You are on page 1of 4

ஆண்டு 3

மொழியணி

1. கோடிடப்பட்ட குறள் அடியின் பொருளைத் தெரிவு செய்க?

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்


எண்ணுவம் என்பது இழுக்கு.

A. சிந்தித்து
B. துணிவு
C. செயல்
D. நிறம்

2. சுவரேறி வீட்டிற்குள் நுழையும் முன் எவரேனும் வருகிறார்களா என அத்திருடன்


___________________ பார்த்தான்.

A. சுற்றும் முற்றும்
B. அங்கும் இங்கும்
C. அன்றும் இன்றும்
D. அரை குறையாகப்

3. உதவி செய்தவரின் நன்றியை நன் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.

மேற்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

A. அன்பான நண்பனை ஆபத்தில் அறி.


B. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
C. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
D ஊருடன் கூடி வாழ்

4. தெனாலிராமன் செய்த தவற்றினால் சினங்கொண்ட மன்னம் தன் பற்களை ________


என கடித்தார்.
A. கடு கடு
B. கிடு கிடு
C. சிடு சிடு
D. நற நற
5. சரியான மரபுத்தொடரின் பொருளைக் குறிக்கும் இணையைத் தெரிவு செய்க.
A. அள்ளி இறைத்தல் - அளவாகச் செலவழித்தல்
B. அள்ளி விடுதல் - ஒன்றை மிகைப்படுத்தாமல் கூறுதல்
C. அரக்கப் பரக்க - அவசரமும் பதற்றமும்
D. ஆறப் போடுதல் - ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்யாமை

6. ‘ மாசில் வீணையும் மாலை மதியமும்’

மேற்காணும் செய்யுளை எழுதியவர் யார்?

A. உலக நாத பண்டிதர்


B. திருநாவுக்கரசர்
C. மாணிக்கவாசகர்
D. சிவப்பிரகாச சுவாமிகள்

7. கீழே உள்ளவற்றுள் பிழையான இணை எது?


A. உருண்டு திரண்டு - பருத்து
B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
C. மேடு பள்ளம் - சமமற்றப் பகுதி
D. அரை குறை – முழுமையான நிலை

8. திருக்குறளில் விடுபட்ட சொல் யாது?


தீயினாற் சுட்டபுண் ________________ ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
A. உள்ளூறும்
B. உள்ளறும்
C. உள்ளாரும்
D. உள்ளாறும்

9. வேட்டைக்காரன் தன் குதிரையைச் சாட்டையால் _________ அடித்தான்.


A. பளார் பளார்
B. கிடு கிடு
C. சிடு சிடு
D. பளீர் பளீர்
10. உலகநீதியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருள் யாது?

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

A. குறை சொல்லுதல்
B. புறம் பேசுதல்
C. தீயச் செயல்
D. ஏமாற்றுதல்

இலக்கணம்

1. சொற்களைத் தனித்தனியாகவோ அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது ______________


இடவேண்டும்.
A. அரைப்புள்ளி
B. காற்புள்ளி
C. முக்காற்புள்ளி
D. முற்றுப்புள்ளி

2. பெயர்ச்சொல் பற்றிய பிழையான கூற்றைத் தெரிவு செய்க.

A. பெயர்ச்சொற்கள் மட்டும்தான் வேற்றுமை உருபை ஏற்கும்.


B. பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
C. ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல்லாகும்.
D. பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபை ஏற்காது.

3. தொழிற்பெயரைக் குறிக்காத சொல்லைத் தெரிவு செய்க.

A. ஆசிரியர்
B. ஏற்றுமதி
C. படிப்பு
D. பாடுதல்

4. தொழிற்பெயரைக் குறிக்காத சொல்லைத் தெரிவு செய்க.

A. ஆசிரியர்
B. ஏற்றுமதி
C. படிப்பு
D. பாடுதல்

5. ஒரு செயல் நிகழ்வதற்கு காரணமாய் இருப்பதுன் ______________ ஆகும்.


A. பயனிலை
B. செயப்படுபொருள்
C. எழுவாய்
D. வாக்கியம்
6. நான் என் நண்பர்களுடன் கோலாலும்பூரில் அரங்கேறவிருக்கும் இலக்கிய நாடகத்தைக்
காணச் ________________.

A. செல்வோம்
B. சென்றோம்
C. செல்கிறோம்
D. செல்வேன்

7. பண்புப்பெயரைத் தெரிவு செய்க.


A. பங்குனி
B. பசுமை
C. இலை
D. பூபாலன்

8. ஒரே பொருள் தரும் சொல்லைத் தெரிவு செய்க.


A. நண்பன், தோழன், பகைவன்
B. தந்தை, குரு, அப்பா
C. அம்மா, தாய், தெய்வம்
D. அரசர், மன்னர், வேந்தன்

9. ‘வேடன்’ - இதற்கு ஏற்ற பெண்பால்

A. வேட்டி
B. வேடுவச்சி
C. வேட்டையாள்
D. வேட்டையாடி

10. படம் காட்டும் சரியான பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.

A. பொருட்பெயர்
B. காலப்பெயர்
C. தொழிற்பெயர்
D. பண்புப்பெயர்

You might also like