You are on page 1of 12

கொரிந்து சபையின் நிலைமையையும் பிரச்சனைகளும்

- அப். பவுலின் தீர்வும்


முன்னுரை
கிரேக்கு தேசத்தில் கொரிந்து மிகவும் முக்கியமான பட்டணம். தேசத்தின்
மையப்பகுதியில் ஏதென்ஸ்க்கு 40 மைல்கல் தொலைவில் கொரிந்து பட்டணம்
அமைந்திருக்கிறது. பழைய கிரேக்க நகரமாகிய கொரிந்து கி.மு.146 ல் ரோமர்களால்
அழிக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டு காலம் அது பாழாய் போன இடமாகவே
இருந்தது.கி.மு.44 ல் யூலியு சீசரால் மீண்டும் நிறுவப்பட்டது. இது அகாயாவின்
தலைநகரமாகவும் மாறியது. முதலில் விடுதலை அடைந்த இத்தாலியர் பலர் குடியேறினர்.
பின்பு பல நாட்டவரும் வந்து குடியேறும் படி இந்த பட்டணம் கவர்ந்திழுக்கப்பட்டது.
கிரேக்கர் காலத்தை விட ரோமர் காலத்தில் வியாபாரத்தில் இந்த பட்டணம் முக்கியத்துவம்
பெற்றது.
இந்த பட்டணம் தீய இன்ப காரணங்களுக்கு பெயர் பெற்றிருந்தது. ஒருவனை
கீழ்த்தரமாகக் குறிப்பிட வேண்டுமெனில் “நீ என்ன கொரிந்தியனை போல இருக்கிறாய்”
என அந்தக்காலத்தில் சொல்வதுண்டு.

அந்த அளவுக்கு தீமைகளின் இருப்பிடமாய் கொரிந்து இருந்தது.


"எல்லோரும் கொரிந்துக்கு போவது நல்லதல்ல" என்ற கிரேக்க பழமொழியே உள்ளது
என்றால் எவ்வளவு கேவலம் இருந்திருக்கும்???.

அகாயா மாகாணத்தின் தலைநகராகிய கொரிந்து, வாணிக சம்பந்தமாய் முக்கியமான


இடத்தைப் பிடித்திருந்தது. இது கிரேக்க கல்விக்கும் மைய ஸ்தலமாயிருந்தது. கிரேக்கு
தேசத்தில் பெலபொனேசஸ் என்பது ஒரு முக்கியமான பகுதி. கொரிந்து பட்டணம் கிரேக்கு
தேசத்தை இந்தப் பட்டணத்தோடு இணைக்கிறது. இதற்கு அருகில் இரண்டு
துறைமுகப்பட்டணங்கள் உள்ளன. அவையாவன:
1. லீகோயம் 2. கெங்கிரேயா.
1.லீகோயம் துறைமுகம்
லீகோயம்துறைமுகம்கொரிந்துபட்டணத்திற்குஅருகாமையிலுள்ளது.
இங்ருந்து இத்தாலியா தேசத்திற்கும், மேற்கத்தி தேசங்களுக்கும் வியாபாரம் நடைபெற்றது.
2.கெங்கிரேயா துறைமுகம்
கெங்கிரேயா துறைமுகம் கொரிந்து பட்டணத்திலிருந்து அதிகத் தூரத்தில்
அமைந்திருக்கிறது. அக்காலத்தில் இங்கிருந்து ஆசியா தேசத்திற்கு வியாபாரம்
நடைபெற்றது.

மையக்கருத்து
கொரிந்து சபையில் காணப்பட்ட ஒரு சில பிரச்சனைகளையும், அந்தச் சபையைக்
குறித்த நிலைமையையும் அச்சபையினர் பவுலுக்கு அறிவித்தார்கள். (1 கொரி 1:11, 1 கொரி
5:1, 1 கொரி 11:18, 1 கொரி 15:12).இந்தக் காரியங்களுக்குப் பதில் கூறும் விதமாக கிறிஸ்தவ
ஜீவியமும், கிறிஸ்தவ நடத்தையும் பற்றி கடிந்து ஆலோசனை கூறும் பவுல் இந்த
நிருபங்களை கொரிந்து சபைக்கு எழுதுகிறார்.

கொரிந்து சபை
கி.பி.49 ன் பிற்பகுதியில் பவுல் தனது 2 ஆம் பயணத்தில் ஆசியாவின் சபைகளை
பார்வையிட்ட பின்னர் துரோவா, பிலிப்பு, தெசலோனிக்கே, ஏதேன்ஸ், பெராயா வழியாக 50 ல்
கொரிந்து வந்து 18 மாதங்கள் ஊழியம் செய்து சபையை நிறுவினார் (அப் 18:1-18). பவுல்
தனது வழக்கப்படி யூதர்களை நாடினார் (ரோ 1:16) ஆனால், மற்ற இடங்கள் போலவே
ஏளனம் செய்தனர். சுவிசேஷத்தை ஏற்க மறத்து எதிர்த்தனர். எனவே புறஜாதியினரை நாடி
சென்றார் அவர்கள் ஆவலோடு ஏற்றுக் கொண்டனர் (அப் 18:6).
கொரிந்து பட்டணத்தைச் சுற்றிலும் ஏராளமான வணிகஸ்தலங்கள் இருந்தன. அதிக
வியாபாரம் நடைபெற்றது. பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிற்று. ஐசுவரியம்
பெருகியிருந்ததினால் பாவப்பழக்க வழக்கங்கள் இங்கு பெருகியிருந்தது. இந்தப்
பட்டணத்தில் அப்போஸ்தலர் பவுல் ஒரு சபையை ஸ்தாபித்தார். புறஜாதியாரில் அநேகர்
இந்தச் சபையில் விசுவாசிகளாக இருந்தார்கள்.
கிறிஸ்பு என்பவர் ஜெபலயத்திற்குத் தலைவர். இவர் கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருந்தார். “”ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு
என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான்.
கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம்
பெற்றார்கள்’’ (அப் 18:8).

பவுல் கொரிந்து பட்டணத்தில் 18 மாதங்கள் தங்கியிருந்து ஊழியம் செய்தார். கர்த்தர்


பவுலுக்குத் தரிசனமாகி இந்தப் பட்டணத்தில் தமக்கு அநேக ஜனங்கள் உண்டு என்று
சொன்னார்.
“”இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு,
மவுனமாயிராதே; நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி
ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக
ஜனங்கள் உண்டு என்றார்’’ (அப் 18:9,10).
கர்த்தரின் வார்த்தையினால் பவுல் உற்சாகமடைந்து, கொரிந்து பட்டணத்தில்
உண்மையாய் ஊழியம் செய்தார்.

கொரிந்துவிலுள்ள சபை விசுவாசிகளில் அநேகர் ஒரு காலத்தில்


விக்கிரகாராதனைக்காரராயிருந்தார்கள்.யூதமார்க்கத்திலிருந்து இயேசுகிறிஸ்துவைத் தங்கள்
தேவனாக ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட ஒரு சிலரும் இந்தச் சபையில்
விசுவாசிகளாயிருந்தார்கள். புறஜாதியாரின் எண்ணிக்கையோடு, யூதமார்க்கத்திலிருந்து வந்த
விசுவாசிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவர்கள் மிகவும் கொஞ்சம்
பேராயிருந்தார்கள்.

பலதரப்பட்ட கொரிந்தியர் கிறிஸ்தவத்தை ஏற்று கொண்டாலும் யூதர்களின் எதிர்


பிரச்சாரமும், அவநம்பிக்கையும் தூண்டிவிடப்பட்டது. இதன் மூலம் இந்த சபையின் மூலம்
பலருக்கு பல பிரச்சனை வந்தது. இவர்கள் பவுலின் சுவிசேஷத்தை அல்லாமல் வேறே
சுவிசேஷத்தையும் வரவேற்றனர். சமூக ஏற்ற தாழ்வு - வழிபாட்டிலும் காணப்பட்டது. இந்த
பட்டணத்தில் மேலோங்கி இருந்த ஒழுக்ககேடு, சபைக்குள் புகுந்தது (5:1-13; 6:12-30);
வழிபாட்டில் தீய ஒழுக்கமும் புகுந்தது (11:2-16) ; ஒற்றுமையின் சின்னமான திருவிருந்தில்
வேற்றுமை காணப்பட்டது (11:17-34) ; அன்றாட வாழ்வில் பல காரியங்களில் கருத்து
வேறுபாடு, தவறான கருத்து (7:1-40; 8:1-11:1) ; வரங்கள் குறித்ததான முரன்பாடான கருத்து
(12:1-14:40) உயிர்தெழுதல் பற்றிய பிரச்சனை (15:1-58) ; இவை புறஜாதியினருக்கு துர்
மாதிரியாக அமைந்தது (5:1)

பவுல் மற்ற இடங்களில் ஊழியம் செய்வதற்காக கொரிந்து பட்டணத்தைவிட்டுப்


புறப்பட்டுப்போனார். பவுல் கொரிந்து சபையில் இல்லாத காலத்தில், சபைக்குள் சில
பிரச்சனைகள் உண்டாயிற்று. குழப்பங்கள் உண்டாயிற்று. அவற்றையெல்லாம் சரிசெய்யும்
வண்ணமாக பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார்.
1.பெருமை, 2.மாம்சத்தின் இச்சை, 3.பிரிவினைகள், 4.ஐசுவரியத்தின் மயக்கம்,
5.வேசித்தனங்களும் விபசாரங்களும், 6.துன்மார்க்கமான சுபாவங்களும் கிரியைகளும்
கொரிந்து சபையில் நிறைந்திருந்தது. அப்போஸ்தலர் பவுல் கொரிந்துவிலுள்ள
விசுவாசிகளுக்கு இந்த நிருபத்தைப் பொதுவாக எழுதினாலும், அவர்களில் ஒரு சிலரைக்
குறிப்பிட்டும் எழுதுகிறார். ஒரு சில விசுவாசிகளின் பெருமையினால் சபைக்குள்
பிரிவினைகளும் குழப்பங்களும் உண்டாயிற்று.
ஒரு சிலர் ஐசுவரிய மயக்கத்தினால் நிறைந்திருந்தார்கள். வேறு சிலர்
7.கிறிஸ்துவின் உபதேசத்தோடு கிரேக்க தத்துவ உபதேசங்களையும் கலந்து
உபதேசித்தார்கள்.
விசுவாசிகள் மத்தியில் பிரச்சனைகள் வந்தபோது, அவர்களுடைய 8.வழக்குகள்
புறஜாதியாருடைய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டது. அதிகமான வியாபாரங்களும்,
அதிகமான பொருளாதாரங்களும் கொரிந்து பட்டணத்தில் இருந்ததினால், அதிகமான
பிரச்சனைகளும், அதிகமான வழக்குகளும் உண்டாயிற்று.
கொரிந்து சபையிலுள்ள விசுவாசிகளிடத்தில் ஒழுங்கும் கிரமமும் காணப்படவில்லை.
9.கர்த்தருடைய பந்தியை அவர்கள் ஒழுங்காயும், கிரமமாயும் ஆசரிக்கவில்லை.
கர்த்தருடைய பந்தியை அவர்கள் அசுத்தப்படுத்தினார்கள். கர்த்தருடைய சித்தத்திற்கு
முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களில் சிலர் தங்கள் மாம்ச இச்சைக்கு
முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒரு சிலர் தங்கள் தகப்பனின் மனைவியை தங்களுக்கு
மனைவியாகக் கொண்டார்கள். கொரிந்து சபையில் இந்த அளவுக்கு துன்மார்க்கம்
நிறைந்திருந்தது.
விசுவாசிகள் மத்தியில் வேசித்தனமும் விபச்சாரமும் நிறைந்திருந்தது. இவர்கள் ஒரு
காலத்தில் விக்கிரகாராதனைக்காரராயிருந்தார்கள். இஸ்ரவேலின் காணியாட்சிக்குப்
புறம்பானவர்களாயிருந்தார்கள். அக்காலத்தில் அவர்களிடத்தில் 10.விக்கிரகாராதனையும்,
வேசித்தனமும் அதிகமாயிருந்தது. கிறிஸ்துவின் சபைக்கு வந்த பின்பு அவர்கள்
விக்கிரகாராதனையை விட்டு விலகி வந்தார்கள். ஆனால் அவர்கள் வேசித்தனத்தையும்
விபச்சாரத்தையும் விட்டு விலகிவரவில்லை. மாம்ச சிந்தையினால் நிறைந்திருந்தார்கள்.
பவுல் இவர்களுடைய துன்மார்க்கமான கிரியைகளுக்கு விரோதமாக இந்த நிருபத்தை
எச்சரித்து எழுதுகிறார்.

கொரிந்து சபையிலுள்ள விசுவாசிகளில் சிலர் அதிகம் கல்வி கற்றவர்கள்.


உலகப்பிரகாரமான ஞானிகளாகயிருக்கிறார்கள். 11.கிறிஸ்துவின் உபதேசத்தைவிட இவர்கள்
உலகஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
12. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்னும் உபதேசத்தை இவர்களில் ஒரு
சிலர் விசுவாசிக்கவில்லை. அந்த உபதேசத்திற்கு விரோதமாகத் தர்க்கம்பண்ணினார்கள்.
பவுல் இவர்களை குறித்த அழைமொழிகளை வேறெந்த சபைக்கும்
கொடுக்கவில்லை.

1 இறுமாப்பு அடைந்தவர்கள். 1 கொரி 4:19;

2 அநியாயக்காரர் 3 வேசிமார்க்கத்தார் , 4.விக்கிரகாராதனைக்காரர், 5.விபசாரக்காரர்,


6.சுயபுணர்ச்சிக்காரர், 7.ஆண்புணர்ச்சிக்காரர், (1 கொரி 6 :9)

8.திருடன் , 9.பொருளாசைக்காரர், 10.வெறியர் , 10. உதாசினர் , 10.கொள்ளைக்காரர்


(1 கொரி 6:10)

கொரிந்து சபையில் பலவிதமான ஒழுங்கீனங்கள் காணப்பட்டது.


இவையெல்லாவற்றையும் திருத்தவேண்டுமென்றும், ஒழுங்குபடுத்தவேண்டுமென்றும்
தீர்மானித்து பவுல் இந்த நிருபத்தை அவர்களுக்கு எழுதுகிறார். பவுல் புறஜாதியாருக்கு
அப்போஸ்தலராயிருக்கிறார். தேவன் அவரிடத்தில் அப்போஸ்தல ஊழியத்தையும்,
அப்போஸ்தல அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். பவுல் இந்த நிருபத்தை எழுதும்போது,
தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தையும், அதோடு தான் அவர்கள்மீது வைத்திருக்கும்
அன்பையும் சேர்த்து எழுதுகிறார்.

நிருபத்தின் பகுப்பாய்வு
இந்த நிருபத்தின் ஆரம்பத்தில் கொரிந்துவிலுள்ள விசுவாசிகளுக்கு வாழ்த்துதல்
சொல்லுகிறார். அதன்பின்பு அவர்களிடத்தில் காணப்படுகிற குழப்பங்களையும்,
ஒழுங்கீனங்களையும் அவர்களுக்கு விளக்கமாகச் சொல்லுகிறார். அதனிமித்தமாக
அவர்களைக் கடிந்துகொள்கிறார். அவர்கள் மத்தியில் மனத்தாழ்மையும் உண்மையான
அன்பும் காணப்படவேண்டுமென்று அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார்.

முதல் நான்கு அதிகாரத்தில் கொரிந்து சபையில் காணப்படுகிற


பிரச்சனைகளைப்பற்றியும், அவற்றை தீர்த்துவைப்பதற்கு தன்னுடைய
ஆலோசனைகளையும் பவுல் விரிவாக எழுதுகிறார். ஐந்தாவது அதிகாரத்தில்
விபச்சாரம்பண்ணுகிறவர்களைக் கடிந்துகொண்டு அவர்களுக்குப் புத்திசொல்கிறார்.

ஆறாவது அதிகாரத்தில் விசுவாசிகள் மத்தியில் காணப்படுகிற வழக்குகளைப்பற்றி


பேசுகிறார். புறஜாதியாரின் நீதிபதிகள் மத்தியில் விசுவாசிகளுடைய வழக்குகள்
விசாரிக்கப்படுவதைப் பவுல் கடிந்துகொள்கிறார். ஏழாவது அதிகாரத்தில் 13.திருமண
காரியங்களைக் குறித்து ஆலோசனை சொல்லுகிறார். எட்டாவது அதிகாரத்தில்
14.விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப்பற்றி பவுல் எழுதுகிறார்.

ஒன்பதாவது அதிகாரத்தில் தன்னைப்பற்றியும், தன் ஊழியத்தைப்பற்றியும் பவுல்


சுருக்கமாகச் சொல்லுகிறார். பத்தாவது அதிகாரத்தில் விக்கிரகாராதனைக்காரரோடு
நமக்குள்ள ஐக்கியத்தைக் கட்டுப்படுத்துகிறார். விக்கிரங்களுக்கு படைக்கப்பட்டதை
விசுவாசிகள் புசிக்கக்கூடாது என்று தடைபண்ணுகிறார். கொரிந்துவிலுள்ள விசுவாசிகள்
கர்த்தருடைய பந்தியிலும் பிசாசுகளின் பந்தியிலும் பங்குபெறுவதைக் கண்டித்து
உணர்த்துகிறார்.

பதினோராவது அதிகாரத்தில் 14.ஆவிக்குரிய ஆராதனையைப்பற்றிச் சொல்லுகிறார்.


கர்த்தருடைய பந்தியில் கடைப்பிடிக்கப்படுகிற ஒழுங்குமுறைகளை விவரிக்கிறார்.
பன்னிரண்டாவது அதிகாரத்தில் பவுல் ஆவிக்குரிய வரங்களைப்பற்றி எழுதுகிறார்.
பதிமூன்றாவது அதிகாரத்தில் அன்பின் முக்கியத்துவத்தைப்பற்றிச் சொல்லுகிறார்.

பதிநான்காவது அதிகாரத்தில் ஆவிக்குரிய வரங்களை சபையின்


பக்திவிருத்திக்கேதுவாக எவ்வாறு பயன்படுத்தவேண்டுமென்று ஆலோசனை
சொல்லுகிறார். பதினைந்தாவது அதிகாரத்தில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றிய
உபதேசத்தை விரிவாக எடுத்துச்சொல்லுகிறார். இந்த நிருபத்தின் முடிவில் பவுல்
கொரிந்துவிலுள்ள விசுவாசிகளிடத்தில் ஒரு சில ஆலோசனைகளைச் சொல்லி,
அவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி இந்த நிருபத்தை நிறைவுசெய்கிறார்.

கொரிந்து சபையில் காணப்பட்ட பிரச்சினைகள் (1 கொரி 1: 10 முதல் 6)

I. சபையிலே பிரிவினை என்ற பிரச்சினை


II. (1 கொரி 1: 10 முதல் 4: 21)அ ஊழியர்களுக்குள்ளே பிரிவினைக் கூடாது (1 கொரி 1:
10-17)
1. ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும் (1 கொரி 1:10)
2. சகோதரர்களுக்குள்ளே வாக்குவாதங்கள் கூடாது (1 கொரி 1:11-13)
3. தண்ணீர் ஞானஸ்நானம் (1 கொரி 1:14-17)
ஆ. சுவிசேஷத்தின நிமித்தமான பிரிவினை (1 கொரி 1: 18-31)
4. மானிட ஞானமும் சிலுவையைப் பற்றிய உபதேசமும் வெவ்வேறானவை(1:18-25)
5. கிறிஸ்தவர்களுடைய அழைக்கப்பட்ட அழைப்பும் அழைப்பின் காரணமும்(1:26-29)
6. கிறிஸ்துவே நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். (1:30-31)
இ. உபத்திரவத்தின் நிமித்தமான பிரிவினை (1 கொரி 2)
7. தேவனைப் பற்றிய சாட்சியை அறிவிப்பதும் அதன் தெய்வீக
நோக்கமும் (1 கொரி 2:1-5)
8. கிறிஸ்தவ வெளிப்பாடு தெய்வீக ஞானமாயிருக்கிறது (1 கொரி 2:6-8)
9. ஆவிக்குரிய காரியங்கள் ஆவியினாலே வெளிப்படுத்தப்பட்டு உபதேசிக்கப்பட்டவை
(1 கொரி 2:9-16)
ஈ. மாம்சத்தின் படியான பிரிவினை (1 கொரி 3: 1-4)
10. கொரிந்திய விசுவாசிகளின் மாம்சத்திற்குரிய நிலைமை (1 கொரி 3:1-4)
உ. அவனவனுடைய வேலைப்பாடு வெளியரங்கமாக்கப்படும் (1 கொரி 3: 5-17)
11. உண்மையான ஊழியக்காரர்களுக்கு தேவன் மட்டுமே ஆசீர்வாதத்தின்
ஆதாரமாயிருக்கிறார் (1 கொரி 3:5-7)
12. ஊழியக்காரர்கள் தேவனுக்கு உடன் வேலையாட்களாய் இருக்கிறார்கள் (3:8-10)
13. ஒரே அஸ்திபாரம் (1 கொரி 3:11)
14. இரண்டு விதமான கட்டிடங்கள் - இரண்டு விதமான விளைவுகள்(1 கொரி 3:12-15)
15. தேவனுடைய ஆலயத்தைப்போல சரீரம் பரிசுத்தமாயிருக்க
வேண்டும் (1 கொரி 3:16-17)
ஊ. பிறமனிதரைப் புகழவேண்டாம் (1 கொரி 3: 18-23)
16. மாம்சத்தில் நம்பிக்கை வைப்பதற்கு எதிரான எச்சரிப்பு (1 கொரி 3:18-23)
எ. உங்களைக் குறித்தும் மேன்மை பாராட்ட வேண்டாம் (1 கொரி 4)
17. ஊழியக்காரரின் நியாயத்தீர்ப்பு (4:1-5)
18. தாழ்மையாக இருக்குமாறு புத்திமதி (4:6-8)
19. தாழ்மைக்கும் பாடுகளுக்கும் அப்போஸ்தல எடுத்துக்காட்டு (4:9-13)
20. பவுல் சுவிசேஷத்திற்கு அவர்களுடைய தந்தையாக இருக்கிறார் (4:14-17)
21. உண்மையான ஊழியக்காரரின் அழைப்பு கிரியை ஆகியவற்றிற்குசான்று.(4:18-21)

II. சபையிலே விபச்சாரம் என்ற பிரச்சினை (1 கொரி 5-6)


அ. சிலருக்குள் இருக்கும் பாவம், பலரையும் கெடுக்கும் (5: 1-8)
1. பிரசித்தமாய் சொல்லப்படுகிற பாவம் (5:1)
2. பாவத்தில் இறுமாப்படைந்திருப்பது பிரிவினைகளுக்குக் காரணம் (5:2)
3. ஸ்தல சபையில் பாவத்திற்கு நியாயம் தீர்க்கும் விதம் (5:3-5)
4. பாவம் என்னும் பழைய புளித்தமாவை புறம்பே கழித்துப் போடுங்கள் (5:6-8)
ஆ. புளித்தமாவாகிய துர்குணத்தையும், பொல்லாப்பையும் அகற்றவேண்டும்(1 கொரி 5:9-
13)
5. உலகத்திலுள்ள பாவிகளுக்கும் சபையிலுள்ள பாவிகளுக்கும் இடையிலுள்ள
வேறுபாடு (5:9-11)
6. சபையில் பொல்லாதவனை தள்ளிப்போடுவதற்கு ஸ்தல சபைக்கு அதிகாரம்
உள்ளது (5:12-13)
III. வழக்குகள் (1 கொரி 6: 1-11)
அ. விசுவாசிகளுக் கிடையே எழும் பிரச்சினைகள் சபையிலே சரிபடுத்தப் படவேண்டும்
(1 கொரி 6: 1-6)
7. பரிசுத்தவான்கள் வழக்காடும்படி அநீதக்காரரிடத்தில் போக துணியக்கூடாது (6:1)
8. பரிசுத்தவான்கள் தங்கள் வழக்குகளை தங்களுக்குள்ளே நியாயம் தீர்த்துக் கொள்ள
வேண்டும் (6:2-6)
ஆ. நீதியாக வாழ்ந்து, அநியாயத்தைச் சகிக்கவேண்டும் (6: 7-11)
9. பரிசுத்தவான்கள் அநியாயத்தை சகித்துக் கொண்டு நஷ்டத்தை பொறுத்துக் கொள்ள
வேண்டும் (6:7-8)
10. ஆத்துமாவை அழிக்கும் பாவங்கள் (6:9-11)

IV. வேசித்தன அசுத்தம் (6: 12-20)


11. பாவத்தின்மீது வெற்றி பெறுவதன் இரகசியம் (6:12)
12. சரீரம் வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது (6:13-18) வேசித்தனத்திற்க்கு விலகி
ஓடுங்கள்.
13. சரீரம் பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாய் இருக்கிறதினால் அது பாவமில்லாமல்
இருக்க வேண்டும் (6:19-20)

பிற காரியங்களைக் குறித்த போதனைகள் ( 2 கொரி 7 முதல் 16: 12)

V. சபைச் செயல்பாடுகள் (2 கொரி 11: 2-34)


அ. ஆண்கள், பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் (11: 2-16)
ஆ. அவமானத்திற்குரிய காரியங்கள் சபையில்
அனுமதிக்கப்படக்கூடாது (11: 17-22)
இ. கர்த்தருடைய பந்தியைக் கொண்டாடுதல் (11: 23-34)
4. ஆவியின் வரங்கள் (12-14)
அ. ஆவியானவரே வரங்களைக் கொடுக்கிறார; (12: 1-11)
ஆ. வெவ்வேறாக இருந்தாலும் ஒரே நோக்கத்திற்காகவே இருக்கிறது (12: 12-30)

VI. திருமண வாழ்வு (2 கொரி 7)


அ. பொதுவான கொள்கைகள் (7: 1-9)
1. திருமணமாகாத கிறிஸ்தவருக்கு ஆலோசனை (7:1-2)
2. திருமணமான கிறிஸ்தவருக்கு ஆலோசனை (7:3-6)
3. திருமணமாகாதவருக்கு ஆலோசனை (7:7-9)
ஆ. கணவன் மனைவியைவிட்டுப் பிரியாதிருத்தல் (7: 10-16)
4. திருமணமான கிறிஸ்தவருக்கு ஆலோசனையும் ஒழுங்குகளும் (7:10-16)
இ. தேவன் அழைத்த நிலையில் நிலைத்திருத்தல் (7: 17-24)
VII. கர்த்தர் அவனவனை அழைத்தது எப்படியோ அப்படியே அவனவன் நடக்கக்
கடவன் (2 கொரி 7:17-24)
ஈ. திருமணம் ஆகாதவர்களுக்கு (7: 25-40)
6. கன்னிகைகளைக் குறித்தும் விவாகம் இல்லாதிருக்கிற மனுஷனைக் குறித்தும்
ஆலோசனை (7:25-28)
7. திருமணமான கிறிஸ்தவருக்கு ஆலோசனை (7:29-31)
8. திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் ஆகியோரின் பொறுப்பு (7:32-35)
9. தன் புத்திரிகையின் கன்னிப்பருவத்தைக் குறித்து பெற்றோருக்கு ஆலோசனை (7:36-38)
10. கிறிஸ்தவ விதவைகளுக்கு ஆலோசனை (7:39-40)

VIII. சபையில் கிறிஸ்தவ சுயாதீனம் (2 கொரி 8: 1 முதல் 11: 1)


அ. உங்களுக்கிருக்கும் அறிவைப் பிறர் இடறுவதற்கு பயன்படுத்த வேண்டாம்(8)
1. அறிவு, அன்பு ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் (8:1-3)
2. பல விக்கிரகங்கள் ஆனால் ஒரே ஒரு மெய் தேவன் (8:4-5)
3. பிதாவாகிய தேவனும் இயேசு கிறிஸ்துவும் (8:6)
4. அறியாமை அடிமைத்தனத்தை உண்டுபண்ணும் (8:7-8)
5. கிறிஸ்தவ விடுதலையை தவறாக பயன்படுத்துவதும் அதன் விளைவும் (8:9-13)

ஆ. பவுல் காண்பித்திருக்கும் முன்மாதிரி வாழ்வைப் பின்பற்றுங்கள் (9)


1. பவுலின் அப்போஸ்தல ஊழியம் (9:1-2)
2. மற்றவர்களைப் போல ஜீவிக்க பவுலுக்கு அதிகாரம் உண்டு (9:3-8)
3. மற்றவர்களைப் போன்று சுவிசேஷத்தினால் பிழைப்பு நடத்த பவுலுக்கு அதிகாரம் உண்டு
(9:9-11)
4. பவுல் இந்த அதிகாரத்தைச் செலுத்தவில்லை (9:12-15)
5. சுவிசேஷத்தை பிரசங்கிப்பது பவுல்மேல் விழுந்த கடமை (9:16-18)
6. ஊழியம் செய்வதில் பவுலின் கொள்கை (9:19-23)
7. வெகுமதிக்கு நிபந்தனைகள் (9:24-27)

இ. பழைய ஏற்பாட்டு சம்பவ உதாரணங்கள் (10: 1-33)

i. நான் விழமாட்டேன் என்ற அகந்தை வேண்டாம் (10: 1-13)

(1) இஸ்ரவேலின் ஐந்து ஆசீர்வாதங்கள் (10:1-4)


(2) இஸ்ரவேலின் ஐந்து சாபங்கள் (10:5-11)
(3) சோதனைகளை சகித்தல் (10:12-13)

ii. விக்கிர ஆராதனைக்கு விலகி ஓடுங்கள் (10: 14-22)


1.விக்கிரகாராதனை, பெருமை ஆகியவற்றிற்கு எதிராக கிறிஸ்தவருக்கு
எச்சரிப்பு (10:14)
(2) மூன்று ஐக்கியங்கள்
(அ) சபையின் ஐக்கியம் (10:15-17)
(ஆ) இஸ்ரவேலின் ஐக்கியம் (10:18-19)
(இ) புறஜாதியாரின் ஐக்கியம் (10:20)
(3) கிறிஸ்தவருக்கு எச்சரிப்பு (10:21-22)
iii. சகலத்தையும் தேவன் மகிமைப்படும்படி செய்யுங்கள் (10: 23-33)
(4) கிறிஸ்தவருடைய விடுதலைகள் எப்போதும் ஞானத்தையும் பக்தி விருத்தியையும்
உண்டாக்காது (10:23-24)
(5) கடையில் விற்கப்படுகிற எதையும் வாங்கி புசிக்கலாம் (10:25-26)
(6) அவிசுவாசிகளின் விருந்துகள் (10:27-30)
(7) நமது கிறிஸ்தவ உரிமைகளை தேவனுடைய மகிமைக்கென்றே செய்ய வேண்டும் (10:31-
33)

IX. சபைச் செயல்பாடுகள் (2 கொரி 11: 1-34)

அ. ஆண்கள், பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் (11: 1-16)


1. பவுலைப் பின்பற்றி கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்னும் புத்திமதி (11:1-2)
2. புருஷனுக்கு கிறிஸ்து தலையாயிருக்கிறார் (11:3)
3. புது ஆராதனைகளில் புருஷர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் ஒழுங்குகள் (11:4-12)
4. சுபாவம் போதிக்கிற காரியம் (11:13-15)
5. இதனால் பிரிவினைகளும் வாக்குவாதங்களும் உண்டானால் நமக்கு அப்படிப்பட்ட
வழக்கமில்லையென்று அறியக்கடவன் (11:16)

ஆ. அவமானத்திற்குரிய காரியங்கள் சபையில் அனுமதிக்கக்கூடாது (11: 17-22)

6. கொரிந்துவில் பொதுவாக காணப்பட்ட பிரிவினைகளும் மார்க்க பேதங்களும் (11:17-19)


7. கர்த்தருடைய இராப்போஜனத்தில் காணப்படும் பாவங்கள் (11:20-22)

இ. கர்த்தருடைய பந்தியைக் கொண்டாடுதல் (11: 23-34)

8. கர்த்தருடைய இராப்போஜனம் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டது (11:23-26)


9. கர்த்தருடைய இராப்போஜனத்தில் அபாத்திரமாய் பங்கு பெறக்கூடாது (11:27-28)
10. அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறதினால் ஏற்படும் விளைவு (11:29-30)
11. நியாயத்தீர்ப்பைத் தவிர்ப்பதற்கு வழி (11:31-32)
12. கொரிந்துவில் காணப்படும் குறைகளைக் குறித்து புத்திமதி (11:33-34)
X. ஆவியின் வரங்கள் (12-14)
அ. ஆவியானவரே வரங்களைக் கொடுக்கிறார; (12: 1-11)
1. இயேசுவை மகிமைப்படுத்தும் (12:1-3)
2. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு (12:4-6)
3. வரங்களின் நோக்கம் (12:7)
4. வரங்களின் எண்ணிக்கையும் விதமும் (12:8-10)
5. வரங்கள் பகிர்ந்து கொடுக்கப்படும் விதம் (12:11)
6. சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம் (12:12)
ஆ. வெவ்வேறாக இருந்தாலும் ஒரே நோக்கத்திற்காகவேஇருக்கிறது(12: 12-30)
7. சரீரத்தில் அநேக அவயவங்கள் இருக்கிறது (12:13-14)
8. சரீரத்தின் அவயவங்கள் ஒன்றோடொன்று இசைந்திருக்கிறது (12:15-20)
9. சரீரத்தின் அவயவங்கள் ஒன்றுக்கொன்று துணைபுரியும் (12:21-23)
10. சரீரத்தின் அவயவங்கள் ஒன்றுக்கொன்று சிந்திக்கும் (12:24-26)
11. கிறிஸ்தவர் அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே
ஊழியமுடையவராயும் இருக்கிறார்கள் (12:27-30)
இ. அன்பே மேன்மையான வரமாக இருக்கிறது (12: 31 முதல் 13)
12. ஆவிக்குரிய வரங்களைக் குறித்து ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை (12:31)
13. அன்பில்லாவிட்டால் வரங்களினால் பயனில்லை (13:1-3)
14. அன்பின் சுபாவம் (13:4-7)
15.வரங்கள் ஒழிந்து போகும் – ஆனால் அன்பும்
மற்ற கிருபைகளும்ஒழியாது(13:8-13)
ஈ. ஞானவரங்களை விரும்புங்கள் (14)- தீர்க்கதரிசன வரம், அந்நியபாஷை
16. எல்லா வரங்களையும் விசேஷமாய் தீர்க்கதரிசன வரத்தையும்
விரும்புங்கள் (14:1-2)
17. தீர்க்கதரிசன வரமும் அந்நிய பாஷைகளும் (14:3-4)
18. அந்நிய பாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்தி விருத்தியுண்டாகும்படி பேச
வேண்டும் (14:5)
19. அந்நிய பாஷைகளை பிரயோஜனம் உண்டாகும் விதத்தில்
பேசவேண்டும் (14:6-11)
20. சபைக்கு பக்தி விருத்தியுண்டாகத் தக்கதாக ஆவிக்குரிய வரங்களில் தேறும்படி
நாடவேண்டும் (14:12)
21. ஆவியோடும் விண்ணப்பம் பண்ண வேண்டும், கருத்தோடும் விண்ணப்பம் பண்ண
வேண்டும் (14:13-17)
22. பவுல் அதிகமாய் பாஷைகளைப் பேசினார் (14:18-19)
23. புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள் (14:20)
24. அந்நிய பாஷைகள் அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கிறது (14:21-22)
25. எல்லோரும் அந்நிய பாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது ஏற்படும்
காரியம் (14:23)
26. எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லும் போது ஏற்படும் காரியம் (14:24-25)
27. சகலமும் பக்தி விருத்திக்கேதுவாக செய்யப்படக்கடவது (14:26)
28. சபையில் அந்நிய பாஷையில் பேசும் ஒழுங்கு (14:27-28)
29. தீர்க்கதரிசிகள் பேச வேண்டிய ஒழுங்கு (14:29-31)
30. தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே (14:32-33)
31. சபையில் ஸ்திரீகள் குழப்பம் விளைவிக்கக் கூடாது (14:34-35)
32. இவைகள் கர்த்தருடைய கற்பனைகள் என்று ஒத்துக் கொள்ளவேண்டும்(14:36-38)
33. ஆவிக்குரிய வரங்களைக் குறித்து கடைசி எச்சரிப்பும் புத்திமதியும் (14:39-40)

XI. உயிர்த்தெழுதல்கள்
அ. சுவிசேஷத்தின் சுருக்கம் (15: 1-11)
1. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பவுலின் பிரசங்கம் (15:1-8)
2. ஊழியத்தில் பவுலின் தாழ்மை (15:9-11)
ஆ. வருங்கால உயிர்த்தெழுதல் (15: 12-34)
3. கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம் (15:12-19)
4. கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின் நிச்சயம் (15:20-22)
5. உயிர்த்தெழுதலின் வரிசை (15:23)
6. உலகத்தின் முடிவு (15:24-28)
7. மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் (15:29)
8. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் பாடுகளினால் என்ன பிரயோஜனம் (15:30-32)
9. பாவம் செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக் கொண்டு
தெளிந்தவர்களாயிருங்கள் (15:33-34)
இ. உயிர்த்தெழவிருக்கும் சரீரத்தின் தன்மைகள் (15: 35-49)
10. மரித்தோர் எழுந்திருக்கும் விதம் (15:35-38)
11. உயிர்த்தெழுந்த சரீரங்களின் நிலைமை (15:39-44)
12. உயிர்த்தெழுதலின் அவசியம் (15:45-49)
ஈ. உயிர்த்தெழுதலும் மறுரூபமாகுதலும் நடைபெறும் வேகம் (15: 50-58)
13. உயிர்த்தெழுதலின் வேளையும் விதமும் (15:50-57)
14. கர்த்தருக்குள் நாம் படுகிற பிரயாசம் விருதாவாயிராது (15:58)

உ. தர்மப்பணம் (16:1-4)
15. பரிசுத்தவான்களுக்காக சேர்க்கப்படும் தர்மப்பணம் (16:1-4)

கொ ரி ந் தி ய ரு க் கு எ ழு த ப் ப ட் ட இ ர ண் டா ம் க டி த த் தி ல்
தொ கு க க் க ப் ப ட் ட கா ரி ய ங் க ளு ம் ஆ லோ ச னை க ளு ம்

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட 2 ஆவது கடிதம், பாடுகள் மற்றும்


சந்தோஷத்தைக்குறித்து உள்ளது. பாடுகளும், சந்தோஷமும் ஊழியத்தின் இரண்டு
பக்கங்களாக இருக்கின்றன என்பதை இது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
XII. வாழ்த்து (2 கொரி 1: 1-2)
2 கொரி-1:1-2 தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய
பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள
தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்த
வான்களுக்கும் எழுதுகிறதாவது:
2. நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும்,
உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

XIII. மனம்திறந்து பேசுதல் (2 கொரி 1: 3 முதல் 7: 16)

1. மிகுதியான உபத்திரவங்கள் (1:3-11)


அ. உபத்திரவங்கள் ஆறுதலைப் பெற்றுக் கொடுக்கிறது
ஆ. உபத்திரவங்கள் பிறருடைய இரட்சிப்பு ஏதுவானதாகப் பயன்படுகிறது
இ. மற்றவர்களுடைய ஜெபத்தால் உபத்திரவத்தின் அளவு தணிக்கப்படுகிறது
2. சந்திக்க வரவேண்டும் என்ற விருப்பம் (1:12 முதல் 2:11)
அ. அவர்களுடைய பிரயோஜனத்திற் காகவே தாமதித்தது
ஆ. துக்கத்தோடு வரவிரும்பவில்லை (2:1-11)
3. பவுலின் நோக்கம் (2:12 முதல் 6:10)
அ. தேவனுடைய வழிடத்துதல் (2:12-17)
ஆ. ஊழியர்களின் கடிதங்கள் விசுவாசிகளே (3:1-6)
இ. மகிமையான உடன்படிக்கை (3: 7-18) நீதியைக் கொடுக்கும் ஆவிக்குரிய ஊழியம்
2 கொரி-3:18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக்
கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச்
சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
ஈ. மகிமையான ஒளி (4: 1-6) கிறிஸ்துவின் சுவிசேஷம்
2 கொரி-4:4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான
சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாய் இராதபடிக்கு, இப்
பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
உ. தோற்கடிக்கப் படமுடியாத உள்ளான மனிதன் (4: 7-18)
2 கொரி-4:17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப் படாதவைகைள
நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம்
மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
ஊ. நித்திய நம்பிக்கை (5: 1-8)
எ. கர்த்தருக்குப் பிரியமாயிருக்க நாடுதல் (5: 9-11)
2 கொரி-5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாய்
இருக்கிறான், பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2 கொரி-5:10 ஏனென்றால், சரீத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது
தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக
வெளிப்படவேண்டும்.
ஏ. நெருக்கி ஏவுகிற அன்பு (5:12-21)
ஐ. முழுமையான அர்ப்பணம் (6:1-10)

4. பரிசுத்தமுள்ள வாழ்வு (6:11 முதல் 7:16)


அ. உலகத்தோடு சம்பந்தம் வேண்டாம் (6:11 முதல் 7:1)
ஆ. பரிசுத்தத்தைக் குறித்த கரிசனை (7:2-12)
2 கொரி-7:9 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன், நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல,
மனம் திரும்புகிறதற் கேதுவாகத் துக்கப் பட்டதற்காகவே சந்தோஷப் படுகிறேன், நீங்கள்
ஒன்றிலும் எங்களால் நஷ்டப் படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
இ. விசுவாசிகளைக் குறித்த நிச்சயம் (7: 13-16)
XIV. கொடுத்தலைக் குறித்த ஆலோசனை (2 கொரி 8 – 9)
1. மக்கெதோனியரின் கொடுக்கும் தன்மை (8: 1-7)
2 கொரி-8:2 அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப் படுகையில், கொடிய
தரித்திரம் உடையவர்களாய் இருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த
உதாரத்துவமாய்க் கொடுத்தர்கள்.
2. கிறிஸ்து தம்மையே கொடுத்தது (8: 8-15)
3. கணக்கு ஒப்புவித்தலில் உண்மையாயிருத்தல் (8: 16-24)
4. கொடுப்பதற்கு ஆயத்தம்பண்ணுதல் (9: 1-5)
5. கொடுத்தலின் சந்தோஷம் (9: 6-15)
2 கொரி-9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில்
நியமித்தபடியே கொடுக்கக்கடவன், உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன்
பிரியமாயிருக்கிறார்.
XV. பவுலின் கரிசனை (2 கொரி 10 முதல் 13: 10)
1. கீழ்படியாமையைத் தண்டித்தல் (10: 1-6)
2. ஊன்றக் கட்டுவதற்குரிய அதிகாரம் (10: 7-18)
3. பவுலும், கள்ளப்போதகர்களும் (11: 1-15)
4. மாம்சத்தின் தன்மையில் பவுல் மேன்பாராட்டுதல் (11: 16-33)
5. பெலவீனங்களைக் குறித்து சந்தோஷப்படுதல் (12: 1-13)
2 கொரி-12: 9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும், பலவீனத்திலே என் பலம்
பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி,
என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்.
6. கொரிந்தியருக்கான பவுலின் கரிசனை (12: 14-21)
2 கொரி-12:15 ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு
குறைவாய் உங்களால் அன்பு கூரப் பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள்
ஆத்துமாக்களுக்காகச் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன்.
7. சபைக்கு பவுலின் எச்சரிப்பு (13: 1-10)
XVI. முடிவுரை (1 கொரி1 :10 ## 2 கொரி 13: 11-14 )
“"சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும்,
பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச்
சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்
நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்."” 1 கொரி1 :10
கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள்,
ஆறுதலடையுங்கள், ஏக சிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது
அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.
2 கொரி-13:11
அப் . பவுல் கொரிந்து சபைக்கு மட்டுமல்ல இன்றைய சபைகளுக்கும்
கர்த்தருடைய ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும்
ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்றும்,
புத்திசொல்லி , சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள், ஏக
சிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள்,என்றும் நமக்கு அறைகூவல் இட்டிருக்கிறார்.
கிறிஸ்துவின் அடிசுவடுகளில் நடக்க, அப். பவுல் எப்படி கிறிஸ்துவை பின்பற்றினாரோ
அப்படியே நம்மையும் நம் சபைகளையும் அழைக்கிறார் . அப்பொழுது அன்புக்கும்
சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார் என்று மேலும்
சபைகளை பார்த்து அறைகூவல் இட்டிருக்கிறார்.

**************************************************************************************************************

You might also like