You are on page 1of 25

பரிசுத்த தோமா அருளிச்செய்த சுவிசேஷம்

( Gospel According to St Thomas )

பரிசுத்த தோமா
---------------------------
நாக் ஹம்மாதி நூலகத்தொகுப்பு
(ஸ்டீபன் பேட்டர்சன் மற்றும் மர்வின் மேயர் ஆகியோரால் ஆங்கிலத்தில்

திருப்பப்பட்டது.).

தமிழில் : ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

-------------------------

ஜீவனுள்ள இயேசுவானவர், இந்த ரகசிய திருவாய்மொழிகளை அருளி,

அவைகளை திதியுமு யூதாஸ் தோமா என்பவர் எழுதிக்கொண்டது.

1. பின்பும் அவர் மொழிந்ததாவது, "இந்த திருவாய்மொழிகளுக்கு எவனொருவன்


அர்த்தம் காண்கிறானோ, அவன் மரணத்தை ருசிக்கிற தில்லை."

2. இயேசு சொன்னார், "தேடுகிற எவனும், தேடுகிறதை கண்டடையும் வரை

தேடிக்கொண்டிருக்கட்டும். அவன் கண்டடைந்த பின்பு, இடறலடைவான். அவன்

இடறலடைந்த பின்பு, திகைப்படைவான். அவனே எல்லோரையும் ஆளுவான்."

3. இயேசு சொன்னார், " உங்களை வழி நடத்திச்செல்பவர் எவரோ, அவர்கள்,

உங்களிடம், "அதோ, (தேவனின்) ராஜ்ஜியம் அந்த வானத்தில் தெரிகிறது


பாருங்கள்" என்று சொன்னால், பிறகு, வானத்தின் பறவைகள், உங்களுக்கு

முந்திக்கொண்டு செல்லும். அது சமுத்திரத்தில் இருக்கிறது என்று அவர்கள்

சொன்னால், மச்சங்கள் உங்களை முந்திக்கொண்டு செல்லும். இதையும் விட,

(தேவனின்) ராஜ்ஜியம், உங்களுக்குள்ளே இருக்கிறதே. உங்களுக்கு வெளியேயும்

இருக்கிறதே. நீங்கள், உங்களை அறியும் போது, நீங்கள் அறிந்து

கொள்ளப்படுவர்கள்.
ீ நீங்களே, ஜீவனுள்ள பிதாவின் குமாரர்கள் என உணருவர்கள்.

ஆனால், நீங்கள், உங்களை அறிந்து கொள்ளாத பட்சத்தில், நீங்கள் தரித்திரத்தில்

உழலுவர்கள்.
ீ ஆனால், நீங்களே தான் அந்த தரித்திரம்."

4. இயேசு சொன்னார், "வயதில் மூத்த ஒருவன், ஜீவியத்திற்கான இடம் எங்கே

என்று ஏழு நாள் மாத்திரம் வயதுள்ள ஒரு சிறு குழந்தையினிடத்தில் கேட்க

தயக்கம் காட்ட மாட்டான். அவன் ஜீவிப்பான். முதலாய் வருபவர் பலரும்

கடைசியாய் ஆவார்கள். அவர்கள் யாவரும் ஒன்றாய் ஆவார்கள்."

5. இயேசு சொன்னார், "உங்கள் கண்களில் தட்டுப்படும் எதையும் அடையாளம்

கண்டு கொள்ளுங்கள். உங்களிடமிருந்து மறைந்து இருப்பது எதுவும் உங்களுக்கு

வெளிப்படையாய் தெரிய வரும். மறைக்கப்படாதது எதுவும் வெளிப்படையாய்

தெரியாது.”

6. அவரது சீஷர்கள் அவரிடம் வினவி கேட்டதாவது, "நீங்கள் எங்களை உபவாசம்

இருக்கச்சொல்லுகிறீர்களா? நாங்கள் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் ? நாங்கள்

பிச்சை இடலாமா? நாங்கள் எவ்விதமான ஆகாரத்தை புசிக்க வேண்டும்?" இயேசு

சொன்னார், "பொய் சொல்லாதிருங்கள். நீங்கள் எதை வெறுக்கிறீர்களோ, அதை

செய்யாதிருங்கள். ஏனெனில், எல்லா காரியங்களும் பரலோகத்திற்கு

வெளிப்படையாய் தெரிகிறது. மறைக்கப்படாதது எதுவும் வெளிப்படையாய்

தெரியாது. மூடிய எதுவும் திறக்கப்படாமல் போகாது."

7. இயேசு சொன்னார், "ஒரு மனிதனால் புசிக்கப்பட்ட சிங்கம், மனிதனாக

மாறுமானால், அது ஆசீர்வதிக்கப்பட்டது. ஒரு சிங்கம் மனிதனை புசித்தால், அந்த

மனிதன் சபிக்கப்பட்டவன். அந்த சிங்கம் மனிதனாக மாறும்.”


8. மேலும் அவர் சொன்னார், "மனுஷன் ஒரு புத்தியுள்ள மீ னவன் போல. அவன்

ஆழமான கடலில் தன் வலையை வசி,


ீ அந்தக்கடலிலிருந்து நிறைய சிறிய

மீ ன்களை பிடித்தான். அவர்களில், ஒரு புத்தியுள்ள மீ னவன், ஒரு பெரிய மீ ன்

ஒன்றைக்கண்டான். அவன் சிறிய மீ ன்கள் எல்லாவற்றையும் கடலுக்குள்ளே வசி


எறிந்து விட்டு, அந்த பெரிய மீ னை மாத்திரம் எந்த சிரமமும் இல்லாமல்

தெரிந்தெடுத்துக்கொண்டான். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்."

9. இயேசு சொன்னார், "விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான். கை

நிறைய (விதைகளை) எடுத்து இறைத்தான். அவன் விதைக்கையில், சில

விதைகள் வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதை திரட்டிக்கொண்டன.

சில விதைகள் கற்பாறைகளில் விழுந்தது; அவை மண்ணில் வேர் பிடிக்காமல்,

கூலக்கதிர்களை உண்டு பண்ணவில்லை.

சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை

நெருக்கிப்போட்டது. பூச்சிகள் அவைகளை பட்சித்தன. சில விதைகளோ நல்ல

நிலத்தில் விழுந்து, ஒன்றுக்கு அறுபதாகவும், ஒன்றுக்கு நூற்று இருபதாகவும்

பலன் தந்தது."

10. இயேசு சொன்னார், "நான் உலகின் மேல் அக்கினியை

அள்ளிப்போட்டிருக்கிறேன். பாருங்கள், அந்த தழல் பற்றி எரியும் மட்டும் அதை

நான் பாதுகாத்திருப்பேன்."

11. இயேசு சொன்னார், "இந்த பரலோகம் அகன்று போகும். அதன் மேல் உள்ள

இன்னொரு பரலோகமும் அகன்று போகும். மரித்தோர் உயிரற்றோர்.

ஜீவித்திருப்போர் மரித்துப்போகார். எவை மரித்துப்போனவையோ, அவைகளை

புசித்தீர்களென்றால், உயிருள்ளவற்றை நீங்கள் உண்டாக்குவர்கள்.


ீ நீங்கள்

வெளிச்சத்தில் வாசம் பண்ணும்படி வந்தீர்களென்றால், நீங்கள் என்ன செய்வர்கள்?


அந்நாளில், உங்களில் ஒருவர், இரண்டு ஆட்களாக ஆவர்கள்.


ீ ஆனால், நீங்கள்

இரண்டு ஆட்களாக ஆன ீர்கள் என்றால், நீங்கள் என்ன செய்வர்கள்?"



12. அதற்கு சீஷர்கள், இயேசுவை நோக்கி, "தேவரீர் எங்களை விட்டுப்பிரிந்து

போவர்ீ என நாங்கள் அறிவோம். அவ்வாறெனில், எங்களுக்கு அதிகாரியானவர்

யார்?" என்றார்கள். இயேசு, அவர்களிடம் சொன்னதாவது ,"நீங்கள் எங்கு

சென்றாலும், நீதிமானாகிய யாக்கோபுடன் செல்லுங்கள். அவருக்காகவே

வானமும், பூமியும் உருவாக்கப்பட்டது."

13. இயேசு, சீஷர்களிடத்து ,"என்னை யாருடனாவது ஒப்பிட்டு, நான் யாரைப்போல்

இருக்கிறேன் என்று சொல்லுங்கள்" என்றார். சீமோன் பேதுரு அவரிடம், "நீங்கள்,

நீதியுள்ள தேவதூதனைப்போல இருக்கிறீர்" என்றான். மத்தேயு அவரிடத்து, "நீர்

புத்தியுள்ள தத்துவ ஞானியைப்போல இருக்கிறீர்" என்றான். தோமா அவரிடத்து,

"எஜமானே, நீர் யாரைப்போல இருக்கிறீர் என்று சொல்ல என் வாய்க்கு, முற்றிலும்

இயலாததாய் உள்ளது." இயேசு சொன்னார் ,"நான், உன் எஜமானன் அல்ல. நான்

வரையறுத்திருந்த கொப்பளிக்கும் ஊற்றிலிருந்து நீ குடித்து,

போதையுண்டாக்கப்பட்டு இருக்கிறாய்." அவர், அவனை அப்பாலே கொண்டு போய்,

மூன்று காரியங்களைக்குறித்து சொன்னார். பின்பு, தோமா, தன்னுடைய

சகாக்களிடம் திரும்பி வந்த போது, "இயேசு உன்னிடம் என்ன சொன்னார்?" என்று

கேட்டார்கள். அதற்கு, தோமா அவர்களிடம் சொன்னான் ,"அவர் என்னிடம்

சொன்ன காரியங்களை நான் உங்களிடம் சொன்னால், நீங்கள், கற்களை கையில்

எடுத்துக்கொண்டு என் மீ து எறிவர்கள்.


ீ அந்த கற்களிடத்திலிருந்து, அக்கினி

புறப்பட்டு, உங்களை எரித்து விடும்." என்றான்.

14. இயேசு அவர்களிடம், "நீங்கள் உபவாசித்திருந்தால், உங்களுக்கு நீங்களே

பாவம் செய்தவராவர்கள்.
ீ நீங்கள் ஜெபம் பண்ணினால், நீங்கள் சபிக்கப்படுவர்கள்.

நீங்கள் தர்மம் பண்ணினால், உங்கள் ஆவிக்கு நீங்களே தீங்கு

பண்ணிக்கொள்ளுவர்கள்.
ீ நீங்கள், எந்த நாட்டுக்குப்போனாலும், அங்கு எந்த

பிராந்தியத்தில் சுற்றினாலும், அங்கு இருப்பவர்கள், உங்களை வரவேற்றால்,

அவர்கள் உங்கள் முன்னே வைப்பதை நீங்கள் சாப்பிடுங்கள். அவர்களிடத்து

இருக்கும் நோயாளிகளை சொஸ்தமாக்குங்கள். ஏனெனில், உங்கள் வாய் வழியே


உள்ளே செல்லும் எதுவும் உங்களை அசுத்தப்படுத்தாது. ஆனால், உங்கள்

வாயிலிருந்து வெளிப்படுவது எதுவோ, அதுவே உங்களை மாசுபடுத்தும்" என்றார்.

15. இயேசு சொன்னார் ,"ஒரு ஸ்திரீயின் மூலமாய் பிறக்காதவன் ஒருவனை

நீங்கள் கண்டால், அவன் முன்பாக, முகம் குப்புற தரையில் விழுந்து,

சாஷ்டாங்கமாய் அவனை சேவித்து நமஸ்கரியுங்கள். அவனே, உங்களுடைய

பிதாவானவன்."

16. பின்னும் இயேசு சொன்னார் ,"நான் பூமியின் மேல் சமாதானத்தை

கட்டளையிட வந்தேன் என்று எண்ணுகிறார்கள். மெய்யாகவே, நான் கலகத்தை

பூமியின் மேல் கொண்டு வர வந்துள்ளேன் என்பதை அவர்கள் அறியார்கள்.

அக்கினியையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் நான் கொண்டு வர வந்துள்ளேன்.

ஒரு வட்டில்
ீ ஐந்து பேர்கள் இருந்தால், மூவர், இருவருக்கு எதிராக இருப்பார்கள்.

இருவர், மூவருக்கு எதிராக இருப்பார்கள். தகப்பன், பிள்ளைக்கு எதிராகவும்,

பிள்ளை தகப்பனுக்கு எதிராகவும் இருப்பார்கள். அவர்கள் தனித்தனியாய்

இருப்பார்கள்.”

17. இயேசு சொன்னார், "எந்தக்கண்ணும் காணாததை, எந்தக்காதும் கேளாததை,

எந்தக்கையும் தீண்டாததை, மனுஷ மனதிற்கு ஒரு போதும் தோன்றாததை நான்

உங்களுக்கு தருவேன்" என்றார்.

18. சீஷர்கள், இயேசுவிடம் ,"எங்கள் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை

எங்களுக்குச்சொல்லும்" என்றார்கள். இயேசு சொன்னார் ,"உங்கள் முடிவு

என்னவென்று தேடிக்கொண்டிருக்கும் நீங்கள், உங்கள் ஆதி என்பது என்னவென்று

தெரிந்து கொண்டீர்களா? எங்கு ஆதி உள்ளதோ, அங்கேயே அந்தமும் இருக்கும்.

ஆதி இருக்கும் இடத்தில் அமர்ந்து கொள்பவன் பாக்கியவான். அவனுக்கு,

அந்தமும் தெரியும். அவன் மரணத்தை ருசிப்பதில்லை."

19. இயேசு சொன்னார் ,"தான் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே

சிருஷ்டிக்கப்பட்டவன் பாக்கியவான். நீங்கள், என் சீஷர்களானால், என்


வார்த்தைகளுக்கு செவி கொடுத்தால், இந்த பாறாங்கற்கள் உங்களுக்கு சேவகம்

புரியும். உங்களுக்கென பரலோகத்தில், வேனிற்காலத்திலும், மாரிக்காலத்திலும்,

குலைவுறாத ஐந்து மரங்கள் இருக்கும். அவைகளின் இலைகள் உதிர்ந்து

போவதில்லை. அதனுடன் பரிச்சயப்பட்டவர்கள், மரணத்தை ருசிப்பதில்லை"

என்றார்.

20. சீஷர்கள், இயேசுவினிடத்தில், "பரலோக ராஜ்ஜியம் எத்தகையதாக இருக்கும்

என நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டும்" என்றார்கள். அதற்கு, அவர் ,"அது

கடுகின் விதையைப்போல இருக்கும். அதுவே, எல்லா விதைகளையும் விட

சிறியது. ஆனால், உழுது போட்ட நிலத்தில் அது விழுந்தால், அது பெரிய

செடியாகி, வானத்தின் பட்சிகளுக்கு உறைவிடமாகும்" என்று அவர்களிடம்

சொன்னார்.

21. மரியாள், இயேசுவினிடம் ,"உம்முடைய சீஷர்கள் எத்தகையவர்கள்?" என்று

கேட்டாள். அவர் சொன்னார்," அவர்கள், தங்களுடையதென்று இல்லாத இடத்தில்

தங்குகின்ற பிள்ளைகளைப்போன்றவர்கள். அந்த நிலத்திற்கு சொந்தக்காரர்கள்

வரும் போது அவர்கள் சொல்லுவார்கள் ,"நாங்கள் எங்கள் நிலத்தை

மீ ட்டுக்கொள்ளுகிறோம்" என்று. அந்தப்பிள்ளைகள், அவர்களுக்கு முன்பாக, தங்கள்

வஸ்திரங்களை உரிந்து, அவர்கள், தங்கள் நிலத்தை மீ ட்டுக்கொள்ளவும், தாங்கள்

அதை திருப்பித்தர ஏதுவாகவும் இருப்பார்கள்" என்றார். எனவே, நான்

உங்களுக்குச்சொல்லுகிறேன். கள்ளன் வருகிறான் என்று அறிந்த பிறகு, அவன்

வருவதற்கு முன்பே வட்டின்


ீ சொந்தக்காரன் விழிப்போடு காவல் இருக்கத்

துவங்குவான். தனக்கு பாத்தியதையாய் இருக்கிற வட்டில்,


ீ கள்ளன் துளை செய்து,

உள்ளே நுழைந்து, பொருட்களை திருட அனுமதிக்க மாட்டான். நீங்கள், உலகிற்கு

எதிராய் விழிப்போடு காவல் இருங்கள். உங்களை நீங்களே

பெலப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில், கொள்ளையர்கள், உங்களிடம் வர

வழி உண்டாக்கி விடுவார்கள். நீங்கள் படும் உபத்திரவத்திற்கு கண்டிப்பாக பலன்

உண்டு. உங்களில் ஒருவன் புரிதலுள்ளவனாய் இருக்கட்டும். தானியம் முற்றிய


பின்பு, அவன் விரைந்து வந்து, தன் கையில் உள்ள அரிவாளால், அறுப்பான்.

கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.”

22. அப்போது, குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்டப்படுவதை இயேசு பார்த்தார்.

அவர், தன் சீஷர்களிடம் சொன்னார், "பரலோக ராஜ்ஜியத்துக்குள்

பிரவேசிப்பவர்களைப்போல, முலைப்பாலூட்டப்படுகின்ற இந்தக்குழந்தைகள்

இருக்கிறார்கள்" என்றார். அவர்கள், அவரிடம் "அப்படியென்றால், நாங்கள்,

குழந்தைகளைப்போல இருந்தால், தேவனின் ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்க

முடியுமா?" என்றார்கள். இயேசு, அவர்களிடம் ,"நீங்கள், இரண்டை ஒன்றாக்கும்

போதும், புறத்தே இருப்பதைப்போல அகத்தை மாற்றும் போதும், அகத்தே

இருப்பதைப்போல புறத்தை மாற்றும் போதும், கீ ழே உள்ளதைப்போல மேலே

உள்ளதை மாற்றும் போதும், புருஷன், புருஷனாக இல்லாமலும், ஸ்திரீயானவள்,

ஸ்திரீயாக இல்லாமலும் இருக்கும் வண்ணம், புருஷனையும், ஸ்திரீயையும்,

ஒன்றாக மாற்றும் போதும், ஒரு கண் இருக்கும் இடத்தில் இரு கண்கள் இருக்கும்

வண்ணமும், கை இருக்கும் இடத்தில் கை இருக்கும் வண்ணமும், கால் இருக்கும்

இடத்தில் கால் இருக்கும் வண்ணமும், ஒரே தோற்றமுள்ளதை ஒரே

தோற்றமுள்ள இடத்திலும், கற்பித்துக்கொள்ளும் போது, நீங்கள் தேவனுடைய

ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பீர்கள்" என்றார்.

23. இயேசு சொன்னார் ,"உங்களில், ஆயிரத்தில் ஒருவனையும், பத்தாயிரத்தில்

இருவரையும், தெரிந்தெடுத்துக்கொள்ளுவேன். அவர்கள், ஒன்றாக

சேர்ந்திருப்பார்கள்" என்றார்.

24. அவரது சீஷர்கள் அவரிடம் சொன்னார்கள் ,"நீர் எங்கே இருப்பீர் என்பதை

எமக்குச்சொல்லும்; ஏனெனில், நாங்கள் அதைத்தேடி கண்டடைவோம்" என்றார்கள்.

அவர், அவர்களிடத்தே சொன்னது, "கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.

வெளிச்சத்தின் மனுஷனானவனுக்குள்ளே வெளிச்சம் இருக்கும். அது, உலகிற்கே

வெளிச்சத்தைத்தரும். எவன், ஒளி வசவில்லையோ,


ீ அவன் இருளானவன்,"

என்றார்.
25. இயேசு சொன்னார் ,"உன் ஆத்துமாவை நேசிப்பது போல, உன்

சகோதரனையும் நேசி. உன் கண்ணின் மணியை காப்பது போல, அவனைக்

காப்பாயாக" என்றார்.

26. இயேசு சொன்னார், "நீ உன் சகோதரனின் கண்ணில் இருக்கும்

துரும்பைப்பார்க்கிறாய். ஆனாலும், உன் கண்ணிலே இருக்கிற உத்திரத்தை நீ

காணுகிறதில்லை. உன் கண்ணிலிருக்கும் உத்திரத்தை நீ தூக்கி எறிந்த பின்பு,

உன் சகோதரனின் கண்ணில் இருக்கும் துரும்பை தூக்கி எறிய ஏதுவாக

தெளிவாய் நீ பார்ப்பாய்."

27. இயேசு சொன்னார், "நீ உலகின் பிரகாரம் உபவாசிக்கவில்லையென்றால், நீ

பரலோக ராஜ்ஜியத்தை காணுகிறதில்லை. நீ, பரிசுத்த நாளை, பரிசுத்தமாய்

ஆசரிக்கவில்லையென்றால், நீ பிதாவினைக்காணுகிறதில்லை.”

28. இயேசு சொன்னார், "நான் இந்த உலகின் மத்தியிலே என்னுடைய இடத்தை

எடுத்துக்கொண்டேன். நான் அவர்களுக்கு என்னை மாம்சத்தில்

வெளிப்படுத்தினேன். அவர்கள் எல்லோரும் போதையில் இருப்பதைக்கண்டு

கொண்டேன். ஒருவரும் தாகமுற்று இருக்கவில்லை. என்னுடைய ஆத்துமா,

மனுஷரின் புத்திரர்களுக்காக துக்கித்தது. ஏனெனில், அவர்கள், இருதயத்தில்

குருடர்களாய், பார்வையில்லாது இருந்தார்கள். இவ்வுலகிற்கு வெறுமையாய்

வந்தார்கள் .உலகை விட்டு வெறுமையாய் வெளியேறப்பார்க்கிறார்கள். ஆனால்,

இப்போதைய தருணத்தில், அவர்கள் போதையுற்றிருக்கிறார்கள். அவர்கள்,

திராட்சை ரசத்தை உதறித்தள்ளும் போது, அவர்கள் வருந்துவார்கள்.”

29. இயேசு சொன்னார், "ஆத்துமாவினால், மாம்சம் உண்டானதென்றால், அது

அதிசயமே. ஆனால், சரீரத்தின் நிமித்தம், ஆத்துமா உண்டானதென்றால், அது

அதிசயத்தின் அதிசயமாகும். இந்த வறுமையிலும், இத்தகைய செல்வம் எவ்வாறு

சேர்ந்தது என்று நான் மெய்யாவாகவே ஆச்சரியப்படுகிறேன்.”


30. இயேசு சொன்னார், "மூன்று தேவர்கள் எங்கிருக்கிறார்களோ, அவர்கள்

தேவர்கள். எங்கே, இருவரோ அல்லது ஒருவரோ இருக்கிறாரோ, அங்கு நான்

அவனுடனே இருக்கிறேன்."

31. இயேசு சொன்னார், "ஒரு தீர்க்கதரிசி அவனுடைய சொந்த கிராமத்தில்

ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தான் யாருக்கு பரிச்சயப்பட்டானோ, அவனை,

வைத்தியன் சொஸ்தமாக்குவதில்லை.”

32. இயேசு சொன்னார், "மலை மேல் உள்ள பட்டணம் உறுதியான படியால், அது

வழாது.
ீ மேலும், அது மறைக்கப்படுவதில்லை.” .

33. இயேசு சொன்னார், "நீங்கள் கேட்க இருப்பதை, உங்கள் வடுகளின்


ீ கூரைகளின்

மேல் நின்று உபதேசியுங்கள். ஒருவனும், விளக்கைக்கொளுத்தி, அதை

மரக்காலுக்குக்கீ ழே வைப்பதில்லை. அதை மறைவான இடத்திலும்

வைப்பதில்லை. மாறாக, அவன் அதை, ஒரு விளக்கத்தண்டின் மேல் வைத்து,

வட்டுக்குள்
ீ நுழைபவனும், வெளியேறுபவனும் வெளிச்சத்தில் பார்க்கத்தக்கதாக

அதை வைக்கிறான்" என்றார்.

34. இயேசு சொன்னார், "ஒரு குருடன், இன்னொரு குருடனை வழி நடத்தினால்,

இருவருமே குழிக்குள் விழுந்து விடுவார்கள்."

35. இயேசு சொன்னார், "ஒரு பலவானின் வட்டுக்குள்


ீ நுழைந்து,

அவனைக்கட்டிப்போடாமல், அவனிடம் வலுக்கட்டாயமாக பொருட்களை

அபகரிப்பது ஒருவனுக்கும் சாத்தியமல்ல. அப்படிக்கட்டிப்போட்டால், அவனால்

வட்டை
ீ கொள்ளையிட இயலும்.”

36. இயேசு சொன்னார், "காலை முதல் மாலை வரை, மாலை முதல் காலை

வரை, எதை அணிந்து கொள்ளுவோம் என கவலை கொள்ளாதே."

37. அவரது சீஷர்கள், "நாங்கள் உங்களைக்காணும்படிக்கு, நீங்கள், உங்களை

எப்போது எங்களுக்கு வெளிப்படுத்துவர்கள்?"


ீ என்றார்கள். இயேசு சொன்னார்,
"நீங்கள் வெட்கப்படாமல், உங்கள் வஸ்திரங்களைக்களைந்து, அதை எடுத்து, சிறு

பிள்ளைகளைப்போலே, உங்கள் கால்களுக்குக்கீ ழே வைத்துக்கொண்டு, அதன்

மேல் நடந்து போனால், ஜீவனுள்ள ஒருவனின் குமாரனைக்காண்பீர்கள். நீங்கள்

பயப்பட மாட்டீர்கள்" என்றார்.

38. இயேசு சொன்னார், "நான் இப்போது சொல்லிக்கொண்டிருப்பதை, பல

தடவைகள், நீங்கள் கேட்க விரும்பின ீர்கள். உங்களிடம் இருந்து அதைக்கேட்க

உங்களுக்கு ஒருவரும் இல்லை. நீங்கள் என்னைத்தேடும் காலம் வரும். அப்போது

நீங்கள் என்னைக்காண மாட்டீர்கள்."

39. இயேசு சொன்னார், "பரிசேயரும், வேத எழுத்தர்களும், வேத ஞானத்தின்

திறவுகோல்களை எடுத்துக்கொண்டு, அவைகளை மறைத்து வைத்துக்கொண்டனர்.

அவர்களும் நுழையவில்லை. நுழைய விரும்புபவர்களையும் அவர்கள்

அனுமதிக்கவில்லை. நீங்கள், சர்ப்பங்களைப்போல விவேகமாயும்,

புறாக்களைப்போல அறியாமையிலும் இருப்பீராக!”

40. இயேசு சொன்னார், "ஒரு திராட்சைச்செடி, பிதாவுக்கு வெளியே

நடப்பட்டிருந்தது. அது திரட்சியின்றிப்போனதால், அது வேரோடு பிடுங்கப்பட்டு

அழிக்கப்படும்.”

41. இயேசு சொன்னார், "தனது கையில் சிறிதாவது வைத்திருக்கிறவன் எவனோ,

அவன் மேலும் பெற்றுக்கொள்ளுவான். எவனொருவன், எதுவும் இல்லாமல்

இருக்கிறானோ, அவனிடம் உள்ள கொஞ்சமும் இழந்து போவான்.”

42. இயேசு சொன்னார். "நீங்கள் வழிப்போக்கர்களாகுங்கள்."

43. அவரது சீஷர்கள் அவரிடம் சொன்னார்கள், "இந்தக்காரியங்களை எங்களிடம்

சொல்லுமளவுக்கு நீர் யார்? "இயேசு அவர்களிடம் சொன்னதாவது, "நான்

யாரிடத்திலிருந்து வருகிறேன் என்பதையும், நான் என்ன சொல்லுகிறேன்

என்பதையும், நீங்கள் அறிய மாட்டீர்கள். நீங்கள், யூதர்களைப்போல ஆகி


விட்டீர்கள். ஏனெனில், அவர்கள், (ஒன்று) மரத்தை விரும்பி, அதன் கனிகளை

வெறுப்பார்கள். அல்லது கனியை விரும்பி, மரத்தை வெறுப்பார்கள்.”

44. இயேசு சொன்னார், "பிதாவுக்கு எதிராய் தேவதூஷணம் செய்பவன் எவனும்

மன்னிக்கப்படுவான். குமாரனுக்கு எதிராய் தேவதூஷணம் செய்பவன் எவனும்

மன்னிக்கப்படுவான். ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராய் தேவதூஷணம்

செய்பவன், இந்த பூமியிலோ அல்லது பரலோகத்திலோ மன்னிக்கப்படுவதில்லை"

என்றார்.

45. இயேசு சொன்னார், "முள்ளுகளிலிருந்து திராட்சை அறுவடை

செய்யப்படுவதில்லை. நெருஞ்சியிலிருந்து அத்திப்பழங்கள் அறுவடை

செய்யப்படுவதில்லை. ஒரு நல்ல மனுஷன், தன்னுடைய களஞ்சிய

இருப்பிலிருந்து நல்லவனற்றைக்கொண்டு வருகிறான். ஒரு கெட்ட மனுஷன்,

தன்னுடைய களஞ்சிய இருப்பிலிருந்து கெட்ட பொருட்களைக்கொண்டு

வருகிறான். அவனது உள்ளத்தில் தீமை இருக்கிறது. அது தீமையே பேசுகிறது.

உள்ளத்தின் அபரிமிதமானவற்றிலிருந்து அவன் தீமையை வெளிக்கொண்டு

வருகிறான்.”

46. இயேசு சொன்னார், " ஆதாமிலிருந்து துவங்கி, யோவான் ஸ்நானகன் வரை,

ஸ்திரீயினிடத்திலிருந்து பிறந்தவன் எவனும், யோவான் ஸ்நானகனின் முன்னே

கண்களை தாழ்த்திப்பார்க்காத அளவுக்கு, அவனை விட மேலானவன் அல்ல.

எனினும், நான் சொல்லுகிறேன், "உங்களில் எவன், குழந்தையைப்போல மாறுகி

றானோ, அவன் தேவனின் ராஜ்ஜியத்துக்கு பரிச்சயமாவான். அவன், யோவானை

விடவும் மேலானவனாவான்.”

47. இயேசு சொன்னார், "ஒருவன் இரண்டு குதிரைகளின் மேலே ஏறுவது

சாத்தியமல்ல. அல்லது ஒரே நேரத்தில் இரண்டு விற்களை வளைப்பது

சாத்தியமல்ல. ஒரு பணியாள், இரண்டு எஜமானர்களுக்கு சேவகம் செய்வது

சாத்தியமல்ல. அவ்வாறு இல்லையெனில், அவன் ஒருவனை கனம் பண்ணுவான்.

மற்றவனை அவமரியாதை செய்வான். ஒரு மனிதனும் பழைய திராட்சை ரசத்தை


அருந்தி விட்டு, உடனே புதிய திராட்சை ரசத்தை விரும்ப மாட்டான். புதிய

திராட்சை ரசத்தை பழைய துருத்திகளில் ஊற்ற மாட்டார்கள். ஏனெனில், அவை

வெடித்துப்போகும். பழைய திராட்சை ரசத்தை புதிய துருத்திகளில்

ஊற்றுவதுமில்லை. ஏனெனில், அது பாழ்படுத்தி விடும். ஒரு பழைய துணியை

புதிய வஸ்திரத்தோடு சேர்த்து தைக்க மாட்டார்கள். ஏனெனில், அப்படிச்செய்தால்,

வஸ்திரம் கிழிபட்டுப்போகும்.”

48. இயேசு சொன்னார் ," இந்த ஒரு வட்டுக்குள்,


ீ உங்கள் இருவரில்,

ஒருவருக்கொருவர் சமாதானம் பண்ணினால், அவர்கள் மலையை நோக்கி,

அப்பாலே விலகிப்போ என்றால், அது விலகிப்போகும்" என்றார்.

49. இயேசு சொன்னார், " தனித்திருப்போரும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களும்

பாக்கியவான்கள். ஏனெனில், நீங்கள் தேவனின் ராச்சியத்தை காண்பீர்கள். நீங்கள்

அதிலிருந்து வந்தவர்கள். அந்த இடத்திற்கே நீங்கள் திரும்புவர்கள்.”


50. இயேசு சொன்னார், "அவர்கள் உங்களை நோக்கி, நீங்கள் எங்கிருந்து,

வருகிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் எங்கு வெளிச்சம் தானாகவே

உற்பத்தியானதோ, எங்கு அது தன்னைத்தானே ஸ்தாபித்துக்கொண்டு, அவர்களின்

சாயலில் வழியாக வெளிப்படுத்திக்கொண்டதோ, அந்த இடத்திலிருந்து,

வெளிச்சத்திலிருந்து வருகிறோம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

அவர்கள், உங்களிடத்தில் "அது நீங்களா?" என்று கேட்டால், "நாங்கள், அதன்

புத்திரர்கள்; ஜீவனுள்ள தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்" என்று

சொல்லுங்கள். அவர்கள், "உங்களிடத்தில் உங்கள் பிதாவானவர் இருப்பதற்கு

என்ன அடையாளம்?"என்று கேட்டால், அவர்களிடம் "அது அசைவும், ஓய்வும்"

என்று சொல்லுங்கள்.

51. அவரது சீஷர்கள், அவரிடம் "எப்போது, மரித்தோரின் நித்திய இளைப்பாறுதல்

வரும். எப்போது புதிய உலகம் வரும்?” என்று கேட்டார்கள். அவர், அவர்களிடம்


,"நீங்கள் எதை எதிர்நோக்குகிறீர்களோ, அது ஏற்கனவே வந்து விட்டது. ஆனாலும்,

நீங்கள் அதை அறியாதபடிக்கு இருக்கிறீர்கள்" என்றார்.

52. அவரது சீஷர்கள், அவரிடம், "இஸ்ரவேலில், இருபத்தி நான்கு தீர்க்கதரிசிகள்

பிரசங்கித்தார்கள். அவர்கள் எல்லோரும் உம்மைக்குறித்து பிரசங்கித்தார்கள்.

அவர், அவர்களிடம்," நீங்கள், உங்கள் மத்தியில் வாழ்கிற ஒருவரை

கவனிக்கத்தவறி விட்டீர்கள். மரித்துப்போனவர்களைப்பற்றி மாத்திரமே

பேசியுள்ள ீர்கள்" என்றார்.

53. அவரது சீஷர்கள், அவரிடம், "மாம்ச விருத்த சேதனம் நன்மையானதா,

இல்லையா?" என்றார்கள். அவர், அவர்களிடம், "அது நன்மையானதென்றால்,

அவர்களின் பிதாவானவர் அவர்களின் தாயிடத்திலிருந்து பிறக்கும் போதே,

அவர்களை மாம்ச விருத்த சேதனம் செய்வித்தே பிறக்க வைத்திருப்பாரே.

ஆவியில் மெய்யான விருத்தசேதனம், அதை விட சம்பூர்ணமான நன்மையானது"

என்றார்.

54. இயேசு சொன்னார், "தரித்திரராய் இருப்பவர்கள் பாக்கியவான்கள். .ஏனெனில்,

பரலோக ராஜ்ஜியம் உங்களுடையது."

55. இயேசு சொன்னார், "எவனொருவன் தன்னுடைய தந்தையையும், தாயையும்

வெறுக்கவில்லையோ, அவன் எனக்கு சீஷனாக முடியாது. எவனொருவன்

தன்னுடைய சகோதரர்கள், சகோதரிகளை வெறுத்து விட்டு, தன்னுடைய

சிலுவையை எடுத்துக்கொண்டு என் வழியில் வரவில்லையோ, அவன் எனக்கு

மதிப்பானவன் அல்ல.”

56. இயேசு சொன்னார், "உலகைப்புரிந்து கொள்ள வந்தவன் எவனோ, அவன்

பிணத்தையே கண்டான். எவன் பிணத்தைக்கண்டு கொண்டானோ, அவன் உலகை

விட மேம்பட்டவன்."

57 .இயேசு சொன்னார், "பிதாவின் ராஜ்ஜியம் நல்ல விதையைக்கண்டு கொண்ட

மனுஷனைப்போல இருக்கிறது. அவனது சத்துரு, ராத்திரி வேளையில் வந்து,


நல்ல விதைகளுக்கு மத்தியில் களைச்செடிகளை விதைத்து வைத்தான். அவன்,

களைச்செடிகளை பிடுங்குவதற்கு அனுமதிக்கவில்லை. அவன், அவர்களிடம்

சொன்னான், "நீங்கள், களைச்செடிகளையும், கோதுமையையும் சேர்த்தே பிடுங்க

எண்ணுவர்கள்
ீ என எண்ணுகிறேன். ஏனெனில், அறுப்பின் நாளில், களைச்செடிகள்

வெளிப்படையாய் தெரியும். அவை பிடுங்கி எரிக்கப்படும்" என்றார்.

58. இயேசு சொன்னார், "துயரப்பட்டு, ஜீவியத்தைக்கண்டு கொண்ட மனுஷன்

பாக்கியவான்."

59. இயேசு சொன்னார், "நீங்கள் ஜீவித்திருக்கும் போது, ஜீவனோடு இருப்பவருக்கு

செவி கொடுங்கள். ஏனெனில், நீங்கள் மரித்துப்போனால், நீங்கள் அவரைத்தேடும்

போது, அவரைக்காணவியலாது.”

60. யூதேயாவுக்குச்செல்லும் சமாரியன் ஒருவன், ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியை

சுமந்து கொண்டு செல்வதைக்கண்டார்கள். அவர், தன்னுடைய சீஷர்களை நோக்கி,

"அவன், அந்த செம்மறி ஆட்டுக்குட்டியை தன்னைச்சுற்றி

இறுக்கிக்கொண்டிருக்கிறான்" என்றார். அவர்கள், அவனிடம், "அவன்

அதைக்கொன்று, அதைப்புசிக்கும்படிக்கு அதை வைத்துள்ளான்." என்றார்கள். அவர்,

அவர்களிடம் "அது ஜீவனோடு இருக்கும் போது, அவன் அதைப்புசியான். அவன்

அதைக்கொன்று, அது சவமான பிறகே அதைப்புசிப்பான்." என்றார். அவர்கள்,

அவரிடம், "அவன் வேறு வழியில் அதைச்செய்ய முடியாது" என்றார்கள். அவர்,

அவர்களிடம், "நீங்களும் கூட, உங்கள் நித்திய இளைப்பாறுதலுக்கான

இடத்தைக்கண்டு கொள்ளுங்கள். இல்லையெனில், நீங்கள் சவமாகி,

புசிக்கப்படுவர்கள்"
ீ என்றார்.

61. இயேசு சொன்னார், "இருவர் படுக்கையில் கிடக்கிறார்கள். அவர்களில்

ஒருவன் மரிப்பான். ஒருவன் உயிரோடு இருப்பான்" என்றார். சலோமி சொன்னாள்,

"என்னுடைய படுக்கையில் வந்து அமர்ந்து, என்னுடைய மேசையில் இருந்து

எடுத்து சாப்பிடும் நீர் யார்?" என்றாள்.


இயேசு சொன்னார், "பிரிவுபடாதது எதுவோ, அதில் இருக்கிறவன் நான். என்

பிதாவின் காரியங்கள் என்னிடம் தரப்பட்டுள்ளன." என்றார்.

"நான் உமது சிஷ்யை".

"எனவே, நான் சொல்லுகிறேன், அவன் அழிக்கப்பட்டால், அவன் வெளிச்சத்தால்

நிறைக்கப்படுவான். ஆனால், அவன் பிரிக்கப்பட்டால், அவன், இருளினால்

நிறைக்கப்படுவான்" என்றார்.

62. இயேசு சொன்னார்," என்னிடத்தே உள்ள புலனாகா விஷயங்களுக்கு

பாத்திரமானவர்கள் எவரோ, அவரே என்னுடைய புலனாகா விஷயங்களை

விளம்ப முடியும். உன்னுடைய வலது கரம் என்ன செய்கிறதோ, அதை இடது

கரம் அறியவொட்டாதே."

63. இயேசு சொன்னார், "நிறைய செல்வம் வைத்திருந்த ஐசுவரியவான் ஒருவன்

இருந்தான். அவன், "என்னுடைய செல்வத்தையெல்லாம், விதைப்பதிலும்,

அறுப்பதிலும், நடுவதிலும் செலவழித்து, என்னுடைய களஞ்சியத்தை

விளைச்சலினால் நிரப்புவேன். இதன் நிமித்தம், எனக்கு ஒரு குறைவும் நேராது"

என்றான். அவனது சித்தங்கள் அவ்வண்ணமாய் இருந்தது. ஆனால், அந்த இரவே

அவன் மரித்துப்போனான். கேட்கிறதற்குக்காதுள்ளவன் கேட்கக்கடவன்."

64. இயேசு சொன்னார், "ஒரு மனுஷன் விருந்தாளிகளை வரவேற்றான். பிறகு,

அவன் அவர்களுக்கென்று விருந்தொன்றை ஆயுதம் பண்ணினான். அவன்

தன்னுடைய பணிக்காரனை அனுப்பி, விருந்தாளிகளை அழைத்துக்கொண்டு

வரச்சொன்னான். அந்த பணிக்காரன், முதல் விருந்தாளியிடம் சென்று, "எனது

எஜமானர் தங்களை அழைத்தார்" என்றான். அதற்கு அவன், "சில

வியாபாரிகளிடமிருந்து நான் பண வசூல் செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் இன்று

சாயங்காலம் வருகிறார்கள். நான் அங்கு போய், என் உத்தரவுகளைப்பிறப்பிக்க

வேண்டும். நான் விருந்துக்கு வராததற்கு என்னைப்பொறுத்தருள வேண்டும்"

என்றான். அந்தப்பணிக்காரன், இன்னொரு விருந்தாளியிடம் சென்று, "எனது


எஜமானர் தங்களை அழைத்தார்" என்றான். அதற்கு அவன் சொன்னான், "நான்

வடு
ீ ஒன்றை வாங்கியுள்ளேன். அதனால் இன்று அங்கு நான் போக வேண்டும்.

எனக்கு மிகையான நேரம் இல்லை" என்றான். அந்தப்பணிக்காரன்,

இன்னொருவரிடம் சென்று, "எனது எஜமானர் தங்களை அழைத்தார்" என்றான்.

அதற்கு அவன், "எனது நண்பன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறான். நான்

ஒரு விருந்தை ஆயத்தம் பண்ண வேண்டும். என்னால் வர இயலாது. நான்

விருந்துக்கு வராததற்கு என்னைப்பொறுத்தருள வேண்டும்" என்றான்.

அந்தப்பணிக்காரன், இன்னொருவரிடம் சென்று, "எனது எஜமானர் தங்களை

அழைத்தார்" என்றான். அதற்கு அவன், "நான் இப்போது ஒரு நிலத்தை

வாங்கியுள்ளேன். எனக்கு சேர வேண்டிய குத்தகையை வசூல் செய்ய

போய்க்கொண்டிருக்கிறேன். என்னால் வர இயலாது. நான் வராததற்கு

என்னைப்பொறுத்தருள வேண்டும்" என்றான். அந்தப்பணிக்காரன் திரும்பி வந்து,

தனது எஜமானனிடம், "நீங்கள் விருந்துக்கு அழைத்தவர்கள் வர முடியாததற்கு

பொருத்தருளும்படிக்கு சொன்னார்கள்” என்றான். அதற்கு எஜமானன், தனது

பணிக்காரனிடம், “நீ வெளியே வதிகளில்


ீ போய் நீ சந்திக்கும் ஆட்களை, அவர்கள்

போஜனம் பண்ணும்படிக்கு அழைத்து வா" என்றான். "வியாபாரிகளும்,

வர்த்தகர்களும் பிதாவின் இடத்திற்குள் நுழைய மாட்டார்கள்."

65. அவன் சொன்னான், "ஒரு [...] திராட்சைத்தோட்டத்துக்கு சொந்தக்காரனான

நல்ல மனுஷன் ஒருவன் இருந்தான். அவன் அதில் குடியானவர்கள் பாடுபட்டு,

அதன் விளைச்சலிலிருந்து தான் வசூலித்துக்கொள்ளும்படிக்கு அதை

குடியானவர்களிடம் கொடுத்தான். அவன் தன்னுடைய பணிக்காரனை அனுப்பி,

குத்தகைதாரர்களிடம் திராட்சைத்தோட்டத்தின் விளைச்சலிலிருந்து

வசூலித்துக்கொள்ள அனுப்பி வைத்தான். அவர்கள், அந்தப்பணிக்காரனை பிடித்து,

அவனை கொலை மட்டும் செய்யாதபடிக்கு, அடித்து நையப்புடைத்தனர்.

அந்தப்பணிக்காரன் தன்னுடைய எஜமானனிடம் திரும்பிச்சென்றான். அவனது

எஜமானன் "ஒரு வேளை அவர்கள் அவனை அடையாளம் கண்டு

கொள்ளவில்லை" என்று சொன்னான். அவன் இன்னொரு பணிக்காரனை


அனுப்பினான். அந்த குத்தகைதாரர்கள், அவனையும் பிடித்து நையப்புடைத்து

அனுப்பினார்கள். பிறகு, எஜமானன், தன்னுடைய குமாரனை அனுப்பி "ஒரு

வேளை அவர்கள் என்னுடைய குமாரனுக்கு கனம் பண்ணுவார்கள்" என்று

சொன்னான். "ஏனெனில், அந்த குத்தகைதாரர்கள் அவன் திராட்சைத்தோட்டத்துக்கு

வாரிசு என அறிந்திருப்பார்கள்" என்றான். அவர்கள் அவனைப்பிடித்து, கொலை

செய்தார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்றார்.

66. இயேசு சொன்னார், "வடு


ீ கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லை

என்னிடம் காட்டுங்கள். அதுவே தலைக்கல்.”

67. இயேசு சொன்னார், "எல்லாம் அறிந்த ஒருவன், தன்னிடம் குறைபாடு

இருப்பதாக உணர்ந்தால், அவன் முழுதுமாய் குறைபாடுள்ளவன்."

68. இயேசு சொன்னார், "வெறுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டால், நீங்கள்

பாக்கியவான்கள். நீங்கள் எங்கெல்லாம் துன்புறுத்தப்பட்டீர்களோ, அங்கு அவர்கள்

இடம் கிடைக்காமல் போவார்கள்."

69. இயேசு சொன்னார், "தங்களுக்குள்ளேயே தண்டிக்கப்பட்டவர்கள்

பாக்கியவான்கள். அவர்கள் தான் பிதாவை அறிந்து கொள்ளும்படிக்கு

மெய்யாகவே வந்துள்ளார்கள். பசியோடிருப்பவர்கள் பாக்கியவான்கள்.

ஆசையுள்ளவர்களின் வயிறுகள் நிறைக்கப்படும்."

70. இயேசு சொன்னார், "உங்களிடம் இருந்து எதை முன்னே வைக்கிறீர்களோ அது

உங்களை ரட்சிக்கும். நீங்கள் எதை உங்களிடத்து வைத்துக்கொள்ளவில்லையோ

அதை நீங்கள் உங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளாவிட்டால், அது உங்களை

கொல்லும்.”

71. இயேசு சொன்னார், "நான் இந்த வட்டை


ீ அழிப்பேன். பிறகு, அதை

ஒருவானாலும் கட்ட முடியாதபடிக்குப்போகும். [...].”


72. ஒரு மனுஷன் அவரிடம் சொன்னான், "என்னுடைய தகப்பனின் சொத்துக்களை

என்னுடனே பங்கிட்டுக்கொள்ளும்படிக்கு என் சகோதரர்களிடம் நீங்கள் சொல்ல

வேண்டும்." அவர், அவனிடம் சொன்னார், "ஓ மனுஷனே, யார் என்னை

பாகவஸ்தி செய்யும் ஆளாக்கியது?" அவர் சீஷர்களை நோக்கித்திரும்பினார். அவர்

அவர்களிடம் சொன்னார், "நான் பாகவஸ்தி செய்பவனல்ல. நான் அப்படித்தானே?"

73. இயேசு சொன்னார், "அறுப்போ மிகுதி. ஆட்களோ கொஞ்சம். எனவே,

அறுப்பிற்கு ஆட்களை அனுப்பும்படிக்கு அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்."

74. அவர் சொன்னார், "குடிதண்ண ீர் தொட்டியைச்சுற்றி அநேகர் நின்று

கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், தொட்டியில் எதுவும் இல்லை."

75. இயேசு சொன்னார், "கதவண்டையில் அநேகர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

எனினும், தனித்திருப்பவரே மணமக்களின் படுக்கையறைக்குள் பிரவேசிக்க

முடியும்."

76. இயேசு சொன்னார், "பிதாவின் ராஜ்ஜியம் என்பது வியாபார சரக்கை

வைத்திருந்த வணிகனைப்போல இருக்கிறது. அந்த வணிகன் ஒரு

முத்தைக்கண்டான். அவன் தன்னிடமிருந்த சரக்குகளையெல்லாம் விற்று அந்த

முத்தை தனக்கென வாங்கிக்கொண்டான். நீங்களும், பூச்சிகள் அரித்து விழுங்காத,

புழுக்கள் அழித்துப்போடாத, இந்த நிச்சயமான, நீடித்து நிற்கும் செல்வத்தை

தேடுங்கள்.”

77. இயேசு சொன்னார், " அவர்கள் எல்லாருக்கும் மேலான வெளிச்சம் நானே.

சர்வமும் நானே. என்னிடத்திலிருந்தே எல்லாம் புறப்பட்டது. அவையெல்லாம்

என்னை நோக்கி நீண்டன. ஒரு விறகைத்துண்டாக்கினால், அதற்குள் நான்

இருக்கிறேன். ஒரு பாறாங்கல்லைத்தூக்கினால், அதன் கீ ழே நீ

என்னைக்காண்பாய்."
78. இயேசு சொன்னார், "நீ ஏன் வெளியே இந்த பாலைவனத்திற்கு

வந்திருக்கிறாய்? காற்றினால் ஒரு நாணல் அசைக்கப்படுவதைக்காண்பதற்கா?

உன்னுடைய ராஜாக்களையும், மேன்மக்களையும் போல, ஒரு மனுஷன் உயரிய

வஸ்திரங்களை அணிந்திருப்பதைக்காண்பதற்கா? அவர்களின் மேல் அருமையான

வஸ்திரம் உள்ளது. இருந்தும், அவர்கள் மெய்யை பிரித்துணர்ந்து கொள்ள

மாட்டார்.”

79. கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கிச்சொன்னாள், "

உம்மைச்சுமந்திருந்த கருப்பையும், உம்மை போஷித்த மார்புகளும்

பாக்கியமானவை." அவர் அவளிடம் சொன்னார், " பிதாவினுடைய

வார்த்தைகளுக்கு செவி கொடுத்து, அவைகளை தக்க வைத்துக்கொண்டவர்கள்

எவரோ, அவர்கள் பாக்கியவான்கள். கர்ப்பந்தரிக்காத கருப்பைகளும், பால் கொடாத

முலைகளும் பாக்கியமானவை என்று நீ ஒரு நாள் சொல்லும் காலம்

வரும். "

80 . இயேசு சொன்னார் , " உலகைக்கண்டு கொண்டவன் சரீரத்தைக்கண்டு

கொண்டான். சரீரத்தைக்கண்டு கொண்டவன் உலகை விட மேலானவன்.”

81 . இயேசு சொன்னார், " ஐசுவரியவானாய் வளர்ந்தவன் ராஜாவாகட்டும்.

வல்லமையுள்ளவன் அதை உதறித்தள்ளட்டும்.”

82. இயேசு சொன்னார், "என்னருகே இருப்பவன், நெருப்பின் அருகே இருப்பவன்.

என்னிலிருந்து தூர இருப்பவன் ராஜ்ஜியத்திலிருந்து தூர இருப்பவன். “

83 . இயேசு சொன்னார், "உருவங்கள் மனுஷனுக்கு வெளிப்படையாய்

தோன்றுகின்றன. ஆனால், அவைகளினுள்ளே உள்ள ஒளி, பிதாவின் ஒளியில்

மறைந்திருக்கும். அவர் தன்னை வெளிப்படுத்துவார். ஆனாலும், அவரது

சொரூபம் அவரது வெளிச்சத்தால் மறைக்கப்பட்டிருக்கும்.”

84. இயேசு சொன்னார், " நீங்கள், உங்களைப்போல ஒருவரைக்கண்டால், நீங்கள்

களிகூருங்கள். ஆனால், உங்களைப்போல ஒரு சாயல் உங்கள் முன்னே


உயிரோடு வந்து, அது மரிக்காமலும், உருவமாக தன்னை

வெளிப்படுத்திக்கொள்ளாமலும் இருந்தால், நீங்கள் அதை எந்த அளவுக்கு

தாங்கிக்கொள்ள வேண்டும் ?”

85. இயேசு சொன்னார், " ஆதாம் ஒரு பெரிய வல்லமையிலிருந்தும், பெரும்

ஐசுவரியத்திலிருந்தும் வந்திருந்தும், உங்களிடம் கனப்படாது போனான். அவன்,

கனப்பட்டிருந்தால், அவன் மரணத்தை ருசித்திருக்க மாட்டான்.”

86 . இயேசு சொன்னார், " நரிகளுக்கு அவைகளின் பொந்துகளும், பறவைகளுக்கு

அவைகளின் கூடுகளும் உண்டு. ஆனாலும், மனுஷ குமாரன் தலை சாய்த்து

ஓய்வெடுக்க இடமில்லை."

87 . இயேசு சொன்னார், " ஒரு சரீரத்தைச்சார்ந்திருக்கும் இன்னொரு சரீரம்

ஈனமானது. இவ்விரண்டையும் சார்ந்திருக்கும் ஆத்துமா ஈனமானது. “

88 . இயேசு சொன்னார், " தேவதூதர்களும், தீர்க்கதரிசிகளும் உங்களிடம் வந்து,

உங்களிடம் ( ஏற்கனவே) இருப்பதைத்தருவார்கள். நீங்களும், உங்களிடம்

இருப்பதை அவர்களிடம் தந்து விட்டு, ' அவர்கள் எப்போது வந்து,

தங்களுக்குடையதை எடுத்துச்செல்லுவார்கள்?' என்று உங்களிடமே

சொல்லிக்கொள்ளுங்கள்.”

89. இயேசு சொன்னார், " நீங்கள் ஏன் ஒரு பான பாத்திரத்தின் வெளிப்புறத்தை

கழுவுகிறீர்கள் ? அதன் வெளிப்புறத்தை செய்தவன் தானே, அதன் உள்புறத்தையும்

செய்தான் என உணர மாட்டீர்களா ?"

90. இயேசு சொன்னார், " என்னிடத்தில் வாருங்கள். ஏனெனில், எனது நுகம்

லேசானது. எனது ராஜரீகம் மென்மையானது. நீங்கள் உங்களிடமே

இளைப்பாறுதல் கொள்வர்கள்."

91. அவர்கள் அவரிடம் சொன்னார்கள் ," நாங்கள் உம்மை விசுவாசிக்கும்படிக்கு

நீர் யாரென்பதை எமக்குச்சொல்ல வேண்டும்." அவர், அவர்களிடம் சொன்னார்,"


ஆகாசத்தையும், பூமியின் தோற்றத்தையும் கண்டு அவதானிக்கிறீர்கள். ஆனாலும்,

உங்கள் முன்னே இருக்கிற ஒருவரை அடையாளம் காணாமல், இந்த

நொடிப்பொழுதை அவதானிக்க தெரியாமல் இருக்கிறீர்கள்."

92. இயேசு சொன்னார், " தேடுங்கள், கண்டடைவர்கள்.


ீ எனினும், முற்பட்ட காலத்தில்

நீங்கள் என்னைப்பற்றி எந்தக்காரியங்களை கேட்டீர்களோ, அதை நான்

அப்பொழுது உங்களிடம் சொல்லவில்லை. இப்போது, அவைகளை சொல்ல

சித்தமாயிருக்கிறேன். ஆனால், நீங்கள் அதை என்னிடம் விசாரியாமல்

இருக்கிறீர்கள்."

93 . இயேசு சொன்னார், " பரிசுத்தமானதை நாய்களுக்கு கொடாதேயுங்கள்.

ஏனெனில், அவைகள் அதை சாணக்குவியலில் வசி


ீ விடும். பன்றிகளின் முன்னே

முத்துக்களை வசாதீ
ீ ர்கள். ஏனெனில், அவை ....[...] அவைகளை [...] "

94. இயேசு சொன்னார், " தேடுகிறவன் கண்டடைவான். தட்டுகிறவன் எவனோ

அவன் உள்ளே அனுமதிக்கப்படுவான்."

95. இயேசு சொன்னார், " உங்களிடம் பணமிருந்தால், அதை வட்டிக்கு கொடாமல்,

எவன் ஒருவனிடமிருந்து நீங்கள் திரும்பி வாங்க முடியாதோ, அவனுக்கு

கொடுங்கள். "

96. இயேசு சொன்னார், " பிதாவின் ராஜ்ஜியம், ஒரு ஸ்திரீயைப்போல உள்ளது.

அவள், கொஞ்சம் மாவுக்குள்ளே கொஞ்சம் புளிப்பை மறைத்து வைத்து, அதை

பெரிய அப்பங்களாய் சுட்டாள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன். “

97. இயேசு சொன்னார், " பிதாவின் ராஜ்ஜியம், ஒரு ஜாடி நிறைய

ஆகாரத்தைக்கொண்டு சென்ற பெண்ணைப்போல உள்ளது. அவள், சாலையின்

மேலே போய்க்கொண்டிருந்த போது, வட்டிற்கு


ீ இன்னும் சற்று தூரம்

இருக்கையில், அவளது ஜாடியின் கைப்பிடி உடைந்து, அவளது ஆகாரம்

அவளுக்குப்பின்புறமாய் சாலையில் கொட்டி விட்டது. அவள் அதை

அறியவில்லை. அவள், அந்த அசந்தர்ப்பத்தை கவனிக்கவில்லை. அவள்,


தன்னுடைய வட்டை
ீ அடைந்து, தன்னுடைய ஜாடியை கீ ழே வைத்த போது,

அது காலியாய் இருக்கக்கண்டாள்.”

98. இயேசு சொன்னார், " பிதாவின் ராஜ்ஜியம் ஒரு பெலவானைக்கொல்ல

விரும்பிய மனுஷன் போல உள்ளது. அந்த மனுஷன், தன்னுடைய

வட்டுக்குள்ளேயே
ீ தன்னுடைய பட்டயத்தை உருவி எடுத்து, அதை

சுவற்றுக்குள்ளே குத்தி, தனது கையால் குத்த இயலுமா என்று பார்த்தான்.

அதன் பின், அவன் அந்த பெலவானைக்கொன்றான்.”

99. சீஷர்கள் , "உமது சகோதரர்களும், உமது தாயும் வெளியே நின்று

கொண்டிருக்கிறார்கள்," என்று அவரிடத்தே சொன்னார்கள். அவர், அவர்களிடம்

சொன்னார், “இங்கே உள்ளவர் எவர் எனது பிதாவின் சித்தத்தை

நிறைவேற்றுகிறாரோ, அவரே என்னுடைய சகோதரரும், என் தாயும் ஆவர்.

அவர்களே என்னுடைய பிதாவின் ராஜ்யத்துக்குள்ளே பிரவேசிப்பார்கள்."

100. அவர்கள் அவரிடத்தே ஒரு தங்க நாணயத்தைக்காட்டி, " ராயனின் ஆட்கள்

எங்களிடமிருந்து வரி கேட்கிறார்கள்" என்றார்கள். அவர், அவர்களிடம்," ராயனுக்கு

உரியதை ராயனுக்கு கொடுங்கள். தேவனுக்கு உரியதை தேவனுக்கு

கொடுங்கள். எனக்கு உரியதை எனக்குக்கொடுங்கள்" என்றார்.

101. இயேசு சொன்னார், " தன்னுடைய தந்தையையும், தன்னுடைய தாயையும்

எவன் வெறுக்கவில்லையோ, அவன் என்னுடைய சீஷன் ஆக இயலாது.

என்னைப்போலவே, தன்னுடைய தந்தையையும், தாயையும் எவன்

நேசிக்கவில்லையோ, அவன் எனக்கு சீஷனாக முடியாது. ஏனெனில்,

என்னுடைய தாய் [...] , ஆனால், என்னுடைய மெய்யான தாய் எனக்கு

ஜீவன் தந்தாள்."

102. இயேசு சொன்னார், " பரிசேயருக்கு ஐயோ, அவர்கள், எருதுகளுக்கான

கொட்டடியில் படுத்திருக்கும் நாய்களைப்போலே இருக்கிறார்களே. அது

தானும் தின்பதில்லை. எருதுகளையும் தின்ன விடுவதில்லை."


103. இயேசு சொன்னார், " கொள்ளைக்கார்கள் வந்து நுழைந்து விடுவார்கள்

என்பதை அறிந்த ஒருவன் அதிர்ஷ்டசாலி. அவன், அதற்கேற்ப, தன்னுடைய

ஸ்தலத்தில் உள்ளவர்களைத்திரட்டி , அவர்கள் தன்னை வெல்லும் முன்னமே,

ஆயுதங்களோடு தன்னை ஆயத்தம் பண்ணிக்கொள்ளுவான்.”

104. அவர்கள், இயேசுவிடம் சொன்னார்கள், "வாரும், நாம் இன்று ஜெபம் பண்ணி,

உபவாசிப்போம்" என்று. இயேசு ," நான் என்ன பாவம் செய்திருக்கிறேன் அல்லது

நான் எங்கு தோல்வியடைந்திருக்கிறேன் ? ஆனால், மணவாளன், மணமக்களின்

அறையை விட்டுப்போனதும், நாம் உபவாசித்து, ஜெபிப்போம்" என்றார்.

105. இயேசு சொன்னார், " தனது தந்தையையும், தாயையும் அறிந்தவன் எவனோ,

அவன் வேசி மகன் என அழைக்கப்படுவான்."

106 இயேசு சொன்னார் ," நீங்கள் இரண்டை ஒன்றாக்கும் போது, நீங்கள்

குமாரனின் பிள்ளைகள் என்று ஆவர்கள்.


ீ நீங்கள், 'மலைகளே, அப்பால் போ,'

என்று சொன்னால், அவை அப்பால் போகும்."

107. இயேசு சொன்னார், " தேவனின் ராஜ்ஜியம் என்பது, நூறு ஆடுகளை

வைத்திருந்த இடையனைப்போல இருக்கிறது. அதில், இருந்த மிகப்பெரிய ஆடு

வழி தவறிப்போய் விட்டது. அவன், அந்த தொண்ணூத்தி ஒன்பது ஆடுகளை

விட்டு விட்டு, அந்த தொலைந்து போன ஒன்றைக்காணும் வரை தேடினான்.

அவன், அத்துணை பாடு பட்ட போது, அந்த ஆட்டைப்பார்த்து சொன்னான்," மற்ற

தொண்ணூத்தி ஒன்பதை விடவும் உன்னிடம் அக்கறையாய் இருக்கிறேன்"

என்று.

108. இயேசு சொன்னார், " எவனொருவன் என்னுடைய வாயிலிருந்து பானம்

பண்ணுகிறானோ, அவன் என்னைப்போலவே ஆவான். நான், அவனைப்போல

ஆவேன். அப்போது மறைவான காரியங்கள், அவனுக்கு வெளிப்படுத்தப்படும்."

109. இயேசு சொன்னார், " தேவனின் ராஜ்ஜியம் என்பது, தன்னுடைய நிலத்தில்

மறைந்திருக்கிற புதையலை அறியாதிருக்கிற மனுஷனைப்போலே இருக்கிறது.


அவன் மரித்த பின்பு, அதை தன்னுடைய மகனுக்கு விட்டுச்சென்றான். மகன்

அந்தப்புதையலை அறியான். அவன் அந்த நிலத்தை சுவகரித்து,


ீ பின்பு அதை

விற்றுப்போட்டான். அதை வாங்கியவன் அதை உழுத போது, அதில்

புதையலைக்கண்டான். அவன் தான் விருப்பப்பட்டவர்களுக்கு வட்டிக்குப்பணம்

கொடுக்க ஆரம்பித்தான்."

110. இயேசு சொன்னார், " உலகைக்கண்டு கொண்டவன் ஐசுவரியவானாவான்.

அவன், உலகத்தை கைவிட்டு விடட்டும். "

111. இயேசு சொன்னார், " வானமும், பூமியும் உங்கள் முன்னே சுருட்டப்படும்.

ஜீவனுள்ளவரிலிருந்து ஜீவிக்கிறவன், மரணதைக்காண்கிறதில்லை. “

"தன்னைத்தானே கண்டு கொண்டவன், உலகத்தை விட மேலானவன்” என்று

இயேசுவானவர் சொல்லவில்லையா? "

112. இயேசு சொன்னார், " ஆத்துமாவைச்சார்ந்திருக்கிற மாம்சத்துக்கு ஐயோ.

மாம்சத்தைச்சார்ந்திருக்கிற ஆத்துமாவுக்கு ஐயோ ! "

113. அவரது சீஷர்கள் அவரிடத்தே சொன்னார்கள், " தேவனின் ராஜ்ஜியம் எப்போது

வரும்?" என்று. இயேசு சொன்னார், "அதற்காக காத்திருப்பதால் அது வராது. 'இதோ

இங்கே இருக்கிறது.' அல்லது ' அதோ அங்கே இருக்கிறது' என்று

சொல்லப்படுவது போல அது இருக்கும். எல்லாவற்றையும் விட, பிதாவின்

ராஜ்ஜியம் பூமியின் மேலே பரந்து கிடக்கிறது. ஆனால், மனுஷர்

அதைக்காண்கிறதில்லை."

114. சீமோன் பேதுரு அவரிடம் சொன்னான், " மரியாள் நம்மை

விட்டுப்போகட்டும். ஸ்திரீகள் ஜீவியத்தில் விலையேறப்பெற்றவர்கள் அல்ல.

இயேசு சொன்னார்," அவள், புருஷனாகும்படிக்கு, நானே அவளை வழி நடத்துவேன்.

அவளும் ஜீவனுள்ள ஆவியாகி, புருஷர்களாகிய உங்களைப்போலவே ஆவாள்.

ஏனெனில், தன்னை புருஷனாக மாற்றிக்கொள்ளும் எந்த ஸ்திரியும் பரலோக

ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிப்பாள்."
---- பரிசுத்த தோமா அருளிச்செய்த சுவிசேஷம் ---

Translated by :
Srivilliputtur S Ramesh
Alamelu Ammal Bhavanam
No 8 South Mada Street
SRIVILLIPUTTUR –PIN : 626 125
VIRUDHUNAGAR DISTRICT --TAMIL NADU
INDIA
Cell : ( +) 9080551905
Email : rameshzillion@hotmail.com

You might also like