You are on page 1of 5

மணிமேகலை

கதாபாத்திரங்கள் :

1) மணிமேகலை
➔ கோவலன் மாதவி தம்பதியின் மகள்.
➔ இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல் பண்புகள் அதிகம்
பெற்றவள்.
➔ தன் விருப்பப்படியே புத்தத் துறவியாகி மக்கள்
பசியைப் போக்குவதே தன் கடமையாகக் கொண்டவள்.
➔ அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப்
போற்றப்படுபவள்.
2) உதயகுமரன்
➔ சோழ மன்னன்
➔ மணிமேகலையின் மீ து முட்டாள்தனமான மோகம்
கொண்டவன்.
➔ நினைத்ததை அடையவேண்டும் என்ற குணம்
படைத்தவன்
➔ ஆசை இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ஆசை
இருந்தால் அழிவு நிச்சயம் என்பதை உணர்த்தும்
கதாபாத்திரம்
➔ காஞ்சன் என்பவனால் உதயகுமரன் கொலை
செய்யப்பட்டான்.

3) சுதமதி
➔ மணிமேகலையின் நம்பகத் தோழி
➔ ஆன்மீ கப் பாதையில் செலுத்தியதை மணிமேகலையின்
தாயாரிடம் கூடக் கூறாமல் சுதமதியின் கனவிலேயே
முதலில் தோன்றி கூறினாள்.
➔ அக்காலகட்டங்களில் நண்பர்களுக்கெல்லாம் ஒரு
இலக்கணமாக அமைந்தவள் சுதமதி.
4) மாதவி
➔ மணிமேகலையின் தாய்
➔ கணிகையானாலும் மாதவியும் கற்பில் சிறந்தவள்.

காலந்தோறும் இலக்கியங்கள் பெருகிவருவது. சங்ககாலத்தில்


தனிநிலை செய்யுள்கள் புலவர்களால் பாடப்பட்டன அதன்பின்னர்
இலக்கிய வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியாக தொடர்நிலைச்
செய்யுள் வடிவில் நூல்கள் தோன்றின. அவை கதை கூறும் நிலையில்
பல இலக்கியக் கூறுகளைக் கொண்டவையாகும் அவை காப்பியங்கள்
ஆக கருதப்படுகின்றன. காப்பியங்களைப் பெருங்காப்பியம் சிறு
காப்பியம் என்று இருவகையாக பிரிக்கலாம். பெரும் காப்பியங்களில்
ஒன்றாக திகழ்வது தான் மணிமேகலை.

ஐந்து காப்பியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை


சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆகும் இவை இரண்டையும்
இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை
நிகழ்ச்சியில் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மேலும்
சமகாலத்தில் தோன்றியவை. சிலப்பதிகாரம் இளங்கோவடிகளாலும்
மணிமேகலை சீத்தலைச் சாத்தனாராலும் பாடப்பட்டவை. சமணசமய
செய்திகளை சிலப்பதிகாரமும் பௌத்த சமயக் கொள்கைகளை
மணிமேகலையும் கூறுகின்றன . சங்கம் மருவிய காலத்தில் பௌத்த
சமயம் தமிழகத்தில் விரிவாகப் பரவி மக்களிடையே செல்வாக்குப்
பெற்றது.

புத்தருடைய வரலாறும் அறவுரையும் புலவர் பெருமானாகிய


சாத்தனார் உடைய உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதன்
வெளிப்படையே மணிமேகலை என்ற காப்பிய நூல் ஆகும். யார் அந்த
மணிமேகலை? பெருமை பொருந்திய காவிரிப்பூம்பட்டினத்தில்
கணிகையர் மரபில் தோன்றிய மாதவி என்பவளுக்கும் வணிக மரபில்
தோன்றிய கோவலன் என்பவருக்கும் பிறந்தவர் தான் மணிமேகலை.

இந்த நூலில் உள்ள முப்பது காதைகளிலும் மணிமேகலையின்


வாழ்க்கை வரலாறு விரிவாக பேசப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின்
தொடர்ச்சியே மணிமேகலையின் காப்பியம் ஆகும். இக்காப்பியத்தின்
கதை முழுவதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக்
கொண்டு பாடப்பட்டது. கோவலன் மதுரையில் வெட்டுண்ட செய்தியை
கேட்டதும் மாதவி உடல் மெலிந்து பௌத்த பிக்குணி ஆனால் மாதவி.
அவளின் மகளான மாதவியும் பின்தொடர்ந்தாள்.

கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு


புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும்
அவளுடைய தோழியும் உவ வனத்திற்குப் பூப்பறிக்கச் சென்ற போது
உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீ து காதல்
மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா
மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க
அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு
விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது
பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு கடலின் கடவுளான
மணிமேகலா மணிமேகலையிடம் அவள் ஏன் பல்லவத்திற்கு
அழைத்துவரப்பட்டார் எனக் கூறி மூன்று அதிசய மந்திரங்களையும்
கற்றுக்கொடுத்தாள்.

அத்தீவில் மணிமேகலை அமுத சுரபி என்ற உணவுக்


கிண்ணத்தைக் கண்டெடுத்து அதிலிருந்து அளவற்ற உணவை உண்ண
ஏழை எளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன்
மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை
வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப்
பயன்படுத்தி காயசண்டிகையாக உருமாறிக் கொண்டாள். யார் இந்தக்
காயசண்டிகை? பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் கணவனுடன்
இந்திர விழாவை காண காடு வழியே வந்து கொண்டிருந்த போது
முனிவர் ஒருவர் பறித்து வைத்திருந்த நாவல் கனியான நாவல்
பழத்தை மிதித்து விட்டாள் காயசண்டிகை.

12 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கனியை தரும் நாவல்


மரத்தில் உண்டானது அக்கனி. அம்முனிவர் அக்கனியை 12 ஆண்டுகள்
விரதம் இருந்து பிறகு அக்கனியை உண்பார். அக்னியை காயசண்டிகை
தன் காலால் மிதித்து விட்டாள். அவளால் அதை உணர முடியவில்லை.
அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் அவர் பசியுடன் இருக்குமாறு
காயசண்டிகை செய்துவிட்ட குற்றத்திற்காக அவளுக்கு யானைத் தீ
என்னும் தீராப் பசி தோன்றுமாறு சாபம் அளித்து விட்டார் அம்முனிவர்.

காய சண்டிகையின் தீரா பசியை தன் அமுதசுரபியில் ஒரு பிடி


உணவு கொடுத்து தீர்த்து வைத்தால் மணிமேகலை. மணிமேகலை
மறுபடியும் நகரம் வந்திருப்பதை அறிந்த இளவரசன் உதயகுமாரன்
அவள் பின்னே மீ ண்டும் சுற்றத் தொடங்கினான். அவன் காதலை
ஏற்றுக்கொள்ள முடியாது என்றுணர்ந்த மணிமேகலை மணிமேகலா
தெய்வம் தனக்கு அருளிய மந்திரத்தைப் பயன்படுத்தி காயசண்டிகையின்
உருவம் எடுத்தாள். அதையும் கண்டு கொண்டு விட்ட உதயகுமார்
அவள் பின்னால் காதல் பித்து பிடித்து திரிந்தான். காயசண்டிகையின்
கணவன் உண்மை அறியாமல் தன் மனைவியிடம் தவறாக நடக்க
முயன்ற உதயகுமாரை வாளால் வழ்த்தி
ீ விடுகிறான்.

தன் மகன் இழப்புக்கு மணிமேகலையே காரணம் என்று அவளை


அந்நாட்டு அரசன் சிறையிலடைத்து துன்புறுத்துகிறான். தன்னுடைய
கொடும் செயல்களாலும் மணிமேகலை எதிலும் பாதிக்கப்படாமல்
இருப்பதை கண்டு அஞ்சி தன் பிழைகளை உணர்கிறாள் அரசி.
மணிமேகலை அவளுக்கு நல்லறங்களை போதித்து பசியைப்
போக்குவது உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள்.

பல ஆச்சரியங்களைத் தன்னுள் வைத்திருக்கும் மணிமேகலை


கணிகையர் குலத்தில் பிறந்த பெண்ணாயினும் பிறவியால் தொழிலும்
வாழ்விலும் நிர்ணியக்கப்படும் ஒரு சமூக அமைப்பில் அந்த சமூக
நீதியை பெறுவதோடு எதிர்கொள்ளும் எல்லா தடைகளையும் கடந்து
இறுதியில் ஒரு முக்கிய நிலையை சென்றடைகிறாள். இந்த
மணிமேகலை காப்பியத்தில் முக்கிய நீதி என்னவென்றால் பசியைப்
பொறுக்க முடியாத ஏழைகளின் வேதனையை போக்குவது தான் இந்த
வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி அணுக்களால் நிறைந்த இந்த
உலகத்தில் வாழ்பவர்களுக்கு எல்லாம் உணவு கொடுத்தால் அது
அவர்களுக்கு உயிரை கொடுப்பதற்கு சமம். இதையே நாம் அனைவரும்
வாழ்க்கை கொள்கையாக பின்பற்ற வேண்டும் என்று உணர்த்துகிறது
இந்த மணிமேகலை காப்பியம்.
தயாரித்தவர்
தர்மாம்பாள் சண்முகம் & வசந்தகுமாரி சுப்பிரமணியம்

You might also like