You are on page 1of 3

அன்னாசிப்பழத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்க அனுமதிக் கடிதம்

 இடப்பக்கம் : அனுப்புனரின் முகவரி


 கோடிடுதல்
 இடப்பக்கம் : பெறுநரின் முகவரி

இறுதி வரியில் வலப்பக்கம் திகதி

விளிப்புச் சொல்

தலைப்புக்குக் கோடிடுதல்

முதல் பத்தி

 தன்னை, தன் பதவியை அறிமுகப்படுத்துதல்


 அனுமதி கேட்டல்

இரண்டாம் பத்தி

 நோக்கத்தைத் தெரிவித்தல்
 வந்து சேரும் நாள்
 மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை

மூன்றாம் பத்தி

 விளக்கமளிக்க அதிகாரி ஒருவரைக் கேட்டல்


 சுற்றிக் காண்பிக்க உதவக் கோருதல்

முடிவு

 அனுமதி தர மீ ண்டும் வலியுறுத்துதல்


 விடைபெறுதல்
 இடப்பக்கம் கையொப்பம்
 முழுப்பெயர்
 பதவி
 பள்ளி
ராஜாத/பெபெரியசாமி,                                                                                                            
அறிவியல் கழகம்,
தேசிய வகை பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி,
77500 ஜாசின், மலாக்கா.
_____________________________________________________________________________

தலைமை செயல்முறை அதிகாரி,


சோயா பானம் தொழிற்சாலை,
ஜாலான் புடு, துன் சம்பந்தன்,
51100 கோலாலம்பூர்.                                                                             
28 அக்டோபர் 2012

மதிற்பிற்குரிய  ஐயா,

சோயா பானம் தொழிற்சாலைக்குக் கல்விச் சுற்றுலா

வணக்கம். தேசிய வகை பத்தாங் மலாக்காதமிழ்ப்பள்ளியின் அறிவியல்


கழகம், தங்கள் சோயா பானம் தொழிற்சாலைக்குக் கல்விச்
சுற்றுலாவை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்பதனை
மகிழ்ச்சியுடம் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய
இவ்விருப்பத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வர்கள்
ீ என பெரிதும்
நம்புகிறோம்.

2. நாங்கள் எதிர்வரும் 07.11.2012-ஆம் நாள் சனிக்கிழமை காலை 8.00


மணிக்கு உங்கள் தொழிற்சாலைக்கு வர எண்ணியுள்ளோம்.
இச்சுற்றுலாவில் 35 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் இப்பயணத்தில்
கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

3. உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் எவ்வாறு பாதுகாக்க


பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன என்பதை நேரில்
கண்டறிவதே இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இப்பதன ீட்டு
முறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நேரடியாகக்
கண்டறிவதோடு சோயா பானம் தயாரிக்கும் முறையையும் காண
விரும்புகிறோம். அந்நாளில் தொழிற்சாலையைச் சுற்றிக் காண்பிக்கவும்
விளக்கங்களைக் கொடுக்கவும் ஏதுவாக ஓர் அதிகாரியை எங்களுக்காக
ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகிறோம்.

4. மேற்கண்ட நாளில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உங்களுக்குப்


பொருத்தமான நாளைக் குறிப்பிட்டு எங்களுக்குத் தெரிவிக்கவும்.
நாங்கள் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக இருக்கிறோம்.
குறிப்பிட்ட நாளன்று நாங்கள் தங்களுடைய தொழிற்சாலைக்கு வந்து
சேர வேண்டிய நேரத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய
விதிமுறைகளையும் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்
கொள்கிறோம்.தங்கள் தொழிற்சாலையைக் சுற்றிப் பார்க்க எங்களுக்கு
அனுமதி வழங்கி தேவையான உதவிகளைச் செய்வர்கள்
ீ என்ற
நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்.

தங்களுடைய ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.

இக்கண்,

________________

(ராஜா த/பெ பெரியசாமி)


செயலாளர்,
அறிவியல் கழகம்,
தேசிய வகை பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி.

You might also like