பம்

★4 சீனோ- திபெத்திய மொழி குடும்பம்

2. தமிழ் ஆட்சி மொழியாக விளங்கும் அயல் நாடுகள் யாவை?

★1 மலேசியா
★2 இலங்கை
★3 சிங்கப்பூர்.
ஆகிய மூன்று நாடுகளும் தமிழை ஆட்சி மொழியாக
ஏற்றுக்கொண்டுள்ளது.

3. எட்டுத்தொகை நூல்கள் யாவை?

★ நற்றிணை ,குறுந்தொகை
,ஐங்குறுநூறு ,பதிற்றுப்பத்து ,பரிபாடல் ,கலித்தொகை ,அகநானூறு
,புறநானூறு.

4. தென் திராவிட மொழிகள் யாவை?

★தென் திராவிட மொழிகள் மலையாளம், இருளா, குரும்பா, குடகு,


தோடா, கோடா, படுகா, கன்னடா, கொரகா, துலா

5. அன்பின் ஐந்திணை களைக் கூறுக?

★குறிஞ்சி
★முல்லை
★மருதம்
★நெய்தல்
★பாலை

6. திராவிட பெருமொழிகள்
யாவை?

★தமிழ் ★தெலுங்கு ★மலையாளம் ★கன்னடம்

7. அகநானுறு பிரிவுகள் கூறுக?

★அகநானூறு மூன்று பிரிவுகளைக் கொண்டது


‌ ★களிற்றுயானை நிரை ,மணிமிடைப்பவன் ,நித்திலக் கோவை.

8. குறிஞ்சிப்பாட்டு யாரால் எதற்காக பாடப்பட்டது?

★இப்பாடல் கபிலரால் பாடப்பெற்றது. ஆரிய அரசன் பிரகத்தன்


என்பவருக்குத் தமிழின் பெருமை உணர்த்த வேண்டி
ஆசிரியப்பாவினால் இந்நூல் பாடப்பெற்றது.

5mark

1.திராவிட மொழிகளை நான்கு குழுக்களாக ஸ்டீவர் எவ்வாறு பதிக்கிறார்?

★ திராவிட மொழிகளை நான்கு குழுக்களாக ஸ்டீவர் என்ற அறிஞர்


பகுக்கிறார் அவை

★1 தென் திராவிட மொழிகள்


(படகா ,இருளா,கன்னடம்,குடுகு,கோட்டா.)

★2 தென்-நடுத் திராவிட மொழிகள்


(கொண்டி,கொண்டா,குயி,குலி, தெலுங்கு)

★3 நடுத்- திராவிட மொழிகள்


(கதபா, கோலமி, நாய்கி, பார்ஜி)

★4 வட திராவிட மொழிகள்
(பிராகுயி,குருக்சு,மால்டோ)

2. தமிழ் உயர்தனிச்செம்மொழி எவ்வாறு விளக்குக?

★தெலுங்கு முதலிய மொழிகளுக்கெல்லாம் தலைமையான மொழியாகவும்


மேன்மை உடைய மொழியாகவும் தமிழ் உள்ளது.

★மற்ற மொழிகளின் உதவியின்றி தனித்து இயங்குகின்றது.


★திருத்திய பண்புடனும் சீர் பொருந்திய நாகரீகத்துடனும் திகழ்கிறது.

★தமிழ் உயர்மொழியாகவும் தனிமொழியாகவும் செம்மொழியாகவும்


திகழ்வதால்.அறிஞர்கள் உயர்தனிச் செம்மொழி என்று தமிழைப்
போற்றுகின்றனர்.

3. இந்திய மொழிக் குடும்பங்கள் பற்றி விளக்குக.

★இந்தியாவில் மொத்த 12 மொழிக் குடும்பங்களைச் சார்ந்த 325 மொழிகள்


பேசப்படுகின்றன.
★இந்தியாவில் மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மொழிகள்
உள்ளன.ஆகையால் இந்தியாவை மொழிகளின் அருங்காட்சியகம் என
பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் குறிப்பபிடுகிறார்.

★இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் நால்வகை முக்கிய


மொழிக் குடும்பங்களுக்குள் மொழியியலாளர் அடக்குவர்.அவை:

★1 இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பம்

★2 திராவிட மொழிக் குடும்பம்

★3 ஆஸ்திரோ- ஆசிய மொழிக் குடும்பம்

★4 சீனோ- திபெத்திய மொழி குடும்பம்

You might also like