You are on page 1of 2

நாளை நமதே எனும் கவிதையில் காணப்படும் அணிநயங்கள் மூன்றனை விளக்கி எழுதுக.

(10
புள்ளி)

கவிதைக்கு அழகு சேர்ப்பதே அணிநயமாகும். நாளை நமதே எனும் இக்கவிதையில்


பின்வருநிலை அணி காணப்படுகிறது. பின்வருநிலை அணி என்பது அடியில் முன்னர் வந்த சொல்லே
மீண்டும் வருதல் ஆகும். உதாரணமாக,
‘‘முன்னுரை வாழ்வெனக் கொட்டுங்கடி
முத்தமிழர் என்றே கொட்டுங்கடி’’
எனும் வரிகளில் ‘கொட்டுங்கடி’ எனும் வந்த சொல் மீண்டும் வந்து கவிதைக்கு அழகு சேர்த்துள்ளது.

இதனைத்தவிர, திரிபு அணியும் இக்கவிதையில் மிளிர்கிறது. திரிபு அணி என்பது சீர்களில் முதல்
எழுத்து மட்டும் வேறுபட்டிருக்க, மற்றவையெல்லாம் அதே எழுத்துகளாக ஒன்றி வருதல் ஆகும்.
‘‘ தோட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்
பாட்டன் வியர்வை நீர் பட்ட சிறப்பென ”
எனும் வரிகளில், ‘தொட்ட - பட்ட’ எனும் சீர்களில் முதல் எழுத்துக்களான ‘தொ - ப’ மட்டும்
வேறுபட்டிருக்க, மற்றவையெல்லாம் அதே எழுத்துக்களாக ஒன்றி வந்துள்ளன.

இதுமட்டுமல்லாது, உவமை அணியும் இக்கவிதைக்கு நயம் சேர்த்துள்ளது. ஒத்ததை ஒப்பிட்டுக்


கூறுதலே உவமை அணியாகும்.
‘‘ பத்து மலையினில் கொட்டும் மழையென
பார்க்க வருகின்ற கூட்டமெல்லாம் ’’
எனும் அடியில் ‘கொட்டும் மழையென’ எனும் சொற்றொடர் திரண்டு வருகின்ற மக்கள் கூட்டத்தை
மழைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

முருகய்யாவின் பண்புநலன்கள் [20 புள்ளிகள்]

இலக்கிய அன்னைக்கு அருந்தொண்டு ஆற்றியவர் டாக்டர் மு.வரதராசன். இவரது சமுதாய


நன்நோக்கோடு எழுதப்பட்ட நாவலே வாடா மலர் ஆகும். நல்வாழ்விற்கு அன்பே ஆதாரம் என்ற
கருப்பொருளை ஒட்டி இந்நாவல் புனையப்பட்டுள்ளது. இதில் முருகய்யா துணைக்கதைப்பாத்திரமாகப்
படைக்கப்பட்டுள்ளார். இவரிடம் சில சிறந்த பண்புநலன்கள் காண முடிகிறது.

அவ்வகையில், முருகய்யா எளிமையான வாழ்க்கையை விரும்புவராகத் திகழ்கிறார். சான்றாக,


தானப்பனுக்கு தன் மனைவியான கனகத்திற்கு சென்னையில் ஆடம்பரமாக திருமணம்
நடைப்பெறுகிறது. மாலை இசையரங்கின்பொழுது, தானப்பன் விலையுயர்ந்த நீல நிறமான ட்வீட்
துணியில் தைத்த கோட்டும் கால்சட்டையும் அணிந்து கொண்டு ஐரோப்பிய உடையில் விளங்கினான்.
இந்த தானப்பனின் ஆடம்பர திருமணத்தைக் கண்டு முருகய்யா வீண் செலவுகள் என்று
குழந்தைவேலிடம் கூறுகிறார்.

மேலும், முருகய்யா பொதுநலச்சிந்தனை கொண்டவராகவும் உலா வருகிறார்.


எடுத்துக்காட்டாக, அவரின் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால்,
பக்கத்து நகரத்தில் அரிசி ஆலை ஓடிக் கொண்டிருந்தது. இதனால், அவரின் உள்ளூர் மக்கள்
கிராமத்திலிருந்து நெல் மூட்டைகளை கொண்டு சென்று அவ்வாலையில் அரிசியாக்கிக் கொண்டு
வருவார்கள். முருகய்யா தம் ஊரில் உள்ள பசியால் வாடும் ஏழைகளை ஊர் மக்களுக்கு காட்டி நெல்
மூட்டைகளை அவர்களிடம் கொடுத்து அரிசியாக்க வேண்டிக் கொண்டார். ஊர் மக்களுக்கும்
அவர்களுக்கு கூலி பதிலாக அரிசியைக் கொடுத்து பசியைப் போக்கினர்.

அதைத் தவிர்த்து, முருகய்யா கடமைத் தவறாதவராகவும் மிளிர்கிறார். உதாரணத்திற்கு,


மனோன்மணிக்குத் திருமணம் நடத்தவும் பள்ளிக்கூடம் ஏற்படுத்தவும் தானப்பன் அவரிடம்
விடுத்திருந்தான். தானப்பனின் இறப்பிற்குப் பிறகு, முருகய்யாவே தம் ஆசிரியர் தொழிலை விட்டு
வந்து அவன் வாங்கியிருந்த நிலத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டி அதில் முதல் வேலையாக
மனோன்மணிக்குத் திருமணத்தையும் நடத்தி தானப்பனின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

அதுமட்டுமில்லாமல், முருகய்யா குடும்பப்பற்று மிக்கவராகவும் வலம் வருகிறார். சான்றாக,


தான்ப்பனின் சித்தி அவனுக்குச் சொத்துப் பங்கீடு தொடர்பாக வழக்கு அறிக்கை அனுப்புகிறாள். இதற்கு
மறுமொழியாகத் தானபானும் சித்தியை மருட்டி அறிக்கை அனுப்புகிறான். இதனைக் கேள்வியுற்ற
முருகய்யா உடனே சொத்து வழக்கு வேண்டாமென்றும் அது குடும்பச் சீரழிவுக்கு வித்திடுமெனவும்
குழந்தைவேலின் மூலம் தானப்பனிடம் கூறச் செய்கிறார்.

இறுதியாக, முருகய்யா சான்றோரைப் போற்றுபவராகவும் திகழ்கிறார். எடுத்துக்காட்டாக,


சுடர்விழி குழந்தையைப் பெற்றெடுத்த செய்தி அறிந்து குழந்தைவேலும் தானப்பனும் ஊருக்கு இரயிலில்
புறப்பட்டனர். அங்கு வந்தடைந்து சுடர்விழியைக் கண்ட பிறகு தானப்பன் சினிமா படத்திற்குச் செல்ல
விரும்புகிறான். ஆனால், முருகய்யா தானப்பனுக்கு இசையாமல் திரு.வி.கவிம் அருமை
பெருமைகளைக் கூறி அவரது சொற்பொழிவைக் கேட்க குழந்தைவேலையும் தானப்பனையும் அருட்பா
மன்றத்திற்கு அழைத்து செல்கிறார்.

ஆகவே, நாவலாசிரியர் முருகய்யா எனும் துணைக்கதைப்பாத்திரத்தின் மூலம் நாம் கட்டாயமாக


கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த பண்புநலன்களைச் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய இந்திய சமுதாயம்
முருகய்யாவை ஒரு தலைச்சிறந்த எடுத்துக்காட்டாகக் கொண்டு செயல்பட்டால் அவர்களின் வாழ்வும்
சிறக்கும்.

சுடர்விழியின் பண்புநலன்கள் [20 புள்ளிகள்]

அவ்வகையில், சுடர்விழி பெரியோரை மதிப்பவளாக திகழ்கிறாள். எடுத்துக்காட்டாக,


ஒருநாள், சுடர்விழி குழந்தைவேலின் தாயிடம் தான் தாயாரம்மா வீட்டில் கொடுத்த வடையைத்
தின்றதால் சித்தி தன்னை அறைந்து விட்டதாக அழுதுக் கொண்டே முறையிடுகிறாள். உடனே,
குழந்தைவேலின் தாய் சித்தி கடுமையாக நடந்து கொண்டாலும் அவளுக்கு அடங்கி நடக்க வேண்டுமென
அவளுக்கு அறிவுரை கூறுகிறார். இதனையும் சுடர்விழி கேட்டுக் கொள்கிறாள்.

மேலும், சுடர்விழி அனைவரிடமும் அன்பாகப் பழகுபவளாகவும் உலா வருகிறாள். சான்றாக,


சித்தி தானப்பனின் வீட்டிலிருந்து வெளியேறியப் பிறகு, மறுநாள், சுடர்விழியும் அவளின் கனவரும்
குழந்தைவேலின் வீட்டிற்கு வந்திருந்தனர். அங்கே, சுடர்விழி அண்ணியைப் பற்றி குழந்தைவேலிடம்
வினவிய பிறகு தானாகவே பூங்கொடியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கல கலப்பாக
அவளிடம் பழகுகிறாள்.

அதனைத் தவிர்த்து, சுடர்விழி குடும்பப்பற்று மிக்கவளாகவும் மிளிர்கிறாள். உதாரணமாக,


தானப்பன் வழக்கு தொடுப்பதாக மருட்டி சித்திக்கு வழக்கு அறிக்கை ஒன்று அனுப்பியதை சுடர்விழி தன்
ஊர் மக்களின் மூலம் அறிந்துக் கொண்டாள். உடனே, அவள் தானப்பன் சித்தியின் மீது வழக்குப்
போடக்கூடாது என்றும் வழக்கினால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன என்பதனாலும் தன் கனவர்,
முருகய்யாவை அவனிடம் பேசச் சொல்லி அனுப்புகிறாள்.

You might also like