You are on page 1of 5

குறிப்பறிதல் அத்காரம் 110 தின் வழி வள்ளுவப் பேராசான் எடுத்துரைக்கும்

செய்திகள் இன்றளவும் உயிர்ப் பித்துள்ளன என்பதை குறள்வழி மதிப்பீடு செய்க.


திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளானது மாந்தர்கள் அகவாழ்விலும் சுமுகமாக கூடி
வாழவும் இன்பமுடன் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை
விளக்குகிறது. வள்ளுவர் இயற்றிய குறள்களின் அதிகாரமான 110 அதிகாரம் தலைவன்
தலைவிக்கு இருக்கும் உன்னதமான உரவை மெய்பித்து மிகவும் அழகான நயத்தில் சித்தரிக்கிறது.
இதனால் அன்பு என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமாக இவர் சிறப்பான எடுத்துக்காட்டுகளைக்
கொடுப்பது போல் இவ்வதிகாரத்தில் பத்து குறளும் எழுதப்பட்டுள்ளது. அதன்வடிவில் ஒவ்வொரு
குறளும் இன்றளவும் உயிர்ப் பித்துள்ளன என்றால் அதில் மிகையில்லை.

அதிகாரம் 110 வில் தொடங்கும் குறளாக முதல் குறள் இப்படியாக ஒலிக்கிறது.

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு


நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. (குறள் 1091)
மேற்காணும் குறளானது தலைவி மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்,
அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும்
என்கிறார் நமது முதற்பாவலர். தலைவியின் பார்வையில் நாம் பெறும் துன்பத்திற்கு அவளுடைய
மரு பார்வையே அத்துன்பத்தை தீர்க்கும் மருந்தாகிறது. இளம் வயதில் ஆண் மக்களுக்கு
பெண்ணுடைய பார்வை மழை சாரல் போல் அவர்கள் மீது படர்கையில் ஏற்படும் உணர்வை
மிகவும் நயத்தன்மையுடன் உரைக்கின்றார். இக்குறள்ளானது முன்பொரு காலத்திற்கு மட்டும்
பொருந்தாது இன்றும் இளையவர்களுக்கு பொருத்தமாக உள்ளது. இக்குறளுக்கு கலைஞர்
காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை
காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை
என்று கூறுகையில் இது ஒரு சூழலையும் விளக்கும் தன்மையையே கொண்டதாக அமைகிறது.

மற்றும் வள்ளுவரின் கைவண்ணத்தில் ஒலிக்கும் குறளாக 1092-ஆம் குறள் இப்படியாக


ஒலிக்கிறது.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது (குறள் 1092)

இந்த குறளில் வள்ளுவர் கூற வரும் கருத்தானது கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற
சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும் என்பதே.
பார்வையால் வசியம் செய்யாதே என்பதனை நாம் கேட்டிருப்போம், அத்தகைய சக்தியை நமது
கண்கள் கொண்டுள்ளது என்பது இக்குறளின் வழி நிருபிக்கப்பட்டுள்ளது. இதனையே சாலமன்
பாப்பையா நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில்
சரி பாதி அன்று அதற்கு மேலாம் என்று குறிப்பிட்டுள்ளார். காதலர்களில் சொல்லால் பேசவிடினும்
கண்ணால் பேசுவதே அவர்கள் மனதில் இருக்கும் அன்பின் அழகாக திகழ்கிறது.

அடுத்த குறளை பார்த்தோமானால்,

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர் (குறள் 1093)

என்று நாயனார் என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள்
வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும் என்று பொருள்பட உரைத்துள்ளார். பெண்கள்
நாணத்திடன் செய்ல்பட வேண்டும் என்பதற்கு இக்குறள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று
கூறலாம். ஒரு பெண்ணாவல் தன் தலைவனிடத்தில் சற்று வெட்கம் கொண்டிருப்பது அவள் அவன்
மேல் வைத்திருக்கும் அன்பை மட்டும் பிரதிபளிப்பதில்லை மாறாக அவள் அவன்பால்
மறியாதையும் கொண்டுள்ளாள் என்று உணர்த்தும் இதைப்போல் இக்காலத்திலும் பெண்களின் தன்
இயல்பிலிருந்து மாறாமல் தான் இருக்கின்றனர் என்றால் மிகையில்லை. இதனையே கலைஞர்
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல்
அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது என்று பொருளுரைக்கின்றார்.

தொடர்ந்து குறிப்பரிதல் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் மற்றும் ஒரு குறளாக,

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

தானோக்கி மெல்ல நகும் (குறள் 1094)

என்று பொய்யாமொழிப் புலவர், யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான்
நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள் என்று ஒரு பெண்ணின்
குணாதிசியங்களை எடுத்துரைகிறார். பெண்ணானவல் தன் தலைவனிடத்தில் கூட அவன் கண்
நோக்க வெட்கம் கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்கிறார். இன்றளவும் கூட பெண்கள்
தனக்குரியவரிடம் பணிந்து பேசுதலுக்கு இனங்க இக்கூற்று பொருந்தி வரும். இதனையே சாலமன்
பாப்பையா தன்னுடைய விளக்க உரையில் நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப்
பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள் என்பதனை
ஒரு காட்சியான வெளிப்படுத்தியுள்ளார்.

நான்காம் குறளாக வள்ளுவர் குறிப்பறிதல் அதிகாரத்தில் இப்படியாக கூறுகிறார்;

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும் (குறள் 1095)

தேவர் இக்குறளில் என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு


கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள் என்றுரைத்துள்ளார்.
தலைவனை நேராக பார்க்க வெட்கப்படும் பெண்கள் தலைவனுக்கு தெரியாமல் அவனை கண்டு
மகிழ்வது இன்னிலையிலும் இருந்த்துக் கொண்டுதான் வருகிறது. அவன் கண்டுபிடிக்காதவாரு சற்று
தூரத்தில் இருந்துக் கொண்டு தலைவி தலைவனை பார்ப்பது வழக்கமாகும். நேரே பார்க்காமல் ஒரு
கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள்
தானே மகிழ்வாள் என்று கூறுகையில் அப்படி பார்ப்பதிலும் அவளுக்கு ஏற்படும் மனமகிழ்வானது
அவளுடைய காதலை சித்தரிக்கிரது.

தொடர்ச்சியாக, பெருநாவலர் அடுத்த குறளாக,

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும் (குறள் 1096)

என்று உரைத்ததின் பொருளாக புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும்,


அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும் என்று கருதப்படுகிறது.
காதலர்கள் என்னதான் கோபமாக தன்னை மற்றொருவரிடம் காட்டிக் கொண்டாலும் அவர்களின்
மனதில் நிலைத்திருக்கும் அன்பு என்றும் குன்றுவதில்லை, அதே வேலையில் அவர்களின்
கோபமும் அதிக நேரம் வெளிப்பட்டு தோன்றாது என்கிறார் வள்ளுவர். காதலை மறைத்துக்
கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு
கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும் என்றும் இக்காலத்துடன் தொடர்பு படுத்தி கூறலாம்.

அடுத்து வரும் குறளாக,

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன் றுற்றார் குறிப்பு (குறள் 1097)

என்பதனை பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே


அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும். கோபம் இல்லாமல் பேசும்
பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும்
அடையாளங்களை கொண்டு நமக்குரியவர் கோபமாக இருப்பதை நாம் அறியலாம். இதுவே
அவர்கள் தன் சினத்தை வெளிப்படுத்தும் விதமாக காட்டப்படுவது இக்காலத்திற்கு மட்டுமின்றி
இந்நவின காலத்திற்கும் பொருந்து வரும் மான்பை பெற்றுள்ளது. கையுணர்வு இல்லாத
கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல
நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்
என்றால் அதில் ஐயமில்லை.

எட்டாவதாக மாதானுபங்கியின் சிந்தையில் உதித்த குறளாக,

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும் (குறள் 1098)

அமைகிறது. இக்குறளில் திருவள்ளுவர் யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய்


மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு
உள்ளது என்று பெண்ணின் அழகை நம் கண்ணுக்கு முன் கொண்டு வருகிறார். பெண்கள் நாணம்
கொள்வதே ஒரு மனம் கவரும் அழகு என்று கவிஞர்கள் கூறியதை இவர் நிருவுகிறார். நான்
பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற
அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள் என்கையில் அன்புக் கூறியவர்கள்
செய்யும் ஒவ்வொரு அசைவும் அழகே என்று மொழிகிறார்.

மோலும் பெருநாவலர் தனது அடுத்த குறள் இப்படி ஒலிக்கும் வண்ணம் புனைந்துள்ளார்;

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள (குறள் 1099)

இக்குறளின் பொருளும் புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல்,


அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும் என்பதாய் ஒலிக்கிறது. முன்பின் தெரியாதவர்
போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணத்தைதான் இது சித்தரிக்கிறது.
இது காதலர்கள் அவர்களின் சுய மரியாதையை காப்பதற்கு சிறந்த வழியாக அமையும். அவர்கள்
பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர் இதனையே
வள்ளுவர் கூறுகிறார். இன்றுவரையிலும் காதலர்கள் பொது இடங்களில் சந்திக்கும் போது தன் சுய
மரியாதையை காத்துக்கொண்டுதான் வருகின்றனர். இருப்பினும் சிலர் அப்படி செய்வதை
மறுப்பதைவும் நாம் வெல்லிடை மழையாய் பார்க்க இயல்கிறது.

இருதியாக வள்ளுவர் குற்ப்பறிதல் அதிகாரத்தில்,

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல (குறள் 1100)


என்று முடித்துள்ளார். கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்
சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன என்றவாரு இக்குறளுக்கு பொருள்
கொடுத்துள்ளார். காதலர்களுக்கு கண் பார்த்து பேசும் மொழியே மிகவும் உன்னதமாக இருக்கையில்
சொற்களை கொண்டு மாலை தொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தும் அவசியம் இல்லை
எண்கின்றார் வள்ளுவர். ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால்,
வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன என்றும் கூறலாம்.

ஆகையால், குறிப்பறிதல் என்ற அதிகாரமானது மானுட வாழ்கையில் நாம் காதல்


இன்பத்தை எப்படியெல்லாம் உணர்ந்தல் வேண்டும் என்பதனை எடுத்துரைத்துள்ளது.
பொய்யாமொழி புலவர் இயற்றிய குறிப்பறிதல் அதிகாரத்தில் இடம்பெறும் 10 குறளும்
எக்காலத்துடனும் ஒன்றிப் போகும் நிலையை கொண்டிருக்கின்றது என்பதனை நாம் ஐயம்
தெளிவுற கூறலாம். இவற்றை எல்லாம் வாழ்க்கையில் அமல்படுத்தினால் பாரில் மய்ந்தனின்
வாழ்க்கை அழகை நாம் உய்த்துணரலாம்.

தயாரித்தவர்: வெரோணிக்கா என் சிங்கராயர்

You might also like