You are on page 1of 3

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1)ன் கீழ் மனு

ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபால்.


கோயமுத்தூர்

28.08.2023
அனுப்புநர்

திரு. வெங்கடேஷ், B.Sc., LL.B.,


வழக்கறிஞர்,
எண்.78/72, தரைதளம் சேரன் டவர்,
அரசு கலைக் கல்லூரி சாலை,
கோயம்புதூர்-641018,

பெறுநர்

பொது தகவல் அலுவலர் அவர்கள்,


கோவை அரசு போக்குவரத்துக் கழகம்,
மேட்டுபாளையம் சாலை,
கோயமுத்தூர்-641043.

பொருள்:- தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் படி கீழ்கண்ட


தகவல்கள் வேண்டுதல் தொடர்பாக.

நான் மேற்கண்ட முகவரியில் இருக்கிறேன். இம்மனுவிற்கு

கட்டணமாக ரூ.10/- நீதிமன்ற கட்டண வில்லையுடன் தாக்கல்

செய்யப்படுகிறது. கீழ்காணும் இனங்களில் எவையேனும் ஒரு சில இனங்கள்

தங்களுடைய அரசு அலுவலகம் தொடர்பில்லாத போதும் அதனை சட்டப்பிரிவு

6(3)-ன் படி மாற்றி அனுப்பி அதன் விவரத்தை விண்ணப்பம் பெற்றுக்கொண்ட 5

நாட்களுக்குள் மனுதாரர் ஆகிய எனக்கு தெரியபடுத்துமாறு தாழ்மையுடன்

வேண்டுகிறேன்.

தேவைப்படும் விவரங்கள்/ஆவணங்கள் பின்வருமாறு :-

1. கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கோவை

இரயில் நிலைய பேருந்து நிலையத்திற்க்கு அந்த வழியாகச் செல்லும்


அனைத்து தனியார் நகரப் பேருந்துகளிலும் (Private town bus) பேருந்து

பயணச்சீட்டு கட்டணம் எவ்வளவு என்கின்ற விவரங்களை அளிக்கவும்.

2. கோவை மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கோவை

இரயில் நிலைய பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் அனைத்து

தனியார் நகரப் பேருந்துகளின் பேருந்து எண், பேருந்து பெயர், பேருந்து

உரிமையாளரின் பெயர், பேருந்து நிறுவனத்தின் பெயர் மற்றும் பேருந்து

நிறுவனத்தின் முழு முகவரி மின் அஞ்சலுடன் ஆகிய விவரங்களை

அளிக்கவும்.

3. கோவை மாவட்டம் இரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து

காந்திபுரம் பேருந்து நிலையத்திற்க்கு அனைத்து தனியார் நகரப்

பேருந்துகளிலும் (Private town bus) பேருந்து பயணச்சீட்டு கட்டணம்

எவ்வளவு என்கின்ற விவரங்களை அளிக்கவும்.

4. கோவை மாவட்டம் உப்பிலிப்பாலையம் பேருந்து நிலையத்திலிருந்து

காந்திபுரம் பேருந்து நிலையத்திற்க்கு அனைத்து தனியார் நகரப்

பேருந்துகளிலும் (Private town bus) பேருந்து பயணச்சீட்டு கட்டணம்

எவ்வளவு என்கின்ற விவரங்களை அளிக்கவும்.

5. கோவை மாவட்டத்தில் இயங்கும் தனியார் நகரப் பேருந்துகளைப் பற்றிய

புகார்களை எங்கு அளிக்க வேண்டும் என்கின்ற விவரங்களை அளிக்கவும்.

6. கோவை மாவட்டத்தில் இயங்கும் அரசு நகரப் பேருந்துகளைப் பற்றிய

புகார்களை எங்கு அளிக்க வேண்டும் என்கின்ற விவரங்களை அளிக்கவும்.

7. மகளிர்களுக்கு கொடுக்கப்படும் இலவச பயணச்சீட்டுக் கொடுக்கப்பட்டு

அதனைத் பயணம் முடிவதற்க்கிடையில் தவறவிட்டால் அந்த இலவச

பயணச்சீட்டுக்கு ஏதேனும் அபராதத் தொகை இருந்தால் அந்த அபராதத்

தொகைப் பற்றிய முழு விவரங்களை அளிக்கவும்.


மேற்கண்ட இனங்களுக்குரிய தகவல்கள்/ஆவணங்களில் எவையேனும்

சட்டப்பிரிவு 8(1)b-ன் படி தடைசெய்யபட்டிருப்பின், அதற்கான ஆதாரங்களுடன்

முழு விவரம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் சட்டப்பிரிவு 7(8)iii-ன் படி முதல் மேல்முறையீட்டு


அதிகாரியின் முழு முகவரி தரவும்.

மேற்கண்ட இனங்களுக்குரிய சான்றொப்ப ஆவணங்களுக்குரிய கட்டணம்

தேவைப்பட்டால் அதை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து முறையாக

தெரிவித்தால் அதனை முறையாக செலுத்த தயாராக உள்ளேன். மேலும்

வரையறுக்கபட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பத்திற்குரிய முழுமையான

சரியான தெளிவான விவரங்களும்/ஆவணங்களும் வழங்க வேண்டுகிறேன்.

இடம் : கோயம்புத்தூர் இப்படிக்கு

தேதி : 28.08.2023

You might also like