You are on page 1of 12

வரலாற்றுக்கு முந்தைய

காலத்தை அறிவோம்
பழைய கற்காலம்
பொதுவாகப் பழையகற்காலத் தொடக்கத்தில் மக்கள், வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்களாகவும்
இருந்தனர். விடயங்களை விளக்குவதற்கு, முறைசாராத பழங்கதைகளைப் பயன்படுத்தியது, இக்காலத்தில் குறிப்பிடத்
தகுந்த சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். இயல்பான தலைவர்களின் கீழ், தற்காலிகமாக ஒழுங்கமைப்பை
உருவாக்குவதேயன்றி நிரந்தரமான தலைமையோ, ஆட்சியோ இருக்கவில்லை.
ஆண், பெண்களுக்கு இடையே ஏறத்தாழ சமநிலை நிலவியது. ஆண் வேட்டையில் ஈடுபடப் பெண் உணவு
சேகரிப்பதிலும், குழந்தைகளைக் கவனிப்பதிலும் ஈடுபட்டாள். இதற்கு மேலுள்ள வேலைகளை இரு பகுதியினரும்
பகிர்ந்து செய்ததாகவே தெரிகிறது. அவர்கள் தாவரங்கள், மூலிகைகள் என்பன பற்றிக் குறிப்பிடத்தக்க அறிவைப்
பெற்றிருந்தனர். இதனால் அவர்களுடைய உணவு சுகாதாரமானதாக இருக்க முடிந்தது.
அவர்களுடைய தொழில்நுட்பத் திறனை, அவர்கள் உருவாக்கிய, உடைக்கப்பட்ட கற்களினாலும், தீக்கல்லினாலும்
ஆன பயன்பாட்டுப் பொருட்கள் (artifacts), மரம், களிமண், விலங்குப் பகுதிகளின் பயன்பாடு, ஆகியவற்றின் மூலம்
அறிந்து கொள்ளமுடிகிறது. அவர்களுடைய கருவிகள் பல்வேறுபட்டவை. கத்திகள், கோடரிகள், சுரண்டிகள், 
சுத்தியல்கள், ஊசிகள், ஈட்டிகள், தூண்டில்கள், கேடயங்கள், கவசங்கள்,அம்பு வில்|அம்பு விற்கள் ஆகியவை
இவற்றுள் அடங்கும்.
இக் காலத்தில் பல்வேறு இடங்களில், பனிக்கட்டி வீடுகள், சிறிய மிதவைகள் போன்றவை பற்றி அறிந்திருந்ததுடன்,
பாம்புகளின் நஞ்சு, ஐதரோசயனிக் அமிலம் (hydrocyanic acid), அல்கலோயிட்டுகள் போன்ற நச்சுப் பொருட்கள்
பற்றியும் அறிந்திருந்ததாகத் தெரியவருகிறது. குளிரில் உறையவைத்தல், காயவைத்தல், மெழுகு, களிமண்
ஆகியவற்றைப் பயன்படுத்திக் காற்றுப்புகாது அடைத்தல், போன்ற உணவுகள் கெட்டுப்போகாது காக்கும் முறைகள்
பற்றிய அறிவும் அவர்களுக்கு இருந்தது. இவர்கள் விவசாயம்,விவசாயம்,தீ,மட்பாண்டம் மற்றும் உலோகங்களைப்
பற்றி அறியவில்லை.
இடைக் கற்காலம்
மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில், கற்காலத்தில், பழைய கற்காலத்துக்கும், 
புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலமான கட்டத்தைக் குறிக்கிறது.
இக்காலத்துக்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. புதிய
கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும்,
இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில், காடுகள்
 அழிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பெரும்பாலான பகுதிகளில், நுண்கற்கருவிகள், இக்காலப் பண்பாட்டுக்குரிய
சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. தூண்டில்கள், கற் கோடரிகள் மற்றும் ஓடங்கள், 
வில்லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில்
காணப்பட்டுள்ளன.
புதிய கற்காலம்
புதிய கற்காலம் என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு
காலகட்டத்தைக் குறிக்கும். இக் காலகட்டமே கற்காலத்தின் இறுதிப்
பகுதியாகும். இது, இடைக்கற்காலத்தை (Epipalaeolithic) அடுத்து,
வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவானது. 
வேளாண்மைப் புரட்சியை உருவாக்கிய இக்காலம், செப்புக் காலம், 
வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய காலப்பகுதிகளில்
நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன்
முடிவடைந்தது
உலோகக் காலம்
புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் செம்பு கற்காலம் எனப்பட்டது.
இக்காலத்தில் செம்பு மற்றும் வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
மனித குல வரலாற்றில், உலோகத்தை உருக்கிவார்க்கும் தொழில்நுட்பத்தை
கண்டுபிடித்ததும் உலோகத்திலான பொருட்களை உருவாக்கி பயன்படுத்தியதும் முக்கிய
நிகழ்வுகளாகும்.

ஆனால், கற்கருவிகளும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தன, ஒரு சில


நுண்கற்கருவிகள் முக்கியத்துவம் பெற்று விளங்கின. இக்காலத்தில் உலோக தாதுக்களைத்
தேடி மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்யவும் தொடங்கினர். இதனால் செம்பு கற்கால
பண்பாடுகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும்
செம்பு கற்காலப் பண்பாடுகள் காணப்படுகின்றன-
முந்தைய கற்காலம் தொழில் நுட்ப
காலம்

You might also like