You are on page 1of 7

படக்கட்டுரை – கதை

(80 சொற்களுக்குக் குறையாமல் இருத்தல்)

ஒரு நல்ல கதை எப்படி இருக்கும்?

-கதைக்களம், கதைப்பாத்திரம், தொடர்புடைய வசனம், வர்ணனை,


திருப்பம்(உச்சம்), முடிவு போன்றவற்றை கவனப்படுத்தியிருக்கும்.

-வாசகனைத் தொடர்ந்து வாசிக்க வைக்க வேண்டும்

-சம்பவங்கள் கோர்வையாக வளர வேண்டும்

-வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும்/எதிர்பாராத திருப்பத்தைக்


கொண்டிருக்க வேண்டும்

தாள் 2 பிரிவு பி-யில் கொடுக்கப்படும் படங்களை எப்படி


வகைப்படுத்தலாம்?

அ. தனிப்படம்

இ. தொடர்ப்படம்

இ. முடிவை அனுமானிக்கும் படம்

தனிப்படம்

1. காட்சிகளைக் கிரகிக்கும் ஆற்றல்


2. தொடக்கம்
3. கதைக்களம்
4. கதைப்பாத்திரம் – முதன்மை கதைப்பாத்திரம்/
துணைக்கதைப்பாத்திரம்
5. வர்ணனை
6. கதைக்கான திருப்பம்

தொடர்ப்படம்

1. ஒவ்வொரு படத்திலும் உள்ள காட்சிகளைக் கிரகித்தல்


2. கதையோட்டத்தைப் புரிந்துகொள்ளுதல்
3. தொடக்கம் – முதல் படத்தினைச் சார்ந்ததாக இருக்க
வேண்டும்
4. கதைக்களம்
5. கதைப்பாத்திரம்- படங்களிலுள்ள அனைத்துக்
கதைப்பாத்திரங்களும் அதன் பயன்பாடும்
6. வர்ணனை
7. கதைக்கான முடிவு – கடைசி படமாக இருக்கும்

முடிவை அனுமானிக்கும் படம்

1. கதையோட்டத்தை முழுமையாகக் கிரகித்துப் புரிந்துகொள்ளல்


2. கதைக்கான அனைத்து சம்பவங்களையும் கூர்மையாகக்
கவனித்தல்
3. முடிவை ஏற்புடையதாக, அதே சமயம் வித்தியாசமாக
அனுமானித்தல்
மகிழ்ச்சி / பெருமை

1. எல்லோர் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருந்த


பொன்னான நாள் அன்று.
2. மலர்ந்த முகத்தோடு
3. புன்னகை பூத்தது.
4. உச்சி குளிர்ந்தது.
5. மகிழ்ச்சி பிறந்தது.
6. வயிறு குலுங்கச் சிரித்தனர்.
7. முகம் பூ போல் மலர்ந்தது.
8. முகம் புன்னகை பூத்தது.
9. ‘கல கல’ என்ற சிரிப்பொலி
10.  மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
11. மகிழ்ச்சி வெள்ளம் அவன் மனதில் கரை புரண்டோடியது.
12. மகிழ்ச்சி எல்லையில்லாமல் போயிற்று.
13. மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினான்.
14.  மகிழ்ச்சி கடலில் மிதந்தேன்.
15. உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தேன்.
16. சொர்க்கலோகத்தில் இருப்பதைப் போல
17. வயிறு வலிக்கச் சிரித்தனர்.
18. ஆனந்த கண்ணர்பொங்கி
ீ வழியும் வரை
19. புன்னகை மலர்ந்த முகத்தோடு உபசரித்தார்.
20. மட்டற்ற மகிழ்ச்சி
21. மகிழ்ச்சியில் மானைப் போல் துள்ளிக் குதித்தேன்.
22. புன்னகை தழுவும் முகத்துடன்.
23. தம் பிள்ளைகளின் செயலைக் கண்டு பெர்றோர் பேருவகை
அடைந்தனர்.
24. நெஞ்சில் நிரம்பிப்பொங்கிக் கொண்டிருந்த ஆனந்தம்
கண்ணராய்
ீ வெளி வந்தது.
25. போரில் வெற்றிவாகை சூடிய வரன்
ீ போல் நெஞ்சை நிமிர்த்தி
நடந்தான்.
26. அதைக் கேட்டு அவன் உச்சிக் குளிர்ந்தான்.
27. அவன் தலையில் பனிக்கட்டியை வைத்தது போன்ற உணர்வு
உண்டாயிற்று.
28. அவன் பெருமையால் பூரித்துப் போனான்.
29. வெற்றி நமக்கே என்று ஒவ்வெருவரும் மனதிற்குள்
இறுமாந்திருந்தனர்.
30. ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தவன் கீ ழே விழுந்து வலியால்
துடிதுடித்தான்.
31. மகிழ்ச்சியில் அவர்கள் கூத்தாடினர் / திளைத்தனர் / மூழ்கினர்.
32. பெருமையால் பூரித்துப் போனான்.

படக் கட் டு ரை
“ ஜோன்! ஜோனி!, ” என்று ஒருமுறைக்குப் பலமுறை ரகு த செல்லப்
பிராணியான நாய்க்குட்டியை அழைத்தான்.

ஓடி வந்த நாய்க்குட்டியை அணைத்து முத்தமிட்டான். தன் நாயிடம்


விளையாடிக் கொண்டே இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்ததை
நினைக்கலானான்.

இரவு நிலாவின் வெளிச்சம் கிராமத்துக்கே ஒளி தந்தது. ரவியும்


மாலனும் ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
“ வவ்! வவ்வவ்! ,” என்று இரு மணி நேரம் கத்திக் கொண்டிருந்த
நாய்க்குட்டியின் சத்தம் ரவியின் தூகத்தையும் மாலனின்
தூக்கத்தையும் கெடுத்தது.

திடுக்கிட்டு எழுந்த இருவரும்,

“ நாளை இரவுக்குள் இதை ஒரு வழி செய்திடனும், ” என்று


திட்டமிட்டனர்.

எழுந்து காலைக் கடன்களை முடிந்த ரவியும் மாலனும் முதல்


வேளையாக அத்தெருவில் இருந்த நாய்க்குட்டிக்கு உணவை
கிராமத்திலுள்ள கிணறுவரை போட்டுக் கொண்டே சென்றனர்.

உணவின் நறுமணத்தில் ஏமார்ந்த நாய்க்குட்டி உணவைச்


சாப்பிட்டுக்கொண்டே கிணற்றை அடைந்தது.

இதுதான் சமயம் என்று எண்ணிய இருவரும் ‘லபக்’ என்று


பிடித்தனர். தங்களின் வலையின் மாட்டிய நாய்க்குட்டியைப் பார்த்துச்
சிரித்தனர்.

‘தொப்’ என்ற ஓசை. நாய்க்குட்டி நீச்சல் தெரியாமல் தத்தளித்துக்


கொண்டிருந்தது. அவர்களோ, “ இன்றோடு தொல்லை ஒழிந்தது,”
என்றனர்.

அப்பக்கமாக வந்த ரகுக்கு சத்தம் செவியில் எட்டியது.

“ என்ன சத்தம் ” என்று மெல்ல சிந்தித்துக் கொண்டே சத்தம்


நோக்கிய இடத்திற்கு நடை போட்டான்.

ரவியோ, “ரகு எதற்கு இங்கே வருகின்றான்?,” என்று மாலனிடம்


கேள்வி கேட்டான்.

திரும்பிப் பார்த்து, “ ஐயோ! பார்க்கிறானே,” என்றுமாலனிடம்


பதற்றத்தோடுகூறினான். அருகில் ஒழிந்தவாறே பார்வையிட்டான்
மாலன்.
“குளிருதா! இரு உன்னை வெளியே எடுக்கிறேன்.” என்று கூறியவன்
வாலியை எடுத்து அக்கிணற்றுக்குள் நுழைத்துக் காப்பாற்றினான்.

தனது நன்றியைக் கூற அந்நாய்க்குட்டி ரகுவின் கையை நக்கியது.

You might also like