You are on page 1of 37

சங்க இலக்கியம் எட்டுத்ெதாைக

எட்டுத்ெதாைக என்பது எட்டு நூல்களின் ெதாகுப்பு.


இதில் அடங்கிய ஒவ்ெவாரு நூலும், பலரால் பல
காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருேசரத்
ெதாகுக்கப்பட்டது. இவற்றில், பல பாடல்களில்
அவற்ைற எழுதியவரது ெபயர் காணப்படவில்ைல.
அகத்ைதயும் புறத்ைதயும் பற்றிய பாடல்களாக
இந்நூல்கைளப் பகுக்கின்றனர். ெதாழில், அளவு,
பாட்டு, ெபாருள் ஆகியவற்றால்
ெதாகுக்கப்பட்டைமயால், ெதாைக எனப் ெபயர்
ெபற்றது.
இத்ெதாைகயுள், ஏறத்தாழ 2352 பாடல்கைள 700 புலவர்கள்
பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30
ெபண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் ெபயர் ெதரியாப்
பாடல்கள் 102.

எட்டுத்ெதாைக நூல்களுள், பரிபாடலும், கலித்ெதாைகயும்


தவிர்த்து, மற்றைவ ஆசிரியப்பாவால் அைமந்து, சில
சமயம் வஞ்சிப்பாவால் வரப்ெபற்று அைமந்துள்ளன. 3
அடிகள் சிற்ெறல்ைலயாகவும் 140 அடிகள்
ேபெரல்ைலயாகவும் ெபற்றுள்ளன. இந்நூல்கள், கைடச்
சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். ெதாகுக்கப்பட்ட
காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும்
கருதுவர்.
• எட்டுத்ெதாைக நூல்கைளப் பற்றிய ெவண்பா

பின்வருவது:

• நற்றிைண நல்ல குறுந்ெதாைக ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலிேயாடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் ெதாைக

• இவற்றுள்,

• அகப்ெபாருள் பற்றியைவ: நற்றிைண, குறுந்ெதாைக,

ஐங்குறுநூறு, கலித்ெதாைக, அகநானூறு.

• புறப்ெபாருள் பற்றியைவ : புறநானூறு, பதிற்றுப்பத்து.

• அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல்.


குறுந்ெதாைக
• குறுந்ெதாைக எட்டுத்ெதாைகயில் உள்ள நூல்களுள்

ஒன்று. "நல்ல குறுந்ெதாைக" எனச் சிறப்பித்து

உைரக்கப்படுவது. குைறந்த அடிகள் ெகாண்ட பாடல்களின்

ெதாகுப்பாக இருப்பதால் இது குறுந்ெதாைக எனப் ெபயர்

ெபற்றது. உைரயாசிரியர்கள் பலராலும் அதிகமாக

ேமற்ேகாள் காட்டப்பட்ட நூல் குறுந்ெதாைகேய. ஆதலால்

இந்நூேல முதலில் ெதாகுக்கப்பட்ட ெதாைக நூலாகக்

கருதப்படுகிறது. இது பலவைகயிலும் நற்றிைண,

அகநானூறு ஆகிய பாடல் ெதாகுப்புக்கைள ஒத்தது.

இந்நூைலத் ெதாகுத்தவர் பூரிக்ேகா ஆவார்.


பாடிேயார்
• இத் ெதாகுப்பில் அைமந்துள்ள 401 பாடல்கைள 206

புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அைமந்துள்ள 10

பாடல்களுக்கு ஆசிரியர் ெபயர் ெதரியவில்ைல. ஆனால்

அப்பாடல்களின் சிறப்பு ேநாக்கி அத்ெதாடர்கைளேய

ஆசிரியர் ெபயர்களாக அைமத்து வழங்கினர். 'அணிலாடு

முன்றிலார்', 'ெசம்புலப்ெபயல் நீரார்', 'குப்ைபக் ேகாழியார்',

'காக்ைகப்பாடினியார்' என்பன இவ்வாறு உவைமச்

சிறப்பால் ெபயர் ெபற்ற ஆசிரியர்கள் 18 ேபர் இந்நூலில்

காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம்

பாடிய ெபருந்ேதவனார்.
நூலைமப்பு
• நான்கு முதல் எட்டு வைரயான அடிகைளக் ெகாண்டைமந்த 401

பாடல்களின் ெதாகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால்

ஆனது) அகப்ெபாருள்கைள அகவற்பாக்களால் கூறுவது

குறுந்ெதாைக. இந்நூலில் முதல், கருப்ெபாருட்கைள விட

உரிப்ெபாருளுக்ேக சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணைனகள்

குைறந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன.

ெபாருளுக்ேகற்ற ெபாருத்தமான உவைமகள் ெகாண்டு

கருப்ெபாருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்ெதழும்

உணர்ச்சிகைள சிறந்த முைறயில் சித்தரித்துக் காட்டுபைவ

குறுந்ெதாைகப் பாடல்களாகும்.
குறுந்ெதாைக பைழய உைரகள்
• இந்த நூலின் 380 பாடல்களுக்குப் ‘ேபராசிரியர்’
உைர எழுதியுள்ளார். ேபராசிரியர் உைர எழுதாத
20 பாடல்களுக்கும் ‘நச்சினார்க்கினியர்’ உைர
எழுதிச் ேசர்த்துள்ளார். இந்த இரண்டு
உைரகளும் இன்று கிைடக்கவில்ைல.
குறுந்ெதாைக காட்டும் ெசய்திகள்
• குறுந்ெதாைகப் பாடல்களில் ேசாழன் கரிகால்வளவன்,

குட்டுவன், திண்ேதர்ப் ெபாைறயன், பசும்பூண் பாண்டியன்,

ேபான்ற ேபரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன்

ேபான்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம்

ெபறுகின்றன. 'ெகாங்குேதர் வாழ்க்ைக' என்ற இரண்டாம்

பாடல் இைறயனார் பாடி, தருமி என்ற புலவருக்கு "ெபாற்கிழி"

வழங்கச் ெசய்தது சிறந்த வரலாற்றுச் சான்றாகும்.


நற்றிைண
• நற்றிைண என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும்

பாடப்பட்டு பின்னர் ெதாகுக்கப்பட்டது. இது எட்டுத்ெதாைக

நூல்களுள் ஒன்றாகும். நல் என்ற அைடெமாழி ெபற்றது. இதைன

நற்றிைண நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12

அடிகள் வைர அைமந்த கடவுள் வாழ்த்ேதாடு 401 பாடல்கைளக்

ெகாண்டது. இந்நூைலத் ெதாகுத்தவர் யாெரனத் ெதரியவில்ைல.

ெதாகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி"

ஆவான். நற்றிைணப் பாடல்கள் அகப்ெபாருள் பாடல்களாம்.

நற்றிைணயில் 7அடி முதல் 13 அடிகள் வைர பாடல் உள்ளன.


பாடிேயார்
• நற்றிைணயில் உள்ள 401 பாடல்கைள 187 புலவர்கள் பாடியுள்ளனர்.

குறுந்ெதாைகப் புலவர்கள் ேபாலேவ நற்றிைணப் புலவர்களும் பாடல்

ெதாடர்களால் ெபயர் ெபற்றுள்ளனர். அவர்கள் - வண்ணப்புறக்

கந்தத்தனார், மைலயனார், தனிமகனார், விழிக்கட் ேபைதப்

ெபருங்கண்ணனார், தும்பிேசர்க்கீ ரனார், ேதய்புரிப் பழங்கயிற்றினார்,

மடல் பாடிய மாதங்கீ ரனார் என்ற எழுவராவர். ேமலும் 59 பாடல்கைளப்

பாடிய புலவர்களின் ெபயர்கள் காணப்படவில்ைல. இதில் உள்ள நானூறு

பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும்

கிட்டவில்ைல. திைண அடிப்பைடயில் பார்க்கும்ேபாது குறிஞ்சித்

திைணப் பாடல்கள் 130, பாைலப் பாடல்கள் 107, ெநய்தல் படல்கள் 101,

மருதப் பாடல்கள் 33, முல்ைலப் பாடல்கள் 28 அைமந்துள்ளன.


நற்றிைணக் காட்டும் வாழ்க்ைக
• நற்றிைணப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த
பழக்க வழக்கங்கைள அறியலாம். தைலவன் பிரிவால் வாடும்
தைலவி அவன் வரைவச் சுவரில் ேகாடிட்டுக் காட்டும் வழக்கமும்,
காதலன் வரைவப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின்
நம்பிக்ைகையக் காட்டுகிறது. ேமலும் மகளிர் காற்பந்து விைளயாடும்
வழக்கமும் இருந்தைத அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து
விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி,
கிளி, நாைர ஆகியவற்ைறத் தூதுவிடும் பாங்ைகயும் நற்றிைணயில்
காணலாம். ேமலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, ெகாைடத்திறம்,
மன்னர்கைளப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்ைற
அறியவும் நற்றிைணப் பாடல்கள் துைண ெசய்கின்றன.
ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு எட்டுத்ெதாைக என வழங்கும்
ெதாகுப்பு நூல்களுள் ஒன்று. குறிஞ்சி, முல்ைல,
மருதம், ெநய்தல், பாைல, என்னும் ஐந்து நிலம்
சார்ந்த திைண ஒவ்ெவான்றிற்கும் நூறு பாடல்கள்
வதம்
ீ இந் நூலில் ஐந்நூறு அகத்திைணப் பாடல்கள்
உள்ளன. இது 3அடி சிற்ெறல்ைல 6 அடி ேபெரல்ைல
ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள்
வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய ெபருந்ேதவனார்
ஆவார்.
புலவர்கள்
• ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்ெவாரு திைணையச்
ேசர்ந்த பாடல்களும் ஐந்து ெவவ்ேவறு புலவர்களால் இயற்றப்படுள்ளன.
மருதேமா ரம்ேபாகி ெநய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாைலேயாத லாந்ைத பனிமுல்ைல ேபயேன
நூைலேயா ைதங்குறு நூறு.
• மருதத் திைணப் பாடல்கள் (100) - ஓரம்ேபாகியார்

• ெநய்தல் திைணப் பாடல்கள் (100) - அம்மூவனார்

• குறிஞ்சித் திைணப் பாடல்கள் (100) - கபிலர்

• பாைலத் திைணப் பாடல்கள் (100) - ஓதலாந்ைதயார்

• முல்ைலத் திைணப் பாடல்கள் (100) - ேபயனார்

ஆகிேயார் பாடியுள்ளனர். இதைனத் ெதாகுத்தவர் "புலத்துைற முற்றிய


கூடலூர் கிழார்". ெதாகுப்பித்தவன் "யாைனகட் ேசய் மாந்தரஞ்ேசரல்
இரும்ெபாைற".
நூலின் அைமப்பு
• எட்டுத்ெதாைக நூல்களில் ெதால்காப்பியம் கூறும் வரிைசப்படி குறிஞ்சித் திைணைய
முதலில் ைவக்காமல் மருதத் திைணைய முதலில் ைவத்துப் பாடிய பாடல் இது ஒன்ேற
ஆகும்.

• நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாேலா அல்லது அப்பாடல்களில்


பயின்று வரும் ெசால்லாட்சியினாேலா தனித்தனி ெபயர்கள் ெபற்றன. ேவட்ைகப்பத்து,
ேவழப்பத்து, ெநய்ேயாப்பத்து, களவன் பத்து ேபான்றைவ ெசால்லாட்சியாலும்,
பருவங்கண்டு கிழத்தியுைரத்த பத்து, ேதாழி வற்புறுத்தப்பத்து, ெசவிலி கூற்றுப்பத்து
முதலியன ெபாருளைமப்பாலும் ெபயர் ெபற்றன. ேமலும் ெதாண்டிப்பத்து அந்தாதி
முைறயில் அைமந்தது. அன்னாய் பத்து ெசால்லாட்சியும் ெபாருளைமதியும் ெபாருந்தியது.

• விலங்கு, பறைவகைளக் கருப்ெபாருளாகக் ெகாண்டு குரக்குப்பத்து, ேகழற்பத்து,


மயிற்பத்து, கிள்ைளப்பத்து ஆகிய ெபயர்களும் அைமந்துள்ளன.

• குைறந்த அளவினதான அடிகள் ெகாண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்ெபாருளுக்குரிய


முதல், கரு, உரி ஆகிய மூன்றும் குைறவின்றி அைமந்துள்ளன. உள்ளுைற, உவைம,
இைறச்சி முதலிய நயங்கள் நிைறந்துள்ளன.
அகநானூறு
அகநானூறு சங்க காலத்ைதச் ேசர்ந்த எட்டுத்ெதாைக எனப்படும். இது ஓர்

அகத்திைண சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள்

அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. ெநடுந்ெதாைக

என்ற ெபயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒேர

புலவராேலா அல்லது ஒேர காலத்திேலேயா இயற்றப்பட்டைவ அல்ல. இது

பல்ேவறு புலவர்கள் ெவவ்ேவறு காலங்களில் பாடிய பாடல்களின் ெதாகுப்பு

ஆகும்.எட்டுத் ெதாைக நூல்களுள் குறுந்ெதாைக, நற்றிைண, அகநானூறு,

ஐங்குறுநூறு, கலித்ெதாைக ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம்

என்னும் ெசால்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுேம. அகத்

ெதாைகயுள் நீண்ட பாடல்கைளக் ெகாண்டைமயால் இதைன,

'ெநடுந்ெதாைக' என்றும் கூறுவர்.



நூலைமப்பு
• இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குைறந்த அளவாகப் 13
அடிகைளயும், கூடிய அளவு 31 அடிகைளயும் ெகாண்டு அைமந்துள்ளன.
கடவுள் வாழ்த்துச் ெசய்யுைளத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள்
உள்ளன. இைவ
• களிற்றியாைன நிைர(1-120)

• மணி மிைட பவளம் (121-300)

• நித்திலக் ேகாைவ (301-400)

• என மூன்று ெபரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல்


பாடல்கள் அைனத்தும் தக்கெதாரு நியமத்ைதக் ெகாண்டைமந்துள்ளன.
• ஒற்ைறப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாைலத் திைணையச்
ேசர்ந்தைவ. இரட்ைடப்பட எண்களில் 2,8 எனப்படுபைவ 80-ம் குறிஞ்சித்
திைணையச் ேசர்ந்தைவ. இரட்ைடப்பட எண்களில் 4 எனப்படுபைவ 40-ம்
முல்ைலத் திைணையச் ேசர்ந்தைவ. இரட்ைடப்பட எண்களில் 6
எனப்படுபைவ 40-ம் மருதத் திைணையச் ேசர்ந்தைவ. இரட்ைடப்பட
எண்களில் 10 எனப்படுபைவ 40-ம் ெநய்தல் திைணையச் ேசர்ந்தைவ.
• களிற்றியாைனநிைர

• 1 முதல் 120 வைரயில் உள்ள 120 பாடல்கள் இத் ெதாகுப்பில் உள்ளன. இதில் உள்ள

பாடல்கள் யாைனக்களிறு ேபால் ெபருமித நைட ெகாண்டைவ. யாைனகளின்

அணிவகுப்ைபப் ேபான்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அைவ அைமந்துள்ளன.

• மணிமிைட பவளம்

• 121 முதல் 300 வைர உள்ள 180 பாடல்கள் இத் ெதாகுப்பில் உள்ளன. இதில் உள்ள

பாடல்கள் நீலநிற மணிகள் ேபாலவும், ெசந்நிறப் பவளம் ேபாலவும் ெபருமதிப்பு

உைடயனவாக அைமந்து ஈரினப் பாடல்களின் ெதாகுப்பாக அைமந்துள்ளன. மணியும்

பவளமும் ேகாத்த ஆரம் ேபான்று இத்ெதாகுப்பு அைமந்துள்ளது.

• நித்திலக் ேகாைவ

• 301 முதல் 400 வைர உள்ள 100 பாடல்கள் இத் ெதாகுப்பில் உள்ளன. இதில் உள்ள

பாடல்கள் நித்தில முத்துக்கள் ேபாலப் ெபருமதிப்பு ெகாண்டைவயாக அைமந்து ஒரினக்

ேகாைவ ேபால அைமந்துள்ளன. இத்ெதாகுப்பு முத்தாரம் ேபால் அைமந்துள்ளது.


பாடிேயார்
இத் ெதாைகையத் ெதாகுத்தவர் மதுைர உப்பூரிகுடி கிழார்

மகனார் உருத்திரசன்மர். இதைனத் ெதாகுப்பித்த மன்னன்

பாண்டியன் உக்கிரப் ெபருவழுதியார். அகநானூற்றுப்

புலவர்கள் 146 ேபர். அவர்களுள் 65 ேபர் அகநானூற்றில்

மட்டுேம பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்ேவார், அந்தணர்,

இைடயர், எயினர், ெபாற்ெகால்லர், வணிகர், ேவளாளர்

எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த ெசய்தி அவர் தம்

ெபயர்களின் முன்னால் அைமயும் அைடெமாழிகளால்

ெதரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர்

ெபயர் காணப் ெபறவில்ைல.


கலித்ெதாைக
கலித்ெதாைக பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய ெதாகுப்பு நூலான

கலித்ெதாைகயில் ஓைச இனிைமயும், தரவு, தாழிைச, தனிச்ெசால், சுரிதகம்

என்னும் சிறப்பான அைமப்புகளால் அைமந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150

பாடல்கள் உள்ளன. அகப்ெபாருள் துைற பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக

கலிப்பாைவயும் பரிபாடைலயும் ெதால்காப்பியர் கூறுகிறார்.

துள்ளேலாைசயால் பாடப்பட்டு பாவைகயால் ெபயர்ெபற்ற நூல்

கலித்ெதாைக ஆகும். பிற அகத்திைண நூல்கள் எடுத்துைரக்காத ைகக்கிைள,

ெபருந்திைண, மடேலறுதல் ஆகியைவ கலித்ெதாைகயில் மட்டுேம

இடம்ெபறுகின்றன. கலித்ெதாைக காதலர்தம் அகத்ெதாைக எனவும்

கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்ைடக் கால ஒழுக்க வழக்கங்கள்,

நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்ைம, நல்லவர் தீயவர் பண்புகள்,

விலங்குகள், பறைவகள், மரங்கள், ெசடி ெகாடிகளின் இயல்புகள்

ஆகியனவற்ைற அறிந்து ெகாள்ளலாம்.


ெதாகுப்பு
• இன்ன திைணைய இன்னார் பாடினார் என்பது:

ெபருங்கடுங்ேகான் பாைல, கபிலன் குறிஞ்சி,

மருதனிள நாகன் மருதம், - அருஞ்ேசாழன்

நல்லுருத்தி ரன்முல்ைல, நல்லந் துவன்ெநய்தல்

கலவிவலார் கண்ட கலி.

• கலித்ெதாைக நூலில் உள்ள, பாைலத்திைணப் பாடல்கைளப் பாடியவன்

(பாைல பாடிய) ெபருங்கடுங்ேகா

• குறிஞ்சித்திைணப் பாடல்கைளப் பாடியவன் கபிலன்

• மருதத்திைணப் பாடல்கைளப் பாடியவன் மருதன் இளநாகன்

• முல்ைலத்திைணப் பாடல்கைளப் பாடியவன் ேசாழன் நல்லுருத்திரன்

• ெநய்தல் திைணப் பாடல்கைளப் பாடியவன் நல்லந்துவன்

• இந்தத் ெதாைகநூலில் திைணகள் வரிைசப்படுத்தி அடுக்கி

ைவக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடேல அடிப்பைட.


• கலித்ெதாைகப் பாடல்களில் நல்லந்துவனார்
பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149
பாடல்களுள்,

• பாைலக்கலியில் 35

• குறிஞ்சிக்கலியில் 29

• மருதக்கலியில் 35
• முல்ைலக்கலியில் 17
• ெநய்தற்கலியில் 33 பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
குறிஞ்சிக்கலி

• புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி ஆகும். குறிஞ்சி நிலத்தின்

இயற்ைக எழிைல வருணிப்பேதாடு தைலவிையத் திருமணம் புரிந்து

ெகாள்ளுமாறு தைலவைன வலியுறுத்துவைதயும் முக்கிய ேநாக்கமாகக்

ெகாண்டைவ குறிஞ்சிக்கலிப் பாடல்களாகும். கபிலரின் பாடல்களில்

நைகச்சுைவ உணர்வும் நாடகப் பாங்கிலான பாக்களும் அைமந்து

படிப்ேபார்க்கு இன்பம் தருவதாக அைமந்துள்ளன.

"சுடர்த்ெதாடீஇ ேகளாய்"என்று ெதாடங்கும் குறிஞ்சிக்கலியின் 51 ஆம்

பாடல் ஓரங்க நாடக அைமப்புடன் அைமந்து இன்பம் பயப்பதாகும்.

இப்பாடல் பிற்காலச் சிறுகைதகளின் முன்ேனாடியாகக் கூறப்படுகிறது.

முல்ைலக்கலி

• முல்ைலக்கலிப் பாடல்கள், ேநாக்கம் ஒன்றுபட்டு இல்லிருக்கும் தைலவி

ஆற்றியிருத்தைலக் கூறுகின்றன. ைகக்கிைளப் பாக்கள் இதில்

மிகுந்துள்ளன. ஆடவர் ஏறுதழுவுதைலச் சில பாடல்கள் சிறப்பித்துக்

கூறுகின்றன.
மருதக்கலி

• பரத்ைதயின் காரணமாக தைலவன் பிரிவதும், அவ்வாறு பிரிந்த

தைலவன் திரும்ப வருைகயில் தைலவனிடத்து ஊடல் ெகாள்வதும்,

தைலவியின் ஊடைலத் தைலவன் தீர்த்தைலயும் ேநாக்கமாகக்

ெகாண்டைவ மருதக்கலிப் பாடல்களாகும்.

ெநய்தற்கலி

• பிரிவாற்றாத தைலவி, தைலவனின் துன்பங்கைளப் புலப்படுத்தும்,

மடேலறுதல், மாைலப் ெபாழுதில் புலத்தல் ேபான்ற துைறகைளப்

பற்றிப் பாடுவது ெநய்தற்கலி ஆகும்

பாைலக்கலி

• பாைல நிலத்தின் ெகாடுைமையக் கூறுவேதாடு, தைலமகனின்

பிரிைவத் தடுப்பைதயும், ேதாழியர், தைலவனின் வரவு குறித்து

தைலவிக்கு உணர்த்தி தைலவிைய மகிழ்விப்பைதயும் முக்கியக்

கருத்தாகக் ெகாண்டைவ பாைலக்கலிப் பாடல்கள் ஆகும்.


கலித்ெதாைக உணர்த்தும் அறக் கருத்துகள்
• 'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று
சிறப்பித்துக் கூறப்படும் கலித்ெதாைகயில் பழெமாழிகள்
ேபான்று ஒேர வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

• ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்


ேபாற்றுதல் என்பது புணர்ந்தாைரப் பிரியாைம
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிைள ெசறாைம
அறிவு எனப்படுவது ேபைதயர் ெசால் ேநாண்றல்
ெசறிவு எனப்படுவது மைற பிறர் அறியாைம
முைற எனப்படுவது கண்ேணாடாது உயிர் ெவௗவல்
ெபாைற எனப்படுவது ேபாற்றாைரப் ெபாறுத்தல் (கலி ,133)
• கலித்ெதாைக காட்டும் சமூகம்

• களிற்ைறயும் அடக்கும் ஆற்றல் இைசக்கு உண்டு என்ற

உண்ைமயும், நீராடல் பற்றிய ெசய்தியும், மக்களின்

நல்வாழ்விற்கான ெநறிகளும் இவற்றில்

விளக்கப்பட்டுள்ளன. மடேலறுதல், ெபாருந்தாக் காதல்,

ஒருதைலக் காமம் ஆகியன பற்றி ெசய்திகள் அதிகம்

உள்ளன. மக்கள் காமைன வழிபாடு ெசய்தைம பற்றி அறிய

முடிகிறது.
• வரலாற்று, புராணச் ெசய்திகள்

• கலித்ெதாைகயில் ேசர,ேசாழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள்

காணப்படவில்ைல. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர்,

ைவைகயாறு ேபான்ற பாண்டிய நாட்டுச் ெசய்திகேள அதிகம்

கூறப்பட்டுள்ளன. பாரதக் கைத நிகழ்ச்சியான அரக்கு மாளிைக

தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திெரௗபதியின் கூந்தைல துச்சாதனன்

பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் ெதாைடைய பீமன் முறித்தது

ஆகிய புராணச் ெசய்திகள் இதில் இடம்ெபற்றுள்ளன. திருமால், முருகன்,

கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற ெதாைக

நூல்களில் இடம்ெபறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்ெதாைக

கூறுகிறது.முருகனின் பைடவடுகள்
ீ பற்றிய குறிப்புகளும் இடம்

ெபற்றுள்ளது.
புறநானூறு
புறநானூறு என்னும் ெதாைகநூல் நானூறு பாடல்கைளக்

ெகாண்ட புறத்திைண சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம்,

புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல்

ெதாகுப்பான எட்டுத்ெதாைக நூல்களுள் ஒன்று. இந்நூைலத்

ெதாகுத்தவர் ெபயரும், ெதாகுப்பித்தவர் ெபயரும்

ெதரியவில்ைல.பாக்களின் அடி வைரயைற 4 அடி முதல் 40 அடி

வைர உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட

அரசர்கைளப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்ைக பற்றியும்

எடுத்துைரக்கின்றன. இதைன ஜி. யு. ேபாப் அவர்கள்

ஆங்கிலத்தில் ெமாழிெபயர்த்துள்ளார்
பாடியவர்கள்
இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்ேவறு புலவர்களால்

பல்ேவறு காலங்களில் பாடப்பட்டைவ. அகவற்பா வைகையச்

ேசர்ந்த இப்பாடல்கள், 150-க்கும்ேமற்பட்ட புலவர்களால்

எழுதப்பட்டைவ. இவர்களைனவரும் ஒேர சமூகத்ைதேயா

நாட்ைடேயா சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய

குயவன்மகள் வைர பல்ேவறு நிைலகளில் இருந்த ஆடவரும்

ெபண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்கைளப்

பாடியைத ”அவைன அவர் பாடியது” என்று ெசால்வதன் மூலம்

புலவர்களுக்கிருந்த ெசல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.


நூல் அைமப்பு
• இந்நூலில் பாடல்கள் ெதாகுக்கப்படும்ேபாது ஒருவைக
இையபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து
குறுநில மன்னர்,ேவளிர் ஆகிேயாைரப் பற்றிய
பாடல்களும் அடுத்து ேபார்ப் பற்றிய பாடல்களும்,
ைகயறுநிைலப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று
ெதாகுத்துள்ளனர். புறப்ெபாருள் கருத்துகைளத் தழுவி
பாடப்பட்ட இந்நூலில் ஒவ்ெவாரு பாடலின் இறுதியிலும்
திைண, துைற, பாடிேனார், பாடப்பட்ேடார், பாடப்பட்ட
சூழல் ேபான்ற குறிப்புகள் உள்ளன
புறப்ெபாருள்
• அகப்பாடல்கள் ஐந்திைண ஒழுக்கங்கைளக் குறித்தது ேபால, புற

ஒழுக்கங்கைள ெவட்சி, கரந்ைத, வஞ்சி, காஞ்சி, ெநாச்சி, உழிைஞ,

தும்ைப, வாைக, என்ற எட்டுத் திைணகளாகக் குறிப்பிடுகின்றன.

இதில் பாடாண், ெபாதுவியல், ைகக்கிைள, ெபருந்திைண ஆகிய

திைணகளும் அடங்கும். திைணயின் உட்பிரிவு துைற

எனப்படுகிறது.

• புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான ேபார்த்திறம், வள்ளல் தன்ைம,

மகளிர் மாண்பு, சான்ேறார்களின் இயல்பு ேபான்றவற்ைறக்

குறிப்பிடுகின்றன.
• புறநானூறு வழி அறியலாகும் ெசய்திகள்

• அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், ெபாருளாதரம், கல்வி, நாகரிகம்,

கைல வளர்ச்சி, வரம்,


ீ ெகாைட, ஆைட, அணிகலன் பழக்க வழக்கங்கள்,

வாணிபம் ேபான்ற பல ெசய்திகைள புறநானூறு வழி அறியலாம்.

• சமூக நிைல

• ெபண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவைரத் தாழியில் கவித்தல், நடுகல்

நடுதல், நட்ட கல்ைலச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவைன

இழந்த ெபண்கள் அணிகைளக் கைளந்து, ைகம்ைம ேநான்பு ேநாற்றல்,

உடன்கட்ைடேயறல் ேபான்ற பழக்க வழக்கங்கைளயும் 10 வைக

ஆைடகைளயும், 28 வைக அணிகலன்கைளயும், 30

பைடக்கலக்கருவிகைளயும், 67வைக உணவுகைளயும் எடுத்து இயம்புகின்றன.

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்ைதக்கு ைகயில் ேவல் ெகாடுத்து ேபாருக்கு

அனுப்பும் மகளிர், முறத்தால் புலிைய விரட்டும் மகளிர் எனப் ெபண்களின்

வரத்ைதயும்
ீ ேபாற்றுகின்றன. அக்கால சமூக நிைலையக் காட்டும் கண்ணாடி

என புறநானூறு விளங்குகிறது.
• வரலாற்றுக் குறிப்புகள்

• புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக்


குறிப்புகள் உள்ளன. பாண்டியன் ெநடுஞ்ெசழியன்
முதலான 15 பாண்டிய மன்னர்கைளயும், கரிகாற்ேசாழன்
ேபான்ற 18 ேசாழ அரசர்கைளயும், இமயவரம்பன்
ெநடுஞ்ேசரலாதன், ேசரன் ெசங்குட்டுவன் ேபான்ற 18 ேசர
அரசர்கைளயும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பண்ைடயப்
ேபார்க் களங்களான ெவண்ணிப்பறந்தைல,
வாைகப்பறந்தைல, கமுமலம், தகடூர்,
தைலயாலங்கானம், கானப்ேபெரயில் ேபான்ற
ேபார்க்களங்கள் குறிப்பிட்டுள்ளன.
பதிற்றுப்பத்து
• பதிற்றுப்பத்து எட்டுத்ெதாைக நூல்களுள் ஒன்றாகும். இது

ேசர மன்னர்கள் பதின்மைரப் பற்றி பத்துப் புலவர்கள்

பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் ெதாகுப்பு. இந்த

நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிைடக்கவில்ைல.

ஏைனய எட்டுப் பத்துகேள கிைடத்துள்ளன. இந்த எண்பது

பாடல்கள் இரண்டு ேசரர் மரைபச் ேசர்ந்த எட்டுச் ேசர

மன்னர்களின் வரலாற்ைற எடுத்துைரக்கின்றன.

உதியஞ்ேசரல் வழித்ேதான்றல்களான ஐந்து ேசர

மன்னர்களும் அந்துவஞ்ேசரல் இரும்ெபாைற

வழித்ேதான்றல்கள் மூவரும் அந்த 8 ேபர்.


• ேசர மன்னர்களின் காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்ைம,

புகழ் ேநாக்கு, ஈைகத் திறம், கைலஞர் காக்கும் ெபற்றி ஆகிய

பண்புகைளயும் பைட வன்ைம, ேபார்த்திறம், குடிேயாம்பல்

முைற, பைகயரசர் பால் பரிவு, கவிஞைர காக்கும் பண்பு

ெபண்கைள மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சி மற்றும் பல்வைக

திறன்கைளயும் சித்தரிக்கின்றன.

• காலம்

• இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக்

கருதப்படுகின்றது.அைனவராலும் இது கைடச்சங்ககால நூல்

என்பது ஏற்றுக்ெகாள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய

கைடச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நூல்

கைடச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாறுபாடும்

இருக்கவாய்ப்பில்ைல.
பகுதி பாடியவர் பாடப்பட்ட ேசர மன்னன்

முதல் பத்து - உதியஞ்ேசரலாதன் (?)

இமயவரம்பன்
இரண்டாம் பத்து குமட்டூர்க் கண்ணனார்
ெநடுஞ்ேசரலாதன்
இமயவரம்பன் தம்பி
மூன்றாம் பத்து பாைலக் ெகௗதமனார் பல்யாைனச்
ெசல்ெகழுகுட்டுவன்
களங்காய்க்கண்ணி
நான்காம் பத்து காப்பியாற்றுக் காப்பியனார்
நார்முடிச்ேசரல்
கடல்பிறக்கு ஓட்டிய
ஐந்தாம் பத்து பரணர்
ெசங்குட்டுவன்
காக்ைகபாடினியார்
ஆறாம் பத்து ஆடுேகாட்பாட்டுச் ேசரலாதன்
(நச்ெசள்ைளயார்)

ஏழாம் பத்து கபிலர் ெசல்வக் கடுங்ேகா வாழியாதன்

தகடூர் எறிந்த ெபருஞ்ேசரல்


எட்டாம் பத்து அரிசில் கிழார்
இரும்ெபாைற

குடக்ேகா
ஒன்பதாம் பத்து ெபருங்குன்றூர் கிழார்
இளஞ்ேசரலிரும்ெபாைற

ேசரமான் யாைனக்கட்ேசய்
பத்தாம் பத்து ெபாருந்தில் இளங்கீ ரனார் (?) மாந்தரஞ்ேசரல் இரும்ெபாைற
(?)
பரிபாடல் இலக்கணம்
• ெதால்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா,

ெவண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வைகப் பாவில் இது

பரிபாடல் என்று ெசால்ல முடியாத அளவுக்கு அைவ நான்கினுக்கும்

ெபாதுவாய் அைமந்த யாப்பிைன உைடயது பரிபாடல் என அது

குறிப்பிடுகிறது. நான்கு பாவின் உறுப்புகளும் ெகாண்ட பாடல்.

• ெவண்டைளயும், ஆசிரியத்தைளயும் விராய் வந்து துள்ளேலாைசப்படச்

ெசால்லப்படும்.

• ெவண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.

• ெகாச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்கைளயும்

ெகாண்டிருக்கும். காமப் ெபாருளில் வரும்.

• ெசாற்சீர் அடியும், முடுகியல் அடியம் ெகாள்வது உண்டு.

• 25 முதல் 400 வைர அடிகள் ெகாண்டிருக்கும்.

• பரி ேபால் கால்களால் பரிந்து நைடேபாடும் பண்ணிைசப் பாடல்கைளக்

ெகாண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


• பரிபாடல் நூல் ெதாகுப்பு
• பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல், ெசவ்ேவளுக்கு
(முருகனுக்கு) 31 பாடல், காடுகாள் (காட்டில்
இருக்கும் காளிக்கு அதாவது ெகாற்றைவக்கு) 1
பாடல், படிப்பதற்கு இனிைமயுள்ள ைவையக்கு 26
பாடல், ெபருநகரமாகிய மதுைரக்கு 4 பாடல் என
ெமாத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இைவ
முழுைமயாகக் கிைடக்கவில்ைல.)
• பதிப்பு
• டாக்டர் உ. ேவ. சாமிநாைதயர் அவர்கள்
பரிேமலழகர் உைரயுடன் 1918ஆம் ஆண்டு முதன்
முதலாகப் பதிப்பித்து ெவளியிட்டார். இதன் பின்னர்
ேவறு பலரும்ெவளியிட்டுள்ளனர்.

You might also like