You are on page 1of 2

விளையாட்டு என்பது அனைத்துப் பருவ வயதினரையும் கவரக்கூடிய ஒரு போக்காகும்.

அதிலும்
குழந்தைகளின் ஒவ்வொரு செயலிலும் அதிகமாகக் காணப்படுவது இதுவே ஆகும். குழந்தைகளைப்
பெற்றோர்கள், ‘‘உனக்கு அனைத்திலும் விளையாட்டுதான்”, என்று கடிந்து கொள்வதைப் பல முறை
நாம் கேட்டிருப்போம். குழந்தைகள் எந்த ஒரு வெளித் தூண்டலோ கட்டாயமோ இல்லாமல் சுதந்திரமாக
தாமே ஒரு செயலில் களிப்புடன் ஈடுபடுவதே விளையாட்டு எனப்படும். இதுவே குழந்தைகளின்
இயல்புகளில் முகான்மையானதாகும்.

தற்போதைய அறிவியல் காலத்தில், விளையாட்டைப் பல்வேறு துறைகளில் அறி»ர்கள் பயன்படுத்து


வருகின்றனர். எனினும், இது பயிற்றியலுக்குப் புதிதன்று. மொழி கற்றலில் முதன் முதலில்
விளையாட்டு முறையை அறிமுகப்படுத்தி வெற்றியும் அடைந்தவர் ஆங்கில அறி»ரான கால்டுவெல் குக்
என்பராவார். இவர் மாணவர்களிடையே நலிவடைந்து வந்த ஆங்கில இலக்கியப் போதனை முறையில்
மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றி கண்டார். இவர் அறிமுகப்படுத்திய இவ்விளையாட்டு முறையைப் பல
அறி»ர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளின் துணையுடன் மேன்மேலும் மெருகூட்டினர். இதற்கு முக்கிய
அடிப்படையாக அமைந்தது யாதெனில், எல்லாப் பருவத்திலும் அடங்கி நிற்கும் இயல்பூக்கங்களை அறிவு
நிலையுடன் தொடர்பு படுத்தி ‘விளையாட்டு’ ஒரு காரணியாக விளங்குவதே ஆகும்.

கட்டாயத்தால் செய்ய முடியாத செய்கைகளையெல்லாம் உற்காசம் கலந்த முயற்சியால் நிறைவேற்ற


இயலும் என்றும் நம்பினார் கால்டுவெல் குக். விளையாட்டு முறையால் மாணவர்களின் கல்வியில்
ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தினார். எனவே, ‘கற்பித்தலில்
விளையாட்டு முறை தந்தை’ என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

‘‘ஆசிரியர்கள் மாணவர்களின் விளையாட்டு தன்மைகளைக் கண்டு ஆத்திரப்பட்டு கடிந்துகொள்ளும்


நிலை மாறவேண்டும். மாறாக அதனைக் கற்றல் கற்பித்தலுக்கு ஒரு மூலதனமாகப் பயன்படுத்தும் நிலை
மலரவேண்டும். விளையாட்டு முறை கற்றல் கற்பித்தலை மிகவும் எளிதாக்கக்கூடிய வல்லமை படைத்த
ஒரு முறையாகும். இம்முறை மாணவர்களின் கல்வியின் மீது ஈர்தது ் கற்றலைக் கவர்ச்சி மிகுந்த
ஒன்றாக மாற்றிவிடும் என ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் முயற்சியில் ஈடுபட வேண்டும். இம்முறை
மாணவர்கள் உற்சாகமுடனும் களிப்புடன் கற்றுக் கொள்ளத் துணைபுரிகின்றது. உலகளாவிய ரீதியில்
மாணவர்கள் இம்முறையை நன்கு கையாண்டு வெற்றியடைந்து வருகின்றனர்.

மொழிக் கற்பித்தலும் விளையாட்டு முறை பல வழிகளில் துணைபுரிகின்றது. அனைவராலும்


விரும்பக்கூடிய மொழி விளையாட்டு, விளையாட்டு முறையின் ஒரு முக்கியக் கூறாகும்.
மாணவர்களின் மொழி அறிவையும் திறனும் மேம்படுத்துவதற்காகவும் மொழியின்பால் மேன்மேலும்
ஈடுபாட்டை ஏற்படுத்தவும் இம்மொழி விளையாட்டுகள் துணைபுரிகின்றன. இத்துறைச் சம்பந்தமான
பல்வேறு ஆய்வுகளும் பயிற்சிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன. ஏனைய, மொழிகளைக்
காட்டிலும், தமிழ்மொழி பயிற்றியலில் மொழி விளையாட்டுகளின் பயன்பாடு குறைந்தே
காணப்படுகின்றது.

இந்த நிலை மாற வேண்டுமென ஒவ்வொரு தமிழாசிரியரும் நினைக்க வேண்டும், விளையாட்டு


முறையை ஏனைய பாடத் துணைக்கருவியாகக் கருதாமல், முறையாக அதனைக் கற்றுத் தெளிந்து,
திட்டமிட்டு மாணவர்களுக்கு எடுத்தியம்பினால் நல்ல பயன் கிடைக்கும்; மாணவர்களும் பயனடைவர்.
அவர்களின் கற்பித்தல் திறனும் வளர்ச்சியடையும். கிளிப்பிள்ளையைப் போல ஆசிரியர்கள்
கையேட்டிலுள்ளதை மட்டும் படித்துவிட்டு அப்படியே மாணவர்களுக்குப் போதிப்பதில் அதிக பயன்
கிடையாது. மாறாகத் தேவையான சில பயிற்சிகளைச் செய்து, பாடத் துணைக் கருவிகளைச்
சேகரித்து, நன்கு திட்டமிட்டு பயிற்றியலை மேற்கொண்டால் மாணவர்களும் பயனடைவர், மொழி
வளர்ச்சிக்கும் அது துணை நிற்கும் என்பதில் கிï சிற்றும் ஐயமில்லை.

You might also like