You are on page 1of 15

OUIZ TAMIL 2022

1. தமிழ் அரிச்சுவடியில் மொத்தம் எத்தனை உள்ளன ?

அ. 245

ஆ. 12

இ. 246

2. ஒன்றன் பால் சொற்களைத் தெரிவு செய்க.

அ. பறவை,மீனா,மரம்

ஆ. மகிழுந்து,யானை,நாய்க்குட்டி

இ. அம்மா,மிதிவண்டி,தென்னை மரம்

3. இவற்றில் முன்னிலையைக் குறிக்கும் சொற்களைத் தெரிவு செய்க.

அ. உங்கள்,நாங்கள்,அவர்கள்,யாம்

ஆ. நீங்கள்,நீர்,உனக்கு,என்

இ. நீவீர்,உன்,உமக்கு,உமது

4. உயிர்க் குறில் எழுத்துகளைக் கொண்டுள்ள சொற்களைத் தெரிவு செய்க.

அ. ஆடு,ஆமை,இலை

ஆ. அம்மா,ஆந்தை,எலி

இ. இறகு,உரல்,எடு

5. எது சினைப்பெயர் அல்ல?

அ. வால்
OUIZ TAMIL 2022

ஆ. இலை

இ. மரம்

ஈ. காது

6. தேன் + அமுது =

அ. தேன்முது

ஆ. தேன்அமுது

இ. தேனமுது

ஈ. தேந்தமுது

7. ( படம் அக்காவால் வரையப்பட்டது ) மேற்காணும் வாக்கியத்தை வகைப்படுத்துக.

அ. செய்வினை

ஆ. செயப்பாட்டுவினை

இ. தனி வாக்கியம்

8. சொல்லின் தன்மையை அல்லது இயல்பை விளக்குவது ___________________________


ஆகும்.

அ. செய்வினை

ஆ. அடை

இ. எச்சம்

ஈ. வினையடை

9. வையகம் என்ற சொல்லின் பொருள் யாது ?

அ. இறைவன்

ஆ. உலகம்

இ. வைத்தல்
OUIZ TAMIL 2022

10. திரு.வீரா தென்னை ஓலையால் கூரையை _______________________ .

அ. முடைந்தார்

ஆ. வேய்ந்தார்

இ. பின்னினார்

ஈ. செய்தார்

11. சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அ. அது ஒரு அழகிய ஓவியம்.

ஆ. அது என்னுடைய புத்தகங்கள் ஆகும்.

இ. அப்பா ஓர் ஈட்டி வைத்திருந்தார்.

ஈ. அஃது மேலே பறந்தது.

12. ( கவிதா தன்னுடைய திறமையால் போட்டியில் வெற்றிப் பெற்றாள். ) கொடுக்கப்பட்ட


வாக்கியத்தில் திறமையால் என்ற சொல்லின் உருபு வகையைத் தெரிவு செய்க.

அ. முதலாம் வேற்றுமை

ஆ. இராண்டாம் வேற்றுமை

இ. மூன்றாம் வேற்றுமை

ஈ. ஐந்தாம் வேற்றுமை

13. போகிப் பண்டிகையன்று பழைய பொருள்களை _________________________


இந்துக்களின் வழக்கம்.

அ. கழித்தல்

ஆ. வாங்குதல்

இ. கரித்தல்

ஈ. கழுவுதல்
OUIZ TAMIL 2022

14. கனத்த மழை பெய்தது. ________________________ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து


ஓடியது.

அ. இருப்பினும்

ஆ. ஆகையால்

இ. ஆயினும்

ஈ. மேலும்

15. மண் + சட்டி =

அ. மண்சட்டி

ஆ. மட்சட்டி

இ. மற்சட்டி

ஈ. மணல்சட்டி

16. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு எனும் ( அளவு ) பெயர்களின் பின்


_________________________ .

அ. வலிமிகா

ஆ. வலிமிகும்

17. ' எழுதவிருக்கிறேன் ' . இச்சொல் காட்டும் காலம் யாது ?

அ. இறந்த காலம்

ஆ. நிகழ்காலம்

இ. எதிர்காலம்

18. வினையெச்ச வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அ. மாணவர்களின் தவற்றை ஆசிரியர் கண்டித்துக் கூறினார்.

ஆ. காட்டில் வேகமாக ஓடிய மானைப் புலி துரத்தியது.


OUIZ TAMIL 2022

இ. மாணவர் எழுதிய கட்டுரை சிறப்பாக இருந்தது.

ஈ. வாணி வரைந்த ஓவியம் அழகாக இருந்தது.

19. புணரியலில் தோன்றல் விகாரம் என்பது எதனைக் குறிக்கின்றது ?

அ. நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றி திரிவதைக்


குறிக்கின்றது.

ஆ. நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றுவதையும்


திரிவதையும் குறிக்கின்றது.

இ. நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றுவதைக்


குறிக்கின்றது.

ஈ. நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றி திரிந்து


கெடுவதைக் குறிக்கின்றது.

20. எண்ணுப்பெயர் புணர்ச்சிக்கேற்ப சரியாகப் பிரித்து எழுதப்பட்ட இணை எது ?

அ. ஒன்று + ஒன்று = ஒன்றுஒன்று

ஆ. பத்து + பத்து = பப்பத்து

இ. பத்து + இரண்டு = பதிரெண்டு

ஈ. ஒன்பது + ஒன்பது = பதினெட்டு

21. ( கண்,குதிரை,கூத்து,சிவப்பு,பள்ளிக்கூடம் )இவற்றில் குறிப்பிடப்படாத பெயர்ச் சொல் யாது


?

அ. பண்புப்பெயர்

ஆ. சினைப்பெயர்

இ. காலப்பெயர்

ஈ. தொழிற்பெயர்

22. பெயர்ச்சொற்கள் மட்டும்தான் ______________________ ஏற்கும்.

அ. தொகுதி பெயரை

ஆ. வினாவெழுத்தை

இ. வேற்றுமை உருபை
OUIZ TAMIL 2022

ஈ. எச்சத்தை

23. அஃறிணை வகுப்பு எதனைக் குறிக்கின்றது ?

அ. பகுத்தறிவற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிப்பது.

ஆ. பகுத்தறிவுள்ள உயிரினங்களையும் உயிருள்ள பொருள்களையும் குறிப்பது.

இ. பகுத்தறிவற்ற உயிரினங்களையும் பகுத்தறிவுள்ள தேவர்களையும் உயிரற்ற


பொருள்களையும் குறிப்பது.

ஈ. பகுத்தறிவற்ற உயிரினங்களையும் பகுத்தறிவுள்ள மனிதர்களையும் உயிரற்ற


பொருள்களையும் குறிப்பது.

24. விகாரப்புணர்ச்சி என்பது என்ன ?

அ. இரு சொற்கள் புணரும் போது நிலைமொழியின் முதலிலோ வருமொழியின் ஈற்றிலோ


மாற்றங்கள் எற்படாமல் இருந்தால் அது விகாரப்புணர்ச்சியாகும்.

ஆ. இரு சொற்கள் புணரும் போது நிலைமொழியின் ஈற்றிலோ வருமொழியின் முதலிலோ


மாற்றங்கள் எற்பட்டால் அது விகாரப்புணர்ச்சியாகும்.

இ. இரு சொற்கள் புணரும் போது நிலைமொழியின் முதலிலோ வருமொழியின் ஈற்றிலோ


மாற்றங்கள் எற்பட்டால் அது விகாரப்புணர்ச்சியாகும்.

ஈ. இரு சொற்கள் புணரும் போது நிலைமொழியின் ஈற்றிலோ வருமொழியின் முதலிலோ


மாற்றங்கள் எற்படாமல் இருந்தால் அது விகாரப்புணர்ச்சியாகும்.

25. அகர ஈற்று வினையெச்சத்திற்குப் பிறகு வலிமிகும் என்ற விதிக்கேற்ற தொடரைத்


தேர்ந்தெடுத்திடுக.

அ. பாடியப் பாடல்

ஆ. எழுதியக் கட்டுரை

இ. ஊதியப் புல்லாங்குழல்
OUIZ TAMIL 2022

ஈ. பாடச் சென்றார்கள்

26. ( வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல ) மேற்காணும்


குறள் விளக்கம் கருத்தைத் தெரிவு செய்க.

அ. நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவை வணங்காவிடில்,
அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

ஆ. கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள்


முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

இ. விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு


எப்பொழுதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

ஈ. ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்ல தல்ல. அவர் செய்யும் குற்றத்தை
உடனே மறந்துவிடுவது நல்லது.

27. கீழ்க்காணும் காலியிடத்திற்கு எற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

அ. அனலில் இட்ட மெழுகு போல

ஆ. பசுத்தோல் போர்த்திய புலி போல

இ. வேலியே பயிரை மேய்ந்தாற் போல

ஈ. யானை வாயில் அகப்பட்ட கருப்பு போல


OUIZ TAMIL 2022

28. கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

அ. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

ஆ. பதறாத காரியம் சிதறாது

இ. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

ஈ. புத்திமான் பலவான் ஆவான்


OUIZ TAMIL 2022

29. படத்திற்கு ஏற்ற பழமொழியை தெரிவு செய்க.

அ. ஆழம் அறியாமல் காலை விடாதே

ஆ. இளங்கன்று பயமறியாது

இ. வெள்ளம் வருமுன் அணை போடு

ஈ. அழுத பிள்ளை பால் குடிக்கும்

30. பின்வரும் பொருளுக்கேற்ற செய்யுளின் முதல் வரியைத் தெரிவு செய்க.

அ. அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்


OUIZ TAMIL 2022

ஆ. எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

இ. மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துசார்

ஈ. நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

31. கொடுக்கப்பட்டுள்ள கொன்றை வேந்தனில் கருமையாக்கப்பட்ட சொல்லுக்குப் பொருந்தாத


சொல் எது?

அ. சொந்தம்

ஆ. உறவு

இ.ஊரார்

32. கொடுத்த பாடங்களை __________________________யாகச் செய்த மாணவர்களை ஆசிரியர்


கண்டித்தார்.

அ. அரை குறை

ஆ. ஒளிவு மறைவு

இ. பேரும் புகழும்

ஈ. அருமை பெருமை

33. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் _________________________ எனக் கீழே சரிந்தன.

அ. கிடு கிடு

ஆ. தட தட

இ. மட மட

ஈ. குடு குடு
OUIZ TAMIL 2022

34. கீழ்க்காணும் உலகநீதியின் பொருள் யாது ? ( மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

அ. மனம் சொல்லும்படி நடந்து கொள்ள வேண்டும்

ஆ. மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்

இ. மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டும்

35. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல் ) " செழுங்கிளை " எனும் சொல்லின் பொருள் யாது?

அ. நண்பர்

ஆ. உறவினர்

இ. ஏழை எளியவர்

36. புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?

அ. ஔவையார்

ஆ. உலகநாத பண்டிதர்

இ. பாரதியார்

37. எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாக கருதவேண்டும். ) இந்தக்


கூற்றுக்கு ஏற்ற கொன்றைவேந்தனைக் கண்டறிக.

அ. ஏவா மக்கள் மூவா மருந்து

ஆ. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

இ. ஐயம் புகினும் செய்வன செய்


OUIZ TAMIL 2022

38. மிக நெருக்கமாக ) இந்தப் பொருளைக் கொண்ட உவமைத்தொடரைக் கண்டறிக.

அ. நகமும் சதையும் போல

ஆ. எலியும் பூனையும் போல

இ. காட்டு தீ போல

39. உப்பிட்டவரை உள்ளளவும் நினை ) பொருளை கண்டறிக.

அ. சிறுக சிறுக சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாக பெருகிவிடும்

ஆ. சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியத்தையும் தவறாகவே போகும்.

இ. உதவி செய்தவரின் நன்றியை நம் உயிர் உள்ளவரை மறக்கக் கூடாது

40. சரியான மரபுத்தொடர்களைத் தெரிவு செய்க. ( தன் மகன் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெறுவான்
என நம்பிக்கை கொண்ட திரு. கபிலனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அ. கடுக்காய் கொடுத்தல்

ஆ. கரி பூசுதல்

இ. கங்கணம் கட்டுதல்

ஈ. கம்பி நீட்டுதல்.

41. மாணவர்கள் இலவசமாக அரசாங்கம் கொடுத்த பாடநூல்களை ________________________


பாதுகாக்க வேண்டும்.

அ. நகமும் சதையும் போல

ஆ. சிலை மேல் எழுத்து போல

இ. கண்ணினைக் காக்கும் இமை போல

ஈ. மலரும் மணமும் போல

42. சித்திரமும் கைப்பழக்கம் ______________________ நாப்பழக்கம்.

அ. செந்தமிழும்

ஆ. பைந்தமிழ்
OUIZ TAMIL 2022

இ. இனியதமிழ்

ஈ. பழந்தமிழ்

43. " நான், எனது செருக்குடையவர்களை அவர்களின் விருப்பும் போல் ஆடவிட்டு


அரசாள்கிறான்" மேற்காணும் விள்க்கத்தை உணர்த்தும் செய்யுளடி யாது ?

அ. எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

ஆ. கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

இ. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஈ. நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

44. தென்னையின் பெருமையை உவமையாய்க் கூறும் செய்யுள் எது ?

அ. நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

ஆ. ஆன முதலில் அதிகஞ் செலவானால்

இ. நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

ஈ. தங்குறைதீர் வுள்ளார் தள்ர்ந்து பிறர்க்குறு உம்

45. இவற்றுள் எது இணைமொழி அல்ல?

அ. அண்டை அயலார்

ஆ. அருமை பெருமை

இ. சிக்கனம் சீரளிக்கும்

ஈ. அல்லும் பகலும்

46. கவியரசன் அலுவலக வேலைகளை முறையாக செய்யாமல் நேரத்தை வீணாக கழித்தான்.

அ. பெயர் பொறித்தல்

ஆ. திட்ட வட்டம்

இ. தட்டிக் கழித்தல்
OUIZ TAMIL 2022

47. " ________________________________________________ எண்ணுவம் என்பது இழுக்கு "


குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.

அ. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

ஆ. நிற்க அதற்குத் தக

இ. புண்ணுடையர் கல்லா தவர்

ஈ. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

48. சரியான இணை எது ?

அ. ஆடை அணிகலன் - உடையும் ஆவரணமும்

ஆ. தரதர - கதவைத் தட்டும் ஓசை

இ. எலியும் பூனையும் போல - விட்டுப் பிரியாமை

ஈ. கலகல - நீர் ஓடும் ஓசை

49. படம் உணர்த்தும் உலகநீதி யாது ?


OUIZ TAMIL 2022

அ. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

ஆ. மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

இ. போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

50. " நல்லார் எனத்தாம் " எனத் தொடங்கும் செய்யுளின் உட்கருத்து என்ன?

அ. நண்பனின் குறைகளை மற்றவர்களிடம் கூற வேண்டும்

ஆ. தீயவர்களிடம் நட்பு கொள்ள வேண்டும்.

இ. நண்பன் தவறு செய்தால் அவனிடம் சண்டையிட வேண்டும்

ஈ. நண்வர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து நட்பு பாராட்ட வேண்டும்.

You might also like