You are on page 1of 1

கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந.க.எண் 8231/அ 4/2022 நாள் 10/03/2023


*******
பொருள் : பள்ளிக்கல்வி – 2022-2023 கல்வியாண்டு – மேல்நிலை முதலாமாண்டு,
பொதுத் தேர்வு – மாற்று திறனாளி மாணவர்கள் சலுகை வழங்கி
பெறப்பட்ட ஆணை - தேர்வு மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு
வழங்குதல் சார்பு.

பார்வை : சென்னை – 6 அரசு தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) – ன்


செயல்முறைகள் ந.க.எண் 000192/எப்1/2023 நாள் 03/03/2023
*******
கன்னியாகுமரி மாவட்டம், மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு 2022-2023 மாற்று
திறனாளி சலுகை வேண்டி பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பத்திற்கு பார்வையில்
காணும் செயல்முறைகள் படி ஆணை பெறப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் சலுகை வழங்கப்பட்ட
மாணவர்கள் விவரப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் இணைப்பு பள்ளியாக உள்ள
பள்ளி மாணவர்கள் விவரங்களையும் சேர்த்து Print Out – எடுத்து சரிபார்த்துக் கொள்ள
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்படி Prin Out – னை தங்கள் மையத்திற்கு என
நியமனம் செய்யப்பட்ட முதன்மைக்கண்காணிப்பாளரிடம் தவறாமல் ஒப்படைக்க தேர்வு மையத்
தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு தினங்களில் தினசரி மேற்படி Print Out –னை
பார்வையிட்டு அன்றன்று உள்ள சொல்வதை எழுதுபவர் சலுகை வழங்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு
சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா? என்பதை உறுதி செய்து கொள்ள
வேண்டும்.

இணைப்பு – சலுகை வழங்கப்பட்ட மாணவர்கள் விவரப் பட்டியல்

முதன்மைக்கல்வி அலுவலர்
கன்னியாகுமரி மாவட்டம்
பெறுநர்
தலைமை ஆசிரியர் / முதல்வர்கள்,
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகள்
நகல்
மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை)
மார்த்தாண்டம், நாகர்கோவில்

You might also like