You are on page 1of 7

1.

0 முன்னுரை

அன்னையின் கருவில் களையாமல் பிறந்தாயே ,


அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே,…

என்ற பாடல் வரிக்கேற்ப பூவியில் பிறந்திட்ட மனிதர்கள் யாவருமே வெற்றியாளர்கள் தான். ஆக,
உடலுறுப்பு குறைபாடுகளும் மூளை சீர்ககு
் லைவும் அவர்களின் வெற்றிக்கும் திறமைக்கும்
தடையாகிடக்கூடாது. ஒவ்வொரு மனிதனாலும் நாட்டிற்கும் உலகிற்கும் தங்களது பங்கினை வழங்கிட
முடியும். மனிதனின் வெற்றிக்கும் திறமைக்கும், கல்வியறிவும் வாய்ப்பும் முக்கிய கூறாக அமைகிறது.
இதன் காரணத்தாலே, கல்வி அனைத்து சாராருக்கும் சமநிலையில் வேரூன்றி நின்ற யுனஸ்கோ ஐக்கிய
சபை நாடுகளில் உள்ள சிறப்பு தேவை மாண்வர்களை அன்றாட பள்ளியில் சேர்க்க பரிந்துரை செய்தது
(UNESCO,2018). இதன்வழியே உட்சேர்ப்புக் கல்வித் திட்டங்களும் கொள்கைகளும் வேரூன்ற
தொடங்கியது. இக்கல்வித்திட்டத்தின் கருத்துருவானது சிறப்பு தேவைக்குட்பட்ட மாணவர்களும்
பிரதான கல்வி மாணவர்களும் ஒரே வகுப்பில் இணைந்து வேறுபாடுகள் அற்று அரசாங்க
பள்ளிகளிலோ/அரசாங்க உதவி பள்ளிகளிலோ கல்வி பெறுவதேயாகும்.

2.0 கற்றல் கறபித்தலில் உட்சேர்ப்புக் கல்வியின் நோக்கம்

சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களிடத்திலுள்ள


சிறப்பு தேவைக்குட்பட்ட மாணவர்கள் இயல்பான கற்றல்
மாற்றுத்திறன்களையும் முனைப்பையும், சமூகமும் பள்ளி
சூழலில் எந்தொரு தடையுமின்றி அக்கல்வியறிவினை
நிர்வாகத்தினரும் ஏற்கும் மனப்பக்குவத்தையும்
பெற்றிருக்க வேண்டுமென்பதை உறுதிச் செய்தல்
,விழிப்புணர்வையும் அதிகப்படுத்துதல் வேண்டும்.

நோக்கங்கள்

இயல்பான மாணவர்களோடு இயல்புபடுத்திக் கொண்டு,


சிறப்புத் தேவை மாணவர்களுக்குள் தன்னம்பிக்கையை சிறப்பு தேவைக்குட்பட்ட மாணவர்கள் இயல்பான வாழ்க்கைத்
வளப்படுத்துதல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

கல்வி என்பது பொதுவானது. ஆக, அதனை அனைத்து மாணவர்களும் இயல்பான கற்றல்


சூழலில் எந்தொரு தடையுமின்றி அக்கல்வியறிவினைப் பெற்றிருக்க வேண்டுமென்பதே உட்சேர்ப்புக்
கல்வியின் முதன்மை நோக்கம். தகுந்த அணுகுமுறைகளையும், பாடத்திட்டத்தையும், கற்றல்
நடவடிக்கைகளையும் திட்டமிட்டு சிறப்புத் தேவையுடைய மாணவர்களின் தேவைக்கேற்ப
நிகழ்படுத்திட வேண்டும். இதுவே, இம்மாணவர்களும் இயல்பான மாணவர்களோடு இணைந்தோ
அல்லது தனியாள் முறையிலோ கல்வியறிவினைப் பெற்றிட வழிவகுக்கும். அவர்களின்
தேவைகேற்ப அணுகி வாய்ப்பினை ஏற்படுத்தித் தருதல் வேண்டும்.

இயல்பாகவே சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை இருக்கும்.


ஆக, இயல்பான மாணவர்களோடு கற்றல் சூழலை ஏற்படுத்தி அவர்களுக்கும் கல்வியறிவினைப்
பெறும் வாய்ப்பினை ஏற்படுத்துவதால் குறைகளை மறந்து எதிர்காலத்திற்கான திட்டத்தை
வழிவகுப்பர். இதன் காரணத்தால் தங்களுக்குள் தன்னம்பிக்கை வேரூன்றி முனைப்போடு
செயல்படத் துலங்குவர் . சிறப்புத் தேவை மாணவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளப்படுத்துதலே
உட்சேர்ப்புக் கல்வியின் மற்றொரு நோக்கம்.

சிறப்புத் தேவை மாணவர்கள் எனக் குறிப்பிடுகையில் , உடலுறுப்பு சார்ந்த குறைபாடுகள்


அல்லது மூளை செயற்பாட்டினில் குறைபாடுகள் என இரு உட்பிரிவுகளாகப் பகுக்கலாம் . தங்களின்
குறைகளைத் தகர்த்து இயல்பான வாழ்க்கை முறையினை வாழும் திறனை அவர்களிடத்திலே
பழக்கப்படுத்திடல் வேண்டும். இயல்பான மாணவர்களோடு இவர்களும் தங்களை இயல்புபடுத்திக்
கொண்டு இயல்பான வாழ்க்கை திறனை மேம்படுத்திக் கொள்வது, உட்சேர்ப்புக் கல்வித்
திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.

மேலும், சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களிடத்திலுள்ள மாற்றுத்திறன்களையும்


முனைப்பையும், சமூகமும் பள்ளி நிர்வாகத்தினரும் ஏற்கும் மனபக்குவத்தையும் விழிப்புணர்வையும்
அதிகப்படுத்துதல் வேண்டும். இதுவே உட்சேர்ப்புக் கல்வியின் மற்றொரு நோக்கமாகும்.
சமூகத்தினரிடம் விழிப்புணர்வு கொடுப்பதன்வழி சிறப்புத் தேவை மாணவர்கள் இயல்பான சூழலில்
அறிவினைப் பெருக்கி, எந்தொரு தடையுமின்றி ஆற்றலை வளப்படுத்திக் கொள்ளலாம். தனித்துப்
பார்க்கப்படாமல் அவர்களின் திறமைக்கும் மதிப்பளித்தல் வேண்டும்.

3.0 கற்றல் கற்பித்தலில் உட்சேர்ப்புக் கல்வியின் சவால்களும் அமலாக்க பிரிவுகளும்

எந்தவொரு திட்டமாக இருப்பினும், அத்திட்டம் நோக்கத்திற்கேற்றவாறு செயல்படாவிட்டால் பல


் ொள்ள வேண்டியிருக்கும். சவால்களை எதிர்கக
சவால்களை எதிர்கக ் ொண்டு உட்சேர்ப்புக் கல்வி
நோக்கத்தை நிறைவேற்ற பல அமலாக்கப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளது. எங்கே சிக்கல்
தோன்றுகிறதோ அதற்கான தீர்வும் அங்கேதான் இருக்கும். ஆக, ஒவ்வொரு அமலாக்கப் பிரிவும்
தங்களது பொறுப்புகளைச் சீராகச் செய்தால் இத்திட்டம் நம் நாட்டு கல்வித் தரத்தையும் வாழ்கை
தரத்தையும் மேம்படுத்தும் என்பது திண்ணம்.

பள்ளி நிர்வாகம் பெற்றோர்/


சக மாணவர்கள்
பாதுகாவலர்

அரசாங்கம் அரசு சாரார்

3.1 பள்ளி நிர்வாகம்


பள்ளி நிர்வாகம் பள்ளிகளில் இத்திட்டங்களை வழிநடத்த பல சிக்கல்களை
எதிர்நோக்குகின்றன. உட்சேர்ப்புக் கல்வி என்று கூறிக்கொண்டு முதல் நிலை மாணவர்களுக்கு
முக்கியத்துவம் வழங்குகின்றனர். பள்ளியின் அடைவுநிலையை மேம்படுத்த மாணவர்களை
மதிப்பீட்டின் அடிப்படையிலேயே அணுகுகின்றனர். உட்சேர்ப்புக் கல்வித் திட்டம் பள்ளியில்
செயல்படுத்தப் படுகிறதா இல்லையா என்பதை தலைமையாசிரியர் கண்காணிப்பதில்லை . ஒரு
வகுப்பறையில் அனைத்து நிலை மாணவர்களையும் அணுகுவதால் ஆசிரியர்கள் சிக்கலை
எதிர்நோக்குகின்றனர். பல திட்டங்களை செயல்படுத்துவதால் எதனையும் முழுமையாகச்
செயல்படுத்தவும் மதிப்பிடவும் இயலவில்லை. நாள் பாடத்திட்டத்தை அனைத்து மாணவர்களுக்கும்
பொருந்தும் வகையில் தயாரிப்பதில் சிக்கல். மேலும், தனியாள் நாள்பாடத்திட்டத்தைத்
தயாரிப்பதால் ஆசிரியர்களின் பளு அதிகரிக்கிறது. சிறப்புத் தேவை மாணவர்களின் தேவையைப்
பூர்த்திச் செய்ய ஆசிரியர்கள் பல பாடப்பொருளை ஒரு பாடவேளைக்காகத் தயார்ப்படுத்த
வேண்டியிருக்கிறது. மாணவர்களின் சுய விவரங்கள் சரியான கோப்பு முறைமை
படுத்தப்படுவதில்லை. மேலும், உட்சேர்ப்புக் கல்விக்கு முதன்மை வழங்கப்படுவதுமில்லை.
பெற்றொர்களோடு மாணவர்களின் சிக்கலைக் கலந்துரையாடுவதற்கு மாறாகக் குறைகளை
மிகைபடுத்திக் கூறுவதால் பெற்றோர்களின் ஒத்துழைப்பு சீர்க்குலைகிறது. உட்சேர்ப்புக் கல்வி
அமலாக்கத்தில் ஆசிரியர்களின் ஈடுபாடும் அறிவும் குன்றியே இருக்கிறது. ஆசிரியர்களிடையே
தகவல் பரிமாற்றம் ஏற்படுவதில்லை. ஆக, மாணவர்களின் சிக்கலும் அடையாளம்
காணப்படுவதில்லை. உட்சேர்ப்புக் கல்வியின் நோக்கப் பயன்பாட்டைப் பெற்றோர்களிடம் பகிர
தவறுகின்றனர். உடலிலும் உளத்திலும் மாணவர்களின் சிக்கலை அடையாளங்கண்டு
அதற்கேற்றவாறு அவர்களை அணுகாமல் ஒரே நிலையிலே கற்றல் நடவடிக்கைகளைத்
தயாரிக்கின்றனர்.

அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட கல்வித் திட்டங்கள் அதன் நோக்கத்தை நிறைவேற்றும்


வகையில் அமல்படுத்தப்படுவதற்குப் பள்ளி நிர்வாகம் முதன்மை வகிக்கின்றது. ஒரு பள்ளியின்
கல்வித்திட்டம், கல்வி மேம்பாடு, கல்விக்கான தூர நோக்குச்சிந்தனை அனைத்தும்
தலைமையாசிரியரைச் சார்ந்தே இயங்குகிறது. ஆக, உட்சேர்ப்புக் கல்வித்திட்டத்தின் தலைமை
பொறுப்பும் தலைமையாசிரியரைச் சார்ந்தே இயங்குகிறது. உட்சேர்ப்புக் கல்வித் திட்டத்திற்கென
தனியொரு செயற்குழு இயங்கிக் கொண்டிருக்கிறது . அதில் தலைமையாசிரியர் தலைவராகவும்
இதர ஆசிரியர்கள் உறுப்பினராகவும் செயல்படுகின்றனர். வகுக்கப்பட்ட பொறுப்பினை உட்சேர்ப்புக்
கல்வியின் நோக்கத்திற்கேற்ப அனைத்து உறுப்பினர்களும் வழிநடத்துதல் முகாமையானதாகும்.
தலைமையாசிரியர் முழு நேர கண்காணிப்பாளராக இருத்தல் வேண்டும். திட்டமிட்டப்படி உட்சேர்ப்புக்
கல்வி பள்ளிகளில் நன்முறையில் சீராக நிழவுப்பெறுகிறதா என்பதனை உறுதி செய்திடல்
நயன்மையாகும். உட்சேர்ப்புக் கல்வித் தொடர்பான கூட்டங்களுக்கும் பயிற்சி பட்டறைகளுக்கும்
தலைமையாசிரியர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உட்சேர்ப்புக் கல்வி தொடர்புடைய
அறிவினையும் புரிதலையும் மேம்படுத்திக் கொண்டு பள்ளிகளில் வரையறுக்கப்பட்ட முறைமையோடு
அமல்படுத்திட வேண்டும்.

தலைமையாசிரியர், செயல்படுத்தவிருக்கும் திட்டங்களுக்கு தூண்டலாக இருக்க,


ஆசிரியர்கள் அத்திட்டங்களைத் துலங்கும் ஏணியாய் இருத்தல் வேண்டும். திட்டங்களின்
நோக்கத்திற்கேற்றவாறும், மாணவர்களின் அடைவுநிலைக்கேற்றவாறும் நாள்பாடத்திட்டங்களைத்
திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும். ஒவ்வொரு நாளும் கிடைக்கப்பெற்ற சிந்தனை மீட்சிக்கு
ஏற்றவாறு அணுகுமுறைகளையும், மதிப்பீட்டு கருவிகளையும் கையாள வேண்டும். மாணவர்களின்
தரவுகளைக் கோப்பு முறையில் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். உட்சேர்ப்புக் கல்வியில்
சிறப்பு மாணவர்கள் ஈடுபட்டிருப்பதால் அவர்களின் மருத்துவப் பின்புலன், குடும்ப பின்புலன் ,
அடைவுநிலை , போன்ற தகவல்களைச் சீராகக் கோப்பு முறைப்படுத்துதல் ஆசிரியர்களின்
வழிகாட்டலுக்கு உதவியாக இருப்பதோடு சான்றாகவும் அமைகிறது. ஆசிரியர்களும்
பெற்றோர்களுடன் நல்லதொரு தொடர்பாடலை வளர்த்துக் கொள்வது நலம். மாணவர்களின்
சிக்கலைப் பெற்றோர்கள் ஏற்கும் வகையில் எடுத்துரைக்க வேண்டும். பெற்றோர்களின் அனுமதியும்
மாணவர்களின் மருத்துவச் சான்றிதழும் பெற்றுக் கொண்டு செயல்படுவதால் எந்தவொரு
பாதிப்புமின்றி மாணவர்களைச் சிறந்த முறையில் வழிநடத்திட வழிவகுக்கும். பாட ஆசிரியர்
,வகுப்பாசிரியர், உதவியாசிரியர் ,சிறப்பாசிரியர் அனைவரும் ஒருவருக்கொருவர் தகவல் பறிமாற்றம்
ஏற்படுத்திக் கொண்டு மாணவர்களின் சிக்கலைக் களைந்து அவர்களின் அடைவுநிலையை
உயர்த்திட சிறந்த முறையில் வழிகாட்டிட வேண்டும். சக மாணவர்களுக்கிடையே உள்ள முரணான
எண்ணங்களைச் சீர்ப்படுத்தி நல்லதொரு தோழமை பண்பை மாணவர்களிடையே வேரூன்றிட
வேண்டும். மாணவர்களுக்காகச் சொற்பொழிவு நிகழ்த்தி உட்சேர்ப்புக் கல்வியின்
முக்கியத்துவத்தையும் அதன் விளைப்பயனையும் மாணவர்களுக்கு ஏற்றவாறு விளக்குவதோடு
அதில் மாணவர்களின் பங்கினையும் எடுத்துரைப்பது சால்பு

பெற்றோர் ஆசிரியர் தலைவர்கள் இதுபோன்ற திட்டங்களுக்கு உறுதுணையாய் இருத்தல்


வேண்டும். இத்திட்டங்களின் நோக்கத்தை நிறைவேற்ற தங்களைச் சார்ந்த உதவிகளை முழு
மனதுடன் செய்திடல் வேண்டும். காட்டாக, பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த
கூட்டங்கள், பட்டறைகள் போன்றவறை ஆசிரியர்களோடு இணைந்து செயல்படுத்திட வேண்டும்.
சிறப்புத் தேவை மாணவர்களுக்கும் உட்சேர்ப்புக் கல்விக்கும் தேவையான அனைத்து வசதிகளையும்
ஏற்படுத்தித் தர வேண்டும்

3.2 பெற்றோர்களும் பாதுகாவலர்களும்


தற்காலத்தில் அதிலும் நமது நாட்டில் பெற்றோருக்கும் ஆசிரியருக்குமிடையே உள்ள இணக்கம்
குறைந்து கொண்டே இருக்கிறது. ஆசிரியர்களின் அணுகுமுறைகளை எதிர்மறையாகச்
சிந்திக்கின்றனர்; இயல்பினை ஏற்க மறுக்கின்றனர். அன்பின் காரணத்தால் பிள்ளைகளின்
எதிர்காலத்தை மறந்திடுகின்றனர். தங்களது அரவணைப்பில் இருக்கும் பிள்ளைகளின்
குறைபாடுகளை அறிந்தும் அதனை ஏற்க மறுப்பதாலே உட்சேர்ப்புக் கல்வியில் தங்களது பிள்ளைகள்
ஈடுபடுவதற்குத் தடையாக இருக்கின்றனர். ஆசிரியர்கள் அக்குறைகளை எடுத்துரைத்தால்
அதனையே காரணம் காட்டி ஆசிரியர்களக் குறை கூறுபவர்களாகவே கருதுகிறார்கள். கல்வித்
திட்டங்கள் பற்றியும் பள்ளியில் நிழவுப்பெறும் நடவடிக்கைகளை பற்றியும் எந்தவொரு தெளிவும்
இல்லாமல் இருக்கின்றனர்.

மாணவர்கள் பள்ளியில் முழு நேரம் இருப்பதில்லை. ஆக, வீடுகளில் அம்மாணவர்களின்


நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களின்
முன்னேற்றத்தையும் குறைபாடுகளையும் ஆசிரியரோடு கலந்துரையாட வேண்டும். முடிந்தவரையில்
தொடக்கத்திலே மாணவர்களின் சிக்கலைக் களைய முற்பட வேண்டும். எந்தவொரு
தற்பெருமையும் தாழ்ந்த மனப்பான்மையும் இல்லாமல் மாணவர்களின் குறைபாடுகளை ஆசிரியரிடம்
தெரிவிக்க வேண்டும். உடலுறுப்புச் சார்ந்த குறைபாடுகளாக அல்லது மூளை சீர்க்குலைவு இருப்பின்
மருத்துவரின் சான்றிதழ் பெற்று ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். மருத்துவர் கூறும்
ஆலோசனைகளை ஆசிரியர்களிடம் தெரிவிப்பது நலம். உட்சேர்ப்புக் கல்வித் திட்டத்தின்
நோக்கத்தை அறிந்து அதற்கான ஒத்துழைப்பை முழுமையாக வழங்கிட வேண்டும். தங்களது
பிள்ளைகள் சிறப்பு தேவைக்குட்பட்ட மாணவர்களாக இருப்பின் அவர்களின் குறைபாடுகளைப்
பற்றிய முழு விவரங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு தங்களைத் தயார்படுத்திக் கொண்டு
முடிந்தவரையில், அவர்களின் பிள்ளைகள் உட்சேர்ப்புக் கல்வியின் மூலம் தங்களது
அடைவுநிலையை உயர்த்திக் கொள்ள முழு ஆதரவினைக் கொடுக்க வேண்டும். தங்களது
பிள்ளைகள் இயல்பான மாணவர்களாக இருப்பின் எல்லா மாணவர்களுடனும் நட்பை வளர்த்துக்
கொண்டு இயன்ற உதவிகளைச் செய்யும் மனப்பான்மையைப் பழக்கிட வேண்டும் . சிறப்பு
தேவைக்குட்பட்ட மாணவர்களோடு தங்களது மாணவர்கள் நட்புக் கொள்வதை நல்லதொரு
நோக்கத்திற்காகத் தட்டிக் கொடுத்திட வேண்டும்.

3.3 சக மாணவர்கள்
உட்சேர்ப்புக் கல்வித் திட்டத்தின்படி அனைத்து மாணவர்களும் சமநிலையில் கல்விக் கற்கும்
வாய்ப்பு கிடைக்கிறது. இருப்பினும் உட்சேர்ப்புக் கல்வியின் நோக்கத்திற்கு ஏற்றவாறு சிறப்பு
தேவைக்குட்பட்ட மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க சக மாணவர்கள் அல்லது இயல்பான
மாணவர்களின் செயல்பாடுகள் தடைக்கல்லாக அமைகின்றது. காரணம், இயல்பான மாணவர்கள்
சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களின் குறைகளைக் கருதி அவர்களை நண்பர்களாக ஏற்க
மறுக்கின்றனர். இயல்பாகவே, தொடக்க பள்ளி மாணவர்களிடத்தில் தன்னுணர்வு மிகுந்திருக்கும்
என்பது மேனாட்டு அறிஞர் பியாஜேட் கருத்து. ஆசிரியர்கள், சிறப்புத் தேவைக்குட்பட்ட
மாணவர்களின் கற்றலுக்காக அவர்களைக் கூடுதல் கவனிப்புடன் அணுகுவதையும் இயல்பான
மாணவர்கள் மறுக்கின்றனர். சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களின் இயலாமையையும்
அவர்களின் குறைபாடுகளையும் ஏளனம் செய்து பள்ளிச்சூழலையே வெறுக்கும் அளவுக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்திடுகின்றனர்.

இயல்பான மாணவர்களிடத்தில் சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களின் தேவைகளையும்


சமநிலையின் மேன்மையையும் வேரூன்றிட வேண்டும். அதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.
இளமைக் கல்வி சிலைமேல் எழுத்து என்பார்கள். அதன் காரணத்தினாலே ஔவை முதல் பாரதி
வரை குழந்தைகளுக்காகப் பல இலக்கியம் படைத்தனர். ஆக, தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்
கூறுவதை ஐயமின்றி நம்பும் சிறுவர்களாக இருக்கும் மாணவர்களிடத்தில் கூறும் அத்தனையும்
மனத்தில் ஆழ்படுத்தப்பட்டு அறிவினை வளர்கிறது. மேலும், நல்லதொரு நண்பர்களாகவும் உதவும்
மனப்பான்மை கொண்ட மாணவர்களாகவும் இருப்பதை விரும்ப வேண்டும். வேறுபாடின்றி நாம்
மனிதர்கள் அதனையும் கடந்து நண்பர்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு
திறமைக்கேற்றவாறு ஒவ்வொரு மாணவர்களும் வாழ்வில் முன்னேற வேண்டும். உடலுறுப்பு
குறைப்பாடுகளும் மூளை சீர்க்குலைவும் வருங்காலத்தில் சிறந்தொரு வாழ்கை வாழத் தடையாக
இருப்பதை தற்கால மாணவர்களின் முயற்சியும் மாறுதலும் முறியடித்திட வேண்டும்.
குறைகளையும் இயலாமையையும் விடுத்து ஒருவருக்கொருவர் தன்முனைப்பு வார்த்தைகளைக்
கூறி விளைபயன்மிக்க குடிமக்களாக உருவெடுக்க வேன்டும்.

3.4 அரசாங்கம்
உட்சேர்ப்புக் கல்வியை அமலுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் அதற்கான பங்கினையும்
முழுமையாக மேற்கொண்டால் மட்டுமே அதன் நோக்கத்தை அடைய முடியும். முழுமையான
பயிற்சி, ஆவணங்களின்றி ஆசிரியர்களால் இக்கல்வித் திட்டத்தை முறையாக செயல்படுத்த
இயலவில்லை. அதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்கான பொருள் வசதியையும் பணவுதவியையும்
இத்திட்டத்தின் வழிநடத்தலுக்காக வழங்கப்படுவதில்லை. இத்திட்டத்திற்காகப் பல பயிற்சி
பட்டறைகளையும் சொற்பொழிவுகளும் நடத்தப்படுவதில்லை. தொடர்ச்சியாக, பள்ளிகளில்
இத்திட்டத்தின் அடைவுநிலையைக் கண்காணிக்கத் தவறுவதால் அதன் சிக்கலையும்
விளைப்பயனையும் அளவிட்டு பகுப்பாய முடியவில்லை. இத்திட்டத்திற்காக, மருத்துவ நிபுணர்கள்,
மனநல மருத்துவர்கள், மாற்றுத் திறனாளிகள் சிலரைத் தேர்ந்தெடுத்து உட்சேர்ப்புக் கல்விக்கென
சொற்பொழிவுகளைப் பள்ளிகளிலும் பொதிவிடங்களிலும் ஏற்பாடுகள் செய்வதில்லை இதனாலே
இதன் முக்கியத்துவமும் சிறப்புத் தேவை மாணவர்களின் தேவைகளையும் நோக்கத்திற்கேற்ற
நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

அரசாங்கம் குறிப்பாகக் கல்வி அமைச்சு இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேற பல முயற்சிகளை


முன்னெடுக்க வேண்டும். இத்திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மனதில் விதைத்திட
வேண்டும். ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் ஏற்ற தேவைகளைப் பூர்த்திச் செய்ய
வேண்டும். பள்ளிகளின் இத்திட்டத்தின் செயல்பாட்டினைக் கண்காணித்து அதற்கேற்ற மேம்பாட்டு
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு உதவும் சில
துறைச் சார்ந்த வல்லுநர்களை நல்கி ஆசிரியர்களுக்குப் பயிற்சி பட்டறைகளையும் கூட்டங்களையும்
ஏற்பாடு செய்தல் வேண்டும். இன்னும் வீட்டிலே முடக்கி வைத்திருக்கப்படும் சிறப்பு தேவை
மாணவர்களைப் பள்ளிக்கு வரவேற்கும் நோக்கில் பல சொற்பொழிவுகளைப் பொதுவிடங்களில்
இலவசமாக நடத்துதல் வேண்டும். சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களின் அடைவுநிலையை
அளவிட வரையறுக்கப்பட்ட மதிப்பிட்டு கருவிகளையும் ஆவணங்களையும் நிர்ணயம் செயதல்
வேண்டும். சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களை தேவைக்கேற்றவாறு அணுகும் முறைகளை
பற்றிய சில மேற்கோள் நூல்களை இலவசமாகப் பள்ளிகளுக்கு வழங்கிடலாம்.

3.5 அரசு சாரார்


அரசு சாரார் இயக்கங்கள் யாவும் மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணங்களைக்
கொண்டுள்ளதே தவிர அதனைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை.
அரசாங்கத்தால் திட்டங்களில் தலையிடுவதுமில்லை. மக்கள் சேவை என்று பகுப்பாய்கையில் அதில்
பலவுண்டு. ஆனால், அரசு சாரா இயக்கங்கள் பணவுதவிக்கே முதன்மை வழங்குகிறது.
தேவையைப் பூர்த்திச் செய்ய முனையும் அரசு சாரா இயக்கங்களுக்கு உண்மை
தேவைக்குட்பட்டவர்களை அடையாளங் காண்பதில்லை. அரசாங்கத் திட்டங்களை மக்களுக்குக்
கொண்டு சேர்ப்பதில் வானொலி உரிமையாளர்களும் பத்திரிக்கை நிறுவனங்களும் தங்களது
பங்கினைச் சீராக மேற்கொள்வதில்லை.

அரசாங்கம் அமல்படுத்தும் திட்டங்களைப் பற்றி, அரசு சாரார் இயக்கங்கள் யாவும்


அறிந்திருக்க வேண்டும். அத்திட்டங்களின் நோக்கம் மக்களுக்கு நன்மை பயக்குமெனில்
அதற்கேற்றவாறு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்திடல் வேண்டும். பள்ளிகளுக்கு நிதியுதவி,
பொருளுதவி வழங்கிடலாம். ‘மித்ரா’ , ‘ROTARY’,’EWRF’, போன்ற அரசு சாரா இயக்கங்கள்
உட்சேர்ப்புக் கல்விக்குத் தேவையான உதவிகள் காட்டாக இலவச சொற்பொழிவு, இலவச முகாம்கள்,
சிறப்புத் தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான குறுஞ்செயலிகள், தொழில்நுட்ப கருவிகள்
போன்றவற்றை வழங்கிடலாம்.

4.0 முடிவுரை

திட்டமிட்டு செயல்படுவது முயற்சியின் அடிப்படையாகும். வெற்றிப்பெறுவதைக் காட்டிலும்


அதனைப் பெற முயற்சிக்கும் செயல் சிறந்தது என்பதனை வள்ளுவர் தனது குறளில்
குறிப்பிட்டிருக்கிறார்.

‘கான முயல்எய்த அம்பினில் யானை


பிழைத்த வேல்   இனிது ‘ (772)

ஆக, உட்சேர்ப்புக் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமலாக்கப் பிரிவுகளும்


இத்திட்டத்தின் நோக்கத்திற்கேற்றவாறு தங்களது செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
‘திட்டம்’, தோல்வியை விளைவித்தாலும் அதனால், நாம் பெரும் அனுபவம் நம்மைச் சீர்ப்படுத்தி
வெற்றிக்கான நடவடிக்கைகக்ச் செயலாக்கச் செய்ய உதவுகிறது (குமரன்,2007). சமநிலைக்காக
உருவாக்கப்பட்ட இத்திட்டம் வெற்றிப் பெற செய்வோம்.

You might also like