You are on page 1of 32

மானிடவியல் 

(Anthropology) மனித இனம் பற்றிய கல்வித்துறை ஆகும். "இது மனித


குலத்தைச் சமூக-பண்பாட்டு நிலையிலும், உயிரியல் நிலையிலும், கடந்த கால
மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா
இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக உள்ளது." [1]

இது இரண்டு வகைகளில் முழுதளாவிய (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக்


காலங்களையும் சேர்ந்த எல்லா மனிதர்களையும், மனித இனத்தின் எல்லா
அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. பண்பாடுபற்றிய எண்ணக்கருவும்,
மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம்
உலகத்தை குறியீட்டுமுறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில்
குறியீட்டுமுறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில்
உலகத்தையும் எங்களையும் மாற்றிக்கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை
வளர்த்துக்கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும்.

ஐக்கிய அமெரிக்காவில், மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக


வகுக்கப்படுகிறது:

 உடல்சார் மானிடவியல், இது உயர்பாலூட்டி நடத்தைகள், மனித


படிமலர்ச்சியியல் (evolution), குடித்தொகை மரபியல் என்பவை பற்றி
ஆராய்கின்றது; இத் துறை சில சமயங்களில் உயிரியல்சார் மானிடவியல் எனவும்
வழங்கப்படுகின்றது.
 பண்பாட்டு மானிடவியல், (சமூக மானிடவியல் அல்லது சமூக பண்பாட்டு
மானிடவியல் எனவும் அழைக்கப்படும்). பண்பாட்டு மானிடவியலாளரின் ஆய்வுக்
களம் சமூக வலையமைப்பு, சமூக நடத்தைகள்,உறவுமுறை வடிவங்கள், அரசியல்,
நம்பிக்கைகள், உற்பத்தி வடிவங்கள், பரிமாற்றம், நுகர்வு மற்றும் ஏனைய பண்பாட்டு
வெளிப்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கும்;
 மொழிசார் மானிடவியல், இது காலம் மற்றும் இடம் சார்ந்த
நிலையில் மொழிகளின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழி
பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆய்வு செய்கின்றது;
 தொல்பொருளியல், இது மனித சமூகங்களின் பொருள்சார் எச்சங்களை
ஆரய்கிறது. (இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது).
பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல்
தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு
ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக்
கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும்,
முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.

பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம்.

பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு


நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள்,
புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள்,சமூக
கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. மொழி, உணவு, இசை, சமய
நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள்
அடங்கும்.

பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின்


வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான
அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு
கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம்.1952 ல் அல்பிரட் எல்.
குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200 க்கு
மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும்
வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீ ள்பார்வை (Culture: A Critical Review of Concepts
and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.

பொருளடக்கம்

  [மறை] 
 1 வரலாற்று நோக்கில் வரைவிலக்கணங்கள்

 2 பண்பாட்டுக் கருத்துருக்கள்

o 2.1 பண்பாடும் மானிடவியலும்

o 2.2 பண்பாடும் உலகப்பார்வையும்

 3 சமுதாயமொன்றினுள் காணப்படும் பண்பாடுகள்

 4 நிலப்பகுதி அடிப்படையில் பண்பாடு

 5 நம்பிக்கை முறைமைகள்

o 5.1 ஆபிரகாமிய சமயங்கள்

 6 நாடுகளின் பண்பாடுகள்

 7 வேறு பண்பாடுகள்

 8 இவற்றையும் பார்க்கவும்

வரலாற்று நோக்கில் வரைவிலக்கணங்கள்[தொகு]

18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளின் மேலைத்தேச அறிஞர்களும், இன்றும்கூடச் சிலரும்


பண்பாடு என்பதை நாகரிகம்(civilization) என்பதோடு அடையாளம்கண்டு அதை ஒரு
இயற்கைக்கு எதிரான ஒன்றாகக் கருதினார்கள். "உயர் பண்பாட்டை"க் குறைவாகக்
கொண்டுள்ளவர்கள் கூடுதல் இயல்பானவர்களாகக் கருதப்பட்டது. அத்துடன் உயர்
பண்பாட்டின் சில அம்சங்கள் மனித இயல்புகளை அமுக்கிவிடுவதாகவும் சிலரால்
விமர்சிக்கப்பட்டது.

அசர்பைஜானின் கோபஸ்தானில் உள்ள பாறை ஓவியம். இது கி.மு 10,000 ஆண்டு காலப்பகுதியில்
எழுச்சி பெற்றிருந்த பண்பாட்டைக் குறிக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மானிடவியலாளர், பல் வேறுபட்ட சமூகங்களுக்கும்


பயன்படுத்தத்தக்க வகையிலான, பண்பாடு என்பதன் பரந்த வரைவிலக்கணமொன்றின்
தேவையை உணர்ந்தார்கள். படிமலர்ச்சிக் கோட்பாடைக் கவனத்துக்கு
எடுத்துக்கொண்ட பிராண்ஸ் போவாஸ் போன்ற மானிடவியலாளர்கள், மனிதர்
எல்லோரும் சமமாகவே படிமலர்ச்சி அடைந்துள்ளனர் என்றும், எல்லா மனிதரும்
பண்பாட்டைக் கொண்டிருப்பதனால் அது மனிதனின் படிமலர்ச்சியின் விளைவாக
ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதினர். பண்பாடு என்பது மனித இயல்பு என்றும், அது
அநுபவங்களைப் பகுத்து குறீயட
ீ ாக்கி, குறியீட்டு முறையில் வெளிப்படுத்துவதற்கான
உலகம் தழுவிய மனிதனுடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள்
வாதித்தார்கள். விளைவாக ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள்,
தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும்
வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு
இலகுவாகப் பரவ முடியும்.

எனவே வழிமுறை நோக்கிலும், கோட்பாட்டுக் கோணத்திலும் பயனுள்ள


வரைவிலக்கணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை மனிதவியலாளருக்கு
ஏற்பட்டது. அவர்கள் பொருள்சார் பண்பாடு என்பதற்கும்குறியீடுசார்
பண்பாடு என்பதற்குமிடையே வேறுபாடு கண்டார்கள். இவையிரண்டும் வெவ்வேறு
வகையான மனித செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இரண்டும்
வெவ்வேறு வகையான வழிமுறைகள் தேவைப்படும் வெவ்வேறுவகைத் தரவுகளையும்
உள்ளடக்கியுள்ள காரணத்தால் இந்தப்பகுப்புத் தேவையாக இருந்தது.

பண்பாடு என்பதை விளங்கிக்கொள்ளும் இன்னொரு பொதுவான முறை மூன்று


மூலகங்களை
உள்ளடக்கியுள்ளது: பெறுமானம் (எண்ணங்கள்), நெறிமுறைகள் (நடத்தை),
மற்றும் பொருட்கள் (அல்லது பொருள்சார் பண்பாடு). வாழ்வில் முக்கியமானது எது
என்பது பற்றிய எண்ணங்களே பெறுமானங்களாகும். அவை பண்பாட்டின் ஏனைய
அம்சங்களை வழிநடத்துகின்றன. நெறிமுறைகள் (Norms) என்பன, வெவ்வேறு
சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும்.
ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்த பொதுவழக்கங்களை
நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம்
நடைமுறைப்படுத்தும் இந்த நெறிமுறைகள் சட்டங்கள் எனப் பொதுவாக
வழங்கப்படுகின்றன. மூறாவது அம்சமான "பொருட்கள்" பண்பாட்டின் "பெறுமானங்கள்",
நெறிமுறைகள் என்பவற்றிலிருந்து பெறப்படுகின்றது.

பண்பாட்டுக் கருத்துருக்கள்[தொகு]

பண்பாடும் மானிடவியலும்[தொகு]
19 ஆம் நூற்றாண்டின் மானிடவியலாளர்எட்வார்ட் டெயிலர்.

பண்பாடானது இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை,
உணவு, ஓவியம், சிற்பம், நாடகம்,திரைப்படம் போன்ற மனிதருடைய கலைப்
பொருட்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது. சில அறிஞர்கள் பண்பாட்டை
நுகர்வு, நுகர் பொருட்கள் என்பவற்றின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர்.
ஆனால், மானிடவியலாளர், பண்பாடு என்பது நுகர் பொருட்களை மட்டுமல்லாது
அவற்றை உருவாக்குவனவும், அவற்றுக்குப் பொருள் கொடுப்பனவுமான
வழிமுறைகளையும்; அப் பொருட்களும், வழிமுறைகளும் பொதிந்துள்ள சமூகத்
தொடர்புகள், செயல்முறைகள் என்பவற்றையும் குறிப்பதாகக் கூறுகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை பண்பாடு என்பது கலை, அறிவியல்,நெறிமுறைகள் போன்ற
அனைத்தையும் உள்ளடக்கியது.

பண்பாடும் உலகப்பார்வையும்[தொகு]
புனைவியக் காலத்தில் செருமனியைச் சேர்ந்த அறிஞர்கள்,
சிறப்பாகத் தேசியவாதஇயக்கங்களோடு தொடர்புடையவர்கள் பண்பாடு
என்பது உலகப்பார்வை என்னும் எண்ணக்கருத்து ஒன்றை உருவாக்கினர். இவர்களுள்
பல்வேறு சிற்றரசுகளைச் சேர்த்து "செருமனி" ஒன்றை உருவாக்குவதற்காகப்
போராடியோரும், ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசுக்கு எதிராகப் போராடிய தேசியவாத
சிறுபான்மை இனக்குழுக்கள் சார்ந்தோரும் அடங்குவர். இத்தகைய சிந்தனைப் போக்கு,
ஒவ்வொரு இனக்குழுவையும் தனித்துவமான உலகப்பார்வை வேறுபடுத்துகின்றது
என்னும் கருத்தை முன்வைத்தது. எனினும், பண்பாடு குறித்த இந்த நோக்கும்
"நாகரிகமடைந்தோர்", "நாகரிகமற்றோர்" அல்லது "பழங்குடியினர்" போன்ற
வேறுபாடுகளுக்கு இடமளித்தது.

சமுதாயமொன்றினுள் காணப்படும் பண்பாடுகள்[தொகு]


பெரிய சமுதாயங்கள் பெரும்பாலும் துணைப் பண்பாடுகளை அல்லது அவர்கள் சார்ந்த
பெரிய பண்பாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய
தனித்துவமான நடத்தைகளையும், நம்பிக்கைகளையும்உடைய குழுக்களைக்
கொண்டவையாக இருக்கின்றன. இத் துணைப் பண்பாடுகள், அவற்றின்
உறுப்பினரின்வயது, இனம், வகுப்பு, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில்
வேறுபடலாம். அழகியல், சமயம், தொழில்,அரசியல் போன்ற பண்புகளும் துணைப்
பண்பாடுகளில் தனித்துவத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். இவற்றில் ஒவ்வொன்றும்
தனித்தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை இணைந்தோ துணைப்
பண்பாடுகளை உருவாக்கலாம்.

வருகுடியேற்றக் குழுக்களையும், அவர்கள் பண்பாடுகளையும் கையாள்வதில் பல


அணுகுமுறைகள் காணப்படுகின்றன.

 அடிப்படைப் பண்பாடு (core culture): இது செருமனியில் பஸ்ஸாம் திபி என்பவரால்


உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி ஆகும். இதன்படி சிறுபான்மையினர் தமக்கான
அடையாளங்களை வைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் முழுச் சமுதாயத்தினதும்
அடிப்படையான பண்பாட்டின் கருத்துருக்களை ஆதரிப்பவர்களாக இருக்கவேண்டும்.
 கலப்புப் பண்பாடு (Melting Pot): ஐக்கிய அமெரிக்காவில் மரபுவழியாக இத்தகைய
நோக்கு இருந்து வருகிறது. இதன்படி எல்லா வருகுடியேற்றப் பண்பாடுகளும் அரசின்
தலையீடு இல்லாமலேயே கலந்து ஒன்றாகின்றன எனக் கருதப்படுகிறது.
 ஒற்றைப்பண்பாட்டியம் (Monoculturalism): சில ஐரோப்பிய நாடுகளில், பண்பாடு என்பது
தேசியவாதத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இதனால், வருகுடியேற்றப்
பண்பாடுகளைப் பெரும்பான்மைப் பண்பாட்டுடன் தன்வயமாக்குவது அவ்வரசுகளின்
கொள்கையாக இருக்கிறது. எனினும், சில நாடுகள் பல்பண்பாட்டியவடிவங்கள்
தொடர்பாகவும் சோதனை செய்து வருகிறார்கள்.
 பல்பண்பாட்டியம் (Multiculturalism): வருகுடியேற்றப் பண்பாட்டினர் தமது
பண்பாடுகளை பேணிக்கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு பண்பாடுகள் ஒரு
நாட்டுக்குள் அமைதிவழியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதும் இதன்
கருத்து ஆகும்.

நாட்டின அரசுகள் வருகுடியேற்றப் பண்பாடுகளை நடத்தும் விதம் மேற்சொன்ன


ஏதாவதொரு அணுகுமுறையுடன் சரியாகப் பொருந்தும் என்பதற்கில்லை. ஏற்கும்
பண்பாட்டுக்கும் (host culture) வருகுடியேற்றப் பண்பாட்டுக்கும் இடையிலான
வேறுபாட்டின் அளவு, குடியேறுவோரின் எண்ணிக்கை, ஏற்கெனவே இருக்கும் மக்களின்
மனப்பாங்கு, அரசின் கொள்கைகள், அக் கொள்கைகளின் செயற்படுதிறன் என்பன
விளைவுகளைப் பொதுமைப்படுத்துவதைக் கடினமாக்குகின்றன. இதுபோலவே,
சமுதாயத்தில் அடங்கியுள்ள துணைப் பண்பாடுகள், பெரும்பான்மை மக்களின்
மனப்பாங்கு, பல்வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களிடையேயான தொடர்புகள் என்பன
விளைவுகளைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு சமுதாயத்துள்
அடங்கியுள்ள பண்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்வது சிக்கலானது. ஆய்வுகள்
பலவகையான மாறிகளைக்கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிலப்பகுதி அடிப்படையில் பண்பாடு[தொகு]

உலகின் நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் நாட்டினங்களாலும், இனக்குழுக்களாலும்


உருவாகின்றன. பண்பாடுகளுக்கு இடையேயான ஒத்ததன்மை
பெரும்பாலும் புவியியல் அடிப்படையில் அருகருகே வாழும் மக்கள் நடுவே
காணப்படுகின்றது. பல நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் பிற பண்பாடுகளின்
தொடர்பினால் ஏற்படக்கூடிய செல்வாக்கின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இத்தகைய
தொடர்புகள், குடியேற்றம், வணிகம்,புலப்பெயர்வு, மக்கள்
ஊடகம், சமயம் போன்றவற்றினால் ஏற்படுகின்றன. பண்பாடு இயக்கத்தன்மை
கொண்டதாக இருப்பதுடன், காலப்போக்கில் மாறுபாடும் அடைகின்றது. இவ்வாறு
மாறும்போது, பண்பாடுகள் வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு; மாறுகின்ற
சூழலுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் ஏற்றவகையில் தன்னை இசைவாக்கிக்
கொள்கிறது. இதனால், பண்பாடு தொடர்புகளில் தங்கியுள்ளது எனலாம்.
பண்பாடுகளிடையே மக்களினதும், எண்ணக்கருக்களினதும் கூடிய நகர்வுகளுக்கு
இடமளிக்கும் புதிய தொடர்புத் தொழில்
நுட்பங்களும்,போக்குவரத்துத் தொழில்நுட்பங்களும் உள்ளூர்ப் பண்பாடுகளில்
விரைவான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

நம்பிக்கை முறைமைகள்[தொகு]

இன்று கம்போடியாவின் பண்பாட்டின் அடையாளமாகப் பயன்படும் 12 ஆம் நூற்றாண்டைச்


சேர்ந்த அங்கூர் வாட்கோயில்

சமயமும், பிற நம்பிக்கை முறைமைகளும் பண்பாட்டுடன் ஒன்றிணைந்தவையாக


உள்ளன. மனித வரலாறு முழுவதுமே சமயம் பண்பாட்டின் ஒரு அம்சமாக
விளங்கிவருகிறது. கிறிஸ்தவத்தின் பத்துக் கட்டளைகள், புத்தசமயத்தின் ஐந்து
நோக்குகள் போன்றவற்றினூடாகச் சமயம் நடத்தைகளை முறைப்படுத்துகின்றது. சில
சமயங்களில் இது அரசுகளுடனும் தொடர்புள்ளதாக இருக்கின்றது. இது கலைகளின்
மீ தும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

மேனாட்டுப் பண்பாடு ஐரோப்பாவிலிருந்து மிகவும்
வலுவாகஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. இப்
பண்பாடு, பண்டைக் கிரேக்கம், பண்டைய ரோம், கிறிஸ்தவம் முதலியவற்றின்
செல்வாக்குக்கு உட்பட்டது. மேனாட்டுப் பண்பாடு, பிற பண்பாடுகளைக் காட்டிலும் கூடிய
அளவில் தனிமனிதனுக்கு முதன்மை கொடுப்பதாக உள்ளது. அத்துடன்
இது,மனிதன், இறைவன், இயற்கை அல்லது அண்டம் ஆகியவற்றைக் கூடுதலாக
வேறுபடுத்திப் பார்க்கிறது. இது, பொருட்செல்வம், கல்வியறிவு, தொழில்நுட்ப
முன்னேற்றம் என்பவற்றினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இவை மேனாட்டுப்
பண்பாட்டுக்கு மட்டும் உரித்தான இயல்புகள் அல்ல.

ஆபிரகாமிய சமயங்கள்[தொகு]
யூதாயிசம் அறியப்பட்ட ஓரிறைக் கொள்கை உடைய முதற் சமயங்களுள் ஒன்றும்,
இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்ற சமயங்களுள் மிகப் பழையனவற்றுள் ஒன்றுமாகும்.
யூதர்களின் விழுமியங்களும், வரலாறும் கிறிஸ்தவம், இஸ்லாம், பஹாய் போன்ற பிற
ஆபிரகாமிய சமயங்களின் அடிப்படைகளின் பெரும் பங்காக உள்ளன. இவை,
ஆபிரகாமின் மரபுவழியைப் பொதுவாகக் கொண்டிருந்தபோதும், ஒவ்வொன்றும்
அவற்றுக்கே தனித்துவமான கலைகளையும் கொண்டுள்ளன. உண்மையில் இவற்றுட்
சில அச் சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலப்பகுதிகளின் செல்வாக்கினால்
உண்டானதாக இருந்தாலும், சமயங்களால் வலியுறுத்தப்படும் பண்பாட்டு
வெளிப்பாடுகளும் இருகின்றன.

ஐரோப்பா, புதிய உலகம் ஆகியவற்றின் பண்பாடுகளைப் பொறுத்தவரை கடந்த 500


தொடக்கம் 1500 ஆண்டுகளாகக் கிறிஸ்தவம் முக்கியமான பங்கை வகித்துவருகிறது.
தற்கால மெய்யியல் சிந்தனைகளில், சென். தாமஸ் அக்குவைனஸ், எராஸ்மஸ் போன்ற
கிறிஸ்தவச் சிந்தனையாளர்களின் செல்வாக்குப் பெருமளவு உள்ளது. தவிர, கிறிஸ்தவப்
பேராலயங்களான நோட்ரே டேம் டி பாரிஸ், வெல்ஸ் பேராலயம், மெக்சிக்கோ நகர
மெட்ரோபோலிட்டன் பேராலயம் போன்றவை கட்டிடக்கலை முக்கியத்துவம்
கொண்டவை.

இஸ்லாம் வட ஆப்பிரிக்கா, மையக்கிழக்கு, தூரகிழக்கு ஆகிய பகுதிகளில் 1,500


ஆண்டுகளாகச் செல்வாக்குடன் விளங்குகிறது.
சாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு ஆகும். இதன்


தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையே. இது இந்தியா,
பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி
அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே இதனை வெளியேற வழியற்று
அடைபட்ட வகுப்பு என்று கூறலாம். இது சமூக வழக்கு, அதிலிருந்து தோன்றிய அரசுகள்
போன்றவற்றால் பாதுகாக்கப்டுகிறது.

பொருளடக்கம்

  [மறை] 

 1 சாதிய ஒடுக்குமுறை

 2 சாதியின் தோற்றம்

o 2.1 பக்தவத்சல பாரதியின் கூற்று‍

o 2.2 அம்பேத்கரின் கூற்று‍

o 2.3 மரபுக் கோட்பாடு

o 2.4 தொழிற் கோட்பாடு

o 2.5 சமயக் கோட்பாடு

o 2.6 அரசியற் கோட்பாடு

o 2.7 இனக் கோட்பாடு

 3 நாடுகள் வாரியாக சாதியமைப்பு

o 3.1 இந்திய சாதி அமைப்பு

o 3.2 இலங்கை சாதி அமைப்பு

 4 சாதிய எதிர்ப்பு

 5 இவற்றையும் பார்க்கவும்

 6 மேற்கோள்கள்

 7 வெளி இணைப்புக்கள்

சாதிய ஒடுக்குமுறை[தொகு]

முதன்மைக் கட்டுரை: சாதிய ஒடுக்குமுறை


ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை
மீ றல்களுக்கு, பாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறை அகும். தெற்காசியாவில்
சாதிய ஒடுக்குமுறையால் பெரும்பான்மை மக்கள் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டு
வருகிறார்கள். இவை வெளிப்படையான தீவர வன்முறையான ஒடுக்குமுறைகள், சமூக
நிறுவனக் கட்டமைப்புகளின் ஊடாக நடைபெறும் ஒடுக்குமுறைகள், நுண் ஒடுக்குமுறைகள்
என்று பல வகைகளில் அமைகின்றன.

சாதியின் தோற்றம்[தொகு]

பக்தவத்சல பாரதியின் கூற்று‍[தொகு]


சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் வேறுபட்ட அறிஞர்களால்
முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின் மானிடவியல்
கோட்பாடுகள்[1] என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து
இந்த பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாக கொண்டவை.
அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவை:

1. மரபுக் கோட்பாடு (traditional theory)

2. தொழிற் கோட்பாடு (occupational theory)

3. சமயக் கோட்பாடு (religious theory)

4. அரசியற் கோட்பாடு (political theory)

5. இனக் கோட்பாடு (racial theory)

6. படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)

அம்பேத்கரின் கூற்று‍[தொகு]
ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று‍
கூறுகிறார்.[2]

மரபுக் கோட்பாடு[தொகு]
சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும். ரிக் வேதம்,
மனு தர்மம், பகவத்கீ தை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே
கூறுகின்றன. பகவத்கீ தை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என
குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை
வலியுறுத்துகின்றன.

தொழிற் கோட்பாடு[தொகு]
சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன என்பதுவே தொழிற்
கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.

பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக
அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.

சமயக் கோட்பாடு[தொகு]
சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே
சாதி முறையை தோற்றுவித்தது.

அரசியற் கோட்பாடு[தொகு]
உயர் சாதியினர் தமது சலுகைகளை தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துகொண்ட அமைப்பே
சாதி என்பது அரசியற் கோட்பாடு.

இனக் கோட்பாடு[தொகு]
ஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி
நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள்
இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ததால்
அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டை காட்டத் தொடங்கினர்."[3]

நாடுகள் வாரியாக சாதியமைப்பு[தொகு]

இந்திய சாதி அமைப்பு[தொகு]


இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர்
பிறப்படிப்படையில் மாற்றாம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின்
பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி
வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம்
கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன.

தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்)


இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட
சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை
ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது
எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த்
தெரியவில்லை.சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம்
வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற
செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும்,
சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன. வடமொழியில் உள்ள மனு (மனுதரும
சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே
சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும்
துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும்
நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருபதாகத்
தெரியவில்லை.

இலங்கை சாதி அமைப்பு[தொகு]


முதன்மைக் கட்டுரை: இலங்கையில் சாதி அமைப்பு

இலங்கையில் பாடசாலைக் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீ டு, பாரளுமன்ற ஆசன ஒதுக்கீ டு


போன்ற வற்றுக்கு சாதி சார்பான இட ஒதுக்கீ டுகள் கிடையாது. திருமணச் சட்டங்களிலும் சாதி
இடம்பெறவில்லை. எனினும்இலங்கையில் வாழ்கின்ற தமிழர், சிங்களவர் ஆகிய தேசிய
இனங்கள் வலுவான சாதிப் படிநிலை அமைப்பை தம்மகத்தே கொண்டிருக்கின்றன.
தமிழரிடயான சாதியமைப்பு பிரதேச வேற்றுமையக் கொண்டுள்ளன. யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகள் தமக்கே உரிய சாதியமைப்பைக்
கொண்டுள்ளன.

நடத்தை (behavior, அல்லது behaviour) என்பது ஒரு பொருளின் அல்லது


உயிரினத்தின் செயலை அல்லது எதிர்ச் செயலைக் குறிக்கும்.

பொருளடக்கம்

  [மறை] 

 1 நடத்தை வகைகள்

 2 உயிரியல் விளக்கம்

 3 சமூக அறிவியல் நோக்கில் நடத்தை

 4 இவற்றையும் பாக்க

 5 மேற்கோள்கள்

 6 வெளி இணைப்புகள்

நடத்தை வகைகள்[தொகு]

நடத்தல், பேசுதல், உடை அணிதல் ஆகியவை வெளிப்படையாக


அடையாளாப்படுத்தக்கூடிய நடத்தைகள். சிந்தித்தல், பயமடைத்தல் போன்றவை
இலகுவாக அவதானிக்காமுடியாத தனிமை நடத்தைகள் ஆகும்.[1]

பொதுவாக ஒரு செயல் சூழல் தொடர்பிலேயே ஏற்படுகிறது. நடத்தை, உணர்வு


நிலையிலோ, உணர்வற்ற நிலையிலோ நடைபெறலாம். அத்துடன் இது
வெளிப்படையாக அல்லது மறைவாக, விரும்பி அல்லது கட்டாயப்படுத்தப்பட்டும் கூட
நடைபெறக்கூடும்.
உயிரியல் விளக்கம்[தொகு]

விலங்குகளில் உயிரியல் நடத்தை அகச்சுரப்பித் தொகுதியினாலும் நரம்புத்


தொகுதியினாலும்கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நடத்தையின் சிக்கல்
தன்மை அதன் நரம்புத் தொகுதியின் சிக்கல் தன்மையில் தங்கியுள்ளது. பொதுவாக,
சிக்கலான நரம்புத் தொகுதிகளுடன் கூடிய உயிரினங்கள், புதிய எதிர் வினைகளைக்
கற்றுக்கொண்டு தமது நடத்தைகளை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் தகுதி
கொண்டவையாக இருக்கின்றன.

சமூக அறிவியல் நோக்கில் நடத்தை[தொகு]

மனிதர் தொடர்பிலும், ஏனைய உயிரினங்கள், பொருள்கள் தொடர்பிலும், நடத்தைகளை


வழமையானவை, வழமைக்கு மாறானவை, ஏற்றுக்கொள்ளத் தக்கவை, ஏற்றுக்கொள்ள
முடியாதவை எனப் பிரித்துக் காண முடியும். மனிதர், நடத்தைகளின்
ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை சமூக நெறிமுறைகளின் அடிப்படையில்
தீர்மானிப்பதோடு, அந் நடத்தைகளைச் சமூகக்
கட்டுப்பாடுகளினால் நெறிப்படுத்துகின்றனர். சமூகவியலில், நடத்தை மனிதனின்
முக்கிய அடிப்படைச் செயலாகக் கருதப்படுகிறது. விலங்கின நடத்தைகளை, ஒப்பீட்டு
உளவியல், நடத்தையியல், நடத்தைச் சூழலியல், சமூக உயிரியல் ஆகிய துறைகள்
ஆய்வு செய்கின்றன.
லெவி ஸ்ட்றோஸின் வரலாற்றுப் பின்புலம்
சமூக அறிவியலும் சமுதாயமும்

வி. சுஜாதா

டிசம்பர் 2008 காலச்சுவடு இதழில் வெளிவந்த லெவி ஸ்ட்றோஸ் பற்றிய கட்டுரை


அவரது நூற்றாண்டைக் குறிப்பதாகவும் நயமானதாகவும் இருந்தது. என்றாலும்
சிந்தனையாளர்களைத் தனிப்பட்ட ஒரு மேதாவியைப் போலச் சித்தரிக்காமல் அவரது
கால, தேச, வரலாற்றுச் செய்திகளுடன் விமர்சனக் கண்ணோட்டத்தில் எழுதுவது
ஆரோக்கியமானதாக இருக்கும். மானுடவியல், சமூகவியல், தத்துவயியல் போன்ற
துறைகளுக்கு (disciplines) வரலாற்றுப் பின்னணி உள்ளது; இது சிந்தனையாளர்களின்
கருத்தாக்கங்களைப் பெரிதும் வரையறுக்கிறது. எனவே, அவர்களது கருத்துகளை
விவரிக்கும்பொழுது அவர்தம் துறையின் சமூகப் பின்னணி, அவர்தம் தேடல்களின்
நோக்கம் அத்தேடல்களுக்கு அவர்கள் தரும் விளக்கம் ஆகியவற்றைக் கருத்தில்
கொண்டால் ஆக்கபூர்வமான கேள்விகளை எழுப்பலாம்.

லெவி ஸ்ட்றோஸ் கட்டுரையைச் சாக்காக வைத்துக்கொண்டு சமூக


அறிவியல்களுக்கும் சமுதாயத்திற்குமுள்ள தொடர்பு பற்றிச் சில கருத்துகளை
முன்வைக்கிறேன்.

லெவி ஸ்ட்றோஸ், மானுடவியல், பழங்குடியினர் - தொடர்பு என்ன?

மானுடவியல் என்னும் துறை ஐரோப்பியாவின் காலனிய ஆதிக்கத்தை


முழுமைப்படுத்த எழுந்ததாகும். மானுடவியலின் வரலாற்றைத் தெரிந்தவர்கள்
யாவரும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென் பசிபிக்
தீவுகளில் வசித்துவந்த பழங்குடியினரைக் கொன்று குவித்து, அவரது நிலப்பகுதிகளை
அபகரித்தது காலனியத்தின் ஒரு பக்கமென்றால், அழிவின் வாயிலில் நிற்கும்
அவர்களின் கலைக் குறியீடுகளைப் பதிவுசெய்ய விழைந்த மானுடவியல் அதன்
மறுபக்கமாகும். தம்மையும் தமது சமுதாயத்தையும் ஆராய சமூகவியலையும் பிற்பட்ட
சமுதாயங்களைத் தெரிந்துகொள்ள மானுடவியலையும் ஐரோப்பியச்
சிந்தனையாளர்கள் ஏற்படுத்தினர். தனது தொடக்க காலச் சுவடுகளிலிருந்து மாற
முயன்றாலும் இன்றளவும் மேலை நாடுகளில் மானுடவியலும் சமூகவியலும்
தனித்தனித் துறைகளாகவே உள்ளன. தவிர, பழங்குடியினர் மானுடவியலாளர்களுக்குக்
கருத்துப் பொருளானதேன் என்பது கேள்வியாகவே உள்ளது.

மற்ற மானுடவியலாளர்களைப் போல லெவி ஸ்ட்றோஸ் பழங்குடிகளை இழிவாகப்


பார்க்கவில்லை தான்; பழங்குடிகளின் சமூக, கலை அறிவின் சிறப்பை அவர்
எடுத்துக்காட்டினார் என்பதும் உண்மைதான். எனினும் அவரது அமைப்பியல்வாதம்
பழங்குடிகள் பற்றிய ஐரோப்பிய மையச் சிந்தனையிலிருந்து முற்றிலும்
வேறுபட்டதல்ல. அதற்கான காரணங்கள் பின்வருமாறு:

1. குழுக்களாக அமைந்த பழங்குடியினரின் கலாச்சாரத்திற்கும் நவனமயமான


ீ தமது
கலாச் சாரத்திற்குமுள்ள வேறுபாட்டை அலசிய ஐரோப்பிய மானுடவியல், பல
நூற்றாண்டுப் பழமையுள்ள சீன அறிவியலையும் இந்தியத் துணைக்கண்டத்தில்
தோன்றிய மருத்துவத்தையும் எங்கு நிறுத்தும் ‘விலங்கு’ மனதிலா, ‘நவன
ீ அறிவியல்’
மனதிலா? உலகின் எல்லாச் சிந்தனை முறைகளையும் இவ்விரண்டு பாகுபாட்டிற்குள்
(dichotomy) அடக்க முயன்றது மானுடவியலின் மிகப் பெரிய குறைபாடாகும். இரு நூறு
ஆண்டுகளாகச் சமூக அறிவியல்களில் இது போல உற்பத்திசெய்யப்பட்ட பாகுபாடுகள்
பல. கலை-அறிவியல், புராணச் சிந்தனை-பகுத்தறிவுச் சிந்தனை, உவமைகளையொட்டி
எழும் சிந்தனை- தர்க்கரீதியானச் சிந்தனை (metaphoric thinking-logical thinking), பெண்
போக்குச் சிந்தனை- ஆண்போக்குச் சிந்தனை, பழமை-நவனம்
ீ (tradition-modernity)
என்று பட்டியலிடலாம். இந்த இருதலைப் பிரிவுகள் யாவிலும் ஒரு ஒருமைப்பாடு
என்னவென்றால் ஒரு பிரிவு ஐரோப்பிய நவனமயச்
ீ சிந்தனையைக் குறிக்கும். அதாவது
தம்மை மையமாக வைத்துப் பிறரை வரையறுத்தல் மேற்கத்தியச் சமூக
அறிவியல்களின் குறிப்பாக மானுடவியலின் போக்காகும். லெவி ஸ்ட்றோஸ் போல
மற்றொரு பிரிவை உயர்வாகக் கருதினாலும் இப்படிபட்ட இருதலைப் பிரிவுகள்
பழங்குடியினரை மட்டுமன்றி மேற்கத்தியக் கலாச்சாரத்தையும் ஒரே வார்ப்புக்குள்
(stereotype) உட்படுத்துவதாக உள்ளது. ஒருதலைப்பட்சமான, நுண்மையற்ற இந்த
வார்ப்புகள் பலதிறப்பட்ட சமூகக் கலாச்சார நுணுக்கங்களை உணரவிடாமல்
தடுக்கின்றன. இதனால் ஐரோப்பியச் சிந்தனையோடன்றி வேறு சிந்தனை முறைகளை
ஒப்பிட்டு அறியவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாகரிகத்துக்கும் சீனக்
கலாச்சாரத்திற்கும் ஒப்பீடு ஆராய்ச்சி ஏதும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.

2. ‘விலங்கு மனதின்’ செயல்பாட்டை விவரித்த


லெவி ஸ்ட்றோஸ், காட்சிகளை (precepts/images)
ஏற்கனவேயுள்ள கருத்தாக்கங்களுக்குள் (concepts)
புகுத்த அமைக்கப்படுவது புராணக் கதை என்று
விளக்கினார். மாறாக, ஒவ்வொரு புதிய காட்சிக்கும்
ஏற்ற புதிய கருத்தாக்கங்களை உருவாக்குவது
நவனமய
ீ அறிவியல்பூர்வமானச் சிந்தனையாகும்
என்று காட்டினார். முன்னதை ‘பிரிக்கொலாஜ்’
(bricolage) என்றும் பெயரிட்டார். பிரிக்கொலாஜ்
சிந்தனை, பல காலங்களாக வழங்கிவரும் சில
கருத்தமைப்புகளில் புதுப்புதுக் காட்சிகளை எப்படித்
திறம்படப் புனைகிறது என்று காட்டினார்.
அறிவியல்பூர்வமானச் சிந்தனையோ புதிய
தகவல்கள், செயல்திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும்
பிரத்யேகமான கருவிகளையும் கோட்பாடுகளையும்
ஏற்படுத்துவதால் மாற்றத்திற்கு வழிவகுப்பதாக
உள்ளது என்று முடிவுசெய்தார்.

இந்த ஆய்வில், பழங்குடியினர் சிந்தனை முதலாளிய சமூக அமைப்புடன் பிணைந்த


நவன
ீ அறிவியலுடன் ஒப்பிடத் தகுந்ததுதானா என்பது ஒரு கேள்வி. அமைப்புகளை
அறிய வரலாறு தேவையில்லை என்ற அமைப்பியல் கூற்று இதற்குப் பதிலாக்கப்படும்.
இதுயிருக்க, பழங்குடிகள் மற்றும் பழமை சார்ந்த சிந்தனை (traditions) மாற்றத்திற்கு
எதிரானது என்ற முடிவு மைய மானுடவியல் மற்றும் சமூகவியல் சிந்தனையை
வலுவூட்டியது. ஆப்பிரிக்கச் சிந்தனையைப் படித்த ஆர்டன் (Horton), நவனமயக்

கோட்பாட்டாளர் ஆபர்மாஸ் (Habermas) போன்றவர்கள் நவன
ீ சமுதாயத்தின்
உயர்வைக் காட்டுவதாக லெவி ஸ்ட்றோஸின் இந்த முடிவைச் சுட்டினார்கள்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் அமெரிக்கா, ஐரோப்பியா அல்லாத எல்லாச் சமூகங்களுமே,
மாற முடியாத பழமையில் மூழ்கியிருப்பது போல நவனச்
ீ சிந்தனையாளர்கள் எழுதி
வருகின்றனர். பழமை-நவனம்
ீ என்பது காலத்தைக் (time) குறித்ததா, இடத்தைக் (space)
குறித்ததா, சிந்தனை சம்பந்தப்பட்டதா, செயல் சம்பந்தப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு
விடை தேடப்படவேயில்லை. காலம் இடம் சிந்தனை, செயல் இவற்றுக்கான தொடர்பு
பற்றிய எந்த ஒரு பெரிய சமூக அறிவியல் கோட்பாடும் நிலைபெறவேயில்லை.

3. ‘விலங்கு மனம்’, பழங்குடிகள் போன்ற குழுசார்ந்த அமைப்புகளின்


பழமைக்கெதிராகத் தமது நவனத்தைச்
ீ சமூக அறிவியல்கள் வடிவமைத்து வந்ததைப்
பார்த்தோம். இந்த வேறுபாட்டிற்குச் சமூக அறிவியல்கள் தரும் விளக்கமும்
இன்றியமையாதது. லெவி ஸ்ட்றோஸ் போன்ற மானுடவியலாளர்கள் பழங்குடிகளை
ஆராய்ந்ததன் மூலம் கண்டது என்னவென்றால், ‘அவர்களை அறிந்துகொள்வதால்
நம்மை நாம் சிறப்பாக அறிய முடிகிறது’ என்றனர். இதைத்தான் லெவி ஸ்ட்றோஸ்
பற்றிய கட்டுரையாளரும் ‘ஆத்மாவின் துணிச்சல் மிக்க பயணம்’ என்று காட்டியுள்ளார்.
ஆனால் இத்தகைய வாய்ப்பு அவரால் படிக்கப்பட்ட பழங்குடியினருக்கு உண்டா?
‘உண்மை மறைந்திருக்கும்’ என்று கூறும் அமைப்பியல்வாதம் அந்த உண்மை
இருபதாம் நூற்றாண்டு மானுடவியலாளர்களுக்கு மட்டும் ஏன் புலப்படும் என்பதற்கு
என்ன விளக்கம் தருகிறது? தனது சிந்தனையின் ஆழ்மன அமைப்பைப் பழங்குடிகள்
தாமே அரிய முடியாததால்தான் மானுடவியலாளர்கள் அதைக் கண்டுணர்ந்து, தமது
சிந்தனையின் அடிப்படையும் அறிந்து எழுத முடிந்தது என்பது முடிவு.

இது என்னுடைய முடிவல்ல. சமூக அறிவியல்கள் ஐரோப்பியாவில் மட்டும் தோன்றக்


காரணமென்ன என்ற கேள்விக்குக் கொடுக்கப்படும் விளக்கம் இதுதான். மானுடவியலின்
தேடல்களை இத்தகைய சுயவிளக்கங்களோடு பொருத்திப் பார்ப்பது நமது
கண்ணோட்டத்தை விரிவடையச்செய்யும்.

சமூக அறிவியலும் சமுதாயமும்

19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியாவில், மதமும் மதம் சார்ந்த அமைப்புகளும்


வலுவிழந்ததால் அங்கு பகுத்தறிவுமயமாதல் (rationalisation) ஏற்பட்டது என்றும்
இதற்குப் புதிதாகத் தோன்றிய புரொடஸ்டெண்ட் மதத்தின் வச்சு
ீ காரணம் என்றும்
மாக்ஸ் வெபர் (Max Weber) சமூகவியலாளர் சொன்னார். இதை நிரூபிக்க உலகின் மற்ற
ஆறு மதங்களின் சில அம்சங்களை மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் மூலம் இருந்த
இடத்திலேயே வெபர் ஆய்வுசெய்தார். வேறு நவன
ீ சமூகத்தின் தனித்தன்மையை
விளக்க முற்பட்ட கார்ல் மான்ஹைம் (Karl Mannheim) என்ற சமூகவியலாளர், நம்
வாழ்வின் அனுபவப் போக்கில் ஆழ்ந்திருந்து சிந்திப்பது கலை, இலக்கியம் போன்ற
படைப்புகளைத் தரும் என்றும் அனுபவப் போக்கிலிருந்து எட்ட நின்று
மேற்கூறியவற்றைக் கருத்துப் பொருளாக்கிச் சிந்திப்பது தத்துவவியலாகும் என்றும்
சொன்னார். இவை யாவுமே பண்டைய சமுதாயங்களில் இருந்தன, ஆனால் மதம்
சார்ந்ததாக, தமது அனுபவ வட்டத்தைக் கடக்காததாக இருந்தன என்றார்.
நவன
ீ ஐரோப்பியச் சமூகத்தில்தான் தேடல்கள்
பரந்து தமது சமூக வட்டங்களைக் கடந்தது என்றும்
இதனால் சமூக நிலையாமையை (relativism) அவை
அறிய முடிந்தது என்றும் இதன் விளைவே சமூக
அறிவியல்களின் தோற்றம் என்றும் மான்ஹைம்
கூறினார்.

இவரது கருத்தில் பல நூற்றாண்டுகளாகச்


சமூகங்களில் நிகழ்ந்துவந்த கலாச்சாரப்
பரிமாற்றங்கள், கடவுளை ஒப்புக்கொள்ளாத
மதங்கள், சமூக நிலையாமையை வலியுறுத்திய
சித்தாந்தங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு
ஏதுமில்லை. மேற்கூறிய நவனமயக்

கோட்பாடுகளைப் பார்த்தால் மைய அல்லது பூஷ்வா ஐரோப்பிய அனுபவ வட்டத்திற்கு
வெளியே இருப்பதை எல்லாம் ஒரே வார்ப்பில் சித்தரிக்கும் நிலையைத்தான்
பார்க்கிறோம். சமூக அறிவியல்களை பூஷ்வா சிந்தனை என்று சாடிய கார்ல் மார்க்ஸும்
(Karl Marx) 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய மாற்றங்களை உலக சமுதாயங்கள்
யாவற்றுக்கும் முன்மாதிரியாகக் கருதினார். 19 ஆம் நூற்றாண்டு பூஷ்வா வர்க்கத்தினர்
காபிக் கடைகளில் செய்த விவாதங்கள் சிந்தனை வடிவெடுத்துப் பிற்காலச் சமூக
அறிவியல்கள் என்றும் விவரிக்கப்படுகின்றன. வேறுபட்ட கருத்துடைய
சிந்தனையாளர்களும் சமூக அறிவியல்களின் தோற்றம் பற்றிய பொதுவான
நிலைப்பாடாக இதை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, சமூக அறிவியல்
ஐரோப்பிய சமுதாயத்தில் பரவலாகவும் பொதுவாகவும் ஏற்பட்ட பகுத்தறிவு
விழிப்புணர்வின் வெளிப்பாடு என்பதுதான் மேற்கூறிய கூற்றுகளின் சாராம்சமாகும்.
இந்த மாற்றம் அங்கிருந்த கருப்பர்கள், முன்னாள் அடிமைகள், பழங்குடியினர்,
இன்னபிற சிறுபான்மையர் மற்றும் நாடோடிகளுக்கு ஏற்படவில்லையா?
ஏற்பட்டதென்றால் அவர்களுள் உலகம் பேசும் தத்துவயியல் சிந்தனையாளர் ஒருவரை
ஏன் கண்டெடுக்க முடியவில்லை?

பகுத்தறிவுமயமாதல் என்ற இந்த சுய விளக்கங்களில் விடுபட்ட செய்திகளைச்


சுட்டிக்காட்டிய பூஃக்கோ 19 ஆம் நூற்றாண்டு, கடவுளில்லா உலகத்தைக் கண்ட
(ஐரோப்ப) மனிதனிடம் அவன் தன்னைப் பற்றிக் கருதியிருந்த நிலைப்பாட்டில் பெரிய
மாறுதலை உண்டாக்கியது என்று கூறினார். தன்னையறிதலில் ஏற்பட்ட
இம்மாற்றத்தால், நிகழ்வுகள் யாவற்றிக்கும் தன்னையே காரணியாக மனிதன்
நினைத்தான். இதன் விளைவாகப் பகுத்தறிவிற்கு உட்படாதவர்களைப்
பைத்தியங்களென மருத்துவமனைகளிலும் சிறைச்சாலைகளிலும் பிரித்துவைத்தான்.
இந்தப் பாகுபாடுகளிலிருந்து தான் பல சமூக அறிவியல் துறைகள் எழுந்தன.
இவர்களைக் கருத்துப் பொருளாக்கிப் படிக்க மனோதத்துவவியல், உளவியல்,
சமூகவியல் போன்ற துறைகளும் வேற்றுச் சமூகத்தினரைக் கருத்துப் பொருளாக்க
மானுடவியலும் தோன்றின என்று பூஃக்கோ விளக்கினார். காலனியம் மற்றும்
அடிமைகள் வியாபாரம் போன்ற செயல்பாடுகளை ஆராயாமல் முழுக்க முழுக்க
ஐரோப்பியாவினுள்ளே நடந்தவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக
இருந்தாலும் பூஃக்கோவின் ஆய்வு பகுத்தறிவுமயமாதல் என்ற கூற்றின் மறுபக்கத்தைக்
காட்டியது.

சமூக சமநிலை, பகுத்தறிவுமயமாதல், சுயவிழிப்புணர்வு என நவனத்துவக்



கோட்பாடுகள் தம்மைச் சித்தரித்துக்கொள்வதில் சிக்கல் உள்ளது. ஐரோப்பியா மற்றும்
அமெரிக்காவினுள் இருந்த வேறுபட்ட கலாச்சாரச் சுவடுகளையும் அதைச் சுமந்திருந்த
இனத்தவர்களையும் நீக்கி, வைத்தியம் பார்த்த பெண்களைச் சூனியக்காரர்கள் என்று
கொன்றுவிட்டு எழுந்ததுதான் இந்த ஒருதலைப்பட்ட நவனச்
ீ சிந்தனையாகும்.
இன்றளவும் இந்தப் பிரச்சினை வர்க்கரீதியான ஏற்றத்தாழ்வுகளில் வெளிப்படுகிறது.
பிரான்சு நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சமூக அறிவியல் துறைகளில், மேட்டுக்குடிக்
கலாச்சாரப் பழக்கமில்லாத கீ ழ் வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது
கட்டுரைகளுக்குப் பெரும் மதிப்பெண்களையும் விமர்சனங்களையும் பேராசிரியர்
மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த வட்டுப்
ீ பிள்ளைகள் பெறுபவற்றோடு ஒப்பிட்டு
ஆய்வு செய்திருக்கிறார் போர்தியூ (Bordieu) என்னும் சமூகவியல் ஆய்வாளர். சமூக
ஏற்றத்தாழ்வுகளைக் கருத்துப் பொருளாகப் படிக்கும் சமூக அறிவியல்கள் எப்படித் தமது
செயல்பாடுகளில் அதே முரண்பாடுகளை உருவாக்குகின்றன என்பதைக் காட்டியுள்ளார்.
எனவே சமூக அறிவியல்களுக்கும் சமுதாயத்திற்கும் மைய சிந்தனையாளர்களால்
காட்டப்படும் தொடர்பு, சில வரலாறுகளை மறந்தும் மறைத்தும் புனைந்ததாகும்.

பின்-நவனத்துவம்
ீ (postmodernism)
ஒருதலைப்பட்சமான உலக வரலாற்றை
மறுக்கிறது. பலதிறப்பட்ட சிந்தனைகளை
ஆதரிப்பதாகவும் வித்தியாசத்தைக்
கொண்டாடுவதாகவும் சொல்கிறது. ஆனால் ‘எதுவும்
சரி’ என்ற அதன் சாராம்சம் கலாச்சாரப்
பரிமாற்றங்களின் தோற்றத்தை மட்டுமே கொண்டு
எழுந்துள்ளது. கலை, இலக்கியத் துறைகளில்
ஏற்பட்டுள்ள படைப்புகளின் வித்தியாசத்தைக்
கவனித்துச் சமூகப் பொருளாதார
ஏற்றத்தாழ்வுகளிலிருந்து பொறுப்பைத்
தட்டிக்கழிப்பதாக இருக்கிறது. மேலும் பின்-
நவனத்துவம்
ீ என்றும் தொழில்மயமாதலைக் கடந்த
சமூகம் (post industrial) என்றும் தற்காலச்
சமூகங்களைக் கூறுவதில் பிரச்சினை உள்ளது
என்று அரி சிட்டாஸ் (Ari Sitas) என்னும் தென்னாப்பிரிக்கச் சமூகவியல் அறிஞர்
கூறுகிறார். உலகமயமாதலால் உற்பத்தி நிறுவனங்கள் யாவும் மூன்றாம் உலக
நாடுகளுக்கு மாற, அலுவலகங்கள் மட்டும் முதலாம் உலகில் அமைந்துள்ளது.
மூன்றாம் உலக நாடுகள் இப்போது முன்னேறிய நாடுகளின் தொழிற்சாலைகளாய்,
உலகின் 80% உற்பத்தி நிகழும் இடங்களாய் இருக்கின்றன. இங்கு தொழிலாளர்கள்,
குறிப்பாக, நிறுவனம் சாராத, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை
பெருகிவருகிறது. தொழில்மயமாதலைக் கடந்துவிட்டோம் என்று நம்புவதாலோ
என்னவோ தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள்கூடச் சரிவர இல்லை.
இந்நிலையில் பின்-நவனத்துவம்
ீ தொழில்மயமாதலைக் கடந்த சமூகம் என்ற
கோட்பாடுகளை எப்படி ஏற்பது என்று அவர் கேட்கிறார். ஆகவே நவனத்துவத்தை

விமர்சித்த பின்-நவனத்துவம்
ீ சிலர் படிக்கவும் வகுப்புகளில் பயிற்றுவிக்கவும் வாதப்
பிரதிவாதங்களை அவிழ்க்கவும் (deconstruct) தாக்கவும் பயன்படும் ஒரு தர்க்க
முறையாகயுள்ளது. இது ஐரோப்பிய, அமெரிக்க அனுபவத்தையொட்டி எழுந்ததோடு,
பிறரைக் கருத்துப் பொருளாக்கி அறியும் மைய சமூக அறிவியல்களினின்றும் பெரிதும்
மாறுபடவில்லை.

இன்றைய நிலையிலும் சமூக அறிவியல் கோட்பாடுகள் பலமுகப்பட்ட சமூகங்களின்


நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை. மேட்டுக்குடித் தத்துவவியல் சமூகத்தில்
மலிந்திருந்த சாதீயக் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தன என்று இங்குள்ள
பாரம்பரியத்திலிருந்து மாறுபடும் நாம் சமூக அறிவியல் கோட்பாடுகளை மேலை
நாடுகளிலிருந்து அப்படியே இறக்குமதி செய்வது நவனப்
ீ பார்ப்பனியத்தை
வளர்ப்பதாகும். பாரம்பரிய அறிவுத் துறைகளிலாவது நாட்டார் வழக்குகள் எழுத்து
வடிவிலிருந்த நூலறிவுக்குச் சரியான சமயங்களில் மேலான நிலை பெற்றிருந்தன.
ஆனால் இன்றைய சமூக அறிவியல் மையக் கோட்பாடுகள் வாய்வழிச் சமூகச்
சிந்தனைகளைக் கருத்துப் பொருளாக்கிப் படிக்குமேயன்றி, அறிதலின் ஒரு தகுந்த
முறையாக ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு பிரதேசத்தில் தோன்றிய அறிவுத் துறைகள்
(disciplines) அப்படியே உலகெங்கிலும் மறுபிறப்பாக வேண்டும் என்ற நம்பிக்கைதான்,
அவர்களைப் போல் நாமும் ஏன் சமூக அறிவியல் கோட்பாடுகளை உருவாக்க
முடியவில்லை என்ற கேள்விக்குக் காரணம். ஆனால் கேள்வி அதுவல்ல.
காலனியத்திற்குள்ளான, பன்முகப்பட்ட சமூகங்கள் எதிலும் ஏன் வேரூன்ற
முடிவில்லை என்று சமூக அறிவியல்களை நோக்கித்தான் கேட்க வேண்டும்.

சமூக அறிவியல்களின் உருவாக்கத் திறன் அது பொதுசன சமூகச் சிந்தனைகளுடன்


கொண்ட உறவைப் பொறுத்தது. பலமுகப்பட்ட, பல மொழிகள் வழங்கும் சமுதாயத்தில்
இந்த உறவு ஏற்படுவது, காட்சி, மொழி, சிந்தனை ஆகியவற்றை இணைக்கும் சில
அடிப்படைக் கூறுகள் அமைவதைப் பொறுத்தது. ஐரோப்பியச் சமுதாயத்தில் இந்நிலை
ஏற்பட்டது என்ற கூற்று வேறுபாடுகளைச் சுமந்தவர்களை அழித்தும் ஒடுக்கியும்
ஏற்பட்டது என்று முன்னமே குறிப்பிட்டோம். இம்முறைகளால் அடித்தளங்களை
நிறுவியபின்தான் ஜனநாயக முறைகளைப் பற்றிப் பேச முடிந்தது.

மொழி, சமூகச் சிந்தனை (social thought) மற்றும் சமூக அறிவியல்.

மொழிக்கும் சிந்தனைக்குமுள்ள உறவு மிகவும்


அடிப்படையானது, பிரிக்க முடியாதது. சமூக
வாழ்வின் அனுபவங்களைக் கருத்துப் பொருளாக்கிக்
கோட்பாடுகளை வரைவது சமூக அறிவியல்
என்றால், இது யாரால், யாருக்காக, எந்த மொழியில்
வரையப்படுகிறது என்பது மிக முக்கியமான
கேள்வியாகும். இந்தியா போன்ற பல தேசங்களில்,
பல்கலைக் கழகங்களின் சமூக அறிவியல்
துறைக்கும் பிராந்திய மொழிச்
சிந்தனையாளர்களுக்கும் தொடர்பே இல்லாமல்
இருக்கிறது. பல்கலைக் கழக சமூக அறிவியல்
பாடத்திட்டம் பெரிதும் ஆங்கில மொழிப்
பழக்கத்தைச் சார்ந்ததாகவும் ஐரோப்பிய-அமெரிக்கச்
சிந்தனைகளின் ஆதிக்கம் வலுத்ததாகவும்
அமைந்துள்ளது. உலகப் பொதுச் சிந்தனையோடு
தொடர்பு இருக்க வேண்டும் மற்றும் வேலைவாய்ப்பு,
மேல்நாட்டுப் படிப்பு ஆகியவற்றுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்ற
காரணங்களாலும் இந்நிலை மாறவில்லை. மேலும் பல மொழிகள் வழங்குவதால்
ஆங்கிலம் பொதுவானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் மாணவர்களும் சரி,
ஆசிரியர்களும் சரி, பிராந்திய மொழி வரலாறுகள் மற்றும் செய்திகளை ஆய்வுசெய்து
வேறு ஒரு பார்வையாளருக்கு, அதாவது, அவர்தம் துறையின் நிபுணர்களுக்கு ஆங்கில
மொழியில் அதைக் கருத்துப் பொருளாக வைக்கிறார்கள். இங்கு கருத்து உருவாக்கம்
ஓரிடத்திலும் கருத்துப் பொருளாக்கம் வேறிடத்திலும் இருக்கிறது. எனவே ஜெர்னல்
(academic journal) முறையில் வளரும் சமூக அறிவியல்கள் அறிபவர், அறிவு, மொழி
மற்றும் அறியப்படுவது இவற்றுக்கிடையே பெரிய முரண்பாட்டை ஏற்படுத்துகின்றன.

எனவே காட்சி, மொழி, சிந்தனை இவற்றிற்கான தொடர்பே ஏற்படுத்தாத


சமூகவியலைத்தான் நாம் இங்குப் பயிற்றுவிக்க முடிகிறது. நாம் சமூகவியல் கற்பது
ஒரு மொழியில், நிகழ்வுகளைக் காண்பதும் உறவுகளை வளர்ப்பதும் நமது பிராந்திய
மொழியில்: இது போன்ற குழப்பங்களினால் ‘இரட்டை பிரக்ஞை’ (double consciousness)
ஏற்படுகிறது என்கிறார் மிக்னோலோ (Mignolo) என்னும் லத்தீன் அமெரிக்கச்
சிந்தனையாளர். இது போன்ற விரிசல்கள் பற்றி சையது அலடஸ் (Syed Alatas) என்னும்
தென்னாசிய சமூகவியலாளரும் பேசியுள்ளார். சமூக அறிவியலில் ஆங்கிலப்
படைப்புகள் மூன்றாம் உலக நாடுகளில் அதிகரித்துள்ளன. ஆனால் மேற்கூறிய
காரணங்களால் காட்சி, மொழி, சிந்தனை முரண் பாடுகள் தொடர்கின்றன. பல்கலைக்
கழகத் துறை சார்ந்த அறிவிற்கும் மொழி வாழ்வு சார்ந்த பிராந்தியப் படைப்புகளுக்கும்
உறவு வலுப்பட இன்னும் சில காலமாகலாம். ஆனால் பத்திரிகைத் துறையில் இது
போன்ற நிர்பந்தங்களைக் கடக்க இன்று வாய்ப்புள்ளது. பூத்திரிலாத் (Baudrillard), லெவி
ஸ்ட்ற்றோஸ் தவிர முடிம்பெ (Mudimbe) போன்ற ஆப்பிரிக்க, இதர ஜப்பானிய, லத்தீன்
அமெரிக்கச் சிந்தனையாளர்களைப் பற்றியும் எழுதலாம். நாட்டுப்புற மருத்துவம் முதல்
பழமொழிகள் மற்றும் வாய்வழி வரலாறுகளை அலசலாம், புராதனம் என்று
ஒதுக்கப்பட்ட அறிவுத் துறைகளை ஆராய்ந்து விமர்சிக்கலாம்.

பிராந்தியப் படைப்புகள் பிராந்திய அடையாங்களைக் கடக்க முடியாது என்பதல்ல இதன்


பொருள். எல்லாக் கருத்தும் பொருளும் பிராந்தியம் சார்ந்தது தான். அவற்றின்
தாக்கத்தையும் பரவலையும் நிர்ணயிப்பது நிறுவன முறைகளே. பன்னாட்டு
நிறுவனங்கள் இன்று இங்குள்ள சுக்குக் கஷாயத்தையும் ஓமத்திராவகத்தையும் உலகச்
சந்தையில் இயற்கை மருந்தாக நிறுத்தி விற்பனையைப் பெருக்கியுள்ளன. இந்தப்
‘பிராந்திய’ மருந்துகள் அமெரிக்காவிலும் வேலை செய்யும் என்று நிச்சயமாகிவிட்டது.
ஆனால் இதை மானுடவியலாளரும் பன்னாட்டு நிறுவனமும் செய்தால் கருத்துப்
பொருளும் சந்தைப் பொருளும் அங்கு விளையும். இங்குள்ள வைத்தியனும்
ஊர்க்காரனும் சிந்தனையாளரும் அவரவர் பிராந்தியத்தில் செய்தால் கருத்தும்
பொருளும் இங்கு விளையும்.

புதுதில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் இணை


பேராசிரியராகப் பணிபுரிகிறார். sujathav@mail.jnu.ac.in

நவனத்துவமும்,
ீ பின்நவனத்துவமும்

பின்நவனத்துவம்
ீ என்ற வார்தையைப் பார்த்தால் அதன் முன்னால் உள்ள “பின்” என்ற
வார்த்தை பின்நவனத்துவத்திற்கு
ீ முன்னால் “நவனத்துவம்”
ீ இருந்திருக்கிறது என்பதைக்
குறிப்பிட்டுக்காட்டுவதை அறியலாம். நவனத்துவம்,
ீ பின்நவனத்துவம்
ீ ஆகிய இந்த
இரண்டு வார்த்தைப் பிரயோகங்களும் சமூகவியல் சிந்தனையாளர்களால்
பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இவ்வார்த்தைகளுக்கு கிறிஸ்தவர்கள் உருவம்
கொடுக்கவில்லை. மேலைத் தேசத்து ஐரோப்பிய சமூகவியல் சிந்தனையாளர்கள்
(Sociologists) தாங்கள் வாழும் சமுதாயத்தின் போக்குகளை ஆராய்ந்து அவற்றின்
வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டப் பயன்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகங்களே
இவை. ஆகவே, நவனத்துவம்,
ீ பின்நவனத்துவம்
ீ ஆகிய பதங்கள் மேலைத்தேய
சமுதாயத்தின் சிந்தனைகளையும், போக்குகளையும் விவரிக்கின்றன. இந்நூற்றாண்டில்
தொழில் நுட்பசாதனங்களின் அதிவேக வளர்ச்சியால் செய்திப்பரவலும், மேலைத்தேய,
கீ ழைத்தேய மக்கள் தொடர்பும் பேரளவுக்கு, பெரும்பாலும் பெருநகர்ப்புறங்களில்
வளர்ந்திருப்பதால் பின்நவனத்துவம்
ீ கீ ழைத்தேய சமுதாயங்களிலும் தனது தாக்கத்தை
ஏற்படுத்துகின்றது. ஆகவே, பின்நவனத்துவத்திற்கும்
ீ தமிழ் சமுதாயத்திற்கும் எந்தத்
தொடர்பும் இல்லை என்று கூறி அதை நாம் நிராகரித்துவிட முடியாது. ஏற்கனவே
கிறிஸ்தவர்ள் அல்லாத தமிழ் இலக்கிய விமரிசகர்ள் பின்நவனத்துவம்
ீ என்ற
வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதோடு, அதன் மூலம் தமிழ் சமுதாயத்தைக்
கவரவும் முனைந்துள்ளனர். இதை முக்கியமாக மேலைத்தேய தமிழர் மத்தியில்
பார்க்கலாம். பிரான்சில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகையான எக்சில் (Exile) மற்றும்
கனடாவில் இருந்து வெளிவரும் சில தமிழ்ப் பத்திரிகைகளிலும் பின்நவனத்துவத்தின்

வாடையை அதிகமாகவே பார்க்க முடிகின்றது.

நவனத்துவம்

முதலில் நவனத்துவத்தை
ீ ஆராய்வோம். டொக்டர் ரொபட் லேத்தம் என்பவர் எழுதியுள்ள
ஒரு கட்டுரையில் நவனத்துவம்
ீ 1700-களில் ஆரம்பித்து 20 ம் நூற்றாண்டின் முக்கால்
பாகங்கள்வரைக் காணப்பட்டதாகக் கூறுகிறார். அதாவது 1975 வரை என்று கூறலாம்.
இந்தக் காலப்பகுதியின் சிந்தனைப் போக்கை சமூகவியல் சிந்தனையாளர்கள்
அறிவொளிக்காலம் (Enlightenment) என்று அழைக்கிறார்கள். இக்காலப்பகுதியில்
மனிதனுடைய முன்னேற்றத்தைக் குறித்து அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. கிறிஸ்தவ
வேதம் விளக்கும் உலகக் கண்ணோட்டத்தை நவனத்துவம்
ீ நிராகரித்தது. மனிதன் தனது
புலன்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளும் காரியங்களின் அடிப்படையில்
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நிரூபிக்கலாம் என்பது நவனத்துவத்தின்
ீ நம்பிக்கையாக
இருந்தது. ஆனால், கிறிஸ்தவ வேதம் தனது நம்பிக்கைகளுக்கு விஞ்ஞானக்
கண்டுபிடிப்புகளில் தங்கியிருக்கவில்லை. அது விஞ்ஞானத்துக்கு புறம்பே இருந்து
எழுந்த நம்பிக்கையாக இருந்தது. அறிவொளிக் காலத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக
இருந்த இமானுவேல் கான்ட் (Immanuel Kant 1724-1804) மனிதனுடைய புலன்களின்
கண்டுபிடிப்புகளாலேயே விஞ்ஞான அறிவு ஏற்படுகின்றது என்றார். இத்தகைய
சிந்தனைப் போக்கு, எதுவும் மனிதனுடைய புலன்களின் அனுபவத்தாலேயே
உறுதியாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை சமுதாயத்தில் வளர்த்து மனித
புலன்களின் அனுபவத்திற் அப்பாற்பட்ட, இயற்கையை மீ றிய விளக்கங்கள், செயல்கள்
அனைத்தையும் நிராகரிக்கும் போக்கை சமுதாயத்தில் உருவாக்கியது. இந்த சிந்தனைப்
போக்கைப் பின்பற்றியவர்கள் வேதத்தில் நாம் வாசிக்கின்ற அற்புதங்கள், கிறிஸ்துவின்
கன்னிப்பிறப்பு, உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் தெய்வகம்
ீ ஆகியவற்றை
நிராகரித்தார்கள். இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சபைத்தலைவர்கள் மத்தியிலும்,
நியூசிலாந்தில் 1960-களில் பிரஸ்பிடீரியன் சபைகளிலும் (பேராசிரியர் லோர்ட் கியரிங்)
இவை தலைதூக்கியிருந்ததை நினைவு கூறலாம். இந்தப் போக்கு மேலைத் தேசங்களில்
மட்டுமல்லாமல் கீ ழைத்தேசங்களிலும் இருந்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்தவிதமான நவனத்துவ
ீ சிந்தனை விசுவாசத்தையும், வரலாற்றையும்
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக விளக்கின. நவனத்துவக்
ீ காலத்தில் விசுவாசம்,
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், வரலாற்று சாட்சியங்களுக்கும் அப்பாற்பட்டதாக
விளக்கம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு சிந்தித்தவர்கள் வரலாற்றுக் கிறிஸ்தவத்தை
முற்றாக நிராகரித்தார்கள். வரலாற்று நிகழ்ச்சிகள் மூலமாக விசுவாசத்தை நிலைநாட்ட
முடியாது என்ற சிந்தனைப்போக்கு வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடிப்படை வரலாற்று
நிகழ்ச்சிகளான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஏற்றக் கொள்ள மறுத்தது. அத்தோடு,
நவனத்துவ
ீ காலத்தில் காரண காரியங்களின் அடிப்படையிலான மனிதனுடைய
சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், மனித சிந்தனையால்
ஏற்றுக்கொள்ளப்பட முடியாத எதுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் வேதத்தின்
தனித்துவமான அதிகாரம் நிராகரிக்கப்பட்டு மனித சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது. கிறிஸ்தவமும் மனித சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது
என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால், நவனத்துவத்தைப்
ீ போல அது மனித
சிந்தனையை தனித்துவமான அதிகாரம் கொண்டதாக விளக்குவதில்லை. மனித
சிந்தனை வேதத்தின் அதிகாரத்திற்கும், கிறிஸ்துவின் போதனைகளுக்கும் கட்டுப்பட
வேண்டும் என்று கிறிஸ்தவம் விளக்குகிறது.

மனிதனுடைய சிந்தனையின் அதிகாரத்திலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின்


சாட்சியங்களிலும் அதிக நம்பிக்‍ை வைத்து நவனத்துவம்
ீ செயல்பட்டதால் அது
கிறிஸ்தவ சபைகளையும், சமயப்பிரிவுகளையும் பாதித்து லிபரலிசம் (Liberalism) வளரத்
துணை புரிந்தது. 19 ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் லிபரலிசம் தனது உச்ச நிலையை
அடைந்திருந்ததாக டாக்டர் லேத்தம் கூறுகிறார். இக்காலத்தில் சுவிசேஷ நூல்களின்
வரலாற்று சம்பவங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, வரலாற்றுக் கிறிஸ்துவைக்
குறித்து அதிக கேள்விகள் எழுப்பப்பட்டன. வேத சம்பவங்கள் அனைத்தும் விஞ்ஞான
ஆய்வுகளுக்கும், வரலாற்று ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டன. இக்காலத்தில்
லிபரலிசம் சபைகளையும், வேதாகமக்கல்லூரிகளையும் அதிகளவுக்குப் பாதித்தன.
இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள இறையியல் கல்லூரிகளும் இந்தவகையில்
லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றின. இந்தியாவில் இன்றும் யூனியன் பிபிலிக்கள்
செமினரியும் (Union Biblical Seminary), அரசரடி இறையியல் கல்லூரியும் (Arasaradi Theological
College. Madurai) மேலும் பல கல்லூரிகளும் லிபரலிசப் போதனைகளையே பின்பற்றி
வருகின்றன.

இந்தக் காலத்தில் அடிப்படைக் கோட்பாட்டியக்கம் (Fundamentalism) நவனத்துவத்திற்கு



கிறிஸ்தவம் அளித்த பதிலாக இருந்தது. அடிப்படைக் கோட்பாட்டியக்கம்
நவனத்துவத்தை
ீ நிராகரித்தது. லிபரலிசத்திற்கு எதிராக ஜிம் பெக்கர் (J. I. Packer) எழுதிய
Fundamentalism and the Word of God என்ற நூலையும், இக்காலத்தில் பிரிட்டனில் டாக்டர்
மார்டின் லொயிட் ஜோன்சின் சிறப்பான ஊழியத்தையும் குறிப்பிடாமல் இருக்க
முடியாது. ஆனால், சுவிசேஷ இயக்கம் (Evangelicalism) இந்தக் காலத்தில்
நவனத்துவத்தின்
ீ சில அம்சங்களைத் தன்னுள் சேர்த்தக் கொண்டது வருந்த வேண்டிய
காரியம். அடிப்படைக் கோட்பாட்டியக்கத்தின் நல்ல சில அம்சங்களை – மறுபிறப்பு,
பரிசுத்தவாதம், சுவிசேஷ ஊழியம் – இது சேர்த்துக் கொண்டாலும், சுவிசேஷ
ஊழியத்தில் வரலாற்றுக் கிறிஸ்தவ விசுவாசத்தைவிட மனிதனுடைய
தேவைகளிலேயே அதிக நாட்டம் செலுத்தியது. அதாவது, வேதத்தின் அடிப்படை
வரலாற்றுப் போதனைகளிலும், விசுவாச அறிக்கைகள் விளக்கும் கோட்பாடுகளிலும்
நாட்டம் காட்டாது, மனிதனுடைய தனிப்பட்ட இரட்சிப்பிலும், அவனுடைய அநேக சுய
தேவைகளைப் பூர்த்தி செய்வதி‍லுமே நாட்டம் கொண்டது.

பின்நவனத்துவம்

நவனத்துவம்
ீ பாதிக்கப்பட்டு பின்நவனத்துவம்
ீ உருவாக உலகில் நிகழ்ந்த அநேக
சம்பவங்கள் காரணமாக இருந்தன.

பெளதீகவியலில் வளர்ச்சி (Physics) - பெளதீகவியலில் ஏற்பட்ட வளர்ச்சியால்


இம்மானுவல் கான்டின் கோட்பாடு சிதறடிக்கப்பட்டது. கான்ட் சரீரம், ஆன்மீ கம் என்று
இரண்டு வேறுபட்ட பிரிவுகள் இருப்பதாக அனுமானித்தார். பெளதீகவியலில் ஏற்பட்ட
வளர்ச்சியால் அந்த அனுமானம் சிதறடிக்கப்பட்டது. விஞ்ஞான அளவுகள், கணக்கியல்
ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும், வளர்ச்சியும் நவனத்துவத்தைப்
ீ பாதித்தன.
மொத்தத்தில் பெளதீகவியலின் தத்துவத்திற்கும், மனித சிந்தனைக்கும் ஒரு
எல்லையுண்டு என்பதை நிரூபித்தன. நவனத்துவம்
ீ காரண காரிய அடிப்படையிலான
மனித சிந்தனையின் வளர்ச்சியில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தது.
அந்நம்பிக்கையை பெளதீகவியல் அசைத்தது. இயற்கை உருவாக்கப்பட்டது; மனித
சிந்தனையால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்ற எண்ணம் உருவானது.

சமுதாயத்தில் மனித சிந்தனையின் வளர்ச்சியில் (Human reasoning) இருந்த நம்பிக்கை


தகர்ந்தது இன்னுமொரு காரணம். இக்காலத்தில் ஏற்பட்ட இரண்டு உலகப்போர்களும்,
வியட்நாம் போரும், அமெரிக்காவை உலுக்கிய நிக்சனின் வாட்டர்கேட் நிகழ்ச்சியும்
மனித வளர்ச்சியிலும், மனித சிந்தனையின் சக்தியிலும் நவனத்துவம்
ீ வைத்திருந்த
நம்பிக்கையை வணாக்கின.
ீ இச்சம்பவங்கள் மனிதசிந்தனைகள் மனித குலத்தில்
சேதத்தை ஏற்படுத்தி ஆபத்தை விளைவித்ததை சுட்டிக்காட்டின. மனிதகுல வளர்ச்சிக்கு
மனித சிந்தனையின் வளர்ச்சி காரணமாக ‍அமையும் என்ற நவனத்துவத்தின்

கோட்பாட்டை இவை தகர்த்து மனிதனின் நம்பிக்கைகளைக் குழைத்தன. மனிதன்
அமைதியிழந்து கீ ழைத்தேய சமயங்களிலும், புத்திக்கு எட்டாத காரியங்களிலும் (Images)
அமைதிகாணத் தொடங்கினான். ஹிப்பி இயக்கத்தையும், சமாதான இயக்கங்களையும்,
பீட்டில்ஸின் ஜோர்ஜ் ‍ஹெரிசன் (George Harrison) போன்றோர் இந்திய சாதுக்களை
நாடியலைந்ததையும் நினைவு கூரலாம். போதைப் பொருளிலும் மனிதன் அமைதி
காணப்பார்த்தான். இவற்றோடு நியூ ஏஜ் இயக்கமும் (New Age Movement) தோன்றியது.
இவற்றால் மனித சிந்தனை வளர்ச்சியில் நாட்டம் குறைந்து, மனித உணர்வுகளுக்கு
(Emotions and feelings) அதிகம் மதிப்பளிக்கப்பட்டது. கண்ணால் காணக்கூடிய
பொருட்களைவிட (Objective substance), கண்ணால் காண முடியாத சிந்தனைத்
தோற்றங்களுக்கு (Images) விளக்கம் காண்பதில் அதிக நாட்டம் ஏற்பட்டது.

இவற்றால் கடந்த நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்து வருடங்கள் மனித வளர்ச்சியை


குறித்த சந்தேகம் கொண்டதாக இருந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருந்த விஞ்ஞான
ஆய்வுகளை உலகம் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கியது. மனித சிந்தனையில்
இருந்த மதிப்புக் குறைந்து மனித உணர்வுகளுக்கு அதிகம் மதிப்புத் தரப்பட்டது.
பொதுவாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தயங்கும் பிரித்தானிய மக்கள் டயானா
(Diana) இறந்தபோது உலகந்தெரிய வெளிப்படுத்திய உணர்ச்சியலைகளை நாம்
நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக்
குறிக்கின்றது. ஒருவருடைய உணர்ச்சியை நாம் பாதித்துவிடக்கூடாது என்பதிலேயே
அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உலகத்தில் இன்று காணப்படும் புளூரலிசம் (Pluralism)
இன்னொரு அம்சம். எல்லா மதங்களிலும், சமயக்கோட்பாடுகளிலும் அடிப்படை
உண்மைகள் இருக்கின்றன என்பதே புளூரலிசம். கிறிஸ்தவமும் இந்தப் பாதிப்புகளைச்
சந்தித்தது. சுவிசேஷ இயக்கம் பழைய நம்பிக்கைகளை இழந்து
பின்நவனத்துவத்துவத்திற்கு
ீ இடம் கொடுத்தது. இதன் மூலம் பிறந்தத‍ே மனித
உணர்ச்சிகளுக்கு மட்டுமே அதி முக்கியத்துவம் கொடுக்கும் கெரிஸ்மெட்டிக் இயக்கம்.
அதுமட்டுமல்லாமல் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து
எழுதப்பட்டு, பாடப்பட்டு வந்த கீ ர்த்தனைகள், ஞானப்பாடல்களுக்கு கைகாட்டிவிட்டு
திருச்சபைகள் இசைக்கும், உடலசைவுக்கும், காதுக்கும் மட்டுமே தீனிபோடும் நான்கு
ஐந்து வரிகளில் அமைந்த கோரஸ்களுக்கும் இடம் கொடுத்தன.

இனி பின்நவனத்துவத்தின்
ீ பிரதானமான நம்பிக்கைகளை ஆராய்வோம்:

1. பின்நவனத்துவம்
ீ தெளிவானதும், ஆணித்தரமானதுமான
சத்தியமென்றொன்றில்லை (Absolute truth) என்று வாதாடுகிறது

நவனத்துவத்திற்கு
ீ உருவம் கொடுத்தவர்கள் விஞ்ஞானிகளாக இருந்தனர். அவர்கள்
தங்களுடய கண்டுபிடிப்புகளை வார்த்தைகளாலும் செயல்களாலும் விளக்கினார்கள்.
ஆனால், பின்நவனத்துவப்
ீ போக்கிற்கு உருவம் கொடுக்கிறவர்கள் இலக்கிய
விமர்சகர்களாகும் (Literary Critics). இந்தப் பின்நவனத்துவ
ீ சிந்தனையாளர்களின்
எழுத்துக்களில் objective truth க்கு இடம் இருக்கவில்லை. அவை வெறும் எழுத்துக்கள்
மட்டுமே. வெறும் அடையாளங்களைக் கொண்ட தெளிவான உண்மைகளை கொண்டிராத
இந்த உலகத்தோடு சம்பந்தமில்லாத எழுத்த வடிவங்கள்.

பின்நவனத்துவ
ீ சிந்தனையாளர்கள் தெளிவான உண்மைகளை சந்தேகக் கண்ணோடு
பார்க்கிறார்கள். அத்தகைய உண்மைகளை மனிதர்களை ஆளுவதற்காகப்
பயன்படுத்தப்படும் சிந்தனைகளாகக் கருதுகிறார்கள். இந்த சிந்தனை வரையறுக்கப்பட்ட
சத்தியத்தை அ‍டிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவத்தைப் பாதிப்பதாக இருக்கிறது.
கிறிஸ்தவ சத்தியம் மனிதர்களை சிறைப்படுத்தி அடிமைகளாக்குகிறது என்பது
அவர்களுடைய கருத்து.

பின்நவனத்துவம்
ீ எந்த உண்மையையும் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரப் பிரிவினரின்
தனிப்பட்ட கருத்துக்களாக அணுகுகின்றது. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு வகை உணவு
நன்மையானதாகத் தெரியும். இன்னொருவருக்கு வேறொருவகை உணவு
நன்மையானதாகத் தெரியலாம். இரண்டு வகை உணவிலும் எந்தத்தீமையும் இல்லை.
இரண்டும் நன்மையானதே; இரண்டு பேரின் கருத்துக்களும் உ‍ண்மையே. இந்த
வகையிலேயே பின்நவனத்துவ
ீ சிந்தனை அமைகின்றது. நீங்கள் கிறிஸ்தவர்களா
இருந்தால், அதேவிதமான சிந்தனைப்போக்குள்ளவர்களோடு நீங்கள்
இணைந்திருப்பதால் உங்களுக்கு அது நன்மையானதாகவும், இன்பமளிப்பதாகவும்
இருக்கின்றது. அதே எண்ணத்தைக் கொண்டிராத மற்றவர்களுக்கு அது
உண்மையில்லை. இத்தகைய சிந்தனைப்போக்கு புளூரலிச சமுதாயத்திற்கு
ஒத்துப்போவதாக இருக்கிறது. ஏனெனில் அந்த சமுதாயம் எல்லா சமயத்திலும்
உண்மையைக் காண்கிறதாகவும், எல்லா சமயங்களுக்கும் சம இடம் கொடுப்பதாகவும்
இருக்கிறது. இந்த வகையான சிந்தனையின்படி எந்தக்குழுவும், சமயப்பிரிவும்
தங்களுடைய போதனைகள் மட்டுமே சத்தியமாகக் காணும்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது பின்நவனத்துவ


ீ சமுதாய மக்கள் கிறிஸ்தவத்தை
மட்டும் வரையறுக்கப்பட்ட சத்தியத்தைக் கொண்ட வாழ்க்கை நெறியாகப்
பார்க்கமாட்டார்கள். அவர்களைப்பொறுத்தவரையில் அது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின்
சிந்தனைப்போக்கு மட்டுமே. கிறிஸ்தவம் மட்டுமே சத்தியம் என்பதை அவர்கள்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரையறுக்கப்பட்ட சத்தியம் என்றொன்றில்லை என்று
சிந்திக்கும் அவர்களுக்கு கிறிஸ்தவர் சரியானதாகப்படாது. இந்தவகை சிந்தனையை
விளக்க நியூசிலாந்தின் கல்விமுறையின் பின்நவனத்துவப்
ீ போக்கை உதாரணத்துக்குக்
காட்ட விரும்புகிறேன். இங்கே சிறுவர்களை ஒரு அறையில் விளையாடவிட்டு அவர்கள்
விரும்பியதை செய்ய வைத்து, ஒவ்வொருவரும் கண்டுபிடித்த, அல்லது செய்து
முடித்தவற்றை அடிப்படை சத்தியமாக அறிவிக்கும் கல்வி முறை வழக்கத்தில்
இருக்கிறது. ஒவ்வொரு சிறுவனுடைய கண்டுபிடிப்பும் அந்தந்த சிறுவர்களைப்
பொறுத்தவரையிலும் சத்தியம். ஆகவே, கல்லூரிகளில் ஆசிரியர்களை வைத்து
உறுதியாக எதையும் போதிக்கும் வழக்கம் இல்லாமல் போகிறது. இன்னுமொரு
உதாரணமாக தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை (Homosexual, lesbian) எடுத்துக்
கொள்வோம். இந்த சமுதாயத்தைப் பொறுத்தவரையில் அந்த முறையிலான வாழ்க்கை
தனிப்பட்டவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அதைத் தீமையானது என்று
இன்னொருவர் கூறுவது தவறாகக் கருதப்படுகிறது. ஒருவருக்கு அது
பிடித்தமில்லாததாக இருந்தால் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகக்
கருதப்படுகின்றது. இது பின்நவனத்துவ
ீ சிந்தனைப்போக்கு.

இச்சிந்தனை சமுதாயத்தை மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களையும், சபைகளையும்


பாதிக்கிறது. இன்று சபைகளில் சகலவிதமான கருத்துக்களும் சத்தியமாகக் கருதப்பட்ட
ஒருவரும் எதையும் வரையறுக்கப்பட்ட உண்மையாக அறிவிக்க முடியாமல் இருப்பதை
நாம் பார்க்கவில்லையா? வேதப்பாடம் நடக்கும் இடங்களில் அதை நடத்துகிறவர்கள்
இல்லாமல், எல்லோரும் தங்களுக்கு விருப்பமானதை சொல்ல, சொல்லப்பட்ட
கருத்துக்களில் எல்லாம் ஒருவகை உண்மை இருப்பதாக சொல்லப்பட்டுவருவதை
நீங்கள் அறிந்திருப்பீர்கள். இன்று அநேக சபைகள் நடத்துகின்ற வட்டு
ீ வேதப்பாட
வகுப்புகளில் (Home Bible Studies) இதைப்பார்க்கலாம். தகுதியுள்ள ஒருவர் வேதத்தைப்
படித்துப் பாடத்தை நடத்தாமல் அவர் அதில் கலந்து கொள்கிறவர்களைப் பேசவைத்து
அவர்களுடைய கருத்துக்களுக்கு (தவறானதாக இருந்தாலும்) மதிப்புக்கொடுத்து
ஏற்றக்கொள்கிறவராக இருக்கிறார். இது பின்நவனத்துவ
ீ வேத பாடத்திற்கு உதாரணம்.

அத்தோடு அநகே இறையியல் கல்லூரிகளில் (மேலைத்தேசங்களிலும்)


வரையறுக்கப்பட்ட (முறைப்படுத்தப்பட்ட) இறையியலுக்கு (Systematic Theology) மதிப்புக்
கொடுப்பதில்லை. மாணவர்கள் Biblical Studies போன்ற பாடங்களுக்கே முக்கியத்துவம்
தருமாறு வழிநடத்தப்படுகிறார்கள். இதனால் அநேகர் முறைப்படுத்தப்பட்ட இறையியல்
அறிவு இல்லாமலேயே பிரசங்கிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய பிரசங்களில்
வேத போதனைகள் இருந்தாலும் அவை உறுதியானதாகவும்,
இறையியல்பூர்வமானதாகவும் இருப்பதில்லை. உதாரணத்திற்கு அப்படிப்பட்ட ஒரு
பிரசங்கியின் பிரசங்கத்தில் இருந்து அவர் எத்தகைய இறையியல் கோட்பாட்டைப்
பின்பற்றுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. இதைத் தமிழர்கள் மத்தியில்
இருக்கும் பிரசங்கிகளிடம் அதிகம் பார்க்கலாம். பின்நவனத்துவம்,
ீ தெளிவான,
உறுதியான உண்மை என்றொன்றில்லை என்று நிராகரிக்குமானால் அது நிச்சயம் இன்று
அநேக பிரசங்கிகள் மத்தியிலும், இறையியல் கல்லூரிகளிலும் காணப்படுகின்றது
என்பதை மறுக்க முடியாது.

2. பின்நவனத்துவ
ீ சமுதாயம் ஒழுக்கத்தில் உறுதியற்றும் (Unstable), பல்வகைப்
பிரிவுகளைக் கொண்டும் (Diversity), சிறுசிறு கூறுகளாகவும் (Fragmentation)
காணப்படுகின்றது
பின்நவனத்துவம்
ீ தெளிவான உண்மைகள் எதையும் நம்பாததால் பிடிப்போடு எதையும்
பின்பற்றி அதனால் வாழ முடியாது. இதனால் அந்த சமதாயம் உறுதியுள்ளதாக
இருக்காது. இதுதான் ஒழுக்கம் என்று விளக்கும் எந்தப் போதனையும் பின்நவனத்துவல்

காணப்படவில்லை. ஒழுக்கத்தை சமுதாய மக்களின் தனிப்பட்ட கருத்து என்று அது
விளக்குவதால் பத்துக் கட்டளைகளுக்கு பின்நவனத்துவத்தில்
ீ இடமில்லை.
ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில் சமுதாயத்தின் கருத்துக்களும் அடிக்கடி
மாறிக்கொண்டும் போகலாம். உதாரணமாக தன்னினச் சேர்க்கை பற்றிய இன்றைய
சமுதாயத்தின் கருத்துக்கள், மற்றும் பில் கிளின்டனின் ஒழுக்கமற்ற செய்கை
என்பவற்றை உதாரணமாகக் கூறலாம். பில் கிளின்டன், மொன ீகா லுவின்ஸ்கியுடன்
தனக்கு இருந்த தொடர்பை முழு உலகத்துக்கும் முன்பாக மறுதளித்தபோது ‍அமெரிக்க
மக்களால் உடனடியாக உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை. அதே கிளின்டன்
பின்பு அதை ஒத்துக்கொண்டபோதும் அமெரிக்கா ஒன்றம் செய்யவில்லை. வாட்டர்கேட்
சம்பவத்துக்காக நிக்சனை ஓரங்கட்டிய அதே அமெரிக்கா கிளின்டனை
தப்பவிட்டுவிட்டது. ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்காவை உறுதியற்ற ஒரு
நிலைக்கு கொண்டுபோகும் முயற்சி எடுத்ததில் பில் கிளின்டனுக்கு முக்கிய இடமுண்டு.
இது அமெரிக்க சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

இதை இன்று சின்னத்திறைகளில் வரும் அமெரிக்க படங்களிலும் பார்க்கலாம். அநேக


வருடங்களுக்கு ஓடிய டல்லஸ் (Dallas), ஓடிக்கொண்டிருக்கும் த போல்ட் அன்ட்
பியூட்டிபுல் (The Bold and Beautiful), டேய்ஸ் ஒப் அவர் லைவ்ஸ் (Days of our lives) போன்ற
சின்னத்திறைப் படங்களில் திருமணமானவர்கள் பல முறை விவாகரத்து செய்து
வேறொருவரை திருமணம் செய்து கொள்வதம், மனைவியுடன் இருக்கும்போ‍தே வேறு
பெண்களுடன் எந்தவித மனச்சாட்சியும் இன்றி தொடர்பு வைத்திருப்பதும் ஒவ்வொரு
நாள் காட்சியிலும் காட்டப்படம் சம்பவங்களாக இருக்கின்றன. வெளிப்படையாக,
எந்தவிதக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் பாலுறவுக் காட்சிகளைப் பகல்
நேரங்களிலும்கூட சின்னத்திரைகளில் காட்டுவது எந்தளவுக்கு பின்நவனத்துவ

சிந்தனைப் போக்கிற்கு சமுதாயம் இடம் கொடுத்திருக்கிறது என்பதை விளக்குகிறது. இது
சமுதாயத்தை ஒழுக்கமற்றதாகவும், உறுதியற்றதாகவும் வைத்திருக்கிறது.

சாமவேல் வால்டிரன் (Samuel Waldron) என்ற அமெரிக்க போதகர் இந்தப்


பின்நவனத்துவப்போக்கை
ீ “நவன
ீ லிபரலிசம்” என்று தன்னுடைய நூலில் வர்ணிக்கிறார்
(A Warning against Modern Liberalism). அமெரிக்காவை இன்று தீவிர தனிநபர் தனித்துவத்தின்
மூலமும் (Radical Individualism), எந்த வேறுபாடுகளுக்கும் இடங்கொடுக்காத தீவிர
சமத்துவப்பார்வையின் மூலமும் (Radical Egalitarianism) இந்த நவன
ீ லிபரலிசம்
தாக்கிவருவதாக அந்நூலில் குறிப்பிடுகிறார். டெலிவிஷன், விடியோ, கணினி,
இன்டர்நெட் அனைத்தையும் இந்த நவன
ீ லிபரலிசம் கட்டுப்படுத்தி, கர்த்தரின்
அதிகாரத்திற்கு எதிராக சமுதாயத்தைத் திருப்பக் கங்கணம் கட்டியிருப்பதாக வால்டிரன்
கூறுகிறார். கிறிஸ்தவத்திற்கு எதிராக இன்று கிளம்பி இருக்கும் முதலாவது எதிரி நவன

லிபரலிசம் (அதாவது, பின் நவனத்துவம்)
ீ என்பது வால்டிரனின் கணிப்பு.

இந்த உலகமும் இன்று அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறது. அதி தீவிர வேகத்தில்


மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி எந்த ஒரு புதிய பொருளையும் ஆறுமாதங்களில்
மியூசியம் பீஸ் ஆக்கிவிடுகிறது. இன்று எந்த வேலைகளிலும் இருப்பவர்கள் தாங்கள்
தொடர்ந்து வேலையில் இருப்பதற்காகவும், துரித வேகத்தில் மாறிவளர்ந்துவரும்
தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவும் ‍அடிக்கடி தங்களுடைய அறிவைப்
பெருக்கிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் (Upgrade). அவர்களால் தொடர்ந்து
அதே நிலையில் இருக்க முடியவில்லை. இத்தகைய அதிவேக மாற்றம் இன்றைய
சமுதாயத்தின் ஒரு அங்கம்.

இன்று வேறுபட்ட குழுக்களைக் கொண்ட சமுதாய அமைப்பை நியாயப்படுத்தி


அனைத்துக் கலாச்சாரங்களையும், வேறுபாடுகளையும் பிரதிபலிப்பதாக சமதாயம்
இருக்க வேண்டும் என்ற கோஷத்தை மேலைத் தேச நாடுகளில் கேட்க முடிகின்றது.
கட்டுப்பாட்‍டோடிருந்த ஒற்றுமை என்ற நிலை மாறி பிரிவுகளையும், பல இன, மத,
கலாச்சார எண்ணங்களின் பிரதிபலிப்பையும் நாடி நிற்கிறது உலகம். பிரித்தானியாவில்
வேல்ஸீம், ஸ்கொட்லாந்தும் இத்தகைய தனித்துவத்தை நாடுகிறார்கள். கனடாவில்
குபெக்கும், ஒன்டாரியோவும் இத்தகைய தனித்துவத்தை ஏற்கனவே சமுதாயத்தில்
காண்கின்றன. நியூசிலாந்தில் இன்று முக்கியமாக ஆக்லாந்தில் பல இன மக்கள்
வாழ்கிறதோடு அரசாங்கம் அந்த இனங்களினதும், கலாச்சாரங்களினதும் பிரதிபலிப்புகள்
சமுதாயத்தில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து
ஒரேவிதமாக இருக்க முயலக்கூடாது என்பதிலும் அதிக நாட்டம் காட்டுகின்றது.
ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒரே மொழி பேச வேண்டும் என்ற கொள்கை
பிற்பட்டதாக பலருக்குத் தெரிகிறது. பல்வ‍கைப்பிரிவுகளையும், சிறுசிறு
கூறுகளானதுமான சமுதாயம் இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக நாட்டம்
காட்டப்படுகிறது. இது பின்நவனத்துவத்தின்
ீ பிரதிபலிப்பு. இது நாடுகளில் பிரச்சனையை
ஏற்படுத்தாமலில்லை. ஆனாலும், இந்தச் சிந்தனைக் கோட்பாட்டையே பின்நவனத்துவம்

வளர்க்கிறது.

இது கிறிஸ்தவத்தைப் பாதிக்காமல் இல்லை. மேலை நாடுகளில் திருச்சபைகளில் பல


இனங்களுக்கான ஆராதனைகள் நடைபெற்று வருவது இன்று சகஜம். அமெரிக்காவில்,
ஹிஸ்பானிக் (Hispanic) மக்களுக்கான சபைகளும், டொமினிக்கன் ரிபக்லிக்கில் (Dominican
Republic) இருந்து வந்தவர்களுக்கான சபைகளும், சீனர்களுக்கான சபைகளும் அதிகம்.
இதை பின்நவனத்துவம்
ீ வரவேற்கிறது. ஒரு சபையில் இருக்கும் பல இன மக்களின் பல
மொழி ஆராதனைகள் தொடர்வதோடு அவர்கள் தனித்தனி இனங்களாக தொடர்ந்தம்
வளர்ந்து வருவது வற்புறுத்தப்படுகிறது. அத்தகைய அமைப்பில் திருச்சபை இன்று
அமைதி காண்கிறத. இது வேதபோதனைக்கு முரணானது. வெளிநாட்டில் இவர்கள்
எல்லோரும் வேலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் ஆங்கில மொழியைப்
பேசினாலும் ஆராதனையில் மட்டும் தங்கள் சொந்த மொழியையும், கலாச்சார
பிரதிபலிப்புகளையும் நாடி நிற்கிறார்கள். வட்டில்கூட
ீ இவர்கள் பிள்ளைகளோடு
ஆங்கிலத்தில் பேச வேண்டிய நிலைமையை இவர்களால் தவிர்த்துவிட முடியாமல்
இருக்கிறது. இதற்கு வேதத்தில் எங்கே இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்குத்
தெரியவில்லை. (எபேசியர் 2).

பல மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் சமதாய மக்கள் தங்கள் மொழிகளில் ஆராதனை


நடத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றே. ஆனால், ஒரு மொழி பேசும் நாட்டில் பல
மொழிகளை வற்புறுத்துவதும் அம்மொழியில் ஆராதனை நடத்துவதும், கலாச்சாரப்
பிரிவுகளை வற்புறுத்துவதும் கிறிஸ்தவர்களுக்கிடையில் ஒற்றுமையை ஒருபோதும்
ஏற்படுத்தாது. பின்நவனத்துவப்போக்கு
ீ இந்த வகையில் இன்று சபையைத் தாக்குகிறது.

பின்நவனத்துவம்
ீ ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகள்

1. தெளிவான சத்தியத்தைப் பொறுத்தவரையில் பின்நவனத்துவம்


ீ உண்மை
என்றொன்றில்லை என்று வாதிட்டபோதும் தனது கொள்கைகளை மட்டும் சத்தியமாகக்
கருதி சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஒரு குறிப்பிட்ட
பிரிவினரின் கொள்கையை அது பெரிதுபடுத்தி உயர்த்தும்போது அதை மற்றவர்கள்
ஏற்றுக்‍கொள்ள வேண்டும் என்று அது வாதிடுகிறது. அவ்வாறு வாதிடும்போது அதுவே
பின்நவனத்துவத்தின்
ீ கோம்பாடாக அமைந்தவிடுகிறது. தெளிவான
கோட்பாடென்றொன்றில்லை என்று கூறும் பின்நவனத்துவத்தால்

அப்படியொன்றிருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை. ஆகவே, தெளிவான
உண்மைகள் இல்லாமல் சமுதாயம் இருக்க முடியாது; மக்கள் வாழ முடியாது.
அத்தகைய சத்தியங்களை நிராகரிக்கும்போது சமதாயம் தன்னையே
அழித்துக்கொள்ளும்.

2. உறுதியற்றதும், சிறுசிறு கூறுகளாகவும் இருக்கும் சமுதாயத்தைப்


பொறுத்தவரையில், அடிக்கடி ஏற்பட்டு வரும்மாற்றங்களால் அதன் உறுதி
குழைந்துவிடும். இது தீவிரவாதத்திற்கு வழி வகுக்கிறது. சிறுசிறு குழுக்களாக
சமதாயத்தைப் பிரிப்பதில் ஆர்வம் காட்டி, பல்லின, மத, கலாச்சார பிரதிபலிப்புகளுக்கு
உற்சாகமூட்டினால் அப்பிரிவுகள் தங்களுக்குள் போராடுவதைத் தடுக்க முடியாது.
பின்நவனத்துவம்
ீ பிரிவினையை வலியுத்துகிறது. இது சமுதாயத்தை உடைத்துவிடும்.
பின்நவனத்துவ
ீ பிரோகிராமில் பிரிவினை முக்கிய இடம் வகிக்கிறது. இது வேதத்தில்
பார்க்க முடியாததொன்றாகும்.

பின்நவனத்துவத்தை
ீ எதிர்கொள்ள நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
பின்நவனத்துவத்தை
ீ நாம் எவ்வாறு எதிர்கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது?
இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பாக ஒரு முக்கியமான உண்மையை நாம்
புரிந்து கொள்ள வேண்டும். நவனத்துவம்,
ீ பின்நவனத்துவம்
ீ எதுவாக இருந்தாலும்,
அல்லது இவற்றிற்குப்பின் வேறு மாற்றங்கள் சமுதாயத்தில் ஏற்பட்டாலும்
இவற்றிற்கெல்லாம் காரணம் மனிதனைப் பி‍டித்திருக்கும் பாவம்தான் என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும். பாவத்தின் காரணமாக மனித சிந்தனைகள் எப்படியெல்லாம் போகும்
என்பதற்கு பின்நவனத்துவம்
ீ உதாரணமாக இருக்கின்றது. பின்நவனத்துவத்தைப்
ீ பார்த்து
நாம் கலங்கிப்போக வேண்டிய அவசியமில்லை. பின்நவனத்துவத்தைப்
ீ பெரிதுபடுத்தி
இதை சமாளிக்க முடியாது என்று பிற்போக்குத்தனமாக சிந்திக்கத் தேவையில்லை.
சமுதாயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இத்தகைய பல மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து
வந்திருக்கின்றன. இருந்தபோதும் நமது சுவிசேஷம் அத்தனை மாற்றங்களையும்
எதிர்கொண்டு வெற்றி அடைந்திருக்கின்றது.

பின்நவனத்துவத்தைப்
ீ புரிந்து கொள்வதால் ஓரளவுக்கு சமுதாயத்தின் இன்றைய
போக்கு என்ன என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். சமூகவியல் சிந்தனையாளர்களின்
கருத்துக்கள் இந்தமுறையில் நமக்கு உதவுகின்றன. ஆனால், அவர்ளுடைய கருத்தக்கள்
வேதமாகிவிட முடியாது. அவர்கள் தரும் ஆலோசனைகள் மனித வர்க்கத்துக்கு
வாழ்வளித்துவிடாது.

பின்நவனத்துவத்தை
ீ எதிர்கொள்ள நாம் சுவிசேஷத்தை நம்ப வேண்டும். அதை
எதிர்கொள்ள இதுவரை செய்யாத ஒன்றையும் நாம் பெரிதாக செய்துவிட
வேண்டியதில்லை. பின்நவனத்துவத்தை
ீ எதிர்கொள்வது எப்படி? என்று புத்தகம் எழுதி,
நமக்கு ஆ‍லோசரன சொல்லி அநேகர் பணம் சம்பாதித்து விடுவார்கள். வேதத்தில்
இல்லாத எதையும் எவரும் நமக்கு ஆலோசனையாகத் தந்தால் அதை நாம்
ஏற்றுக்கொள்ளக்கூடாது. சமுதாயப் பிரச்சனைகளைச் சந்திக்கவும், தீர்க்கவும்
வேதமறியாத புதுமையான ஆலோசனைகள் இந்த உலகத்தில் இருக்க முடியாது.
ஆகவே, நம் கையில் கர்த்தருடைய தெளிவான வேதம் இருக்கிறது என்ற நம்பிக்கையில்
நாம் பின்நவனத்துவத்தை
ீ எப்படி எதிர்கொள்வது? என்று பார்ப்போம்.

You might also like