You are on page 1of 8

பயிற்சி 1

1.செய்யுள் உரறுப்புகளைப் பட்டியலிடுக.

அ) எழுத்து ஈ) தளை

ஆ) அசை உ) அடி

இ) சீர் ஊ) தொடை

2. எழுத்துகள் மொத்தம் எத்தனை?

=247 எழுத்துகள்

3. உயிர் எழுத்துகள் யாவை?

= அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ ,ஓ, ஔ க்ஷ/.,ம்

4. உயிர்க்குறில் எழுத்துகளை எழுதுக.

=அ, இ, உ, எ, ஒ

5. உயிர்நெடில் எழுத்துகளை எழுதுக.

=ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

6. மெய்யெழுத்துகளை வரிசைப்படுத்தி எழுதுக.

=க், ச், த், ப், ட், ற், ங், ஞ், ன், ந், ம், ண், ய், ர், ல், வ், ள், ழ்

7. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

= அசை இரண்டு வகைப்படும். அவை நேரசை மற்றும் நிரையசை ஆகும்.

8.
வாய்ப்பாடு எழுத்து அசை
க குறில் நேர்
கல் குறில் ஒற்று நேர்
கா நெடில் நேர்
கால் நெடில் ஒற்று நேர்
கட குறிலினை நிரை
கடல் குறிலினை ஒற்று நிரை
கடா குறில் நெடில் நிரை
கடாம் குறில் நெடில் ஒற்று நிரை

9. ஒரெழுத்தால் ஆகிய அசை.

=ஐயா

10. ஈரெழுத்தால் ஆகிய அசை

= பந்து

11. அசையை எழுதுக

திருக்குறள் புறநானூறு நற்றிணை தொல்காப்பியம்


(ஈரசைசீர்) (நாலாசைசீர்) (ஈரசைசீர்) (மூவசைசீர்)

பலகை நாலடியார் கொண்டல் பாவாணர்


(ஈரசைசீர்) (மூவசைசீர்) (ஈரசைசீர்) (மூவசைசீர்)

சிலப்பதிகாரம் அலுவலகம் நிலாக் சொன்னான்


(நாலசைசீர்) (மூவசைசீர்) (ஓரசைசீர்) (ஈரசைசீர்)

நன்னெறி பலா வான்வெளி முத்தொள்ளாயிரம்


(ஈரசைசீர்) (ஓரசைசீர்) (ஈரசைசீர்) (நாலசைசீர்)

மரம் முல்லைப் பாட்டு குறி வெண்பா


(ஓரசைசீர்) (நாலசைசீர்) (ஓரசைசீர்) (ஈரசைசீர்)

12. ஈரசைச்சீரை இப்படியும் அழைக்கலாம்.

= இயற்சீர்

13. மூவசைச்சீரை இப்படியும் அழைக்கலாம்.

= உரிச்சீர்
14. நிறைவு செய்க

அசை வாய்ப்பாடு சீர்

நேர் நேர் தேமா மாச்சீர்


நிரை நேர் புளிமா மாச்சீர்
நிரை நிரை கருவிளம் விளச்சீர்
நேர் நிரை கூவிளம் விளச்சீர்

15. சீர் பிரித்துக் காட்டுக

= கல்/விக்/ கரை/யில/ கற்/பவை/ நாள் சில

நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நிரை

தேமா கருவிளம் கூவிளம்

= கற்/க/ கச/டறக்/ கற்/பவை/ கற்/றபின்

நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நிரை

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்

16. நிறைவு செய்க

அசை வாய்ப்பாடு

நேர் நேர் நேர் தேமாங்காய்


நிரை நேர் நேர் புளிமாங்காய்
நிரை நிரை நேர் கருவிளங்காய்
நேர் நிரை நேர் கூவிளங்காய்
நேர் நேர் நிரை தேமாங்கனி
நிரை நேர் நிரை புளிமாங்கனி
நிரை நிரை நிரை கருவிளங்கனி
நேர் நிரை நிரை கூவிளங்கனி

17. சீர் பிரித்தீடுக

அருந்/தமி/ழி/ லினி/யா/ரும்/ அயற்/சொல்/லைக்/ கல/வா/தீர்/


நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நேர்

கருவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்

செந்/தமிழ்/ நா/டென்/னும்/ போ/தினி/லே/ – நல்/ல/

நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர்

கூவிளம் தேமாங்காய் கூவிளங்காய் தேமா

தேன்/வந்/து/ பா/யுது/ கா/தினி/லே/

நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நேர்

தேமாங்காய் கூவிளம் கூவிளங்காய்

18. மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் எந்தெந்தப் பாக்களுக்கு உரியவை?

= மாச்சீர் மற்றும் விளச்சீர் ஈரசைசீர்க்கு உரியவை. அதாவது தேமா, புளிமா இரண்டும் மாச்சீர்
என்றும் கூவிளம் கருவிளம் இரண்டும் விளச்சீர் ஆகும். அதேபோல், காய்ச்சீர் மற்றும் கனிச்சீர்
மூவசைச்சீர்கள் ஆகும்.

19. தளை எனப்படுவது யாது?

= தளை எனப்படுவது பிணைப்பு என்று பொருள்படும். அதாவது, செய்யுள்களில் அருகருகே வரும்


சீர்களுக்கு ஒரு தொடர்பு படுத்தவே தளை இருக்கின்றது

20. தளை 7 வகைப்படும். அவை யாவை?

= நேரொன்றிய ஆசிரியத்தளை, நிறையொன்றிய ஆசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர்


வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, மற்றும் ஒன்றாத வஞ்சித்தளை ஆகும்.

21. நின்றசீர், வருஞ்சீர் என்றால் என்ன?

= முதல் சீர் நின்றசீர் என்று குறிக்கப்படும். இதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் ஆகும்.

22. நேரொன்றிய ஆசிரியத்தளை என்பது என்ன?

= தேமா, புளிமாவிற்கு முன் நேரசை வந்தால் அது நேரொன்றிய ஆசிரியத்தளை ஆகும். அதாவது
நேரசையும் நேரசையும் இணைந்து உருவாவது.
23. நிறையோன்றிய ஆசிரியத்தளை என்பது என்ன?

=நிரையும் நிரையும் இணைதகு உருவாவதே நிறையோன்றிய ஆசிரியத்தளை ஆகும். அதாவது


விளம் முன் நிரை வருவதே ஆகும்.

24. ஆசிரியப்பாவுக்குறிய தளைகள் யாவை?

= நேரொன்றிய ஆசிரியத்தளை, நிறையோன்றிய ஆசிரியத்தளை

25. மா முன் நிரையும் விளமுன் நேரும் வருவது எவ்வகைத் தளை?

= இயற்சீர் வெண்பா

26. இயற்சீர் வெண்டளை என்பது யாது?

= இயற்சீர் வெண்டளை என்பது இயற்சீர்கள் நேரில் முடிந்து நிரையில் தொடங்கினாலோ அல்லது


நிரையில் முடிந்து நேரில் தளையும்.

27. ஆசிரியத் தளைக்கும் இயற்சீர் வெண்டளைக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

=ஆசிரியத்தளையில் நிலைச்சீரும் வருஞ்சீரும் ஒன்றியதாக இருக்கும். அதே சமயத்தில், இயற்சீர்


வெண்டலையில் நிலைச்சீரும் வருஞ்சீரும் வேறுபட்டு இருக்கும். உதாரணமாக, இயற்சீர்
வெண்டலையில் நிலைச்சீர் நேரசையாக இருந்தால் வருஞ்சீர் நிறையசையாக இருக்கும்.
ஒருவேளை, நிலைச்சீர் நிறையசையாக இருந்தால் வருஞ்சீர் நேரசையாக இருக்கும். ஆனால்,
ஆசிரியத்தளையில் நிலைச்சீர் நேரசையாக இருந்தால் வருஞ்சீர் நேரசையாகவும், நிலைச்சீர்
நிரையசையாக இருந்தால் வருஞ்சீர் நிரையசையாகவும் ஒன்றி இருக்கும்.

28. காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை ஆகும்.

29. யா மெய் யாக் x கண் டவற் று x ளில் ளை

நேர் நேர் நேர் x நேர் நிரை நேர் x நேர் நேர்

தே மாங் காய் x கூ விளங் காய் x தே மா

மேலே கொடுக்கப்பட்டுள்ளது என்ன வகையான தளை?

=நேர் ஒன்றிய ஆசிரியத்தளை

30. காய் முன் நிரை வருவது கலித்தளை ஆகும்.

31. கலிப்பாவுக்குரிய தளை யாது?

= கலித்தளை
32. பல் லுயி ரும் x தனி மலர் மிசை... இச்செய்யுளடியை அசை, சீர் பிரித்து என்ன தளை
என்பதாக குறிப்பிடுக.

= பல் லுயி ரும் x தனி மலர் மிசை

நேர் நிரை நேர் x நிரை நிரை நிரை

கூவிளங்காய் x கருவிளங்கனி

=கலித்தளை

33. கனி முன் நேர் வருவது ஒன்றாத வஞ்சித்தளை ஆகும்.

34. கனி முன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளை ஆகும்.

35. தண் டா மரைத் x தனி மலர் மிசை.. இச்செய்யுளடியை அசை, சீர் பிரித்து என்ன தளை
என்பதைக் குறிப்பிடுக.

= தண் டா மரைத் x தனி மலர் மிசை

நேர் நேர் நிரை x நிரை நிரை நிரை

தேமாங்கனி x கருவிளங்கனி

=ஒன்றாத வஞ்சித்தளை

36. குறளடி என்றால் என்ன?

= குறளடி என்பது இரண்டு சீர்கள் அமைந்த ஓரடியைக் குறிக்கும்.

37. சிந்தடி என்றால் என்ன?

= சிந்தடி என்பது மூன்று சீர்களைக் கொண்டு இயங்குவதாகும்.

38. அளவடி என்றால் என்ன?

= அளவடி என்பது நான்கு சீரால் ஆனா அடியாகும்.

39. நெடிலடி என்றால் என்ன?

= நெடிலடி என்பது ஐந்து சீர்களால் அமைந்த அடியாகும்.

40. கழிநெடிலடி என்றால் என்ன?


= கழிநெடிலடி என்பது ஆறு, ஏழு, என அதன் பின் வரும் அனைத்து சீரும் ஆகும்.

41. தொடை என்றால் என்ன ?

= ஓசை ஒழுங்கோடு தொடுக்கப்படுவதால் தொடை எனப்படுகிறது.

42. தொடையின் வகைகள் யாவை?

= தொடை எட்டு வகைப்படும். அவை, மோனை தொடை, எதுகை தொடை, இயைபு தொடை, முரண்
தொடை, அந்தாதி தொடை, மற்றும் அளபெடை தொடையாகும்.

43. மோனைத் தொடைக்கு ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.

= அணிமலர் அசோகின் தளிர் நலம் கவற்றி

44. எதுகை தொடைக்கு ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.

= அன்ன மென்னடை போலப் பன்மலர்க்

45. இயைபு தொடைக்கு ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.

= ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

46. முரண் தொடைக்கு ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.

= முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

47. அந்தாதித் தொடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு எழுதுக.

= ஒரு செய்யுளின் இறுதி சீர், அசை அல்லது எழுத்தை அடுத்து வரும் செய்யுளின் முதலில் வரும்
வகையில் அமையின் அந்தாதி தொடை எனப்படும். உதாரணமாக, வேங்கையஞ் சார
லோங்கிய மாதவி

விரிமலர்ப் பொதும்பர் நெல்லியன் முகமதி


திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே

48. அளபெடை தொடைக்கு ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.

= ஒஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஎம் இதற்பட் டது.

49. அடி மோனைக்கு ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.

= தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்

தந்தம் வினையான் வரும்

50. அடி எதுகைக்கு ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.

= அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

You might also like