You are on page 1of 28

தற்கால மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்ட ஏற்பாடுகள் இரண்டாம்

உலகப்போருக்கு பின்னரே ஏற்பட்டது. மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப்


பின்னணியும் என்ற இந்தக் கட்டுரை அந்த வரலாற்றுப் பின்னணியை சிறப்பாக
விபரிக்கும்.

உலகப் போர் பின்னணி

மனித உரிமைகள் எனும் கருத்தேற்பு கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகம்


முழுவதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருகின்றது. முதலாம்,
இரண்டாம் உலக மகாயுத்தங்களின் கொடூரங்களும் அனர்த்தங்களுமே மனித
உரிமைகள் பற்றிய வினாக்கள் மீ து அரசுகளின் கவனத்தைக் குவியச் செய்தன.
குறிப்பாக அளவுக்கதிகமான நாசிசவாதத்தின் ஆட்சி மனித உரிமைகள் பற்றிய
கொள்கையில் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்துயது. இவ் யுத்தங்களின் பிற்பட்ட
காலத்தில் சர்வதேச மட்ட உணர்வுப் பரிமானத்தில் தனிமனித உரிமைகளின்
மீ தான மீ றுகைகளை மிக உறுதிப்பாடான விதத்தில் கன்காணிப்பதற்கான ஓர்
அவசரத் தேவைப்பாட்டினை அக்காலகட்டத்தில் இடம்பெற்ற கொடூரமான
நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டின.

உலக மகா யுத்த காலத்தை அடுத்து வாழ்ந்தவரும் மிகப் பிரபலமான சர்வதேசச


சட்டவாளர்களுள் ஒருவருமான Hersh Lautevpacht என்பவா் சர்வதேச தேசிய
சட்டங்கள் யாவும் அதாவது இவற்றின் இறுதி நோக்கமாக அமைவது மனித
ஆளுமையையும் அதனுடைய அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதே எனக்
கருத்துரைத்துள்ளார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவானது சர்வதேச மட்டத்தில் பல


மாற்றங்களுக்கு வித்திட்டது. முதலாவதாக ஐரோப்பாவானது அரசியல் சித்தாந்த
ரீதியில் இரு வேறுபட்ட முகாங்களாகப் பிரிந்திருந்ததுடன் அதன் காலனித்துவ
அதிகார வழ்ச்சி
ீ அரசியல் பொருளாதார ரீதியான விடுதலை கோரிய அரசுகள்
பலவற்றின் விடுதலைக்கு வழி கோலியது. இரண்டாவது மாற்றமாக ஐக்கய
நாடுகளையும் அதனோடு இணைந்த ஏனைய நிறுவனங்களினதும் தோற்றமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை நோக்கமாக சர்வதேச சமாதானம் பாதுகாப்பு
என்பவற்றை நிலை நிறுத்துவதாக இருந்தாலும் அதன்நோக்கங்களுள் ஒன்றாகக்
காணப்படுகின்ற மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தலை ஐக்கிய
நாடுகளின் பட்டயத்தின் உறுப்புரை 1 உறுதிப் படுத்துவதுடன் அது சா்வதேச
ரீதியானக மதிக்கப்படுவதற்கான சட்டக் கடப்பாடுகளை சுமத்தி நிற்கின்றது. மனித
உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதித்தல் எனும் நோக்கில்
அமைந்த தொழிற்பாடு ரீதியான அவ்விருப்பமே மனித உரிமைகள் சம்பந்தமாக
பிரகடனம் ஒன்றை உருவாக்கின. இதனை உருவாக்குவதற்கு சீனா, ரஷ்யா
,அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஆலோசனை வழங்கின.

ஐக்கிய நாடுகள் சபனையின் மனித உரிமைகள்


பிரகடனம்

முதன்முதலில் 26 நாடுகள் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட


இப்பிரகடனமானது 1945 யூன் மாதம் கைச்சாத்திடப் பட்டது. இதன் முதலாவது
கூட்டம் இலண்டனில் 1946 இல் இடம் பெற்றது. இதன் முக்குய குறிக்கோளாக
உறுப்புரிமை நாடுகளிடையே இறைமையையும்,சமத்துவத்தையும் பேணுவதுடன்
பிணக்குகளை சமாதான முறையில் தீா்வு காண்பதும் எந்த அரசினதும் ஆட்புல
உரிமைகளையும் அரசியல் சுதந்திரத்தை மதித்து நடப்பதுமாகும்.

அதன் பின்னா் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக சமயம், பால், மொழி


வேறுபாடின்றி எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித
உரிமைகளை வழங்குவதற்கும் அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக
தனித்தும் இணைந்தும் உழைக்க வேண்டும். இந்த அடிப்படையில் சர்வதேச மனித
உரிமைகள் பிரகடனம் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பிரகடனமானது
குடியியல் அரசியல் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் பற்றிய விரிவான
முறையில் அமைந்த ஏற்பாடுகளை உள்ளடக்கியிருப்பதுடன் பொதுச் சபையாலும்
ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பிரகடனத்தை வரைந்தவர் ஐக்கிய நாடுகள் சபையின்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதியும் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகளின்
குழுவின் தலைவருமான Eleanor Roosvelt ஆவார்.

இந்த சர்வதேச பிரகடனமானது ஆரம்பத்தில் சர்வதேச ரீதியாக மனித


உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் அவர்களால் செய்யும் செயற்பாடுகளை
மதிப்பதற்கும் அங்கத்துவ நாடுகளினை சட்ட ரீதியாக பிணிக்கும் மனித
உரிமைகளின் விரிவான பொருத்தனைக்கு ஒரு விசைப் பலகையாகவும்
உபயோகப் கடுத்துவதற்கே எனக் கருதப்பட்டது. எனினும் அதை வரைந்து
கொண்டிருந்த காலப் பகுதியில் வல்லரசுகளிற்கு இடையில் நிலவிய கருத்தியல்
முரண்பாடுகள் மற்றும் பனிப்போரின் காரணமாக இதன் உள்ளடக்கத்தில்
ஏகமனதான ஒருமைப்பாடு ஒன்றுக்கு வருதல் அசாத்தியமாயிற்று.

சோசலிச மேற்குநாடுகள் கருத்து வேறுபாடு


சோசலிச நாடுகளின் தொகுதி ஏனைய உரிமைகளோடு அந்நாடுகளின் கொள்கைப்
படியான நிலைப்பாட்டினைப் பிரதிபலிக்கும் சமூக பொருளாதார உரிமைகளும்
உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மறுபுறத்தில் ஐக்கிய
அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச மனித உரிமைகள் என்ற
போக்கிலமைந்த குடியியல் அரசியல் உரிமைகளைப முன்னையதிற்குப் பதிலாக
உள்ளடக்குமாறு மிகக் கடுமையான உந்து சக்துயைக் கொடுத்தன. இந்த இணக்கம்
செயற்பட முடியாத கருத்தியல் வேறுபாடானது உலக நாடுகளை இருவேறு
துருவங்களாக ஆக்கியதுடன் குடியியல் அரசியல் உரிமைகள் மற்றும்
பொருளாதார கலாசார உரிமைகள் எனும் இருவேறு சர்வதேச சமவாயங்களை
உருவாக்கி அவை 1966 இல் அங்கீ கரிக்கப்படவும் வழி வகுத்தது. ஐக்கிய நாடுகள்
சபையின் தேவைப்பாடாக அமைந்த எண்ணிக்கையான அங்கத்துவ நாடுகளின்
அமுல்படுத்துவதற்கான ஒப்புதல் அல்லது சீராக்கங்களைப் பெற்றுக்கொண்டபின்
ஒரு தசாப்தத்தின் பின்னர் அமுலுக்கு வந்தன. அதாவது 1976 இல். இது தவிர மனித
உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா.சபையினால் வேறுபல
ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டன.

அவ்வகையில் சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், பெண்களுக்கு எதிரான


அனைத்து ஓரங்கட்டலுக்கு எதிரான உரிமைகள், அகதிகளுக்கான உரிமைகள்,
சுற்றாடல் உரிமைகள், தொழிலாளர்களுக்கான உரிமைகள் போன்ற உரிமைகள்
தனித்தனியாக அங்கீ கரிக்கப்பட்டன.

மனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும்


இடையிலான வேறுபாடுகள்

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித


உரிமைகள் என வரையறுக்கலாம். உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து
வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒரு மனிதன்
சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான அம்சங்கள் என வரையறுக்கலாம்.
இது செயற்பாட்டில் இன்னொருவருடைய செயற்பாடுகளைப் பாதிக்கக்
கூடாததாகவும் இருத்தல் வேண்டும். மனிதன் தனது இயற்கையான தேவைகளை
நிறைவேற்றிக் கொள்வதற்காகவுள்ள வழிமுறைகள் என்றும் வேறு வகையில்
கூறலாம். ஆரம்ப காலங்களில் மனிதன் கட்டுப் பாடற்ற பூரணத்துவமான
உரிமைகளை அனுபவித்து வந்தான். காலம் செல்லச்செல்ல சனத்தொகை
வளா்ச்சி அதிகரிப்பினால் வளங்கள் அருகி வரத் தொடங்கியதன் விளைவாக
மனிதன் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிப்பதில் தடைகளும்
இடையூறுகளும் ஏற்படத் தொடங்கின. இதன் காரணமாக மனிதன்- மனிதனாக
வாழ்வதற்கு அடிப்படையான உரிமைகள் யாவை என வரையறுக்க வேண்டிய
தேவை ஏற்பட்டது.
உலகம் முழுவதுலும் மனித உரிமைகளை அனுசரித்து நடந்து கொள்ளல்
தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அதிகளவிலான அழுத்த
அதிகரிப்பு இருந்து வருகின்ற போதிலும் உலகின் பல பாகங்களில்
சர்வதேசரீதியாக அங்கீ கரிக்கப்பட்ட நியமங்கள் மீ தான பாரிய மீ றுகைகள்
கட்டுமீ றியவையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்துவெளியிடுவதற்கான சுதந்திரம்,


சித்திரவதையிலிருந்தும், மனிதாபிமானமற்ற நடத்துகை என்பவற்றிலிருந்தும்
தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய
பொதுவிலமைந்த தரங்களை அடைவதற்கான உரிமைகள் எல்லா தேசிய
இனங்களையும் சேர்ந்த எல்லா மக்களும் அவற்றை எய்தும் வாய்ப்புக்கள் அணுக
முடியாத அளவு தொலைவிலேயே இன்னும் காணப்படுகின்றன. பொதுவான
உரிமைகளாக அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் ஐ.நா.சபையாலும்
ஏனைய நிறுவனங்களினாலும் வெளியிடப்பட்டுள்ள உவகளாவிய ரீதியில்
அமைந்த பொதுவான உரிமைகளை மனித உரிமைகள் என்ற வகுதியில்
உள்ளடக்கலாம். அத்தோடு மனித உரிமைகள் எனும்போது அனைத்து மக்களும்
அங்கீ கரிக்க்கூடிய சர்வதேச அங்கீ காரத்தைப்பெற்ற உரிமைகளாகும்.

ஆனால் அடிப்படை உரிமைகள் என்பது குறித்த நாட்டு அரசியல் யாப்பினால்


உருவாக்கப்பட்ட உரிமைகளாகும். இவ் அடிப்படை உரிமைகளானது மீ றப்பட்டால்
உள்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கமைய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்
செய்தோ அல்லது அது தொடர்பான நிறுவனங்களில் முறைப்பாடு செய்தோ
நிவாரணம் பெற்றுக் கொள்ளமுடியும்.

அதேநேரம் பொதுவான மனித உரிமைகள் மீ றப்பட்டால் உள்நாட்டில் நிவாரணம்


பெற முடியாது.
தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை
இக் கட்டுரை தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை எவ்வாறு பேணப்படுகிறது என்பது
பற்றியதாகும். தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் உரிமை கால அடிப்படையிலும்,
உள் பிரிவுகள் அடிப்படையிலும் பெரிதும் வேறுபடுகிறது.

பண்டைத் தமிழகத்தில் தமிழகத்தில் பெண் உரிமைகள் ஓரளவு பேணப்பட்டது


என்றும், இடைகாலத்தில் அது பறிக்கப்பட்டு, தற்காலத்தில் மீ ண்டும்
உறுதிசெய்யப்படுவதென்பது ஒரு பார்வை. இதை மறுத்து தமிழ்ச் சமூகத்தில்
பெண்கள் தொடர்ந்து ஆண் ஆதிக்கதுக்கு உட்பட்டே இருந்தனர் என்றும்
தற்காலத்திலேயே பெண் உரிமைகளில் பெரும் மாற்றம் நிகழுகின்றது என்பதும்
இன்னோர் பார்வை.

பண்டைத் தமிழ் சமூகத்தில் பெண் உரிமை

சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் பெண் புலவர்காள்


செய்யப்பட்டவை. மொத்த புலவர்களுடன் ஒப்புடுகையில் பெண்களின் பங்கு மிகச்
சிறிதே. எனினும் இது ஒரு பெண்கள் அக்கால சமூகத்தில் கல்வி, கலைகள்
ஆகியவற்றில் மேன்மை பெறமுடியும் என்பதைக் காட்டுகிறது.

தமிழ்ச் சமூகத்தில் உள்ள பெண் தெய்வ வழிபாடும், பெண்கள் இழிவு நிலையில்


வைத்திருக்கப்படவில்லை என்பதற்கு சான்றாக கொள்ளப்படுகிறது.
பெரும்பான்மைச் சமயங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டை இறையை
ஆணாக மட்டும் சித்தரிக்கையில், பெண் தெய்வ வழிபாடு ஒரு வேறுபட்ட
சிந்தனையை சுட்டி நிக்கிறது.

இவற்றை விடுத்து பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமைகள் அவ்வளவு


மேசமாக இருக்கவில்லை என்பதற்கு குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை
திணைகளைச் சாந்த பெண்கள் பொருள் ஈட்டுவதில் முக்கிய பங்களித்தமை
சுட்டப்படுகிறது. இந்த "நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம் ஆண் பெண் வாழ்வு
சமத்துவமாகத்தான் இருந்ததென்று தெரிகின்றது. குறவர்கள் வேட்டையாடப்
போவதுபோலக் குறத்திகள் குறிசொல்லுவதற்கும், மலைபடு திரவியங்களை
விற்பதற்கு புறப்பட்டு விடுவார்கள். மீ னவர்கள் மீ ன் பிடிக்கச் செல்லுவார்கள்.
மீ னவப் பெண்கள் மீ ன்களைக் கொண்டு போய் விற்பனை செய்து வேறு
பண்டங்களை வாங்கி வருவார்கள். முல்லைநில ஆயார்கள் மாடு ஆடுகளைப்
பாதுகாப்பார்கள்; ஆய்ச்சியர்கள் தயிர், பால், வெண்ணெய் நிலங்களுக்குக்
கொண்டுபோய் விற்பனை செய்து வருவார்கள்."." [1]

உயர் சாதிகளிடம் பெண்ணைக் கூடிய கட்டுப்பாட்டுகுள் வைத்தினர். "பெண்கள்


ஆண்களுக்கு அடங்கி நடப்பதே நீதி - கற்பு - இல்லற தர்மம் ஏன்று கருதப்பட்டது."

தொல்காப்பியத்தில் பெண் அடிமைத்தனம்


அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப

"பயமும் நாணமும் அறியாமையும் முற்பட்டு நிற்றல் எப்பொழுதும் பெண்களுக்கு


உரிய குணம்".[2]

முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை


எண்ணரும் பாசைறைப் பெண்ணொடு புணரார்

திருக்குறளில் பெண் அடிமைத்தனம்

பொத்மறையாக கருதப்படும் திருக்குறளிலும் திருவள்ளுவர் "பெண்கள்


இல்லறத்தை நன்றாக நடத்துவதற்குத்தான் உரியவர்கள்; பொது வாழ்க்கையில்
பங்குகொள்ள உரியவர்கள் அல்லர் என்றுதான் கருதுகிறார்."[3]

இல்லாள்கண் தாழ்ந்து இயல்பின்மை எஞ்ஞான்றும்


நல்லாருள் நாணுத் தரும்
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும், மற்ற எஞ்ஞான்றும்
நல்ல்லார்க்கு நல்ல செயல்
நட்டார் குறைமுடியார், நன்றுஆற்றார் நல்நுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்

அனைத்துலக காணாமற்போனோர்
நாள்
அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared)
ஆகஸ்ட் 30 ம் நாளன்று உலகெங்கும் அநுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல
நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லாது பாதுகாப்புப் படையினராலோ
பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த
ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின்
உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-
Disappeared, FEDEFAM) என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன்
அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து
இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச்


சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச்
சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச்
செயற்படுகின்றன. "அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின்
சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து
விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும்
உதவுகிறது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய


நாடுகள் அமைப்பு
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பானது ஐக்கிய நாடுகளின்
சர்வதேச அமைப்பாகும். இது மனித உரிமை மீ றல்களைக் கையாள்வதற்காக
உருவாக்கப்பட்டதாகும்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையானது 15 மார்ச் 2006 இல் தீர்மானிக்கப்பட்டதன்


படி புதியதோர் உருவாக்கப்பட்டது. இதில் 191 பேர் கொண்ட பொதுச்சபையில் 170
பேரின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்கா,
மார்ஷல் தீவுகள், பலவு மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இவ்வமைப்பானது
மனித உரிமைமீ றல்களைகளில் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு
அதிகாரங்கள் போதாதிருப்பதாக் கூறி எதிர்த்து வாக்களித்தன. பெலாரஸ், ஈரான்
மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இவ்வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
மேலும் 7 நாடுகள் இக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.

அமைப்பின் உட்கட்டமைப்பு

47 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் அமைப்பானது முன்னைய 53


இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் கமிஷனை மாற்றீடு செய்துள்ளது. இந்த
47 இருக்கைகளும் பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. 13 -
ஆபிரிக்காவிற்கும். , 13 - ஆசியாவிற்கும், 6 - கிழக்கு ஐரோப்பிய நாடுகளிற்கும், 8 -
இலத்தீன் அமெரிக்காவிற்கும், 7 - மேற்கு ஐரோப்பாவிற்கு ஏனைய நாடுகளிற்கும்
பகிர்ந்தளிக்கபடுகின்றது.

இந்த அமைப்பானது 16 ஜூன் 2006 இல் வேலைகளை ஆரம்பித்துள்ளது.


பன்னாட்டு மன்னிப்பு அவை

சர்வதேச மன்னிப்பு சபையின் சின்னம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அறிக்கையில்


வெளிப்படுத்தப்பட்டவாறும் அது போன்ற பிற சாசனங்களில் வெளிப்படுத்தவாறும்
மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட
ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International)
ஆகும். இவ்வமைப்பானது ஐக்கிய இராச்சியத்தில் 1961 ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச மன்னிப்புச் சபை உலகளாவிய ரீதியில்
நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளையும் உலகில் சர்வதேச ரீதியா
ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும் ஒப்பிட்டு அவ்வாறு மனித
உரிமைகள் மதிக்கப்படா இடங்களில் அதை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை
விடுக்கப்படும். மனித உரிமைகளை மீ றுபவர்களுக்கு மக்களூடாக
இக்கருத்துக்களை முன்னெடுத்துச் சென்று அழுத்தம் கொடுக்கப்படும்.

இயல்புரிமை
இயல்புரிமை (natural right) என்பது உலகம்தழுவிய உரிமைகள் தொடர்பான ஒரு
கருத்துருவாகும். இந்த உரிமை, சட்டங்களிலோ நம்பிக்கைகளிலோ தங்கியிராமல்
உயிரினங்களுக்கு இயல்பாகவே அமைந்தது எனப்படுகின்றது. இயல்புரிமைக்
கோட்பாட்டில் இருந்து பெறப்பட்ட இயற்கை விதிக் கோட்பாட்டின் உள்ளடக்கம்
இயற்கையாக முடிவாக்கப்படுவதால் இது உலகம் முழுதும் பொருந்துகிறது.
ஐரோப்பாவில் அறிவொளிக் (Enlightenment) காலத்தில், இயற்கை விதி, அரசர்களின்
தெய்வக
ீ உரிமைகளுக்கு எதிராக இருந்ததுடன், இதுவே செந்நெறிக்காலக்
குடியரசிய அடிப்படையில், சமூக ஒப்பந்தம், நேர்ச் சட்டம், அரசு என்பவற்றை
நிறுவுவதை நியாயப்படுத்தும் ஒரு வாதமாகவும் விளங்கியது. மாறாக, இயல்பு
உரிமைக் கருத்துரு, இத்தகைய அமைப்புக்கள் இருப்பதை எதிர்த்து
வாதிடுவதற்கும் அராசகவாதிகளால் பயன்படுத்தப்பட்டது.

இயல்புரிமை என்பது அதனை அரசுகளோ அல்லது சமுதாயமோ


நடைமுறைப்படுத்தா விட்டாலும் அது இயல்பாகவே இருப்பதாகக் கருதப்படும்.
ஆனால், சட்டம்சார்ந்த உரிமை என்பது மக்களின் நன்மைக்காக அரசினாலோ,
சமுதாயத்தினாலோ உருவாக்கப்படுகிறது. எது இயல்புரிமை எது சட்ட உரிமை
என்பது மெய்யியலிலும், அரசியலிலும் ஒரு முக்கியமான கேள்வியாகும். இக்
கருத்துருவை விமர்சிப்பவர்கள், மனிதனுக்கு உள்ள எல்லா உரிமைகளுமே சட்ட
உரிமைகள்தான் என்கிறார்கள். கருத்துருவை ஆதரிப்பவர்களோ அமெரிக்க
விடுதலைப் பிரகடனம், உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பன
இயல்புரிமையை ஏற்றுக்கொள்வதனால் ஏற்படும் பயனை விளக்குகின்றன
என்கின்றனர்.

மனித உரிமை என்பதன் எண்ணக்கரு இயல்புரிமையில் இருந்து


பெறப்பட்டதாகும். சிலர் இவ்விரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என்கின்றனர்.
வேறு சிலரோ இயல்புரிமையுடன் தொடர்புபடுத்தப்படும் சில அம்சங்களை
விலக்கிவைப்பதற்காக இவ்விரு சொற்களும் வெவ்வேறு பொருள்களைக்
குறிக்கவேண்டும் என்கின்றனர். இயல்புரிமை என்பது, அரசு அல்லது வேறு
பன்னாட்டு அமைப்புக்களின் அதிகாரத்தினால் இல்லாமலாக்க முடியாத
தனியொருவருடைய உரிமை எனக் கருதப்படுகிறது. மனிதன் அல்லாத ஏனைய
விலங்குகளுக்கும் இயல்புரிமை உண்டு என்னும் எண்ணம், 20 ஆம் நூற்றாண்டில்,
மெய்யியலாளர்கள், சட்ட அறிஞர்கள் போன்றோரிடையே பிரபலமானது.

ஊடகச் சுதந்திரம்
ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல்
தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். சட்டமன்றம், நிர்வாகம்,
நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக
கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரம் ஊடகம் சமூகத்தின் முக்கிய
அங்கமாக கருதப்படுகிறது.
வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது.
நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற
நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட
கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும்
கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு
இடைப்பட்ட நாடாக உள்ளது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்


எவ்வித தணிக்கையும் இன்றி ஒருவரது கருத்தை வெளிப்படுத்துவதற்கான
சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். கருத்தை
வெளிப்படுத்துவதற்கான உரிமை பல்வேறு மனித உரிமைக் ஆவணங்கள் ஊடாக
அனைத்துலகச் சட்டடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்துலக
மனித உரிமைகள் பிரகடனத்தின் 19 ஆவது பிரிவும், மனித உரிமைகளுக்கான
ஐரோப்பிய மாநாட்டின் 10 ஆவது பிரிவும் இத்தகைய ஆவணங்களுள் அடங்கும்.
எனினும் பல நாடுகளில் இது முறையாக நிறைவேற்றப்படுவதில்லை.

பேச்சுச் சுதந்திரம் என்னும் தொடர் பல சமயங்களில் கருத்து வெளிப்பாட்டுச்


சுதந்திரம் என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் கருத்து
வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, வாய்ப்பேச்சை மட்டும் குறிப்பது அல்ல. கருத்து
வெளிப்பாடு வேறு பல வழிகளிலும் இடம்பெற முடியும்.

கூடல் சுதந்திரம்
கூடல் சுதந்திரம் என்பது பிற மனிதர்களுடன் கூட, கூடி கருத்து வெளிப்படுத்த,
பரப்ப, செயற்படுவதற்கான சுதந்திரம் ஆகும். இது ஒரு அடிப்படை மனித
உரிமையாக, அரசியல் சுதந்திரமாக, குடியுரிமையாக கருதப்படுகிறது. கூடல்
சுந்தந்திம், வன்முறையற்ற எதிர்ப்புப் போராட்ட உரிமையுடன் சேர்த்து
பாக்கப்படுவதுண்டு.

சுயநிர்ணயம்

சுயநிர்ணய உரிமை
சுயநிர்ணய உரிமை என்பது வரலாற்று ரீதியாக வளர்ந்த ஒன்றுதான். தேசிய
ஒடுக்கு முறையிலிருந்து விடுபட்டு தனி அரசை அமைத்துக் கொண்டு வாழும்
உரிமைக்கான போராட்டம் முதன் முதலாக ஐரிஸ் மக்களிடமிருந்தே வெடித்தது.
அந்த ஐரிஷ் மக்களின் போராட்டம் தான் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை
உலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தது. 1776- ல் பிரித்தானியாவிற்கெதிராக
எழுற்சி பெற்ற அமெரிக்க சுதந்திரப்போர் ஒருதேசியம் தனது சொந்தப்
போராட்டத்தின் மூலம் சுய நி;ணயஉரிமையைவென்றெடுக்க முடியும் பாடத்தை
உலகத்திற்கு முதற்தடவையாகப் புகட்டியது. 1867-ல் கனடாவில் சமஷ்டி
ஏற்படுத்தப்பட்டது. இதுவே உலகின் மிகப்பழமையான சமஷ்டி என
கருதப்படுகிறது. இது சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதை
மாத்திரமல்ல இவ்வாறு இணக்கமான முறைகளில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு
காண்பதையும் உள்ளடக்கிய ஒன்று என்ற உன்மையை உலகிற்கு
முதல்தடைவையாக உணர்த்தியது.

1896-ம் ஆண்டு கார்ல் கவுஸ்ட்கி தலமையில் லண்டனில் கூடிய சர்வதேச


காங்கிரஸ் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீ கரித்து தீர்மானம்
நிறைவேற்றியது. 1906-ல் சுவடனிலிருந்து
ீ நோர்வே சர்வசன வாக்கெடுப்பின்
மூலம் பிரிந்தது. சமாதான முறையிலே இருநாடுகள் சுயநிர்ணய உரிமையைக்
கையாண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும். இதனால் சுய நிர்ணய உரிமை என்பது
ஜனநாயகத்தின் இன்றியமையாத ஒரு ஆயுதமாக பரவலாகக் கருதும் மனப்பாங்கு
வளர்ந்தது. 1917-ல் ரஸ்யாவில் இடம்பெற்ற ஒக்டோபர் புரட்சி மனித குல
வரலாற்றில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. முதற்தடையாக தொழிலாளர்
தலைமையில் சோஷலிசப் புரட்சி ஒன்று வெற்றி பெற்றது. ஆட்சிக்கு வந்த
லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கொலனிய மக்களின் விடுதலைப்
போராட்டத்தையும் சுயநிர்ணய உரிமையையும் ஆதரித்துக் குரல் கொடுத்தது.

தொடர்ந்து முதலாம் உலக யுத்த முடிவிலே தோல்வியடைந்த நாடுகளின்


பிடியில் இருந்த பல நாடுகள் விடுதலையைப் பெற்றன. இந்நாடுகளின்
விடுதலையை துரிதப்படுத்தக் கூடியவிதத்திலும் போருக்கு பிந்திய நிலைமையை
நெறிப்படுத்தும் வகையிலும் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வ+ட்ரோ
வில்சன் 1918-ம் ஆண்டு தேசியங்களின் சுயநிர்ணய உரிமை உள்ளடங்கிய தனது 14
அம்ச திட்டத்தை முன் வைத்தார். இத்திட்டம் ஆசிய ஆபிரிக்க மக்களின்
ஆதரவைப்பெற்றது. யுத்தத்தின் முடிவில் 1919-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட
வார்செயில் ஒப்பந்தத்திலும் சுயநிர்ணய உரிமை பிரகடனப்படுத்தப்பட்டது.
இக்காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட தேசங்களின் லீக் தேசிய சுய நிர்ணய
உரிமையை அங்கீ கரித்தது. 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை சுயநிர்ணய உரிமைக்கு
சட்ட வரையறைக்கு உள்ளடக்கப்பட்ட நிறுவனப் படுத்தப்பட்ட அந்தஸ்த்தை
வழங்கியது.

சுயநிர்ணயம் என்பதற்கு பலர்பலவிதமாக வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள்.


அவற்றின் முக்கியத்தவம் கருதி அவைகளை நோக்குவோம். ருசியப் புரட்சியை
தலமை தாங்கி நடத்திய லெனினே சுயநிர்ணய உரிமை என்பதற்கு முதலில்
திட்டவட்டமான வரைவிலக்கணத்தை கொடுத்தவர்;.அவர் சுயநிர்ணயத்தை
‘தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது அரசியல் ரீதியில் சுதந்திரத்தை
குறிக்கும். அடக்கியொடுக்கப்படும் தேசிய இனத்திடமிருந்து அரசியல் ரீதியாக
பிரிந்து செல்லும் உரிமையைக் குறிக்கும். குறிப்பாக அரசியல் ரீதியாக பிரிந்து
செல்லும் உரிமையைக் குறிக்கிறது. குறிப்பாக அரசியல் சனநாயகத்திற்கான
இக்கோரிக்கை பிரிந்து செல்வதற்கான ப+ரண உரிமையையும் இவ்வாறு பிரிந்து
செல்வதற்கு பிரிந்து செல்லும் தேசிய இனத்தின் கருத்தை அறிவதற்கான
வாக்கெடுப்பை நடாத்துவதற்கான உரிமையையும் குறிக்கும்’ ஆயினும்
சுயநிர்ணயம் என்பது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தன் சமுதாய
அமைப்பைத்தீர்மானிக்கவும் பேணவுமான உரிமையைக் குறிக்கிறது. ஒரு
அரசமைப்பின் கீ ழ் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இணைந்து ஒரே
நாடாக வாழ்வதா அல்லது தனித்தனி நாடுகளாகப் பிரிவதா என்று தீர்மானிக்கும்
உரிமை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உண்டு. எனப் பொதுவாக
சுயநிர்ணயத்திற்கு விளக்கம் கூறுவர். ஏலிசபெத் ஜமீ லா கோன் என்பவர்
விளக்கியவாறு சுயநிர்ணய உரிமை என்பதனை சுயம் - நிர்ணயம் - உரிமை (Right –
Self – Determination) என மூன்று தனித் தனிச் சொற்களாகப் பிரித்தால் அதன் அர்த்தம்
விளங்கும்.

சுயம் - என்பது ஒரு தேசிய சமூகம் சுயமாக தனது தலைவிதி எதுவாக


இருக்காலாம், தான் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியல் வடிவம் எதுவாக
இருக்கலாம் என்பதைப் பற்றி தானே சுயமாக முடிவெடுப்பது மட்டுமல்ல,
அம்முடிவுகளில் தலையிடும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது என்பதையும்
குறிக்கிறது.

நிர்ணயம் - என்பது அதனை நிர்ணயிப்பது வேறு யாருமல்ல அந்தந்தத் தேசிய


சமூகங்களே என்பதைக்குறிக்கிறது

உரிமை - என்பது இது ஒவ்வொரு தேசியத்திற்கும் உள்ள பிற்ப்புரிமையே தவிர


சலுகை அல்ல என்பதைக் குறிக்கிறது.

ஆகவே சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய சமூகமும் தனது அரசியல்


தலைவிதியை, தான் சுதந்நிரமாக வாழும் அரசியல் வடிவத்தை தானே
தீர்மானிக்கும் உரிமை உடையது என்பதைக்குறிக்கிறது. இது பிரிந்து போகும்
உரிமையை உள்ளடக்கியதாகும்.

உள்ளக சுயநிர்ணய உரிமையும் வெளியக சுயநிர்ணய உரிமையும்

முன்னர் ஐரோப்பிய கவுன்ஸிலின் சித்திரவதை தடுப்புக் குழுவின்


தலைவராகவும், பின்னர் யூகோஸ்லோவியாவில் இடம்பெற்ற
குற்றச்செயல்களை விசாரிப்பதற்கு ஐ.நாவினால் உருவாக்கப்பட்ட சர்வதேச
நீதிமன்றத்தின் (International Criminal Tribunal for the Former Yugoslavia) தலைவராகவும்
இருந்த புளோரன்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் அண்டனியோ கெசாசி (Antonio
Cassese) தனது மக்களின் சுயநிர்ணய உரிமை (Self Determination of people) என்ற நூலில்
சுயநிர்ணயஉரிமையை உள்ளக சுயநிர்ணய உரிமை, வெளியக சுயநிர்ணய உரிமை
என இரு வகையாகப் பிரித்தார். உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து
செல்லாமல் அரசுக்குள்ளேயே அதில் வாழும் சமூகங்களின் பிரச்சினையைத்
தீர்த்துக் கொள்ளும் உரிமையைக் குறிக்கின்றது. உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற
சொற்பதத்தை பிரயோகிக்காமல் பல நாடுகள் இக்கருத்தையே இதுவரை
வலியுறுத்தி வந்திருக்கின்றன. சீனா ஒற்றையாட்சியின் கீ ழ் சுயநிர்ணய உரிமை
என்ற கருத்தை 1950 களிலிருந்தே முன்வைத்து வருகிறது.

நெல்சன் பீரி (Newlson Peery) தேசியங்களின் சுயநிர்ணய உரிமையைப்


பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாட்டின் அளவைக்கொண்டு ஒவ்வொரு
தேசியத்தினதும் எதார்த்த தன்மைக்கேற்ப அதனை மூன்று பிரிவாகப் பிரித்து
அவற்றின் உரிமைகளை வரையறுத்திருக்கின்றார்.

முதலில் தேசியங்களை Nation என்றே அவர் குறிப்பிடுகிறார். பிரிந்து


செல்லக்கூடிய பிரதேச அடித்தளத்தைக்கொண்ட சமூகங்களுக்கு பிரிந்து செல்லும்
உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு என்கிறார். (உதாரணம்
இலங்கையின் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள்)

இரண்டாவதாக பிரிந்து செல்லக் கூடிய சூழுல் இல்லாத ஆனால் ஒரு


பிரதேசத்திலாவது அடர்த்தியாக வாழுகின்ற எண்ணிக்கையில் குறைவான
தேசியங்களே சிறுபான்மை தேசிய இனம்(Minority Nationality) எனக்
குறிப்பிட்டுள்ளார். (உதாரணம்:- மலையகத் தமிழ் மக்கள்) இவர்களுக்கு பிரிந்து
செல்லும் வாய்ப்பு இல்லாத போதும் தாம் வாழும் பிரதேசத்தில் சுய ஆட்சி அல்லது
சுய நிர்வாகம் போன்ற ஏற்பாடுகளை அமைத்துக்கொன்டு வாழும் சுயநிர்ணய
உரிமை உண்டு என விபரிக்கின்றார்.
மூன்றாவதாக, எந்த ஒரு பிரதேசத்திலும் அடர்த்தியாக வாழாமல் ஆங்காங்கே
பரந்து வாழும்தனித்துவமான தேசியங்களையும் (உதாரணம் இலங்கையில்
வாழும் பறங்கியர்) ஒரு பிரதேசத்தில் செறிவாக வாழ்ந்து சுயாட்சி அல்லது சுய
நிh வாக ஏற்பாட்டின் கீ ழ் வாழ்ந்தாலும் அதற்கு வெளியே பரந்து வாழ்கின்ற
மக்களையும் (வடக்கு- கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற ஈழத்தமிழர்) தேசிய
சிறுபான்மையினர் (National minority) எனக்குறிப்பிட்டு இவர்களுக்கு சம உரிமையை
உறுதிப்படுத்தும் சிறப்புச் சட்டங்களும் ஏற்பாடுகளும் வழங்கப்பட வேண்டும்
என்றும். அவற்றைப் பெறும் சுயநிர்ணய உரிமை இவர்களுக்கு உண்டு எனவும்
இவர் குறிப்பிடுகிறார்.

பிரிந்து போகும் உரிமை என்றால் பிரிவினையையே குறிக்கும் என்ற தவறான


எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. விவாகரத்துக்கான உரிமை விவாகரத்துச்
செய்யுமாறு எவரையும் வற்புறுத்துவதில்லை. அந்த உரிமை இருப்பதனால்
பெண்களுக்குச் சமுதாயத்தில் கூடிய பாதுகாப்பு ஏற்படுகிறது. தாங்க முடியாத
துன்பமிக்க தாம்பத்தினின்று விவாகரத்து ஆணுக்கும் பெண்ணுக்கும்
விடுதலையைத் தருகின்றது. விவாகரத்துச் செய்வதற்கான உரிமை ஒரு
சமத்துவமான நியாயமான உறவுக்கு உதவுகிறது. கள்ள உறவுகளும்,
தற்கொலைகளும், கொலைகளும், வன்முறைகளும் நிகழாது தடுக்க உதவுகிறது.
விவாகரத்துச் சாத்தியம் என்ற காரணத்திற்காக மட்டுமே யாரும் அதை
நாடுவதில்லை. அது போன்றே பிரிந்து போகும் உரிமை இருப்பதால் மட்டுமே ஒரு
தேசிய இனம் பிரிந்து போய்விடாது. அந்த உரிமை இல்லாதவிடத்து ஒரு தேசிய
இனத்தின் உரிமைகள் மறுக்கப்படுமாயின் அந்த தேசிய அந்த உரிமைக்காக
மட்டுமின்றி பிரிவினையை செயற்படுத்தவும் போராடுகிறது. தனக்கு மறுக்கப்பட்ட
சுயநிர்ணய உரிமையை அது போராடி வென்றெடுப்பதோடு மட்டுமல்லாது
பய்னபடுத்தியும் விடுகிறது. சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் மூலம்
பிரிவினையைத்தடுக்க முனைவோர் இதை உணரவேண்டும்.

ஒரு தேசிய சமூகம் பிரிந்து செல்ல விரும்பும் போது அதற்கான அவசியம் அங்கு
நிச்சயமாக இருக்குமானால் அதற்கான வாய்ப்பும் அதற்கான அகப் புறச்சூழலும்
சாதகமாக அமையுமானால் அது சாத்தியமாகும். ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல்
இரண்டு தேசியங்கள் ஒன்றாக வாழ்ந்து ஜனநாயக முறையில் பிரிந்து சென்றதை
உலக வரலாறு கன்டிருக்கிறது. சுவடனில்
ீ இருந்து நோர்வே பிரிந்தமை இதற்கான
பழைய உதாரணமாகும். செக்கும் ஸ்லோவாகியாவும் ஜனநாயக முறையில்
பிரிந்து சென்றது அண்மைக்கால உதாரணமாகும். ஒடுக்கும் ஒரு தேசியத்திற்கு
எதிரான போராட்டத்தில் வெற்றிகரமாக பிரிந்து சென்று தனியரசை அமைத்துக்
கொண்ட பல தேசிய சமூகங்கள் உண்டு. பிரித்தானிய ஆட்சியிலிருந்து அமெரிக்கா
பிரிந்தது முதல் அண்மைக் காலத்தில் எரிதிரியாவும், கிழுக்குத்தீமோரும் பிரிந்து
தனி நாடுகள் அமைந்தமை வரையிலான பல உதாரணங்கள் இதற்குண்டு.
இதைத்தவிர சமஸ்டி முறையில் தேசியங்கள் தேசிய ஒடுக்குமுறைக்கு தீர்வு
கண்ட பல உதாரணங்களை உலகம் கண்டிருக்கிறது. கனடாவின் சமஸ்டி முறை
(இங்கு கியூபெக் மாநிலத்தின் பிரச்சினை இன்னும் முழுமையாக
தீர்க்கப்படவில்லை) இந்தியாவின் மாநில ஆட்சி முறை (இங்கும் மாநில
அரசுகளுக்கும் மத்திய அரசுகளுக்கும் மாநில அரசுகளுக்குமிடையிலான உறவில்
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல இன்னுமுள்ளன) போன்றவை இதற்கு சல
உதாரணங்கள். சுவிட்சர்லாந்திலுள்ள கன்டன் முறை அந்நாட்டுக்கே உரிய
முறையில் இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்துள்ளது. அதே போல்
செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சில தேசியங்க்கள் மீ ண்டும் இணைந்துள்ளன
கிழக்கு ஜேர்மனி மேற்கு ஜேர்மனி என பிரிக்கப்பட்டிருந்த ஜேர்மனி மீ ண்டும்
ஒன்றிணைந்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இதில் உள்ள அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால், சுயநிர்ணய உரிமையைப்


பயன்படுத்துவது என்பது ஓர் ஒற்றை வழிப்பாதை அல்ல என்பதுதான். ஒரு தேசிய
சமூகம் மாத்திரம் தீர்மானித்து அதனை அமுல்படுத்தும் நிலைமை பொதுவாக
இருப்பதில்லை. ஒடுக்கப்படும் ஒரு தேசியம் அதற்கெதிரான போராட்டத்தைத்
தொடங்கும் பொழுது அல்லது பிரிவினைக் கோரிக்கையை முன் வைக்கும்
பொழுது அல்லது பிரிவினைக் கோரிக்கையை முன் வைக்கும் பொழுது ஒடுக்கும்
தேசியத்தின் மத்தியிலிருந்து பெரும் தேசிய வாதம் வெறித்தனமாக கிளம்புகிறது.
தேசிய ஒடுக்குமுறை மேலும் அதிகரிக்கிறது. இந்நிலைமைகளின் போது
ஒடுக்கப்படும் தேசியங்களுக்கு நியாயம் வழங்கக்கூடிய திட்டவட்டமான ஏற்பாடு
சாவதேச அரங்கில் இன்று வரைகிடையாது.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் கூட சுயநிர்ணய உரிமையைப்


பிரிவினைக்குச் சாதமாகப் பயன்படுத்தக்கூடிய சட்ட வாய்ப்புக்கள் அரிதாகவே
உள்ளன. சாராம்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசுகளையே
பிரநிதித்துவப்படுத்துகிறது. ஓவ்வொரு நாட்டிலும் எந்தெந்தத் தேசியம்
மேலாதிக்கம் செலுத்துகிறதோ அந்தந்தத் தேசியங்களின் கருத்தே ஐக்கிய நாடுகள்
சபையில் எதிரொலிக்கிறது.

பிரிவினைக் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையாகும்


இயல்பானவையாகவும் இருப்பதில்லை.

சுயநிர்ணய உரிமைபற்றிய ஐக்கியநாடுகள் சபை மற்றும் உலகளாவிய கருத்தும்,


விமர்சனங்களும்.
1960-ம் ஆண்டு டிசம்பர் 14 ம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நிறைவேற்றிய
1514(XV) இலக்க தீர்மானம் அதாவது ‘காலனிய நாடுகளுக்கும் மக்களுக்கும்
சுதந்திரம் வழங்குவதற்கான பிரகடனம் | சுயநிர்ணய உரிமையின் ஜீவத்துடிப்புக்கு
பலத்த அடியைக்கொடுத்துள்ளது. இப்பிரகடனத்தின் இரண்டாம் அலகு
‘தேசியங்கள் தமது அரசியல் அந்தஸ்த்து பொருளாதார சமூக கலாச்சார
அபிவருத்தி தொடர்பாக சுதந்திரமாக தீர்மானம் எடுப்பத்கான சுயநிர்ணய உரிமை
அனைத்து மக்களுக்கும் உண்டு’ எனக்கூறுகிறது. ஆனால் பிரதேச உரிமையும்
பிரிந்து சென்று அரசை அமைக்கும் உரிமையும் அதில் கைவிடப்பட்டுள்ளது. அதே
சமயம் அதன் 6 ம் அலகு ‘தேசிய ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும்
சீர்குலைப்பதற்காகச் செய்யப்படும் எந்த ஒரு முயற்சியும் ஐக்கிய நாடுகள்
சாசனத்திற்கு முரணானது’ என பிரகடனப்படுத்துகிறது. இதன் மூலம் பிரிந்து
செல்லும் உரிi மையை முற்றாகவே அது நிராகரித்துள்ளது.

நாடுகள் கூட தத்தம் தேசிய நலனை முன்வைத்தே சுயநிர்ணய உரிமைக்


கொள்கையை சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்தி வருகின்றன. முதலாம் உலக மகா
யுத்தத்தின் போது சுயநிர்ணய உரிமையை முய்வைப்பதில் முனைப்பாக நின்ற
முதலாவது நாடு என்ற பெருமை அமெரிக்காவுக்கு உண்டு. அமெரிக்க ஜனாதிபதி
வில்சன் இவ்விடையத்தில் ஆற்றிய வரலாற்றுப்பங்களிப்பு இன்றும்
நினைவுகூறப்படுகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா தனக்கு சாதகமான
சமயங்களில் மாத்திரமே இவ்வுரிமையை அங்கீ கரிக்கிறது. பல தேசியங்கள்
வாழும் ஒரு நாட்டில் எந்த ஒரு தேசியமும் பிரிந்து செல்லக்கூடாது என்ற
கொள்கையை வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் சீனாவுக்கெதிராக
தைவானுக்கு ஆதரவு நல்கி வருகிறது. கொலனித்துவ அடக்குமுறைக்கு
உள்ளாகியிருக்கும் நாடுகளுக்கு மாத்திரமே சுயநிர்ணய உரிமை உண்டு எனவும்
ஒருநாட்டுக்குள் வாழும் தேசியங்களுக்கு அவ்வுரிமை கிடையாது என்றும் ஐக்கிய
நாடுகள் சபையில் பிடிவாதமாக கூறிவரும் இந்தியா, திபெத் பௌத்த மதத்
தலைவரான தலாய்லாமாவை வைத்துக் கொண்டு திபெத் சீனாவிலிருந்து
பிரிவதை ஆதரிப்பதாக கூறிவருகிறது. சீனாவில் வாழும் மொத்த சிறுபான்மை
மக்களின் தொகை ஐந்து சதவதத்திற்கும்
ீ குறைவானதாகும். இதில் பெரும்பாலான
தேசியங்கள் பிரிந்து செல்லக்கூடிய சூழலில் வாழவில்லை. ஆயினும் அங்கு
வாழும் சின்னஞ்சிறிய தேசியங்களுக்குக் கூட சுய நிர்வாக அலகுகள்
வழங்கப்பட்டிருக்கின்றன. உலகின் மிகச்சிறிய தேசியம் எனக் கருதப்படும்
ஹோசே (Hoche)மக்களுக்கு (இவர்களது தொகை 2000 பேர் மாத்திரமே) கூட நிர்வாக
அலகு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் பிரிந்து செல்லக்கூடிய
சூழலில் உள்ள திபெத்திய மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை சீனா
அங்கீ கரிக்க மறுக்கிறது.

ஆயினும் யூகோஸ்லோவியா பிரச்சினையில் அடிப்படை மனித உரிமைப்


பிரச்சினையை சுயநிர்ணய உரிமையுடன் இணைத்து அவற்றின் பிரிந்து செல்லும்
உரிமையை அங்கீ கரித்தன. முன்னைய யூகோஸ்லாவியாவில் இழைக்கப்பட்ட
குற்றச் செயல்கள் தொடர்பான சர்வதேச நீதி விசாரணை ஆணைக்குழுவின்
தலைவராக இருந்த அன்டனியோ கசாசி ~மக்களின் சுயநிர்ணய உரிமை| என்ற
பெயரிலே 1995-ல் வெளியிட்டட நூலில் கொலனிகளுக்கு மாத்திரமே பிரிந்து
செல்லும் உரிமை உண்டு. அதே வேளை ஒரு நாட்டுக்குள் வாழுகின்ற தேசியங்கள்
பிரிந்து செல்லாமல் தமது கலாச்சார, பொருளாதார, அரசியல் நிலமைகளை தமது
சுய விருப்பத்தின் பேரில் அமைத்துக்கொண்டு வாழும் உள்ளக சுயநிர்ணய உரிமை
மாத்திரமே உண்டு எனவும் வரையறுத்துள்ளார். இதன் மூலம் பிரிந்து செல்லும்
உரிமை உட்பட தமது தலைவிதியை தாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை
உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமையை அந்த தேசியங்களுக்கு மறுத்துள்ளார்.
இவரது இந்தக் கோட்பாட்டையே ஐக்கிய நாடுகள் சபை இன்று ஏற்றுக்கொள்கிறது.
இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே மோலோங்கியிருக்கும் சுயநிர்ணய உரிமை
பற்றிய கருத்தானது விடுதலை கோரும் கொலனிகளுக்கும் அரசுகளுக்கும் உரிய
ஒன்றே தவிர தேசிய சமூகங்களுக்கு உரியது அல்ல என்பாதாகும். பல சமூக
ஆய்வாளர்களும் கூட இக்கருத்தைத்தான் இப்போது முனைப்பாக முன்வத்து
வருகிறார்கள். 1987 ல் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இக்கருத்தை
பகிரங்கமாக முன் வைத்தது.

இதுவரை காலமும் சயநிர்ணய உரிமையின் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத


அம்சமாகவே உள்ளக - வெளியக உரிமைகள் அங்கீ கரிக்கப்பட்டு ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்களைப்போல கரதப்பட்டன. சாராம்சத்தில் பிரிந்து செல்லக்கூடிய
சூழலைக் கொண்டுள்ள தேசியங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய
சுயநிர்ணய உரிமையும் பிரிந்து செல்ல இயலாத சூழலில் உள்ள மக்ளுக்கு பிரிந்து
செல்லாமல் தனக்குரிய அரசாங்க வடிவத்தை தேர்ந்தெடுக்கும் சுயநிர்ணய
உரிமையும் உண்டு என்பதையுமே அது குறித்தது. ஆனால் 1960 களுக்குப் பின்னர்
ஐக்கிய நாடுகள் சபை உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதன் அர்த்தத்தை
மாற்றியமைத்துள்ளது. ஒரு அரசுக்குள் வாழும் எந்தத் தேசிய சமூகமும் அது
பிரிந்து செல்லும் சூழுலில் வாழ்ந்தாலும் கூட அதற்கு பிரிந்து செல்லும் உரிமை
கிடையாது என திட்டவட்டமாக வரையறுக்கிறது. இதன் மூலம் சுயநிர்ணய
உரிமை என்ற கோட்பாட்டின் ஆத்மா கொலை செய்யப்பட்டிருக்கிறது.

ஏனெனில் தேசியங்களின் சுயநிர்ணய உரிமை என்பது அரசின் சுயநிர்ணய


உரிமையாக அர்த்தப் படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இறைமை பிரதேச
ஒருமைப்பாடு ஆகியவற்றில் தலையிடுவதற்கு பிற சக்திகளுக்கு உரிமை
கிடையாது எனவும் தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குலைப்பதற்கு எந்த ஒரு
தேசியத்திற்கும் உரிமை கிடையாது எனவும் ஐக்கிய நாடுகள் சபை
பிரகடனப்படுத்தியதன் மூலம் நாடுகளுக்கிடையிலான உறவுகளைச்
சமநிலைப்படுத்துவதில் ஒரு புதிய ஏற்பாட்டை அறிமுகப் படுத்தியுள்ளது.
ஆனால் அதற்கேற்ப ஒரு நாட்டுக்குள் வாழும் பல்வேறு
தேசியங்களுக்கிடையிலான உறவை சமநிலைப்படுத்தக்கூடியதான எந்த
ஏற்பாட்டையும் முன்வைக்கத்தவறியுள்ளது. உதாரணமாக ஒரு தேசியம் தனது
அரசினால் தனக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாகவோ தனக்கு காட்டப்படும்
பாரபட்சம் தொடர்பாகவோ தன்மீ து மேற்கொள்ளப்படும் ஒடுக்குமறைக்கு
எதிராகவோ முறையீடு செய்வதற்கும் நிவாரணம் பெறுவதற்கும் எந்த ஒரு
நிறுவனப்படுத்தப்பட்ட ஏற்பாட்டையும் ஐக்கியநாடுகள் சபை
கொண்டிருக்கவில்லை. இதனால் அரசுகள் மேற்கொள்ளும் தேசிய ஒடுக்கு
மறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு எந்த ஒர ஏற்பாடும்
இல்லாதிரப்பதுடன் ஒடுக்கும் தேசியங்களின் கரங்கள் பலப்படுத்தப்படுகின்றன.
சாராம்சத்தில் ஒடுக்கப்படும் தேசியங்கள் தம்மை ஒடுக்கும் தேசியங்களில் தங்கி
வாழும் நிலையே ஏற்பட்டுள்ளது.

சுயநிர்ணய உரிமையானது தன்னகத்தே புரட்சிகளையும் போராட்டங்களையும்


தோற்றுவிக்கக் கூடிய ஆற்றல் மிக்க வித்துக்களைக் கொண்டிருக்கிறது என்ற
உண்மையை மறைக்க இயலாது. அதற்காக அதனை உரு பயங்கரவாதக்
கோரிக்கையாக எவரும் முத்திரை குத்திவிட முடியாது. சிறு தேசிய சுமூகங்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது குரலுக்கு வலிமை சேர்க்கும் ஓர்
அடிப்படையை இவ்வுரிமை வழங்குகிறது. மறுபுறத்தில் ஒர தேசிய சமூகத்தின்
உரிமையை மற்றொன்று மீ றாமல் பரஸ்பர நல்லெண்ணம், சமத்துவம்
ஆகியவற்றின் அடிப்படையில் தேசியங்களுக்கிடைமயில் உளப்ப+ர்வமான
ஐக்கியம் ஏற்படுவதற்கு இவ்வுரிமை மாத்திரமே வழிகோலுகிறது.

இதனால் தான் 1998 நவம்பர் மாதம் 21 ம் திகதி முதல் 27 ந் திகதி வரை


யுனஸ்க்கோவினால் பாசிலோனா (Barcelona – Spain) நகரில் சுயநிர்ணய உரிமை
தொடர்பாக நடத்தப்பட்ட சர்வதேச நிபுணர்களின் மாநாடு விரிவான விவாதத்தின்
பின்னர் சுயநிர்ணய உரிமை தேசியங்களைப் பிளவுபடுத்துவதற்கு பதிலாக
தேசியங்களுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்பதற்கான ஓர் அடிப்டையை நல்கி
சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது என்ற முடிவுக்கு வந்தது. (UNESCO
CENTRE 1999) சமூக விஞஞானக் கண்ணோட்டத்தின் படி ஒவ்வொரு மனிதனுக்கும்
சில அடிப்படை மனித உரிமைகள் உள்ளன. தான் என்ன ஆடை உடுத்த வேண்டும்,
தான் என்ன உண்ண வேண்டும் என்பதையும் அதைவிட பேச்சுரிமை, கூட்டம்
கூடும் உரிமை, சுயவிருப்பத்தின் பேரில் திருமணம் செய்யும் உரிமை, தனக்கு
விருப்பமான மதத்தை தேர்ந்தெடுக்கவும் கைவிடவும் உள்ள உரிமை போன்ற பல
உரிமைகளைக் கொண்டிருக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அதே
சமயம் ஒருவர் மற்றவர் உரிமையை மீ றாமல் இருக்க வேண்டும். ஆனால்
சமூகத்தின் கூட்டுரிமை தனிமனித உரிமையைவிட மேலானது. சமூகத்தின்
நலன்பாதுகாக்கப் பட்டால் தான் தனிமனிதனின் நலனும் பாதுகாக்கப்படும்.
சமூகத்தின் கூட்டுமுயற்சியின் மூலமே தனி நபர்களது பல ஜீவாதார உரிமைகள்
பாதுகாக்கப்பட முடியும். தேசியவெறி, தேசியகாழ்ப்புணர்வு, மதவெறி, சாதிவெறி
போன்ற வெறிகள் ஒரு சமூகத்திடையே ஊட்டப்பட்டு அவை மற்றொரு
சமூகத்தை அழிக்கும் பொழுது தனிநபர் உரிமைகள் அவர்களைப் பாதுகாக்கப்
போவதில்லை. நாஸிச பேரினவெறிக்கு எதிராக தனி;த்தனியாக யூதர்கள்
எதைத்தான் சாதித்தார்கள்? பல தேசியங்கள் கூட்டுச் சேர்ந்தே அதனை முறியடிக்க
முடிந்தது. தேசியத்தின் அடையாளங்களையும் தேசிய உரிமைகளையும்
தேசியமாக ஒன்றுபட்டுத்தான் வெற்றி கொள்ள முடியும்.

பின்னிணைப்புக்கள்

1) லண்டன் சர்வதேச காங்கிரஸின் தீர்மானம், 1896.

இந்தத் தீர்மானம் கூறுவதாவது :

எல்லாத்தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமைக்கான சகல உரிமைகளும்


உண்டு என்று இந்தக் காங்கிரஸ் பிரகடணப் படுத்துகிறது. மற்றும் இராணுவ,
தேசிய அடக்குமுறைகளால் துன்பப்படும் சகல நாட்டுத்தொழிளாளர்கள் மீ து
அனுதாபம் தெரிவிக்கும் உரிமையும் அவைகளுக்கு உண்டு. சாவதெச சமூக
ஜனநாயகத்தை அடைவதற்காகவும் சர்வதேச முதலாளித்துவத்தை
தொற்கடிப்பதற்காகவும் இந்த நாடுகளின் தொழிளாளர்களை வர்க்க உணர்வு
அடிப்படையில் ஒன்றிணையுமாறு இந்தக் காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது.

2) ஐக்கியநாடுகள் : காலனித்துவ நாடுகளுக்கும் மக்களுக்கும் சுதந்திரத்தை


வழங்குமாறு கோரும் பிரகடணம், 1960.

பொதுச்சபைத் தீர்மானம் 1514 (XV), டிச 14 1960.

பொதுச்சபை, மனிதனின் ஆளுமை, பெறுதிகளின் பிரகாரமும் ஆண் பெண்


சமத்துவத்தின் பிரகாரமும் அடிப்படை மனித உரிமைகளின் பிரகாரமும் பெரிய
நாடுகளும் சிறிய நாடுகளும் சமூக முன்னேற்றத்தையும் வாழ்க்கைத்தர
மேம்பாட்டையும் கோருதல்.

சமத்துவ உரிமைகளின் படியும் சகலமக்களுக்குமுரிய சுயநிர்ணய உரிமைகளின்


படியும் இனம், பால், மொழி வேறுபாடு கருதாத அடிப்படை மனித உரிமைகளை
கனம் பண்ணும் வகையிலும் உறுப்பாடும், சமூக நலனும், சமாதானமும்
நட்புறவும் உருவாக உணர்வு கொள்ளுதல்,
எல்லாவற்றிலும் சார்ந்து நிற்கிற மக்களின் விடுதலை உணர்வை ஏற்று, அதற்கான
சுயமான பங்களிப்பை அடையாளம் காணுதல்,

அத்தகைய விடுதலைக்கான மறுப்பு அல்லது தடை உலக அமைதிக்கு பங்கம்


விளைவிப்பதை அறிதல்,

நம்பிக்கை மற்றும் சுய ஆளகைக்குட்படாத பிரதேசங்களின் சுதந்திரத்துக்கான


இயக்களுக்கு உதவும் பொருட்டான ஐக்கிய நாடுகளின் முயற்சிகளை கருத்தில்
கொள்ளுதல், எல்லாவகையிலும் காலனித்துவத்தை முடிவுக்கு கொண்டுவரும்
உலகமக்களின் வேணவாவினை உணர்தல்,

சர்வதேச பொருளாதார அபிவிருத்தி காலனித்துவத்தால்தான் தடுக்கப்படுகிறது


என்பதை அறிதல்,

மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்திக்கு மற்றும் சர்வதேச


சமாதானத்திற்கு சார்பான ஐக்கிய நாடுகளின் இலட்சியங்கள் ஆகியவை
காலனித்துவத்தால் தடுக்கப்படுகிறது என்பதைப் புரிதல்,

சர்வதேச சட்டம், பரஸ்பர நலன்சார்ந்து மக்கள், அவர்களின் வளம், இயற்கைச்


செல்வங்கள் என்பனவற்றை பகிர்ந்து கொள்ளவும் சர்வதேச பொருளாதார
ஒத்துழைப்பைபுக்கு மாறாக உழம் உந்தவிதமான நிபந்தனைகளுக்கு உட்படாமல்
இருக்கவும்,

பாகுபாடு, சகல நடவடிக்ககைளிலிருந்தும் தனிமைப்படுதல், காலனித்தவத்தை


முடிவுக்கு கொண்டவருதல், சிக்கலான பிரச்சினைகளைத் தவிர்த்தல்
போன்றவற்றுக்கான விடுதலை தவிர்க்க முடியாததும் மீ ளமுடியாததுமானது
என்று நம்பிக்கை கொள்ளல்,ஆகிய இவைகள் அனைத்தும் ஐக்கியநாடுகள்
பட்டயத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என்பது மனத்தில் இருத்தத் தக்கதாகும்.

தன்னாட்சி உரிமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தன்னாட்சி உரிமை (Self-determination) எனப்படுவது சுயமாக, சுதந்திரமாக ஒரு


மக்கள் குழு தமது அரசியல் ஏற்பாட்டை தீர்மானிக்கும் உரிமையைக்
குறிக்கின்றது. தன்னாட்சி உரிமை என்ற சொற் தொடருக்கு பதிலாக சுயநிர்ணய
உரிமை என்ற சொற் தொடரும் பயன்பாட்டில் உண்டு.
வெளி வற்புறுத்தல்கள் இன்றி ஒருவர் தனது செயல்பாடுகளைத் தானே தெரிவு
செய்துகொள்வதற்கு, சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள்
தமது சொந்த அரசியல் நிலையை முடிவு செய்து கொள்வதற்கு அல்லது தமது
தற்போதைய நாட்டில் இருந்து விடுதலை அடைவதற்கு, அவர்களுக்கு உள்ள
சுதந்திரமே தன்னாட்சி உரிமை என்பதன் வரைவிலக்கணம் ஆகும்.[1] எனினும் இது
ஒரு சிக்கலான கருத்துரு ஆகும். தன்னாட்சி உரிமை கோரக்கூடியவர்களைத்
தீர்மானிப்பதில் முரண்பாடான வரைவிலக்கணங்களும், சட்ட விதிகளும்
காணப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயம்

ஐக்கிய நாடுகள் சபை தன்னாட்சி உரிமை பற்றி பின்வருமாறு உறுதி செய்கிறது.

 அத்தியாயம் 1, உறுப்புரை 1, பகுதி 2 இன்படி ஐக்கிய நாடுகள் பட்டயத்தின்


நோக்கம்: மக்களின் சம உரிமை கொள்கை மற்றும் தன்னாட்சி
உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்தலின் அடிப்படையில் தேசங்களுக்கு
இடையிலான நட்புறவுகளை மேம்படுத்துவதுடன், உலக அமைதியை
வலுப்படுத்துவதற்காக வேறு உகந்த நடவடிக்கைகளை எடுத்தலும்
ஆகும்.” [2]

 அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம்


(ICCPR)[3], பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக
ஒப்பந்தம் (ICESCR).[4] ஆகிய இரண்டு ஆவணங்களும் உறுப்புரை 1 இல்
பின்வருமாறு கூறுகின்றன: எல்லா மக்களுக்கும் தன்னாட்சி உரிமை
உண்டு. இந்த உரிமையைப் பயன்படுத்தி, அவர்கள், சுதந்திரமாகத் தமது
அரசியல் நிலையை முடிவு செய்து, தமது பொருளாதார, சமூக, பண்பாட்டு
வளர்ச்சிகளைத் தேடிக்கொள்வர்.
 ஐக்கிய நாடுகளின் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்[5] உறுப்புரை
15 இல் பின்வருமாறு கூறுகிறது: (1) ஒரு தேசிய இனத்தினராக இருக்கும்
உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. (2) எவரினதும் தேசிய இனத்துவம்
மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய
இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.

நகர்வுச் சுதந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


நகர்வுச் சுதந்திரம், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான
உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக்
கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம்
பெற்றுள்ளன. இது ஒரு நாட்டின் குடிமக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறுதல்,
எங்கே அனுமதிக்கப்படுகிறார்களோ அங்கு பயணம் செய்தல், உரிய
ஆவணங்களுடன் எந்நேரமும் நாட்டுக்குத் திரும்பி வருதல் என்பவற்றுடன்,
குறித்த நாட்டுக்குள்ளேயே தாம் விரும்பிய எந்த இடத்துக்குச் செல்வதற்கும்,
வாழ்வதற்கும், அங்கே வேலை செய்வதற்குமான உரிமைகளைக் குறிக்கிறது. இது
அடிப்படை மனித உரிமையாக சிலரால் கருதப்படும் ஒரு சுதந்திரம் ஆகும்.
நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கும் வசிப்பதற்குமான முழுமையான
சுதந்திரம் பெரும்பான்மையானோருக்கு இல்லை. இத்தகைய சுதந்திரம் வேண்டும்
என்று சில அமைப்புகள் வலியுறுத்தி வந்த போதிலும், அந்தக் கோரிக்கைக்கு ஒரு
நாட்டினதும், பன்னாட்டு அமைப்புகளினதும் ஆதரவு இல்லை. வெவ்வேறு
வாழ்தரம் உள்ள நாடுகள், கீ ழ் வாழ்தரம் உள்ள நாடுகளில் இருந்து குடிவரவை
விரும்பவதில்லை. முழுமையான சுதந்திரம் இருந்தால், நிலையான நிர்வாகம்
செய்வதும் கடினாமக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

ஒரு குடிமை நாட்டுக்குள்ளேயே நகர்வதற்கு பெரும்பான்மை நாடுகளில் சுதந்திரம்


உண்டு. எனினும் பல நாடுகளில் இச்சுதந்திரமும் இல்லை. குறிப்பாக சீனாவில்
ஒரு கிராமத்தார் நகரத்துக்கு சுதந்திரமாக அனுமதி இன்று நகர முடியாது.

நகர்வு சுதந்திரம் என்பது ஒரு தனிப்பட்டவரின் இடத்துக்குள் செல்வதற்கான


சுதந்திரம் என்று பொருள் படாது.
மனித உரிமைகள்

மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை


உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள்
அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும்
உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை,
பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி
உரிமை என்பன முக்கியமானவை.

வரலாறு

மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன்,


பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு,
மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.

பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும்


மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள்
அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால்
வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப்
பேரரசனான அசோகன் வெளியிட்ட அசோகனின் ஆணை எனப்படும் ஆணையும்;
கிபி 622 இல் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும்
குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட
"சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட
வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச்
சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும்
முக்கியமானதாக உள்ளது.

ஆனாலும், நவன
ீ மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை
என்பதற்கான நவன
ீ விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில்
அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள்
தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட "கருப்புக் காட்டின் பன்னிரண்டு
அம்சங்கள்" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின்
முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம்
ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என
அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு
உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய ஈராச்சியத்தில்
பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக
ஆக்கியது.

18 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் (1776), பிரான்சிலும் (1789) இரண்டு


முக்கிய புரட்சிகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக இரண்டு அறிக்கைகள்
வெளியிடபட்டன. ஒன்று ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கை, மற்றது
மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை. இரண்டுமே சில
சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. மேலும் 1776 ஆம் ஆண்டின்
உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கையும் பல அடிப்படை உரிமைகளைச்
சட்டத்தில் இடம்பெறச் செய்தது.

இவற்றைத் தொடர்ந்து 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில், தாமசு பைன், ஜான்


இசுட்டுவார்ட் மில், ஜி டபிள்யூ. எஃப். கேகெல் போன்றோரால் மனித உரிமைகள்
தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பெறலாயிற்று.

20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும், இயக்கங்களும் மனித


உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை
நிறுத்தம் செய்யும் உரிமை, மிகக்குறைந்த வேலை நிலைமைகளை
நிலைநாட்டுதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல்
அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
பெண்ணுரிமை இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும்
உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல
குடியேற்றவாத அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன.
இவற்றுள் மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போராட்டம்
முக்கியமானது.

அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின்


"லீபர் நெறிகள்" 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜென ீவா மாநாடு என்பன
மனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன்
இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற
உதவின.

உலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை


மீ றல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள்
வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர்
உருவான வெர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் நாடுகள் சங்கம்
உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு; கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத்
தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர
வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம்
தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது.

இச் சங்கத்தின் பட்டயத்தில் இச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல


உரிமைகள் குறித்த ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வுரிமைகள் பின்னர்,
இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டன.

1945 ஆம் ஆண்டின் யால்ட்டா மாநாட்டில், நாடுகளின் சங்கத்தின் பணிகளை


முன்னெடுப்பதற்குப் புதிய அமைப்பொன்றை உருவாக்க கூட்டு வல்லரசுகள்
இணங்கின. இதன் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.
தொடங்கப்பட்டதிலிருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் தொடர்பில்
இவ்வமைப்பு பெரும் பங்கு ஆற்றியுள்ளது. உலகப் போர்களைத் தொடர்ந்து ஐக்கிய
நாடுகள் சபையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபட்ட கலந்துரையாடல்களும்,
உருவாக்கிய சட்ட அமைப்புக்களுமே இன்றைய அனைத்துலக மனிதாபிமானச்
சட்டம், அனைத்துலக மனைத உரிமைகள் சட்டம் என்பவற்றில்
உள்ளடங்கியுள்ளன.
மனிதாபிமானச் சட்டம்

1864 ஆம் ஆண்டின் சென ீவாச் சாற்றுரையின் மூலப்பிரதி.

அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின்


முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும்
இடையில் சென ீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில்
ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை
உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன
தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த
1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949
ஆம் ஆண்டில் மீ ண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.

சென ீவா சாசனம், இன்று மனிதாபிமானச் சட்டம் எனக் குறிக்கப்படும் சட்டத்தை


வரையறுக்கிறது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவே சென ீவாச்
சாசனத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும்.

உலக மனித உரிமைகள் சாற்றுரை

"இது ஒரு ஒப்பந்தம் அல்ல...[எதிர் காலத்தில், இது] உலகத்தின் சுதந்திரத்துக்கான


பெரும் பட்டயம் ஆக உருவாகக் கூடும்."[1]1949 ஆம் ஆண்டில், உலக மனித
உரிமைகள் சாற்றுரையின் எசுப்பானிய மொழிப் பிரதியுடன் எலினோர்
ரூஸ்வெல்ட்.

உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால்


நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச்
சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற
அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக
இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான
கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால்
பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி,
உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில
மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு
நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி
அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு
தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.

You might also like