You are on page 1of 2

//தேர்வுகள் அவசரம்//

நாகர்கோவில் மாவட்டக்கல்வி அலுவலரின் (இடைநிலைக்கல்வி ) செயல்முறைகள்


முன்னிலை : திரு. இரா. மோகன், எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.பில்.,
e.f.v©.7612 /m6/2022. ehŸ. . 03. 2023

பொருள் : தேர்வுகள் – மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு


பொதுத்தேர்வு மார்ச்/ ஏப்ரல் 2023- நாகர்கோவில் கல்வி மாவட்டம் – தேர்வு
மையங்களுக்கு – சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்து ஆணையிடல்
– தொடர்பாக.

பார்வை : சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல் முறைகள்,


ந.க.எண் : 020845/எப்1/2022, நாள் : 02.03.2023.

-----------
ஆணை:
நடைபெறவுள்ள மார்ச் /ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு
பொதுத்தேர்வுகளுக்கு இணைப்பில் கண்டுள்ள சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்து
இதன் மூலம் ஆணையிடலாகிறது.

பொதுத் தேர்வு நாட்கள் : 13.03.2023 முதல் 05.04.2023 முடிய


நேரம் : காலை 09.00 மணி முதல் பிற்பகல் 01.15 முடிய

தேர்வு பணிக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ள


தேர்வு மையத்திற்கு தேர்வு நாளன்று சரியாக காலை 9 மணிக்கு முன்பு ஆஜராகி தேர்வு மைய
முதன்மைக்கண்காணிப்பாளரிடம் தேர்வு சார்பான அதிகாரிகளை பெற்று தமக்குரிய
தேர்வுப்பணியினை தெரிந்து கொள்ள வேண்டும்.
மாநில முழுமைக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடைபெறுவதால், தேர்வு மைய
முதன்மைக்கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, செவ்வனே,
சீரிய முறையில் பணியாற்ற வேண்டும். தேர்வுப்பணி மேற்கொள்ளும் உதவிக்
கண்காணிப்பாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும மைய முதன்மைக் கண்காணிப்பாளரின்
முன் அனுமதியின்றி மையத்தை விட்டு வெளியில் செல்லுதல் கூடாது.
தேர்வுப்பணி மிக முக்கியத்துவம் வாய்ந்ததது என்பதாலும், தேர்வுகள் சீரிய
முறையில் நடைபெற வேண்டும் என்பதாலும் இந்நியமன ஆணையினை மாற்றவோ இரத்து
செய்திடவோ இயலாது. எக்காரணம் கொண்டும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாற்று
ஆணை வழங்கக்கூடாது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு நல்வி
நியமனம் பெற்ற ஆசிரியர்களை தேர்வுப்பணி மேற்கொள்ள ஏதுவாக பணி விடுவிக்குமாறு
தெரிவிக்கப்படுகிறது. மேலும் நியமனம் செய்துள்ள உதவி கண்காணிப்பாளர்களின்
உறவினர்கள் எவரும் அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு
எழுதவில்லை என்ற விபரத்தினை உறுதி செய்துகொள்ள தேர்வு மைய முதன்மைக்
கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நியமன ஆணையினை பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலினை வழங்கிட
சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு – அறைக்கண்காணிபபாளர்கள்

மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை),

நாகர்கோவில்
பெறுநர்
சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள்,
(பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக)
நகல்
1. கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் – தகவலுக்காகப்
பணிந்தனுப்பப்படுகிறது.
2. கன்னியாகுமரி மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)- அன்புடன்
அனுப்பப்படுகிறது.
3. கன்னியாகுமரி மாவட்டம், உதவி இயக்குநர் - அன்புடன் அனுப்பப்படுகிறது.

You might also like