You are on page 1of 6

15 கீழே கொடுக்கப்பட்டுள்ள கவிதையை வாசித்து, அதன் கருத்துகளைத் தொகுத்து

எழுதுக.

வாழ்ந்து காட்டுவோம்!

தொழில்பலவாய்ப் பெருகிவிடும் இந்த நாளிலே – நாம்


தொடங்கிவிட்டால் உயர்வுவரும் நமது வாழ்விலே
விழிதிறந்து வெளியில்வந்து விடியல் காணடா – தம்பி
வேறுபட்டுப் பிரிந்துநின்றால் எல்லாம் வீணடா!

காடுவெட்டி நிலந்திருத்திக் கண்ட பெருமையை – நீ

காலமெல்லாம் பேசிப்பேசி யாது கண்டனை?

நாடுசெல்லும் புதுவழியில் நடந்து பாரடா - தம்பி

நாளையுன்றன் கையிலென்றே உறுதி பூணடா!

கவிஞர் கோவி. மணிதாசன்

கேள்வி
புள்ளிக்கான கருத்துகள் புள்ளி
எண்
முன்னுரை 1 புள்ளி
கருத்து 5 புள்ளி(3+2, 2+3, 4+1, 1+4)
முடிவுரை 1 புள்ளி
மொழி 3 புள்ளி

முன்னுரை
கீழ்க்காணும் கவிதை வாழ்ந்து காட்டுவோம் பற்றி
விளக்குகிறது. 1

தெரிநிலைக் கருத்து
 பல தொழில்கள் பெருகிவரும் இன்றைய காலத்தில்
நாம் ஏதாவது தொழிலைத் தொடங்கினால் நம் 1
வாழ்க்கை சிறக்கும்.
 வீட்டில் முடங்கிக் கிடக்காமல் வெளியில் வந்தால் நம்
வாழ்க்கையில் விடியலைக் காணலாம். 1
 ஒற்றுமையின்றிப் பகையாகி நின்றால் நம் முயற்சிகள்
பயனற்றுப் போகும். 1
15  நம் முன்னோர்களின் பழம் பெருமையைக்
காலமெல்லாம் பேசுவதில் பயனில்லை. 1
 நாடு ஈடுபடும் புதிய முயற்சிகளில் நாம் ஈடுபட
1
வேண்டும்.
 வரும் காலத்தில் நாம் நினைத்ததை அடைய முடியும் 1
என்று மனத்தில் உறுதி கொள்ள வேண்டும்.

புதைநிலைக் கருத்து
 நாம் வீணே முடங்கிக் கிடப்பதால் பல 1
வாய்ப்புகளைத் தவறவிடுகிறோம்.
1
 மலேசியாவில் வாழும் மூன்று இனங்களில் நம்
இனமே இன்னும் பல துறைகளில் பின்தங்கியுள்ளது. 1
 பழம்பெருமை பேசாமல் ஒற்றுமையாகத்
தொழில்துறையில் ஈடுபட்டால் நம் இனம் முன்னேற
முடியும்.

முடிவு 1
நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாமும் திட்டமிட்டு உழைத்தால்
தொழில்துறையில் நம் இனம் சிறந்து விளங்க முடியும்.

ஏற்புடைய முடிவு
ஏற்புடைய ஏனைய விடைகள்

15 கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியலிலுள்ள கருத்துகளைத் தொகுத்து


எழுதுக.

2022 ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியல்


நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

வியட்னாம் 205 125 116 446


தாய்லாந்து 92 103 136 331
இந்தோனிசியா 69 91 81 241
பிலிப்பைன்ஸ் 52 70 104 226
சிங்கப்பூர் 47 46 73 166
மலேசியா 39 45 90 174
மியான்மார் 9 18 35 62
மூலம் : தேசிய விளையாட்டுத்துறை

கேள்வி
புள்ளிக்கான கருத்துகள் புள்ளி
எண்
முன்னுரை 1 புள்ளி
கருத்து 5 புள்ளி(3+2, 2+3, 4+1, 1+4)
முடிவுரை 1 புள்ளி
மொழி 3 புள்ளி

முன்னுரை
இந்தப் புள்ளிவிவரப் பட்டியல் 2022 ஆம் ஆண்டு சீ
விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலை
விவரிக்கிறது. .
தெரிநிலைக் கருத்து
 2022 ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியில் 1
அதிகளவில் பதக்கங்கள் பெற்று முதலிடத்தைப்
பெற்றுள்ள நாடு வியட்னாம்.
 இவ்விளையாட்டுப் போட்டியில் மிகக் குறைவான 1
பதக்கங்கள் பெற்றுள்ள நாடு மியான்மார்.
 இந்தோனிசியாவைவிட 23 பதக்கங்கள் அதிகமாகப்
பெற்றுத் தாய்லாந்து இரண்டாம் இடத்தைப் 1
15 பெற்றுள்ளது.
 இப்போட்டியில் வியட்னாம், தாய்லாந்து, 1
இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா,
மியன்மார் போன்ற தென்கிழக்காசிய நாடுகள் 1
பங்கெடுத்துள்ளன.
 2022 ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியின்
பதக்கப் பட்டியல் தேசிய விளையாட்டுத்
துறையிடமிருந்து கிடைக்கப்பெற்றது. 1

புதைநிலைக் கருத்து
 இன்னும் அதிகமான இளையோர் விளையாட்டுத் 1
துறையில் ஈடுபட்டு நாட்டிற்குப் பெருமை சேர்க்க
வேண்டும்.
 விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ளவர்களை
அடையாளம் கண்டு அரசாங்கம் முறையான 1
பயிற்சியளிக்க வேண்டும்.

முடிவு
அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினால் நாட்டின்
விளையாட்டுத் தரத்தை உயர்த்தலாம்.

ஏற்புடைய முடிவு
ஏற்புடைய ஏனைய விடைகள்

15 கீழ்க்காணும் உரைநடைப்பகுதியிலுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

பிள்ளைகளின் சவால்கள்

சில குடும்பங்களில் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை


நிர்ணயிக்கும் கருவியாகத் திகழ்கின்றனர்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின்
அடைவுநிலையை மற்ற மாணவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது பிள்ளைகளுக்குச்
சிக்கலாகவே அமைகிறது. ஒவ்வொரு பிள்ளைகளும் தனி என்பதையும் அவரவர்களின்
திறமையும் ஆற்றலும் வேறுபட்டிருக்கும் என்பதை பெற்றோர் உணர மறுக்கின்றனர்.
கேள்வி
புள்ளிக்கான கருத்துகள் புள்ளி
எண்
முன்னுரை 1 புள்ளி
கருத்து 5 புள்ளி(3+2, 2+3, 4+1, 1+4)
முடிவுரை 1 புள்ளி
மொழி 3 புள்ளி

முன்னுரை
இந்த உரைநடைப்பகுதி பிள்ளைகளின் சவால்கள் பற்றி 1
விவரிக்கிறது.

தெரிநிலைக் கருத்து
 சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின்
1
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கருவியாகத்
திகழ்கின்றனர்
 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் 1
அடைவுநிலையை மற்ற மாணவர்களோடு
ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். 1
 ஒவ்வொரு பிள்ளைகளும் தனி என்பதையும்
அவரவர்களின் திறமையும் ஆற்றலும்
15 வேறுபட்டிருக்கும் என்பதைப் பெற்றோர்
உணரவில்லை.
 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், குறிப்பாகத்
தேர்வு எழுதும் பிள்ளைகள் முழு நேரமும்
படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று
நினைக்கின்றனர்.
 அவர்களுக்கும் போதிய உறக்கம், ஓய்வு
1
போன்றவை இருக்க வேண்டும் என்பதை ஏற்க
மறுக்கின்றனர்.
 இதனால் பிள்ளைகள் பெரும் மன 1
அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பதை
ஆய்வுகள் துல்லியமாகக் காட்டுகின்றன.
1
புதைநிலைக் கருத்து
1
 பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தைப் பிள்ளைகள்
மீது திணிக்கக்கூடாது. 1
 பிள்ளைகள் விரும்பும் துறையில் மேற்கல்வி தொடர
பெற்றோர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். 1

முடிவு
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து நடந்தால் சிறந்ததொரு எதிர்காலச்
சந்ததியினரை உருவாக்கலாம்.

ஏற்புடைய முடிவு
ஏற்புடைய ஏனைய விடைகள்

You might also like