You are on page 1of 2

அனுப்புநர் பெறுநர்

திருமதி. இரா. சி. சரஸ்வதி, எம்.எஸ்.சி., எம்.எட்., எம்ஃபில்., முதன்மைக் கல்வி அலுவலர்,
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), முதன்மைக் கல்வி அலுவலகம்,
உதகமண்டலம், நீலகிரி மாவட்டம். உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம்.

ந.க.எண்.4713/ஆ 3/2017. நாள். .04.2023.


அய்யா,

பொருள்- பள்ளிக் கல்வி – வழக்கொழிந்த பாடநூல்கள் (Obsolete Books) – நீலகிரி மாவட்டம்


சார்பாக 2012-13-ஆம் கல்வியாண்டிற்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட 7 டன் பழைய
வழக்கொழிந்த பாடநூல்களை ஒப்படைக்காமல் இருந்ததாக மாநில கணக்காயர்
தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது சார்பாக விளக்கம் அளிக்கக் கோரியது – உரிய
விளக்கம் அனுப்புதல் - சார்பு.

பார்வை - 1.தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின்


செயல்முறைகள்.ந.க.எண்.033390/இ/இ 3/2016. நாள்.29.08.2018.
2.நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
ந.க.எண்.4598/அ 5/2017. நாள்.27.03.2023 மற்றும் 17.04.2023.
3.இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம். நாள்.19.12.2018.

---0---
மேற்காணும் பொருள் சார்ந்து பார்வை 1-இல் காணும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின்
செயல்முறையில் 2012-13-ம் கல்வியாண்டுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட வழக்கொழிந்த பாடநூல்களை
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு ஒப்படைப்பது சார்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு
பொறுப்பு அலுவலராக திருமதி. கே.என். லதா, வட்டார அலுவலர், கோயம்புத்தூர் (தொடர்பு எண்.8012300344)
என்பார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அன்னாரை தொடர்பு கொண்டு ஒப்படைக்க வேண்டும் எனத்
தெரிவிக்கப்பட்டது.
மேலும் பார்வை 2-இல் காணும் கடிதம் மூலம் நீலகிரி மாவட்டம், குன்னூர் கல்வி மாவட்டத்தில் 2012-13-
ம் கல்வியாண்டுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட வழக்கொழிந்த பாடநூல்கள் (Obsolete Books) சுமார் 7 டன்
இருப்பில் உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. (நகல்
இணைக்கப்பட்டுள்ளது).

அதன்படி வழக்கொழிந்த பாடநூல்களை ஒப்படைப்பது சார்ந்து குன்னூர் கல்வி மாவட்டத்தில் இருந்து


மாவட்டக் கல்வி அலுவலர் வழியாக நீலகிரி மாவட்ட பொறுப்பு அலுவலர் திருமதி. கே.என். லதா, அவர்களை
பலமுறை தொலைப்பேசி வழியாக தொடர்பு கொண்டபோது இன்று வருகிறேன், நாளை வருகிறேன், அடுத்த
வாரம் வருகிறேன் என்று தெரிவித்து காலம் கடத்தி வந்தார்.
அதனைத் தொடர்ந்து 18.12.2018 அன்று பொறுப்பு அலுவலர் திருமதி. கே.என். லதா, அவர்களிடம்
தொலைப்பேசியில் பேசியபோது TNPL-யிடம் இருந்தும் பள்ளிக் கல்வி இயக்குநரிடமிருந்தும் இப்பொருள்
சார்பாக தகவல் பெறப்பட்ட பின்பு வழக்கொழிந்த பாடநூல்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனத்
தெரிவித்துவிட்டார்.
அதன் பின்னர் பார்வை 3-ன்படி இப்பொருள் சார்பாக நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு
மேற்காண் விவரங்கள் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)
இவ்வாறாக குன்னூர் கல்வி மாவட்டம் சார்பாக 2012-13-ம் கல்வியாண்டுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட
7 டன் வழக்கொழிந்த பாடநூல்களை ஒப்படைக்க தயார் நிலையில் இருந்தும் தமிழ்நாடு பாடநூல் மற்றும்
கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்ட
திருமதி. கே.என். லதா, அவர்கள் வழக்கொழிந்த பாடநூல்களை பெற்றுக் கொள்ள கடைசி வருகை புரியாத
காரணத்தினால் மட்டுமே ஒப்படைக்க இயலவில்லை என்ற விளக்கத்தினை பணிவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.
மேலும் அதன்பின்னர் வழக்கொழிந்த பாடநூல்களை எடுத்துச் செல்ல தமிழ்நாடு பாடநூல் மற்றும்
கல்வியியல் பணிகள் கழகத்தின் பொறுப்பு அலுவலர்கள் யாரும் இவ்வலுவலகத்திற்கு தொடர்பு
கொள்ளவில்லை எனவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பு – உரிய ஆவணங்கள்

You might also like