You are on page 1of 3

கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந. க. எண். 9111/அ 3/2022, நாள்.01 .08.2023


***
பொருள் : தமிழ் வளர்ச்சி - தமிழ் வளர்சச ் ி 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மானிய
கோரிக்கை அறிவிப்பு - நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாள்
பேச்சுப்போட்டிகள் - 2023- 24 ஆம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர்
அவர்களின் பிறந்த நாளையொட்டி 10.08.2023 மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்
அவர்களின் பிறந்தநாளையொட்டி 11.8.2023 ஆகிய இரண்டு நாட்கள் போட்டிகள்
நடத்துதல் - கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி
மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் கீழ் நிலையில் போட்டிகள் நடத்தி
மாணவர்களை தேர்வு செய்து அனுப்புதல் - தொடர்பாக.

பார்வை : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக தமிழ் வளர்ச்சி உதவி


இயக்குனரின்(பொ) கடிதம் திருவள்ளுவராண்டு 2054/சோபகிருது/ஆடி 10.
ந.க.எண்.381/ 2023, நாள் 26.07.2023
---------------
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க
2023-24 ஆம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 10.08.2023 மற்றும்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 11.8.2023 ஆகிய இரண்டு நாள்களில்
நாள்களில் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் வைத்து காலை 9.30 மணியளவில் பேச்சுப்
போட்டிகள் நடைபெற உள்ளதாக பார்வையில் காணும் கடிதத்தின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே தங்கள் ஆளுகைக்குட்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்கும் வகையில் முதற்கட்டமாக
கீழ்நிலையில் பேச்சுப்போட்டி நடத்தி கல்வி மாவட்ட அளவில் 20 மாணவர்கள் வீதம் (6 ஆம் வகுப்பு முதல் 12
ஆம் வகுப்பு வரை) தெரிவு செய்து மாவட்ட அளவிலான டையில் போட்டியில் பங்கேற்க உரிய நடவடிக்கை
மேற்கொள்ளுமாறும், அவ்வாறு தேர்வு செய்த மாணவர்களின் பெயர் பட்டியலை இவ்வலுவலக மின்னஞ்சல்
முகவரிக்கு (ceokkm@nic.in) உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 07.08.2023-க்குள் அனுப்புமாறும் மாவட்டக்
கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

போட்டி நடைபெறும் இடம் : மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில்


நேரம் : 9.30 மணி
நாள் : 10.08.2023 & 11.08.2023
மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு
முதல் பரிசு ரூ. 5000/- இரண்டாம் பரிசு ரூ. 3000/-
மூன்றாம் பரிசு ரூ. 2000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்
வழங்கப்படும்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசு தொகை ரூ. 2000/- வழங்கப்படும்.
இணைப்பு:
1. பெயர்பட்டியல் படிவம்
2. மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்கான படிவம்
3. விதிமுறைகள்
முதன்மைக் கல்வி அலுவலர்
கன்னியாகுமரி மாவட்டம்
பெறுநர்
1. மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை)
நாகர்கோவில், மார்த்தாண்டம்
2. மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)‘
கன்னியாகுமரி மாவட்டம்
படிவம்

வ.எண் மாணவர் பெயர் பள்ளியின் பெயர் வகுப்பு தலைமையாசிரியர்


கைப்பேசி எண்

மாவட்டக்கல்வி அலுவலர்

You might also like