You are on page 1of 14

01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்..

கட…

Thozhan's Blog
Just another WordPress.com site

Home
என்ைனப் பற்றி

Type text to search here...


Home > தத்துவம் > ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கடவுள் மறுப்பும்..

ேவத காலங்களில் ேவத மறுப்பும் ..


கடவுள் மறுப்பும் ..
30/10/2010 Thozhare! Leave a comment Go to comments

இந்தியாைவ பற்றி ெதரிந்த உலக மக்கள், இதன் பழைமயின் காரணமாக ஒரு


பக்கம் ெபருைமயாகவும், அதற்கு இைணயாக மறுபக்கம் சிறுைமயாகவும்
கருத்துக்கைளயும் ெகாண்டுள்ளனர்.

நாகரிகம், ெமாழி, கலாச்சாரம் என்று பல விடயங்களில், இந்தியா பழம்


ெபருைம வாய்ந்த நாடு என்றும் ஒழுக்க ெநறிையயும் ஆன்மீ க
தத்துவங்கைளயும் பழங்காலத்திேலேய ெபற்றுள்ளது என்றும்
பாராட்டப்படுகிறது.

இந்தியாவின் பழம் ெபருைம வாய்ந்த விடயங்கள் தான் அவர்கள் சிறுைம என


நிைனக்கும் கருத்துக்களுக்கு காரணமானைவ என்று அவர்களுக்கு ெதரிய
வாய்ப்பில்ைல. ஏெனனில் இங்கு வாழும் மக்களுக்ேக அைவ எட்டா கருத்தாக
இருக்கும் ேபாது மற்றவர்கைள பற்றி ெசால்லேவ ேதைவயில்ைல.

குறிப்பாக ேவதங்கள் பற்றி பலரும் ெபருைமயாகவும் புனிதமாகவும்


…wordpress.com/…/ேவத-காலங்களில்… 1/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

கருதுகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், ெதய்வத்ைத எழுத்து வடிவில்


காணும் நகல் என்னும் அளவுக்கு அைத புனிதமாகேவ கருதுகிறார்கள். பாமர
மக்களும் கூட தனது வழக்கு ெமாழியில் “ேவத வாக்கு” என்றும் கூட ேபச
ேகட்டிருக்கிேறாம். அவர்களும் ேவதங்கள் புனிதமானது; ேவதங்கள் என்றால்
மிகெபரிய அறிவுக்ெகட்டாத அகிலம் என்ெறல்லாம் நிைனக்கின்றார்கள்.
பாமரர்கள் மட்டுமா? படித்த ேமதாவி(?) என்று தன்ைன அைடயாளப்படுத்தும்
நம் நண்பர்களுேம அவ்வாேற ேவதங்கள் புனிதம் எனவும் மிகவும் உயர்ந்தது
எனவும் நிைனக்கின்றனர்.

ஆன்மீ கம் பற்றி ேபசுபவர்கள் எதற்ெகடுத்தாலும் ேவதத்தில் அப்படி உள்ளது.


ேவதத்தில் இப்படி ெசால்லப்பட்டிருக்கிறது என்று ஆதாரம் காட்டாமல்
ேவதங்கைள பற்றி வார்த்ைதயாேலேய முழம் ேபாடும் ஆசாமிகள் நம்
நாட்டில் பலர் இருக்கின்றனர். அவர்களிடம் “சரி, ேவதங்கள் என்றால் என்ன?”
என்று ேகட்டால் அது பழம் ெபருைம வாய்ந்தது என்பைத தவிர ெவறும்
மழுப்பல் பதில்கேள நமக்கு கிைடக்கும்.

மூடநம்பிக்ைககளும், புராதான கற்பைனகைளயும் ெகாண்டுள்ள ேவதங்கைள


விட்டால் இந்த மண்ணில் ேவறு தத்துவங்கேள இல்ைலயா அல்லது இைத
எதிர்த்து அதற்கு மாற்றான ேவறு தத்துவங்கள் இருந்தேத இல்ைலயா?
அக்காலத்தில் இருந்த ெபரும்பாலான மக்கள் ேவதங்கள் ெசால்வைதயா
நம்பினார்கள்? ேவதங்கள் மரபாகேவ கைடபிடிக்கப்பட்டதா?

முதலில் எவ்வாறு மக்களிைடேய இந்த ேவதங்கள் இத்தைன காலங்கள்


ெகட்டியாக பிடித்து ஆண்டன என்பைத பார்ப்ேபாம்.

ேவதங்கள் என்றால் என்ன என்ேற ெதரியாத மக்கள் தான் நம்மில் பலர்.


அவர்கள் என்னெவன்ேற ெதரியாத கருத்துக்கைள எவ்வாறு பின்பற்றியிருக்க
முடியும்?

ேவதங்கைள இன்று நாம் ேகள்விக்குட்படுத்தினாேலா அல்லது கடவுள் மறுப்பு


பற்றி ேபசினாேலா நம்ைம விேனாதாமாகேவ பார்ப்பவர்கள் பலர்
இருக்கின்றனர் நாம் என்னேவா புதிதாக கலகம் ெசய்வது ேபாலவும் இதுவைர
.
யாரும் ெசய்யாத ெசயைல நாம் ெசய்வது ேபாலவும் அருவருப்பாக பார்க்கும்
கூட்டத்திற்கு நாம் ெசால்வது என்னெவனில், ேவத மறுப்பு மற்றும் கடவுள்
மறுப்பு என்பது இன்ேறா அல்லது ேநற்ேறா ேதான்றியது அல்ல. அைவ
பண்ைடய மக்களிைடேய தான் ேதான்றியது. அேத ேபால் ேவதங்களின்
புராண கைதகைள மறுத்த தத்துவங்களும் கடவுள் மறுப்பு தத்துவங்களும் நம்
நாட்டில் ேதான்றியுள்ளன.

ேவதங்கள் அன்ேற பலரின் ேகள்வி அடிகளுக்கு ஆளாகியது. ஆகேவ நாங்கள்


புதிதாய் ஒன்றும் எதிர்க்கவில்ைல; யாரும் ெசய்யாமல் புனிதம் என
நிைனக்கும் ேவதங்கைள ேகள்விக்குட்படுத்துவைத நாங்கள் மட்டுேம
ெசய்யவில்ைல.

ேவதங்களுக்ெகதிரான தத்துவங்கள் நம் நாட்டில் ஏற்கனேவ ேதான்றியுள்ளன.

இந்திய தத்துவங்கள் அைனத்தும் ேவதங்களிலிருந்ேதா அல்லது ேவதங்கைள


எதிர்த்ேத உருவானதால் முதலில் ேவதங்கைள பற்றி முதலில் காண்ேபாம்..

…wordpress.com/…/ேவத-காலங்களில்… 2/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

ேவதங்கள் என்பது பல்ேவறு இலக்கியங்களின் ெதாகுப்பு. ேவதங்கள் கி.மு.3000


முதல் கி.மு.1000ம் ஆண்டு வைர எழுதப்பட்ட பாடல்கள் என்று ேவதங்களின்
காலத்ைத ஆராய்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இைத ெதாகுக்க
இரண்டாயிரம் ஆண்டுகளாவது ேதைவபட்டிருக்கும். எனேவ இது ஒேர
மாதிரியான கருத்துக்கைளயும், ஒேர மாதிரியான பாணிையயும் ஒேர
உள்ளடக்கத்ைதயும் ெகாண்டுள்ளதாக கூற முடியாது. ேவதங்கள் நான்கு
ெதாகுப்புகளாக உள்ளன.

அைவ

1. ரிக் ேவத சம்ஹிைத

2. யஜீர் ேவத சம்ஹிைத

3. சாம ேவத சம்ஹிைத

4. அதர்வ ேவத சம்ஹிைத

ெபாதுவாக இைவ ரிக் ேவதம், யஜீர் ேவதம், சாம ேவதம், அதர்வ ேவதம்
என்ேற அைழக்கப்படுகின்றன.

இவற்றில் ரிக் ேவதம் மிகப் பழைமயானது. இதிலிருந்ேத மற்ற ேவதங்கள்


ேதான்றின என்று கூறப்படுகிறது. வாய்ெமாழியாக கூறப்பட்ட பல பாடல்கள்,
புகழ் மாைலகள் பழைம வாய்ந்தைவ. இைவ கல்வி அறிவு வந்த காலத்திற்க்கு
முந்திய ேமய்ச்சல் ெதாழிலில் ஈடுபட்ட மக்களால் பாடபட்டைவ. பழைம
விரும்பி ைவதீகர்கைள ெபாருத்தவைர ேவதத்தில் இறுதியான உண்ைம
ெபாதிந்துள்ளது என்கின்றனர். ஆனால் அதில் ெபண்களும், தாழ்த்தப்பட்ட
சாதியினரும் படிக்கக் கூடாது என்கிற தைடேய உள்ளது.

( ஒருேவைள இதுேவ அவர்கள் கூறும் ெபாதிந்துள்ள ‘ இறுதியான


உண்ைமயாக இருக்குேமா !!! )

ரிக் ேவதத்தில் உள்ளைவ, ேமய்ச்சல் இன மக்களின் கால்நைடகள், உணவு,


மைழ, பாதுகாப்பு, உடல்நலம் ேபான்ற ஆைசகைள ேவண்டி
பாடப்பட்டைவயாகேவ உள்ளன.

வாயு, மைழ, பூமி, ஆகிய இயற்ைக சக்திகைள ெதய்வ சக்தியாகவும், உணவு,


பசி, ேநாய் ஆகியவற்ைற ெதய்வ ெபாருட்களாகவும் கற்பைனயாக
பைடத்தனர். யக்ஞிய வளர்த்தனர். மந்திரங்களில் நம்பிக்ைக
ெகாண்டிருந்தனர். ரிக் ேவத பாடல்களில் பல்ேவறு ேதவைதகளுக்கும்
கடவுளர்களுக்கும் புகழ்மாைல சூட்டப்பட்டிருக்கிறது. உணைவயும் கால்
…wordpress.com/…/ேவத-காலங்களில்… 3/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

நைடகைளயும் ெகாள்ைளயடித்து தங்களுக்குள் பங்கு ேபாட்டுக்ெகாள்ளும்


மனிதர்கள் அவர்கள். ஆனால் இவற்றில் ேவதத்தின் தத்துவத்ைத காண பலர்
முயல்கின்றனர். இதில் பிந்ைதய தத்துவவாதிகள் ெதரிந்து ெகாள்வதற்கு
எதுவும் இல்ைல. அேத ேபால் தற்ேபாதுள்ள வளர்ந்துவிட்ட சமூக சூழலில்
கூட இன்ைறய ஆன்மீ கங்கள் கூறும் கருத்துக்கள் கூட ரிக் ேவதத்தில்
உள்ளைவகைள ஆதாரமாக காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் இது எந்த
அளவுக்கு இன்ைறய சூழலுக்கு ஏற்புைடயதாக இருக்கும் என்பது
ேகள்விக்குரியேத.

ரிக் ேவதத்திற்கு பின் வந்த ெபரும் பாலான தத்துவங்கள் ேவதங்களிேல


அைடகலமும் அங்கீ காரமும் ேதடுகின்றன . அவ்வாறு பிரம்மம் –
ஒருைமவாதம் , சங்கரரின் அத்ைவதம் , ராமானுஜரின் விஷிச்டாத்ைவதம் ,
உபநிடதங்கள் ேபான்ற தத்துவங்கள் தாங்கள் ேவதங்களின் ெதாடர்ச்சி
என கூறிக்ெகாண்டன .

ேவத காலத்துக்கு பின் இனக்குழுக்கள் மைறந்து ெபருங்குழுக்கள் ேதான்றியது.


வாழ்க்ைக முைற முற்றிலும் மாறிவிட்டது. மாறிய வாழ்க்ைக புதிய
சிந்தைனகைள ேதாற்றுவித்தது. அப்ேபாது ெபருந்ெதய்வங்களுள் ஒன்று சர்வ
வல்லைமயுைடய ெதய்வமாக கருதப்பட்டது. சிவனும் திருமாலும் நமது
நாட்டில் சிலப்பகுதிகளில் தனி ெபரும் ெதய்வமாக கருதப்பட்டன. பல ெதய்வ
வழிபாட்டில் இருந்து முரண்பட்ட பிரம்மம் என்ற முழுைமக் கருத்து
உருவானது. மனிதனது புறவாழ்க்ைகக்கு அப்பாற்பட்ட ஆன்மா, உயிர் என்னும்
கருத்துக்களும் உருவாயின. இது ஒருைமவாதம் என்றும் அைழக்கப்படும்.

அதாவது “பிரம்மம்
என்னும் கருத்திலிருந்ேத பிரபஞ்சம் உருவானது.
பிரபஞ்சம் என்பது பிரம்மேம என்பேத. பிரம்மத்ைத விளக்க முடியாது.
பிரம்மத்ைத அறிய முடியாது. அறிபவனும் அறியப்படுபவனும் அதுேவ.
துவிதம் அதில் இல்ைல. குணமற்றது; நிர்குணம். அதுேவ நீ; நீேய அது.
அதுவன்றி ேவறில்ைல”

தற்ேபாதுள்ள கார்ப்பேரட் சாமியார் இேத கருத்ைத தான் ஆன்மீ கத்திற்கு


இன்று நவனமாக
ீ ெசால்லி திரிகிறார்கள். இன்ைறய படித்த இைளஞர்கள் பலர்
இக்கருத்துக்கைள ெகாண்டிருப்பைத நாம் காணலாம். ஏெனனில் இதில்
ேமம்ேபாக்காக காணும் அவர்களுக்கு மூடநம்பிக்ைககள் இல்ைல. பத்து
தைலேயா, பத்து ைககேளா இல்ைல. இதனால் மூடநம்பிக்ைகயற்றது மாதிரி
இருப்பதால் பலர் இக்கருத்துக்களுக்கு ஆட்படுகின்றனர். இந்த தத்துவத்ைத
தான் ஜக்கி வாசுேதவ் ேபான்ற சாமியார்கள் கைட விரித்து வியாபாரம்
ெசய்கின்றனர்.

இப்படிபட்ட தத்துவங்கைள அக்காலத்திேலேய பலர் ேகள்விகளுக்கும்


ேகலிகளுக்கும் உள்ளாக்கினார்கள். ேவதங்களிேலேய சுவாவவாதம் எனும்
சிந்தைன ேபாக்கு காணப்படுகிறது. அது ெபாருள்களின் இயல்பினாேலேய
மாற்றமும் இயக்கமும் நிகழ்கிறது என்று கருதுகிறது. சுபாவவாதிகள்
ஆன்மீ கத்ைத எதிர்க்கும் தர்க்கரீதியான பல சிந்தைனகைள இந்திய
தத்துவத்திற்கு அளித்தனர் . முரணற்ற ெபாருள்முதல்வாதத்ைத அளித்த
ேலாகாயவாதிகள் ேவதங்கைள முரணின்றி எதிர்த்தனர்.

பூர்வ மீ மாம்சகர்கள் , பூர்வ சாங்கியர்கள் , ேலாகாயதவாதிகள் , புத்தரும்


இயற்ைகப் பரிணாமக் ெகாள்ைகயினடிப்படியில் ஆன்மீ கவாதத்ைத
எதிர்த்தனர் .
…wordpress.com/…/ேவத-காலங்களில்… 4/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

மீ மாம்சம்

மீ மாம்சத்தின் ஸ்தாபகர் மற்றும் முதல் மீ மாம்ச நூைல எழுதியவர் ைஜமினி


எனும் அறிஞர். இந்நூலின் முதல் உைரைய எழுதியவர் சபரர். அவருக்கு பின்
குமரிலபட்டர், பிரபாகரர் என்ற இருெபரும் தத்துவ ஆசிரியர்கள் ேதான்றினர்.
இவர்களுைடய தத்துவங்கைள சங்கரர் எதிர்த்து வாதாடினார். ைசவ
சித்தாந்தத்தில் பரபக்க மறுப்பில் மீ மாம்சத்ைதப் பற்றி மறுப்புைர கூறும் ேபாது
பிரபாகர மதம் என்ேற மீ மாம்சம் அைழக்கப்படுகிறது. மீ மாம்சத்தில்
பிற்காலத்தில் ேவறுபாடுகள் ேதான்றி பட்டர் மீ மாம்சம் என்றும் பிரபாகர
மீ மாம்சம் என்றும் தனிப்பிரிவுகளாக ேதான்றின. இைவ இரண்டிற்கும்
ெபாதுவானது கடவுள் மறுப்பு ெகாள்ைகயாகும். அறிஞர் ராதாகிருஷ்ணன்
மீ மாம்சத்தின் நாத்திக ெகாள்ைகப்பற்றி “இந்த தத்துவத்தில் கடவுளுக்கு
இடமில்ைல. பூர்வகால மீ மாம்சத்தில் இந்த பலவனமான ீ துைளயின்
வழியாகப் பிற்காலத்தில் கடவுள் நுைழந்து விடப்பட்டார். கடவுள் இல்லாத
மீ மாம்ச தத்துவம் பூர்வ மீ மாம்சம் என அைழக்கப்படும்.”

புராதன, பைழய தத்துவார்த்த அைமப்புகள் கடவுள் இருப்பைத ஏற்றுக்ெகாள்ள


ேவண்டிய கட்டாயத்தில் இல்ைலெயன்று கூறுவதற்கு மீ மாம்ச ேகாட்பாடு ஓர்
உதாரணம். பைழய மரபு நாத்திக மரபாக இருந்திருக்க முடியாது என்று தற்கால
அறிஞர்கள் மிகவும் சிரமப்பட்டு நிரூபிக்க முயற்சி ெசய்கின்றனர்.
இதற்ெகதிராக பதிேனழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ட ேதவைர நாம்
ேமற்ேகாள் காட்ட முடியும். இவர் ஒரு மீ மாம்சகேர.

“குமரிலபட்டரும், பிரபாகரரும் பிரளயம் சிருஷ்டி ஆகியைவ ஒரு


கட்டுக்கைத” என்ேற கூறினர்.

“அவர் இருக்கிறார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் கடவுள்


இல்ைல. புலனுணர்வு கடவுைள காட்டுவதில்ைல. மற்ற ஆதாரங்கள் யாவும்
புலனுணர்ைவ அடிப்பைடயாய் ெகாண்டைவேய” என்று சபரர் வாதிடுகிறார்.

குமரிலப்பட்டாரும், பிரபாகரரும் கடவுள் இல்ைல என்று விஞ்ஞானம்


வளராத அக்காலத்திேலேய சிறப்பாக விவாதித்திருக்கின்றனர்.

உதாரணமாக பின்னால் வந்த நியாய ைவேஷசிகர்கள் கடவுள் இருப்பதற்கான


ஆதரங்கைள காட்டுவதாக வாதிட்டனர். அவர்களின் கூற்று “ஒவ்ெவாரு
காரியத்திற்கும் ெபாருளுக்கும் காரணகர்த்தா இருக்கேவண்டும். ஒரு
பாைனைய எடுத்து ெகாண்டால் அைத உருவாக்க குயவன் எனும்
காரணகர்த்தா அவசியம். அதுேபால உலகம் என்னும் ெபாருைள ைவத்து
பார்க்கும் ேபாது சர்வ வல்லைம ெபாருந்திய காரணகர்த்தாவாக
இருக்கேவண்டும். அவேன கடவுள் (Cause and Effect). அவன் அணுக்களிலிருந்து
சிருஷ்டிக்கிறான், அவ்வேபாது அழிக்கவும் ெசய்கிறான்” என்று வாதிட்டனர்.

குமரிலப்பட்டாரும், பிரபாகரரும் இந்த வாதத்திற்கு எதிராக முன் வந்தனர்.


“உலகத்திற்கு ஆரம்பமும் முடிவும் உண்டு. இதனால் உலகத்ைத
சிருஷ்டித்ததாகேவா, அழிப்பதாகேவா கூற முடியாது. ஆக்கலும் அழித்தலும்
இருத்தலும் ெசல்வது ேபால ஒரு ெதாடர் நிகழ்ச்சியாகும். உலகில் காணப்படும்
ெபாருள்களுக்கு காரணகர்த்தா இருப்பதாக கற்பைன ெசய்து ெகாள்ள
ேவண்டிய அவசியம் இல்ைல. பார்ப்பைத மட்டுேம உண்ைமயாகக் ெகாள்ள
ேவண்டும். உதாதரணமாக, குழந்ைதகளுக்கு காரணம் அவர்களுைடய
ெபற்ேறார்கேள, உலகிற்கு அப்பாற்பட்ட கடவுள் இருவர் ேதைவயில்ைல.
…wordpress.com/…/ேவத-காலங்களில்… 5/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

அப்படியிருக்க குழந்ைதகள் வந்ததற்கு ேவறு எைதயாவது எதற்கு


காரணமாகக் ெகாள்ள ேவண்டும்?”

குமரில பட்டர் நியாய- ைவேசஷிக வாதத்ைத அதற்கு எதிராகேவ திருப்பினார்.


“குயவன் பாைனைய ெசய்யும் ெசயல் திர்ஷ்யாந்தம் அல்லது உதாரணம்.
குயவன் தான் பாைனைய ெசய்யக் காரணமானவன் என்றால் அதற்கு கடவுள்
காரணமில்ைல. அப்ேபாது உலகில் பல ெபாருள்கைள கடவுள்தான்
எல்லாவற்றிற்கும் காரணம் என்றால் அப்ேபாது குயவன் பாைன ெசய்வதற்கு
உண்ைமயான காரணமாக இருக்கமுயாது. ேவறு ெசாற்களில் கூறுவதானால்,
நியாய – ைவேசஷிகார்கள் ஒன்று அவர்களது முடிைவ நிராகரிக்க ேவண்டும்,
அல்லது அது ஏற்பட்டதன் ஆதாரத்ைத மறுக்க ேவண்டும். ஏெனனில் ஆதாரம்
முடிவுக்ெகதிராக அைமந்துள்ளது” என்று வாதிட்டார். தன்வயமிழந்த
நிைலயில் இவ்வுலக வாழ்க்ைகயிலிருந்து முழுமுதலான அந்த
உலகிற்கு ெசல்லும் வழியாக ேயாகா கருதப்பட்டது. இவர் ேயாகாவுக்கும்
எதிராகவும் வாதாடினார். குமாரிலபட்டைர ெபாருத்தவைர ேயாகா அனுபவம்
என்பது ெவறும் கற்பைனேய.

இவ்வாறு பூர்வ மீ மாம்சகர்கள் கடவுள் மறுப்பு ெகாள்ைகைய தீர்க்கமாக


வாதிட்டனர்.

சாங்கியம்

சாங்கியத் தத்துவமும் கடவுள் நம்பிக்ைக தத்துவங்களுக்ெகதிராக வாதிட்டது.


சாங்கிய தத்துவத்ைத நிறுவியர் கபிலர் என்று கூறப்படுகிறது.

சாங்கியம் இந்திய தத்துவத்திற்கு மூன்று முக்கிய நன்ெகாைடகைள


வழங்கியுள்ளது.

1. பரிணாம சிந்தைன

2. அணுக் ெகாள்ைக

3. அறிதல் ெகாள்ைக

சாங்கியத்தின் முக்கியமான கூறு பரிணாமவாதம் ஆகும். பிரபஞ்ச


பரிணாமத்ைதத் ெதளிவாகக் கூறுகிற பண்ைடய உலகத் தத்துவங்களில் இது
மிக பழைமயானதாகும். சாங்கிய ேகாட்பாடிைன விளக்குவது இரு ஆராய்ச்சி
நூல்கேள. அைவ சாங்கிய காரிைக , சாங்கிய சூத்திரம் ஆகியைவ. சாங்கியம்
மிகப் பழைமயானது. மகாபாரதம் இைத சனாதனமானது (நிரந்தரம்) என்கிறது.
சாங்கியமும் மூலக் காரணத்ைத அறிந்து ெகாள்ள முற்ப்பட்டது. ஆனால்
எட்டப்பட்ட முடிைவ ேபாலேவ அதன் அணுகு முைறயும் ேவறாக இருந்தது.
அது பிரம்மத்ைத நிராகரித்தது. கடவுைள முழுைமயாக மறுத்தது. மாய
கற்பைனகளுக்கும் ஆழ்ந்த கனவுகளற்ற தூக்கத்த்திற்கும் பதிலாக அதன்
அணுகுமுைற அறிவார்ந்ததாக இருந்தது. உலகத்தின் ேதாற்றத்ைத
(காரணத்ைத) அதன் விைளவில் காண ேவண்டும் என்று காரிைக கூறுகிறது.
இதன் படி காரண காரியம் தன்ைமைய புரிந்து ெகாள்ளவும் அைத தத்துவத்தின்
ஆரம்ப இடமாகவும் ெகாள்ள முயன்றது. இது சத்கார்ய வாதம்
அல்லது பரிணாம வாதம் என அைழக்கப்பட்டது விைளவுகளின் அடிப்பைட
.
தன்ைம காரணத்தின் அடிப்பைடத் தன்ைமைய ெதரியப்படுத்தகூடியது.
அப்ேபாது உலகின் தன்ைம என்ன? உலகம் என்பது ெபாருள்களால் ஆனது.

…wordpress.com/…/ேவத-காலங்களில்… 6/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

ஆகேவ அதன் மூலக்காரணமும் ெபாருளாகத்தான் இருக்க முடியும் என்று


சாங்கியத் தத்துவம் கூறுகிறது.

மணிேமகைலயில் சமயக் கணக்கர் தம் திறங்ேகட்ட காைதயில் சாங்கியன்


ஒருவன் சாங்கிய தத்துவத்தின் பரிணாம வாதத்ைத மணிேமகைலக்கு
விளக்கி கூறுகிறான். இச்சாங்கியத் தத்துவம் பூர்வ சாங்கியமாகேவ
கருதப்படுகிறது. பைழய கருத்து முதல் வாதிகள் சாங்கியத்ைத தங்களுைடய
பிரதான எதிரியாகேவ கருதினர். இந்த எதிர்ப்ைப பிரம்ம சூத்திரத்தில்
காணலாம். சாங்கியத்ைத மறுக்க அதில் அறுபது பாடல்கள் உள்ளன. மற்ற
தத்துவங்களுக்ெகதிராக நாற்பத்தி மூன்று பாடல்கேள உள்ளன. பிரம்ம
சூத்திரத்தின் ஆசிரியர் சாங்கியத்ைத மட்டும் மறுத்துவிட்டு மற்ற எல்லாத்
தத்துவங்களும் மறுக்கப்பட்டதாக கூறுகிறார். அந்த அளவுக்கு பிரதானமான
எதிரியாக பிரம்மவாதத்திற்கு எதிராக சாங்கியத் தத்துவம் பார்க்கப்பட்டது.
சங்கரர் தன்னுைடய தத்துவக் ெகாள்ைககளுக்கு மாெபரும் ஆபத்ைத
விைளவிப்பது சாங்கியம் என்று உணர்ந்தார்.

ஆனால் பிற்கால சாங்கியர்கள் சாங்கியத்தில் ேமாட்சம் என்ற கருத்ைத


புகுத்தியதால் அது சருகாய் ேபானது. ஆனால் அத்ைவத ேவதாந்திகள்,
சாங்கியத்தின் பரிணாமக் ெகாள்ைகைய பிரம்மத்திலிருந்து மாயா உலகம்
பரிணாம வளர்ச்சி அைடந்தது எனவும், அத்ைவதத்திற்ெகதிரான ேவதாந்திகள்
கடவுளிடமிருந்து உண்ைமயான உலகம் பரிணாம வளர்ச்சி ெபற்றது எனவும்
கூற பயன்படுத்திக் ெகாண்டனர்.

ேலாகாயதவாதம் (அ ) சாருவாகம்

ேவதங்கைளயும் கடவுைளயும் முரணின்றி எதிர்த்தவர்கள் சாருவாகர்கள்


அல்லது ேலாகாயதவாதிகள். இவர்களது தத்துவம் ’ேலாகாயதம்’ ஆகும். இந்த
தத்துவமும் மிகப்பழைம வாய்ந்தேத. ேலாகாயதவாதிகள் பிரக்ைஞ பற்றி
கூறுவது ஆச்சரியமளிக்கின்றன. நான்கு பூதங்கள் (மண், நீர், காற்று, தீ) தவிர
ேவெறதுவும் இருப்பைத ேலாகாயதவாதிகள் மறுக்கிறார்கள். இவற்றிற்கு
சுயமாக பிரக்ைஞ கிைடயாது. ஆனால் இவற்றிலிருந்து பிரக்ைஞ
ேதான்றுவதாக கூறப்படுவது எப்படி சாத்தியம்?

இதற்கு ேலாகாயதவாதிகள் “அரிசியுடன் மற்ற ெபாருட்கள் ேசர்த்து மது


தயாரிக்கப்படுகிறது. இப்ெபாருட்களுக்குத் தனியாக ேபாைத ெகாடுக்கக் கூடிய
குணம் கிைடயாது. ஆனால் குறிப்பிட்ட அளவில் அவற்ைறச் ேசர்க்கும் ேபாது
அதற்கு ேபாைதயளிக்கும் குணம் வந்துவிடுகிறது. அதுேபால் உடலில் உள்ள
நான்கு பூதங்களுக்கும் சுயமாக பிரக்ைஞ இருக்காவிட்டாலும் குறிப்பிட்ட
முைறயில் உடலில் இருப்பதால் அதற்கு பிரக்ைஞ ஏற்படுகிறது” என்று
விளக்குகிறார்கள். ஆத்மாைவ விட ெபாருளுக்கு முதன்ைம ெகாடுக்கும் இந்த
வாதம் நமது முன்ேனார் ெகாடுத்தவற்றில் மிக மிக குறிப்பிடத்தக்கது ஆகும்.

இவர்கள் கர்மா ேகாட்பாட்ைடயும் ேவத யக்ஞங்கைளயும் தீவிரமாக


…wordpress.com/…/ேவத-காலங்களில்… 7/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

எதிர்த்தார்கள். இவர்கைள நாத்திகர்கள் என்று ேவதவாதிகள்


அைழத்தார்கள் நாத்திகன் என்றால் ேவதங்கைள ஒப்புக்ெகாள்ளாதவன்
.
என்று ெபாருள் . யக்ஞங்களாலும் பாசங்களாலும் எவ்வித பயனுமில்ைல
என்று இவர்கள் வாதிட்டார்கள்.

தமிழ்நாட்டில் கடவுள் நம்பிக்ைக என்பது மூட நம்பிக்ைக என்று


நாத்திகத்ைத ஒரு இயக்கமாகேவ அறிமுகப்படுத்தியவர் ெபரியார்.

இன்று விஞ்ஞானம் வளர்ந்து விட்ட சூழலில் கூட அவருைடய


கலகங்களுக்காக சபிக்கும் ஆத்திக வாதிகைள பார்த்திருக்கிேறாம். ஆனால்
இேத மாதிரியான கலகங்கைள விஞ்ஞான வளர்ச்சிையைடயாத அன்ைறய
காலத்திேய ேலாகாயதவாதிகள் ெசய்தனர். ஆக, அக்காலங்களில் அவர்கைள
ஆத்திக வாதிகள் எப்படி பார்த்திருப்பார்கள் என்பைத நம்மால் ஊகிக்க
முடிகிறது.

விஞ்ஞானம் வளர்ச்சியைடயாத காலத்தில் சாருவாகர்களின் கலகத்திற்கு ஓர்


உதாரணம்:

ஒரு சாருவாகன் ஒரு குடிைசயின் கூைர மீ து ஏறி நின்று ெகாண்டான்.


அவ்வூரில் இறந்தவர்களுக்குத் தீ வளர்த்து அவி ெசாரிந்து பிண்டம் ஊட்டிய
ஒரு புேராகிதைன அைழத்துத் ெதருவில் ஓர் இைலையப் ேபாடச் ெசான்னான்.
எதற்ெகன்று புரியாமல் புேராகிதன் அவ்வாேற ெசய்தான். கூைர மீ து நின்ற
சாருவாகன், ஒரு ேசாற்று உருண்ைடைய அதன் மீ து ைவக்கச் ெசான்னான்,
தீயில் உணைவப் ேபாட்டு இறந்தவர்களுக்குப் ேபாய்ச்ேசருகிற மந்திரத்ைதச்
ெசால்லச் ெசான்னான். புேராகிதன் விழித்தான். சாருவாகன் “உன் மந்திரத்தால்
தீயில் ெகாட்டப்படும் உணவு, எங்ேகேயா ேமேல இருக்கிற கண்காணாத
உலகிற்குப் ேபாகும் என்றால் அந்த மந்திரம் ெதருவிலிருந்து ஐந்து முழம்
உயரம் இருக்கும் இந்தக் கூைரக்குச் ேசாற்ைற ஏற்றாேதா?” என்று ேகட்டான்.
“அய்ேயா! இவன் நாத்திகன் இவன் ஊரில் இருந்தாேல மைழ ெபய்யாது” என்று
கூவிக்ெகாண்ேட புேராகிதன் ஓடிவிட்டான். இவ்வாறு மந்திரச்
சடங்காரங்களால் பயன் விைளயும் என்ற நம்பிக்ைகக்கு எதிராக
சாருவாகர்கள் கலகம் ெசய்தனர் .

மகாபாரதத்தில் கூட சாருவாகர்கைள பற்றிய கைத குறிப்பிடத்தக்கது.


பாண்டவர்கள் பாரதப் ேபாரில் ெவற்றி ெபற்று இந்திர பிரஸ்தம் என்னும்
தைலநகரனுள் நுைழந்தார்கள். ெகௗரவர்கள் ேபாரில் மாண்டு ேபானார்கள்.

…wordpress.com/…/ேவத-காலங்களில்… 8/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

அவர்கள் ஆட்சியில் நகரத்தில் வாழ்ந்த பிராமணர்கள், இப்ேபாது ெவற்றி


ெபற்று நகரினுள் வரும் பாண்டவைர வரேவற்கத்திரளாக வந்தனர்.
பாண்டவர்களில் மூத்தவனான தருமபுத்திரைர மிகப் படப் புகழ்ந்து தங்கைள
ஆதரித்துப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிய ேவண்டுெமன
வாழ்த்தினார்கள் . அவர்களிடமிருந்து விலகி நின்ற நாைலந்து ேபர்கள்
“இவர்கள் ெசால்வைத நம்பாேத” என உைரக்கக் கூவினார்கள். தருமபுத்திரர்
அவர்கைளத் திரும்பிப் பார்த்தார். கூடிநின்ற பிராமணர்கள், “அவர்கள்
ெசால்வைதக் ேகட்காதீர்கள்! அவர்கள் பூதவாதிகள், சாருவாகர்கள்” என்று
கத்தினார்கள். சாருவாகர்களில் ஒருவன் முன் வந்து தருமைனப் பார்த்துத்
ெதளிவான குரலில் “இந்த பிராமணர்கள் இன்று காைலயில்
திரிேயாதனனுக்குச் ெசான்ன வாழ்த்ைதத் தான் இப்ெபாஈது உனக்குச்
ெசால்லியிருக்கிறார்கள். உண்ைமயில் நீ தருமபுத்திரன் அல்ல. அதர்மத்ைத
ெசய்து வந்திருக்கிறவன். எதற்காகக் குமார்கைளயும் பாட்டைனயும்
தந்ைதயர்கைளயும் சேகாதரர்கைளயும் நண்பர்கைளயும் ேபாரிக்
ெகான்றுவிட்டு இங்கு வந்திருக்கிறாய் இைத விடக் ெகாடிய பாதகம் என்ன
?
இருக்கிறது? ேநற்றுவைர இந்த பிராமணர்கள் துரிேயாதனைன புகழ்ந்த அேத
வாயால் இவர்கள் இன்று உன்ைனப் புகழ்கிறார்கள். இெதல்லாம் எதற்காக?
அவர்களது பசுக்கைளயும் ஆசிரமங்கைளயும் அடிைமகைளயும் யக்ஞ
தட்சிைணகைளயும் பாதுகாத்துக் ெகாள்வதற்காகேவ உள்ளைத உள்ளபடி
ெசால்லும் நாங்கள் நாத்திகர்கள்” என்று ெசான்னான். “பிராமண துேராகமும்
ராஜத்துேராகமும் ெசய்யும் இவர்கைளத் தீயிலிட்டு எரியுங்கள்” என்று
பிராமணர்கள் கூக்குரலிட்டனர். அவர்கைள பிடித்துக் கட்டி ஓமத்தீயில் இட்டுப்
ெபாசுக்கினார்கள். சாருவாகர்களுைடய எதிர்ப்பு ெவளிப்பைடயானதும்
ைதரியமானதும் ஆகும் ஆனால் அவர்கள் எரித்து ெகால்லப்பட்டனர். இைத
.
நியாயப்படுத்த தார்மீ க ேகாட்பாடுகள் புதிய நிைலைமக்கு தகுந்தவாறு
மாற்றியைமக்கப்பட ேவண்டியிருந்தது. இைதத் தான் பகவத் கீ ைத ெசய்தது.

பாயாசி என்னும் ெபாருள்முதல்வாதி கர்மா ேகாட்பாட்டிற்ெகதிராக ேகலியாக


வாதிட்டார். அதாவது “பிராமணர்களும் அைலந்து திரியும் துறவிகளும்
வாழ்க்ைகயில் ஆைச உள்ளவர்கள். அவர்கள் துயரங்கைள ெவறுக்கிறார்கள்.
இறந்த பின் நாம் நன்றாக இருப்ேபாம் என்று அவர்கள் கூறுவது
உண்ைமயானால், கர்மா ேகாட்பாடு உண்ைமெயன அவர்கள் நிைனத்தால்,
அவர்கள் விஷம் அருந்திேயா கத்தியால் குத்திக் ெகாண்ேடா தூக்கில்
ெதாங்கிேயா மைலச் சிகரத்தின் கீ ேழ குதித்ேதா தங்கள் உயிைர மாய்த்துக்
ெகாள்ளேவண்டும். ஆனால் அது பற்றி அவர்களுக்கு ெதரியாததால் அவர்கள்
உயிைர விடமாட்டார்கள். அவர்களின் கர்மா ேகாட்பாட்டின் மீ து அவர்களுக்ேக
நம்பிக்ைகயில்ைல” என்று வாதிட்டார்.

பாயாசி என்பவர் ஒரு அரசர். மரண தண்டைன விதிக்கப்பட்டவர்கைள


ெகாண்டு ஆன்மா ெவளிேயறுகிறதா இல்ைலயா என்பது ேபான்ற
ஆய்வுகைளயும் அக்காலத்தில் ேமற்ெகாண்டவர்.

இைவெயல்லாம் நம்முைடய புராதன ெபாருள்முதல்வாதிகள்


ஆன்மீ கவாதிகைள எதிர்த்து எப்படி வாதம் ெசய்தனர் என்பதற்கு
எடுத்துக்காட்டுகள்.

ெபௗத்தம்

…wordpress.com/…/ேவத-காலங்களில்… 9/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

ேவதங்கைள எதிர்க்கும் தத்துவங்கள் என்று ெவளிப்பைடயாகேவ


கூறிக்ெகாள்ளும் தத்துவங்களில் ெபௗத்தம் ஒன்று.

ெபௗத்தத்தின் வரலாற்ைற ெதளிவாக அறிய முடிகிறது. உலகத்தின் துன்பம்


பற்றிய வருணைனேயாடு புத்தர் தமது ஆய்ைவத் ெதாடங்கினார். உலகம்
துன்பமயமானது. அது ஒரு துன்பக் கடல்.அதில் நீந்திக் கைர ேசருவது
கடினமான காரியம் என்றார். உலகத்தில் காணப்படும் துன்பம்
உண்ைமெயன்று ஒப்புக்ெகாண்டு அதன் காரணம் என்னெவன்று
ஆராயத்துவங்குகிறார். “எதுவும் நிைலயானதல்ல. எல்லாம் மாறிக்
ெகாண்டிருப்பைவேய. என்றுமுள்ள ஆன்மா, பிரம்மம், கடவுள் என்பன
உண்ைமயல்ல. மாறுதல் என்னும் மண்டிலச் சுழற்சியில் உள்ளைவேய
உலகிலுள்ள அைனத்தும்.” இதைன அநித்தியவாதம் என்பர். நித்தியமான
வஸ்து என்று எதுவும் இல்ைல என்பது இதன் ெபாருள். இக்ெகாள்ைகயின் ஓர்
அம்சம் ஆத்மா இல்ைல என்று வாதாடுவது. அதற்கு அனாத்மவாதம் என்று
ெபயர்.

இேத நூற்றாண்டில் கிேரக்கத் தத்துவ ஆசிரியர் கிராக்ளிட்டஸ் புத்தருைடய


அநித்யவாதத்ைத ஒத்திருக்கும் ஒரு ெகாள்ைகைய ேபாதித்தார்.

கிராக்ளிட்டஸ் பற்றி எங்ெகல்ஸ் கூறுகிறார் “மிகச் சிறிய துகளிலிருந்து


மிகப்ெபரிய ெபாருள் வைர ஒரு மணல் தூளிலிருந்து சூரியன் வைர ஒரு
ெசல்லிலிருந்து மனிதன் வைர இவ்வுலகில் அைனத்தும் ேதான்றி
மாறுதைலடந்து அழிந்து ெகாண்டிருக்கிறது. சலனமும் மாறுதலும் உலகின்
அைனத்தினுைடய இயற்ைக. கிேரக்கர்கள் இம்முடிவுக்கு வருவதற்கு
இயற்ைக பற்றிய அவர்களது ஆர்வமும் ஆய்வுேம காரணம். இம்முடிவு
அனுபவத்தின் அடிப்பைடயில் உருவானது. ஆனால் நமக்கு விஞ்ஞான
ஆராய்ச்சி மூலம் ெதரிந்து ெகாள்ள முடிகிறது. எனேவ இைத இன்னும்
ெதளிவான உருவத்தில் காண்கிேறாம்”

கிேரக்க தத்துவத்திற்கு கிராக்ளிட்டஸ் ெசய்தது ேபால இந்திய


தத்துவங்களிேலேய முதன் முைறயாக இயக்கவியல் சிந்தைன
ஆரம்பகால ெபௗத்தத்தில் காணப்படுகிறது .

புத்தருைடய காலத்தில் அவர் கண் முன்ேன நடந்த நிகழ்வுகள் அவர் உலகம்


துன்பமயம் என்று எண்ணுவதற்கு காரணமாயிருந்தன. அவர் யதார்த்தைத
ேநரில் கண்டதால் கடவுைள நம்பவில்ைல. துக்கங்கைள மாற்றுவதற்கு யாக
யக்ஞங்கள் முதலிய சடங்காசாரங்கைள நடத்துவதிலும் அவருக்கு
நம்பிக்ைகயில்ைல. வாழ்க்ைகைய துறந்து வாழும் துறவு வாழ்க்ைகயிலும்
அவர் மனம் ெசல்லவில்ைல. அது உடைல வருத்திக் ெகாள்வது. எவ்வித
பலனும் தராது என்றார். உபநிடத ஆன்மீ க கருத்துக்களான பிரம்மம், மாைய
ஆகியவற்றில் அவர் மனம் ஈடுபடவில்ைல.
…wordpress.com/…/ேவத-காலங்களில்… 10/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

புத்தர் அப்பாைல ெகாள்ைககைள (Meta physics) விரும்பவில்ைல. மாலுங்கியர்


என்பவரது புதல்வர்கள் புத்தரிடம் பிறப்பு – இறப்பு, இறப்பிற்கு பின் மனித
நிைலப் பற்றி ேகள்விகள் ேகட்டனர். இதற்கு பதிலாக புத்தர் ஓர் உவைமக்
கைத கூறினார்.

ஒருவன் விஷமூட்டிய அம்பினால் காயமைடந்து வருந்துகிறான்.


அவனுைடய நண்பன் ஓடிப்ேபாய் ைவத்தியைர அைழத்து வருகிறான்.
ைவத்தியர் அம்ைப ெவளிேய எடுத்து ேபாடும் ேபாது காயமைடந்தவன்
“நிறுத்துங்கள்! எனது ேகள்விகளுக்குரிய பதிைலச் ெசான்னால் தான் அம்ைப
எடுக்கலாம். இேதா எனது ேகள்விகள்” என்று கீ ழ்கண்டவற்ைற ேகட்கிறான்.

1. யார் அம்ைப எய்தது

2. இைத எய்தவன் ஷத்திரயனா? பிராமணனா? ைவசியனா? சூத்திரனா?

3. அவன் எந்த குலத்ைத ேசர்ந்தவன்?

4. அவன் ெநடியவனா? அல்லது குறுகியவனா?

5. அம்பு எந்த வைகைய சார்ந்தது?

6. அது எந்த ெகால்லன் உைலயில் ெசய்தது?

இதற்ெகல்லாம் ைவத்தியர் பதில் ெசால்லத் ெதாடங்கினால் பதில் ெசால்லி


முடிவதற்குள் காயமுற்றவன் இறந்து விடுவான். இைத ேபாலேவ உலகிற்கு
அப்பாற்பட்ட ேகள்விகைள ேகட்பவன் துக்கதிலிருந்து விடுபடும் வழிைய
ெதரிந்து ெகாள்ளும் முன் இறந்து விடுவான்.

இதிலிருந்து தர்க்க வாதங்கள், உலகம் உண்ைமயா அல்லது ெபாய்யா?


ேபான்ற அப்பாைல விவாதங்கைள விரும்பவில்ைல என்பது ெதரிகிறது.

ஆனால் பிற்காலத்தில் ெபௗத்தம் மஹாயானம் என்று பிரிக்கப்பட்டு கடவுள்


இல்ைலெயன்று கூறிய புத்தைர கடவுளாக்கினார்கள். சடங்குகள்
ேவண்டாெமன்று மறுத்த புத்தருக்கு சடங்குகள் ெசய்யப்படுகின்றன.
உபநிடதங்கைள மறுத்த புத்தைர கிருஷ்ணனின் 10வது அவதாரமாகவும்
சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.

நம் நாட்டில் பல தத்துவங்களும் இலக்கியங்களும் உருவானது ேபால மற்ற


சில நாடுகளில் கூட பழம் ெபரும் தத்துவங்களும் இலக்கியங்களும்
உருவாகியிருக்கின்றன. அவற்ைற ஆராய்வது ேபால இங்குள்ள
தத்துவங்கைள நாம் ஆராய முடியாதது; சிரமமானதும் கூட. தத்துவங்கள்
என்ற அடிப்பைடயில் நாம் உலக தத்துவங்களின் வரிைசயில் நமது
தத்துவத்ைத ெபாருத்தி பார்த்து ஆராய்வது நம்ைம தவறான முடிவுகளுக்ேக
இட்டு ெசல்லும்.

ஏெனனில் மற்ற நாடுகளில் உள்ள தத்துவவாதிகளும் தத்துவங்களும் ஒன்றன்


பின் ஒன்றாக வந்து முன்னால் உள்ளவர்களின் தத்துவங்கைள விமர்சனம்
ெசய்து அதற்கு மாற்றான புதிய தத்துவங்கைள அளித்தனர். இதனால் அங்ேக
தத்துவங்களில் வளர்ச்சி காணப்பட்டது.

ஆனால் நமது நாட்டில் தத்துவவாதிகளும் தத்துவங்களும் ஒன்றன் பின்


…wordpress.com/…/ேவத-காலங்களில்… 11/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

ஒன்றாக வந்தாலும் அவர்கள் முன்னவர்கைள விமர்சித்து குறிப்பிட்ட


காலத்திற்கு பின்னர் பிற்ேபாக்கு கருத்துக்களிேலேய மூழ்கினார்கள்.

இதனால் கருத்துக்களிலும் தத்துவங்களின் வளர்ச்சியில் ஒரு மந்த


நிைலயுடன் கூடிய ேதக்க நிைல உருவானது.

இப்படிப்பட்ட நிைலைமகள் மனிதனுக்கு பிரபஞ்சங்கைள பற்றி புரிந்து


ெகாள்ளேவா, மனிதனின் வாழ்நிைல பற்றி புரிந்து ெகாள்ளேவா, புதிய
கருத்துக்கைள பற்றி ெதரிந்து ெகாள்வதற்கான சூழைல அளிக்கவில்ைல.
ேவதங்களுக்கு மாற்றாக மனிதனால் ேயாசிக்க கூட முடியவில்ைல.

ஏெனனில் வர்ணாசிரம தர்மம் மனிதைன அறிவார்த்த அளவில் கட்டிப்


ேபாட்டுவிட்டது. சாதி முைற மனிதனுைடய ெசயல்கைளயும் அவனுைடய
வாழ்க்ைக முைறகைளயும் திணித்தது. தற்ேபாைதய வாழ்க்ைக முைற பூர்வ
ெஜன்ம கர்மாைவ ெபாருத்ேத உள்ளது என்றும் மனிதைன நம்ப ைவத்தது.

இவ்வாேற பைழய கர்மா நம்பிக்ைககளிலிருந்ேத ேவதங்களும் மற்ற


தத்துவங்களும் உருவாகி மக்கைள இறுகி பிடித்துவிட்டன. ஆனால்
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ேவதங்களுக்கு எதிரான கருத்துக்களும்
மாற்றான தத்துவங்களும் ேதான்றேவ ெசய்தன. அைவ ேவதங்கைள
ேகள்விக்குட்படுத்தின. ேவதங்களில் உள்ள நம்ப முடியாத கட்டுக்கைதகைள
ேபாட்டு உைடத்தன.

நம்மில் பலர் ேவதங்கள் என்பது காலங்காலமாக மக்களால் ெதான்று


ெதாட்டு இன்றும் பின்பற்றி வரும் தத்துவம் என்று புலாங்கிக்கின்றனர் .
ஆனால் ேமற்கூறிய ேவத மறுப்பு தத்துவங்களும் , ஆன்மீ க மறுப்பு
தத்துவங்களும் ேவதங்கைள மக்கள் முன் அம்பலபடுத்தின . எனேவ
ேவதங்கைளத் தான் மக்கள் கைடபிடித்தார்கள் அன்றும் அன்ைறய
அைனத்து மக்களும் கடவுள் மீ து நம்பிக்ைக ைவத்திருந்தனர் என்பதும்
ஒரு மாையேய !

கருத்து முதல்வாதம் , ஆன்மீ கம் ஆகியவற்ைற எவ்வளவுதான்


மிைகப்படுத்திக் காட்டினாலும் நாம் ெபாருள் முதல்வாதத்தின்
ெசாந்தக்காரர்கள் தான் .

ெதாடர்ந்து வரும் விஞ்ஞான அறிவின் உதவியுடன் அைத ேமலும்


ெசழுைமபடுத்துேவாம் !

Categories: தத்துவம்
Comments (0) Trackbacks (0) Leave a comment Trackback

1. No comments yet.

1. No trackbacks yet.

Name (required)
E-mail (required)
Website

…wordpress.com/…/ேவத-காலங்களில்… 12/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

Subscribe to comments feed


Submit Comment





 Notify me of follow-up comments via email.





 Notify me of site updates

சீ னப் ெபரும்சுவரும்! எங்க ஊர் உத்தபுர தடுப்புச் சுவரும்!


RSS feed

Google
Youdao
Xian Guo
Zhua Xia
My Yahoo!
newsgator
Bloglines
iNezha

Recent Posts

ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கடவுள் மறுப்பும்..


சீ னப் ெபரும்சுவரும்! எங்க ஊர் உத்தபுர தடுப்புச் சுவரும்!
தாழ்த்தப்பட்ட மக்கள் தனி நாடு ேகட்டிருந்தால்..
உயர் எண்ணங்கள் – தந்ைத ெபரியார்
ேதாழர்கேள!
Hello world!

Categories

சாதியம்
தத்துவம்
பகுத்தறிவு

Blogroll
Documentation
http://tamilcircle.net
http://www.tamilcircle.net
Plugins
Suggest Ideas
Support Forum

…wordpress.com/…/ேவத-காலங்களில்… 13/14
01/11/2010 ேவத காலங்களில் ேவத மறுப்பும்.. கட…

Themes
WordPress Blog
WordPress Planet

Archives
October 2010
July 2010
June 2010

Meta
Register
Log in

Top WordPress
Copyright © 2010 Thozhan's Blog
Blog at WordPress.com. Theme: INove by NeoEase.

…wordpress.com/…/ேவத-காலங்களில்… 14/14

You might also like