You are on page 1of 2

.

பெற்றோர் ஆசிரியர் சங்கம்,


ரவுப் தமிழ்ப்பள்ளி,
ஜாலான் தெங்கு அப்துல் சமாட்,
27600 ரவுப்,
பகாங்.

_________________________
_________________________
_________________________
07.07.2023

அன்பர்களே,

பள்ளி திருவள்ளுவர் மண்டபத் தரைக்குப் பளிங்குக்கற்கள் பொருத்தும் திட்டம்

வணக்கம். நமது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளி திருவள்ளுவர்


மண்டபத்தை மேம்படுத்தும் வகையில் தரைக்குப் பளிங்குக்கற்கள் பொருத்தும்
திட்டம் ஒன்றைத் திட்டமிட்டுள்ளது என்பதனை இவ்வேளையில் மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.

2. பள்ளியின் நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் திருவள்ளுவர்


மண்டபத்தை இன்னும் பல வசதி கொண்ட இடமாக மாற்ற வேண்டும்
என்பதற்காக இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், திருவள்ளுவர்
மண்டபத்தின் தரைக்கு ஏறக்குறைய 700 பளிங்குக்கற்கள் தேவைப்படுகின்றன என்பதை

இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.

3. இத்திட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நன்கொடையாளர்களின் பங்கைப்

பெரிதும் எதிர்பார்க்கிறது. ஒரு பளிக்குக்கல் தலா RM30.00 என பெற்றோர் ஆசிரியர்

சங்கம் நிர்ணயித்துள்ளது. ஆகவே, தாங்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கி

இத்திட்டம் வெற்றிப் பெற தோல் கொடுப்பீர்கள் என பெரிதும் நம்புகிறோம்.

4. எனவே, தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி மாணவர்களின்


ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தளமாக இருக்கும் இம்மண்டபத்தின் மேம்பாட்டுத்
திட்டத்தில் தாங்களும் பங்குபெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் நன்கொடையை PIBG SJK(T) RAUB என்ற பெயரில் அல்லது 8601318652
(CIMB BANK) வங்கி கணக்கில் சேர்க்கலாம். மேலும் விபரங்க வேண்டுமாயின் 017-
6269008 என்ற எண்ணுக்குத் தொடர்புக் கொள்ளவும்.

நன்றி, வணக்கம்.

இக்கண்,

…………………………………...
(சரவணன் த/பெ இராமசந்திரன்)
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்.
ரவுப் தமிழ்ப்பள்ளி.

You might also like