You are on page 1of 3

வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருளை அடையாளம் காண்க.

1. என் அப்பா மிகவும் அன்பானவர்.

- நான்

- மிகவும்

- அப்பா

- அன்பானவர்.

2. ராமு அழகான ஓவியம் வரைந்தான்.

- ஓவியம்

- வரைந்தான்

- ராமு

- அழகான

3. வாசிக்கும் பழக்கத்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். எனவே, நாம் அனைவரும்


வாசிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

- நன்மைகள்

- வாசிக்கும் பழக்கம்

- பின்பற்றுதல்.

- நாம்

4. இரவுச் சந்தையில் பொருட்கள் மலிவான விலையில் விற்கப்படும். அதனால், அங்கு மக்கள்


கூட்டம் அதிகமாக இருக்கும்.

- பொருட்கள்

- கூட்டம்

- மலிவு

- இரவுச் சந்தை

5. பாடல் திறன் போட்டியில் 18 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில்,


கலந்துகொள்ள விரும்புவோர், திருமதி தேவியிடம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- திருமதி தேவி

- பாடல் திறன் போட்டி

- 18 வயது

- கலந்து கொள்ளுதல்.

6. ‘நீம்’ பற்பசையைப் பயன்படுத்துங்கள், பொலிவான பற்களைப் பெறுங்கள்! இன்றே வாங்குகள்,


உங்கள் அருகிலுள்ள பேரங்காடிகளில்!

- ‘நீம்’ பற்பசை

- பற்கள்

- பேரங்காடிகள்

- பயன்படுத்துதல்.

7. கோவிட் -19 தொற்று காரணமாக நாட்டில் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு


அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே சென்று அத்தியவசிய
பொருட்களை வாங்க அனுமதி வழங்கப்படுகிறது. காரணமின்றி வெளியே செல்வோர் காவல்
துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

- அனுமதி

- கைது

- நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு

- காவல் துறையினர்

8. நான் அன்போடு வளர்க்கும் பிராணி ‘சிரானி’ அதுவே என் செல்லப் பிராணி பால் போன்ற
நிறம். பஞ்சு போன்ற மெல்லிய உடல் பார்க்க ஆனந்தம் அளிக்கும் வண்ணத் தோற்றம்.
என்னைக் கண்டதும் சுற்றிச் சுற்றி ஓடிவரும் என் அன்புப் பூனைக்குட்டி இது. எனக்கு இதன்
மேல் கொள்ளை ஆசை. பெரிய கண்களை உருட்டி உருட்டி அது என்னைப் பார்க்கும். நான்
அதற்குப் பாலும் சோறும் உண்ணக் கொடுப்பேன். நான் உணவு உண்ணும் போது என்னோடு
அதுவும் அருகில் இருந்து சாப்பிடும். சாப்பிட்டு முடிந்ததும் என் மடியில் பச்சிளம் குழந்தை
போல அது படுத்து உறங்கும். நான் பாடசாலை சென்று விட்டு வீடு வந்து வாசற்படியில்
ஏறும்போது என்னை வரவேற்க அம்மாவுடன் என் சிரானியும் வந்து நிற்கும். மாலை
வேளைகளில் நானும் சிரானியும் தோட்டத்திற்குச் செல்வோம். பந்தை உருட்டி
விளையாடுவோம்.

- சாப்பிடுதல்

- விளையாடுதல்
- ஆனந்தம்

- செல்லப் பிராணி

9. மனித சமுதாயம் எவ்வளவு பழைமையானதோ, அவ்வளவு பழைமையானது விளையாட்டுகள்.


மனிதனின் முதல் பொழுதுபோக்காக விளையாட்டுகள் தோன்றின. விளையாட்டு என்பது
பொழுதுபோக்குக்காகவும்,மகிழ்ச்சிக்காகவும் சில வேளைகளில் கற்பித்தல் நோக்குடன்
விளையாடப்படும் ஒரு செயல்பாடு ஆகும். மனிதன் தனது உடல் திறன்களைத் திடமாக்கி
கொள்ள, தன்னை பரிசோதித்து கொள்ளவும் விளையாட்டு மிகவும்
அவசியம்.விளையாடுவதால் மனிதன் உடல்நலத்தையும் ,மனநலத்தையும், சமூகநலத்தையும்
பெறலாம்.விளையாடுவதால் ஒவ்வொருவரின் தனித்திறமை வளர்கிறது.

- உடல்

- விளையாட்டு

- பொழுதுபோக்கு

- மனிதன்

10.ஒரு கைத்தொலைபேசியின் மூலம் நாம் ஒரு தகவலை மிகவும் சுலபமாக மற்றொருவரிடம்


சேர்த்துவிடலாம். அவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கைத்தொலைபேசியைப்
பயன்படுத்தி அந்தத் தகவலைத் தேவையானவரிடம் சேர்த்துவிடலாம். கூற வேண்டிய தகவலை
நம்மால் கூற முடியாமல் போனாலும் குறுந்தகவல்(S.M.S) என்ற எளிய முறையில் நாம்
அந்தத் தகவலைச் சேர்த்துவிடலாம். இந்த முறை தற்பொழுது இளைஞர்களின் மத்தியில்
மிகவும் பிரபலமாகி வருகின்றது. ஒருவரிடம் அழைத்துப் பேசுவதைத் தவிர்த்து, இவ்வாறு
செய்வதால் பணமும் சிக்கனப்படுத்த முடியும். தற்கால கைத்தொலைபேசிகளில் உள்ள சில
தொழில் நுட்ப விஷயங்கள் பலரை பிரமிக்க வைக்கின்றது என்று சொன்னால் அது
மிகையாகாது. படம் பிடிக்கும் வசதி, செவிக்கு இனிய கானங்கள் கேட்பதற்கும், ஏன்
இணையத்தை வலம் வர கூட வாய்ப்பு தந்திருக்கின்றது கைத்தொலைபேசி.

- கைத்தொலைப்பேசி

- இளைஞர்கள்

- இணையம்

- தகவல்

You might also like