You are on page 1of 17

பொருளடக்கம்

வ.எண் பொருண்மை /இயல் பாடத்தலைப்புகள்

3 தமிழினம் தமிழினத்தின் வளங்கள்


பழமை வாய்ந்த தமிழினம்

பாரம்பரியம் தமிழர்களின் அடையாளம்


தமிழினம்
எழுச்சியும்...வீழ்ச்சியும்...
கவிதைப் பேழை
தமிழினம்
தமிழினத்தின் வளங்கள்
- ரிஷிகேஷ் வெ

"என்ன தவம் நான் செய்தேன் தமிழனாய்


பிறப்பதற்கு" என்ற பாரதியாரின் சொல்லிற்கேற்ப
புறமுதுக்கிட்டு ஓடுவதும், புற முதுகில்
அம்புபட்டு வீழ்வதும் அவமானம் எனக் கருதிய
பரம்பரை தமிழ்ப்பரம்பரை ஆகும் ஆனால்
அத்தகைய பரம்பரையின் அடையாளமான
பாரம்பரியம் இக்காலத்தில் வாழ்கிறதா? "யாதும்
ஊரே யாவரும் கேளிர்" என்பதற்கேற்ப
ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் தமிழர் ஆவர்.
தமிழினம் கூறிய கருத்துகளை இந்தக் கவிதையில்
காணலாம்.
முன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட
முத்தான பழமையே முதுபெரும் தலமாகும் !
பன்னிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும்
பழமையை காப்பது பாரினில் வளமாகும் !
மடயிலா அழகென மயக்கிடும் தாஜ்மகால்
மாற்றாக வேறொன்று மனதாலும் சிறக்குமா !
விடையிலா வியப்பென வளமிகு தஞ்சையில்
வீற்றிடும் கோபுரம் விஞ்ஞான விளக்கமே !

படைகொண்ட மூவேந்தர் பளிச்சிடும் சிற்பங்கள்


பாரினில் மீண்டுமே படைத்திட முடியுமா !
கல்வெட்டு குகைகளும் கட்டிடவகைகளும்
கலைநய ஓவியம் காத்திடப் போராடு !
தொல்லிய வரலாறு தொடங்கிய நாட்டினுள்
தொலையாத பாரம்பரியம் தொடர்ந்திடப் பாடுபடு !
- ரிஷிகேஷ் வெ
பாடலின் பொருள் :
நம் முன்னோர்களின் வாழ்வியலை அறிந்துகொள்ள
நமக்கு இருக்கும் முத்தான ஒரு வழி தான் நமது
பாரம்பரியம்.அந்த பழமையான பண்பாட்டை நாம்
போற்றிக் காக்க வேண்டும். பார்த்தவுடன் அதன் அழகில்
மெய்சிலிர்க்க வைக்கும் தாஜ்மகால், விடைதெரியாமால்
வியப்புடன் வளமாக இருக்கும் தஞ்சைக் கோபுரத்தின்
விஞ்ஞானம் இன்னும் விளங்கவில்லை.
மாபெரும் படை கொண்ட மூவேந்தரின் சிற்பக்
கலையை மீண்டும் எவரால் படைத்திட இயலும். நம்
கல்வெட்டுகளையும், கட்டிட வகைகளையும் கலைநயம்
மிக்க ஓவியங்களையும் நாம் போராடி காத்திட
வேண்டும். இத்தகைய சிறப்பு மிக்க நம் நாட்டில்
தொடங்கிய பண்பாட்டை எப்போதும் தொடர்ந்திட, நாம்
பாடுபட வேண்டும்.

இலக்கண குறிப்பு :
மூவேந்தர் - தொகைச்சொல்
கவிதைப் பேழை
தமிழினம்
பழமை வாய்ந்த தமிழினம்
-ஹர்ஷனா சு

பழமையே சிறந்தது என்ற பழமொழிக்கேற்ப


பழமை என்றும் பழமை. இன்றைய புதுமை
நாளைய பழமை என்பதை நாம் என்றும்
நினைவு கொள்ள வேண்டும். பழமையின்
பாதை புதுமையாய் சென்றுவிடும் அனைவரின்
வாழ்வு வெற்றி பெருகிடும்.
அப்படிப்பட்ட பழமை வாய்ந்த தமிழினத்தைப்
பற்றி இந்த கவிதை பேழையில் பார்க்கலாம்.

உலகின் தோற்றம் பழமை - இத்தகைய பண்பாட்டை


அதில் தோன்றிய எம் தமிழும் பழமை இமைப்போலக் காத்திட்டால்
எம் முன்னோர் வளர்த்த பாரம்பரியமோ பிறர் போற்றும் பேராண்மை
உலகிற்குச் சொல்லும் எமதருமை உம்மிடமே நடைபயிலும்
அதைக் கண்டு வையகமும்
ஆயிரம் மாற்றங்கள் வந்திடினும் வாழ்கவென்று வாழ்த்துரைக்கும்
பிழையின்றி வாழ வழி வகுத்து
குறை களைந்து நிறை காணும் -ஹர்ஷனா.சு
குணமதனை வளர்த்து நிற்கும்

எக்கால மாந்தருக்கும்
வாழ்வென்றால் இதுவென்று
பக்குவமாய் பாடம் சொல்லும்

பகிர்ந்துண்ணும் பண்பாட்டால்
பாரினிலே உயர்ந்து நின்று
பரணி பாட வைத்திடும்
உரைநடை உலகம்
தமிழினம்
தமிழர்களின் அடையாளம்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில்


முக்கியமானவை உணவு, உடை, உறைவிடம்.
மேலை நாட்டு பழக்கவழக்கங்களைப்
பின்பற்றியதன் மூலம் உடல் மற்றும் மனம் சார்ந்த
பல பிரச்சனைகளுக்கு ஆளாகிவிட்டோம். ஆனால்,
அவற்றை பல ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய
தமிழர்கள் நெறிப்படுத்தி வாழ்ந்து வந்தனர்.
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி"
எனும் புறப்பொருள் வெண்பா மாலையில்
இருந்து தமிழர்களின் தொன்மையின் சிறப்பை இந்த
உரைநடை மூலமாக தெரிந்து தெளிவோம்.

jkpod; vd;Nwhh; ,dKz;L jdpNa mth;nfhU FzKz;L vd;W jkpoiu


milahsg;gLj;jpdhh; ehkf;fy; ftpQh; mth;fs;. NtW ve;j ,dj;jpw;Fk;
nkhopf;Fk; ,y;yhj ngUik jkpOf;Fk; jkpoUf;Fk; cz;L. fhuzk; kdpj ,dk;
vg;gb thoNtz;Lk; vd;w tho;tpaiyf; fw;Wf; nfhlj;j jkpohpd; gz;ghl;L
mbr;RtLfs; ,d;Wk; cyfk; KOtjpYk; jlk; gjpj;J ,Uf;fpwJ.

tpUe;Njhk;gy;

gz;ilaj; jkpoh;fs; gz;ghl;il capnudg; Nghw;wp tsh;j;jdh; vd;why; mJ


kpifahfhJ. mj;jifa gz;ghLfSs; jiyahajhfTk;> cahpa
gz;ghfTk;> ,y;yj;jpw;Fhpa mwq;fSs; xd;whfRk; Nghw;wg;gLtJ
tpUe;Njhk;gyhFk;. tpUe;J vd;w nrhy;Yf;Fg; GJik vd;gJ nghUs;. cwtpdUk;
ez;gUk; my;yhjtuha; Gjpauhf ek;kplk; tUk; kf;fis tpUe;jpdh; vd;wdh;
jkpoh;. mwpahjth;fisAk; mioj;J cztspj;J ,lkspj;J cgrhpj;J
kfpo;ejdh; ek; jkpoh;fs;.
tpUe;jpdh;fis ntspapy; ,Uf;fr; nra;J jhd;; tPl;bd; cs;Ns cz;Zjy;
rhthikf;F kUe;jhfpa mkph;jkhf ,Ue;jhYk; Ntz;lg;gLtjpy;iy vd;gij>
‘tpUe;J Gwj;jjhj; jhDz;ly; rhth
kUe;njdpDk; Ntz;lw;ghw; wd;W”
vd;fpwhh; ts;Sth;. ,jpypUe;J tpUe;Njhk;gy; rq;ffhy kf;fspd;
gz;ghf ,Ue;jik mwpaKbfpwJ. cztpd; mbg;gilj; Njitia ed;F czh;e;j
ek; Kd;Ndhh;fs; cztpy;yhky; tWikapy; thbath;fis tuNtw;W cgrhpj;jdh;.
tpUe;jpdiu md;NghL cgrhpf;f Ntz;Lk; vd;gJ jkpoh;fspd; gz;ghf ,Ue;jJ.
NkYk; jkpoh;fs; GjpjhftUk; tpUe;jpdh;fs; mkh;e;J ,isg;ghwp tpUe;Jz;L
nry;tjw;fhfNt tPl;bw;F Kd;G jpz;iz mikj;J tPl;ilf; fl;bAs;sdh;.
gpwUf;F cjt Ntz;Lk; vd;gjw;fhfNt Ntiy nra;J nghUs; Nrkpj;jth; cyfpy;
jkpoh; kl;LNk.
gFj;Jz;L gy;Yaph; Xk;GjNy ,y;ywj;jpd; jiyaha newpahFk;. mj;jifa
tpUe;Njhk;giy goe;jkpoh;fs; jiyahaf; flikahf vz;zpdhh;fs;. kdpjd;
rKjhaj;Jld; xd;wp tho;tjw;F xU ghykhf tpUe;Njhk;gy; tpsq;fpaJ. ,Jtiu
$wpa nra;jpfspd; top tpUe;Njhk;gy; vd;gJ goe;jkpohpd; gz;ghl;L Kiw
vd;gJk; mJ njhd;W njhl;Lg; ghJfhf;fg;gl;L te;jijAk; mz;ikf;fhyk;
tiu$lf; fz;zhuf; fhzKbe;jJ. Mdhy; ,d;iwa ,ae;jpu cyfpy;
tpUe;Njhk;gy; vd;gJ nry;t nropg;igf; fhl;ltjw;fhfTk;> gyid vjph;ghh;j;J
tpUe;jspg;gjhfTk; khwptUfpwJ. NkYk; $l;Lf; FLk;g tho;f;fif KiwapypUe;J
jdpf;Fbj;jd tho;f;if Kiwf;F ,j;jiy Kiwapdh; vd;W khwj;
njhlq;fpdhh;fNsh md;Nw tpUe;Njhk;Gk; jkpo;g;gz;Gk; mUfpg; Ngha;tpl;lij
tUj;jj;Jld; $wNtz;bAs;sJ.
tpisahl;L
gugug;ghd cyfk; - Ntfk; epiwe;j
tho;f;if mikg;G - ciog;G kl;LNk
tho;f;if my;y. Xa;Tk; mtrpaNk‚
Xa;T vd;why; gLj;J cwq;Ftjy;y nra;fpd;w Ntiyia khw;wpr; nra;tJk;>
tpUg;gkhdth;fSld; Nrh;e;J cwthLtJk; tpisahbf; fspg;gJk; MFk;.
‘clypid cWjpnra;” vd;W $wpa ghujpahh;
‘Xb tpisahL ghg;gh – eP
Xa;jpUf;f yhfhJ ghg;gh
$b tpisahL ghg;gh – xU
Foe;ijia itahNj ghg;gh
..............
khiy KOJk; tpisahl;L - vd;W
tof;fg; gLj;jpf;nfhs;S ghg;gh
vd;Wk; ekf;fhfg; ghb cs;shh;. tpisahl;Lfspdhy; FO xw;Wik>
tpl;Lf;nfhLf;Fk; kdg;ghd;ik> ntw;wp> Njhy;tpia Vw;Wf; nfhs;Sk;
rfpg;Gj;jd;ik> el;Gzh;T> cw;rhfk; Mfpad tsUtJld; clypy; cs;s fopT
cg;Gfs; tpah;itahf ntspNaWk; mjpraKk; eilngWk;.

தெரியுமா?
ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பல
நன்மைகள் இருக்கின்றன. பாரம்பரிய
விளையாட்டுகளால் குழந்தைக்கு
கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
மூளைத்திறன், கவனத்திறன்,
பார்வைத்திறன் என ஒவ்வொரு
விளையாட்டும் பல்வேறு மருத்துவ
பலன்களைத் தருகின்றன.

tpisahl;Lfs; Xhpdj;jpd; tPuj;ijAk; gz;ghl;ilAk;


ntspg;gLj;JtdthFk;. ,it cly; jpwd; tsh;f;f cs;sj;jpy; Mh;tj;ij
Vw;gLj;j kdk; kfpo;r;rpay; jpisf;f JizGhpfpd;wd. ,jpy;
rpWth;>rpWkpah;> ,isNahh;> KjpNahh; vd vy;yh epiyapy; cs;NshUk;
<LgLfpd;wdh;. ,jd; mbg;gilahd Nehf;fk; Nghl;bapLjyhFk;.
$b tho;e;jhy; Nfhb ed;ik vd;W cyfj;jpw;Nf cuf;fr; nrhd;d guk;giu
ek; jkpo;g; guk;giuMFk;. ,jw;fhd ikag;Gs;spahf ehd;F Ie;J Ngh; xU
FOthf ,Ue;J mth;fSf;Fs; xU jiyik cUthf;fp tpisahLtJ vd ek;
ghuk;ghpa tpisahl;L fw;gpj;jNjhL jdpj;J epd;W ntw;wp ngWtijtpl $b
epd;W ntw;wp ngw;Wtplyhk; vd;w Mf;fg; G+h;tkhd kdepiyia Vw;gLj;jpf;
nfhLj;jd.
czT
czNt kUe;J vd;w xg;gw;w gof;fk; ek; czT gof;fj;jpy; njhd;W
njhl;L ,Ue;J tUfpwJ. ,jw;F ek; czT rq;ffhy ,yf;fpaq;fspy; gy
rhd;Wfs; fhzg;gLfpd;wd. czitg; gw;wp rpj;jh;fs; Fwpg;gpLk; NghJ vJ
czthf ,Uf;fpwNjh>mJ kUe;jhf ,Uf;fNtz;Lk;. vJ cdf;F
kUe;jhf ,Uf;fpwNjh mJNt cdf;F czthf ,Uf;f Ntz;Lk; vd;W
Fwpg;gpLfpd;wdh;. me;j mstpw;F cztpd; gaid mwpe;J tho;e;jdh; ek;
Kd;Ndhh;.
jiuapy; rk;kzk; Nghl;L mkh;e;J cz;Zk; NghJ ,uj;j Xl;lk; ,Lg;gpw;F
NkNy mjpf mstpy; eilngW tjdhy; rPuzf; NfhshWfs; Vw;glhJ vd;gjid
mwpe;jpUe;jdh;. cztpid thio ,iyapy; ghpkhwpNa cz;ldh;. njhlh;e;J
thio ,iyapy; #lhd czT Nghl;L rhg;gpLifapy; FNshNuh‡gpy; czTld;
fye;J clYf;F Cl;lr;rj;ijj; jUfpwJ. ,t;thW MNuhf;fpaj;ij
mbg;gilahff; nfhz;L jkpoh;fs; czTg; gof;fj;jpy; gy epiyfisg; gpd;gw;wp
te;Js;sdh;.
தெரியுமா?
பண்டைய தமிழர்கள்
அனைவரும் உடல்
ஆரோக்கியத்திற்காக மண்பானை
போல் நன்மை அளிக்கக்கூடிய
பித்தலை,செம்பு,வெண்கலம்,
தங்கம்,வெள்ளி என ஐந்து வகை
உலோகங்களை சமையல்
பாத்திரங்களாகப் பயன்படுத்தி
வந்தனர்.
czT mbg;gilapy; jhd; xU kdpjd; czh;itg; ngwKbAk;. Mf me;j
czh;Tjhd; rpe;jidahf khWfpwJ. me;j rpe;jidjhd; nray;ghlhf khWk;.
me;j nray;fs; vy;yhk; rpwg;ghd nrayhf ,Ue;J r%fj;ij Nkd;ikg;gLj;Jk;.
xU ,dj;ij mopf;f Ntz;Lk; vd;why; mth;fSila czTg;gof;fj;ij
mopj;jh NghJk; fz;bg;ghf me;j ,dj;ij mopj;J tplyhk; vd;gh;.
,g;gbg;gl;l fhuzq;fis Kd;itj;Nj nfhOj;jtDf;Ff;
nfhs;S> ,isj; jtDf;F vs;S vd;gd Nghd;w czTg; gof;f tof;fq;fis
vspa eilapy; nrhy;yp jhdpaq;fspd; gad;ghl;il Kd;Ndhh; ghJfhj;J
te;Js;sdh;. Neha; tha;g;gl;lhy; fhLfspy; tpise;j %ypiffs;> gr;rpiyfs;
Mfpatw;iwf; nfhz;Nl itj;jpak; nra;jdh;. NkYk; ek; Kd;Ndhh;fs; cz;l
czTfs; midj;Jk; mth;fs; tho;e;j epy mikg;igAk;> ,aw;if mikg;igAk;
rhh;e;Nj tpsq;fpd. mth;fs; MNuf;fpakhf tho;e;jjw;F czT kl;Lkpd;wp
rikay; fUtpfshd kz;ghid> mk;kp> cuy;> Ml;Lf;fy; Nghd;witAk;
Fwpg;gplj;j fitahf mike;jpUe;jd.
kUe;njd Ntz;lhthk; ahf;iff;F mUe;jpaJ
mw;wJ Nghw;wp czpd;
vd;w ts;Sthpd; nghd;nkhoapid epidtpy; nfhz;L ek;
jiyKiwapid MNuhf;fpak; kpf;f jiy Kiwaha; cUthf;FNthk;.

ek; flik
goq;fhyk; njhl;Nl ek; jkpoh;fs; vy;yhtw;wpYk; jiyrpwe;J
tpsq;fpdh;. ,aw;ifNahL ,iae;j goe;jkpoh; tho;f;if Kiwia ,d;W ehk;
gpd;gw;wp mLj;j jiyKiwf;Ff; fw;Wf; nfhLf;f Ntz;Lk;.
விரிவானம்
தமிழினம்
தமிழினம்
எழுச்சியும்... வீழ்ச்சியும்...

ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம்


அச்சமூகத்தை பிரதிபலிக்கும் சிறந்த கருவி ஆகும்.
கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு,
குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள் நம்
மண்ணோடும், நம்மோடும் தொடர்புடையது. நமது
முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள்,
சிந்தனைகள், பழக்கவழக்கங்கள், ஆகியவற்றை
வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது. அப்படிப்பட்ட
தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாடும் வாழ்கிறதா?
வீழ்கிறதா?என்று இந்த விரிவானத்தின் மூலம்
அறிவோம்.
நடுவர்
அன்பிற்குரிய நல்லுள்ளங்களே!! அருந்தமிழ் வணக்கம் இன்று நம்
பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா இனிதே தொடங்குகிறது.
அதனை முன்னிட்டு நடைபெறும் பட்டிமன்ற தலைப்பை அறிய
ஆவலாக இருக்கிறதா? இதோ சொல்கிறேன்.
இன்றைய காலத்தில் தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும்
வாழ்கிறதா? வீழ்கிறதா? [மாணவர்கள் கரவொலி எழுப்புதல்]
எனவே இன்றைய சூழ்நிலையில் தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாடும்
வீழ்கிறது எனும் தலைப்பில் உரைவீச்சு தொடங்க வருமாறு
அன்புத்தோழி தான்யா அவர்களை அழைத்து என் முன் உரையை
நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.

தான்யா
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே.
என்று தமிழையும் தமிழரையும் சிறப்பித்த பாரதியார் அவர்களை
வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.
இன்றைய காலத்தில் தமிழர் கலாச்சாரம் வாழ்கிறது என்பதைவிட
வீழ்கிறது என்று சொல்வதே பொருத்தமானது. சிறுவயதிலிருந்து நம்மை
இந்தியன் என்றே ஊட்டிவளர்த்தனர் , ஆனால் தமிழன் என்று
ஒருபோதும் கூறவில்லை அட வெறும் 70 ஆண்டுகளாகத்தான் நாம்
இந்தியர்கள் 7000 ஆண்டுகளாக நாம் தமிழர்களாகவே வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
நடுவர் அவர்களே, ஒரு விபத்து நிகழும் போது ஓடிவந்து உதவாமல்
சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் தமிழரின் பண்பாடும்
கலாச்சாரமும் வாழ்கிறதா என்பது என் கேள்வி? இன்றைய உலகத்தில்
ஆரோக்கியத்தை விட சுகத்தைத் தேடிச் செல்லும் மக்களே அதிக
எண்ணிக்கையில் உள்ளன
உலகை ஆளப்பிறந்தவன் தமிழன் என்று சொன்னால் அன்று
ஆங்கிலேயர்களிடம் அடிமையானவன் இன்று ஐபோனிடம் (I phone)
அடிமையாக இருக்கிறான் இதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
எனவே நடுவர் அவர்களே தமிழனின் கலாச்சாரம் வாழ வேண்டும்
என்பது என் ஆசையும் தான் ஆனால் இன்றைய உலகத்தில் இது வீழ்ந்து
தான் கிடக்கிறது என்று`கூறி வாய்ப்பு கொடுத்த அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
நடுவர்
அருமை தான்யா, உங்கள் அணியை அழகாக அலங்கரித்து
உள்ளீர்கள். அடுத்ததாக வாழ்கிறது என்ற அணியிலிருந்து தனிஷ்கா
எப்படி பதில் சொல்லப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.

தனிஷ்கா
தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே
தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே
என்று புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்களை வணங்கி என் உரையை
தொடங்குகிறேன்.
நடுவர் அவர்களே, தமிழரின் கலாச்சாரமும், பண்பாடும் பழமை
வாய்ந்ததாகவே இருந்தாலும், அது இன்னும் ஒவ்வொரு தமிழனின்
ரத்தத்திலும், மூச்சிலும் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.
அப்போது எப்படி தமிழர்களின் பாரம்பரியம் வீழ்ந்துகொண்டிருக்கும்?
மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு என்னும்
விளையாட்டிற்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது
இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சாப்பாடு
வழங்கினர், கிறிஸ்துவர்களோ தண்ணீரை கொடுத்தனர். ஆனால், சாதி,
மதம் என்று எதையும் பார்க்காத ஒரு பெண் பாத்திரத்தில் சாப்பாட்டை
எடுத்து வந்து எல்லோருக்கும் அதை ஊட்டி விட்டாள். இப்படிப்பட்ட
தமிழச்சி இருக்கும் வரைக்கும் தமிழினம் என்றும் வீழந்து போகாது.
இதிலேயே தமிழினம் எப்படி எல்லாம் சிறப்பாக இருந்தது என்று
தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு தமிழனும் தன் இனம் வீழ்ந்து விட்டது என்பதற்காக
போராட வில்லை, தன்னுடைய இனம் எப்போதும் வீழக்கூடாது
என்பதற்காகப் போராடுகிறான். தமிழினம் என்பது அவமானம் அல்ல
அது ஒவ்வொரு தமிழனின் அடையாளம்.
தோழி தான்யா 7000 ஆண்டுகளாகத் தமிழனாய் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம் என்று கூறினாள். அப்போது எப்படி தமிழினம்
வீழுந்து கொண்டிருக்கும்?
எனவே நடுவர் அவர்களே, தமிழினம் வீழாமல் இருக்க நாமும்
நமது கடமையைச் செய்ய வேண்டும்.எனவே நாங்கள் எங்கள் இனம்
வீழ்ந்து விட்டது என்பதற்காகப் போராடவில்லை எங்கள் இனம்
என்றும் வீழக்கூடாது என்பதற்காகப் போராடுவோம் என்று வாய்ப்பு
அளித்த எல்லோருக்கும் நன்றி கூறி சென்று வருகிறேன். நன்றி
வணக்கம்.
நடுவர்
ஆஹா. அட்டகாசம் தமிழரின் இனம் இன்றும் வாழ்கிறது என்று
தனிஷ்கா தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டார் . இப்போது
ஹர்ஷனா என்ன சொல்ல போகிறார் என்று பார்க்கலாம்.

ஹர்ஷனா
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி"
என்பதற்கேற்ப என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் தமிழ்
மண்ணிற்கு என் முதற்கண் வணக்கம்.
நடுவர் அவர்களே தோழி தனிஷ்கா பேசியது மழை பெய்து
ஓய்ந்தது போன்று இருந்தது. ஒரு தமிழரின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு
விளையாட்டை விளையாடுவதற்குக் கூட இன்று போராட
வேண்டியுள்ளது, இப்படி இருக்கையில் எப்படி இன்னும் பாரம்பரியம்
வாழ்கிறது என்று கூறமுடியும். காலையில் கம்பங்கூழும் மதிய
வேலையில் மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த சாப்பாட்டையும்
சாப்பிடுவதே தனி சுகம் என்றார்கள் நம் முன்னோர்
இன்று நாட்டில் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதே
கடினம்.இ தில் மாப்பிள்ளை சம்பா அரிசியை எங்கு தேடுவது?
பத்திரிக்கையின் நான்கு மூலையிலும் மஞ்சள் தேய்த்தார்கள் ஏன்
தெரியுமா? ஒரு வீட்டில் இருக்கும் நோய் இன்னொரு வீட்டிற்கு
வரக்கூடாது என்ற மனப்பான்மையைக் கொண்டவர்களாக
விளங்கினார்கள் நம் தமிழர்கள். ஆனால், இன்று ஒரு பத்திரிகையை
மட்டும் அடித்து வாட்சப்பில் (Whatsapp) குழு அமைத்து அனைவரும்
வந்து விடுங்கள் என்று கூறுகிறார்கள். அன்று பெண்கள் கோலம்
கையில் போட்டனர் இன்றோ கோலம் ஒட்டியில் போடுகின்றனர்.
எனவே நடுவர் அவர்களே, இன்றைய கால மக்கள் தமிழரின்
பண்பாட்டைப் பற்றி தேடுவதென்ன யோசிக்கக்கூட
எண்ணுவதில்லை என்று கூறி நல்ல தீர்ப்பு வழங்குமாறு கேட்டு விடை
பெறுகிறேன். நன்றி வணக்கம்.

நடுவர்
தோழி ஹர்ஷனா காரசாரமான விவாதத்தை முன்வைத்தார் இதற்கு
எதிரணியில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் நண்பன் ரிஷிகேஷ் எப்படி
பதில் கூறுகிறார் என்பதைப் பார்க்கலாம். வாங்க ரிஷிகேஷ்.
ரிஷிகேஷ்
வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்
என்று தமிழ்த்தாயின் பாதம் தொட்டு வணங்கி என் வணக்கத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
நடுவர் அவர்களே உடை, பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் மாறி
வருகிறது என்று தோழி ஹர்ஷனா சொன்னார்கள். உடை மாறும் போது
நாம் வீழ்ந்து விடவில்லை. மானத்தை மறைப்பதற்கே உடை
உணர்வையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மறைக்க அல்ல
என்பதை எதிரணிக்குக் கூற விரும்புகிறேன் .
இன்றைய காலத்தில் இளைஞர்கள் இயற்கை விவசாயத்தைகப்
பற்றிய விழிப்புணர்வை நடைமுறையில் செய்து வருகின்றனர்.
பெண்கள் கோலம் போடுவதை மறந்து கோல ஒட்டி (sticker) வாங்கி
ஒட்டுவதாய் தோழி ஹர்ஷனா கூறினார். ஆனால் இன்றும் நமது ஊரில்
உள்ள குடும்பங்களில் பெண்கள் கோலம் போடுவதை மறக்கவில்லை.
அது வளர்ந்து கொண்டுதான் வருகிறது.
இன்று நம் ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களும் தமிழன் என்ற
பெயரில் ஒற்றுமையாகத் தான் உள்ளனர். எனவே நடுவர் அவர்களே
தமிழும் தமிழரின் பண்பாடும் இன்றைய காலத்தில் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறது என்று கூறியபடி என் உரையை நிறைவு
செய்கிறேன் நன்றி வணக்கம்.

நடுவர்
ரிஷிகேஷ் அருமையாக தன்னுடைய அணிக்காகப் பேசினார்.
அடுத்து வரும் ஜனரக்க்ஷா என்ன சொல்லப் போறீங்க?

ஜனரக்க்ஷா
தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான்
தமிழ் தாழ்ந்தால் தமிழன் வீழ்வான்
என்ற பாவேந்தரின் கவிதையோடு தமிழ் அன்னையை வணங்கி என்
உரையைத் தொடங்குகிறேன்.
நண்பன் ரிஷிகேஷ் மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக பேசினார்.
நடுவர் அவர்களே, நம் நாட்டில் பெரிதாகப் பேசப்படுவது நவீன
வளர்ச்சி. ஆகும் ஆனால் அதற்குப் பின் நாம் பெரிதாக இழந்தது நம்
பாரம்பரியமும், கலாச்சாரமும்.
தாத்தா பாட்டி வாழ்ந்த காலமெல்லாம் வெறும் பொழுதுபோக்குக்
காலமாக மக்கள் நினைக்கிறார்கள். கார்ப்பரேட் விளம்பரங்களைப்
பார்த்து இது தான் உண்மை என்று நம்பும் சூழ்நிலைக்கு நாம்
அனைவரும் தள்ளிவிடப்பட்டோம் .
ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்ற காலத்தில் வாழ்ந்த தமிழர்களை
பன்னாட்டு நிறுவனங்களின் பகட்டான விளம்பரங்கள் பளபளக்கும்
பற்பசைக்கு அடிமையாகத் தூண்டிவிட்டதோடு மட்டுமல்லாமல் இன்று
அதே பன்னாட்டு நிறுவனங்கள் உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா?
கரி இருக்கிறதா? என்று தற்பொழுது கேட்கிறார்கள். நாகரிகப்
போர்வையில் இளநீர், பதநீர் காலம் போய் பெப்சி (pepsi), கோக் காலம்
வந்துவிட்டது.
தமிழர் என்ற அடையாளத்தை மறந்து இன்று பன்னாட்டு
நிறுவனங்களுக்கு கைநீட்டி விட்டோம். ஒற்றுமை என்ற பெயரில்
இன்னும் வேற்றுமையாகவே நாம் அனைவரும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம் என்ற கருத்தை நிலவி இன்றைய உலகத்தில்
தமிழர் பண்பாடு வீழ்ந்தே கிடக்கிறது என்று கூறி விடைபெறுகிறேன்
நன்றி வணக்கம்.

நடுவர்
ஜனரக்க்ஷா தமிழினம் அறிவியலால் அழிந்துபோகிறது என்று
கூறினார். அடுத்து பிரசாந்தியிடம் இருந்து என்ன தெரிந்து கொள்ளப்
போகிறோம் என்று பார்க்கலாம்.

பிரசாந்தி
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்
என்ற பாரதியாரின் கூற்றின்படி என் உயிரினும் மேலான தமிழ்
மொழியை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.
இங்கிலாந்து மொழியை வாணிப மொழி என்பார்கள் உருது
மொழியைக் கவிதைமொழி என்பார்கள், ஆனால் தமிழர்கள் மட்டும்
தான் பேசுகிற மொழியைத் தாய்மொழி என்று சொல்கிறோம்.
தமிழ்மொழி நமக்கு மட்டும் தாய்மொழியல்ல மொழிகளுக்கு எல்லாம்
தாய், ஆனால் நம் தமிழ்ர் பண்பாடும் கலாச்சாரமும் நேற்று பிறந்தது
அல்ல என்பதை நான் பதிவு செய்கிறேன்.
தமிழனின் வாழ்க்கை முறை எப்படி என்று தெரியுமா? திசையை
எட்டாகப் பிரித்தான், இசையை ஏழாகப் பிரித்தான், சுவையை ஆராகப்
பிரித்தான், நிலத்தை ஐந்தாகப் பிரித்தான் , காற்றை நான்காகப் பிரித்தான்,
பேசுகின்ற மொழியை மூன்றாகப் பிரித்தான், தாம் வாழ்கின்ற
வாழ்க்கையை இரண்டாகப் பிரித்தான். வாழ்க்கையை இரண்டாகப்
பிரித்த தமிழன் ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான் அதை உயிருக்கும்
மேலாக வைத்தான்.
பாண்டிய மன்னன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை
எழுப்பினான். 17 கோபுரங்களைக் கொண்ட கோவிலில் நான்கு
கோபுரங்கள் மட்டும் உயரமாக இருக்கும். அந்த நான்கு கோபுரங்களிலும்
தெற்குக் கோபுரம் மட்டும் உயரமாக இருக்கும் எதற்கு தெரியுமா? இந்த
தேசத்தில் தெற்கில் மட்டும் தான் நீதி, நேர்மை, பண்பாடு, கலாச்சாரம்
கட்டிக் காக்கிறார்கள் என்று உலகிற்குப் பறைசாற்றும் என்பதற்காக
அமைத்தான்.
இவ்வளவு நூற்றாண்டு ஆகிவிட்டது, ஆனாலும் 3,5,7 நட்சத்திர
விடுதிகளில தங்கத்தட்டுகளிலும், வெள்ளித்தட்டுகளிலும்,
பரிமாறுகிறார்கள். ஆனால் அந்தத் தட்டில் வாழை இலை இருக்கும்.
இதிலிருந்து நம் பண்பாடு இன்றும் வாழ்கிறது. அதனால் நல்லதொரு
தீர்ப்பை வழங்குமாறு கேட்டு விடைபெறுகிறேன்.நன்றி வணக்கம்.

நடுவர்
இரண்டு அணியினரும் நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல
என்று தங்களின் பேச்சின் மூலம் நிரூபித்தனர். அனைவரும் பதிவிட்ட
கருத்தில் தீர்ப்பு வழங்குவதற்கே மிகவும் கடினமாக உள்ளது. ஒவ்வொரு
தமிழனும் தான் தமிழனாய் பிறந்ததற்குப் பெருமை கொள்ள வேண்டும்.
எனவே இன்றைய காலத்தில் தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாடும்
வாழ்கிறது என்று கூறி என் உயிரினும் மேலான தாய்மொழியை வணங்கி
சென்று வருகிறேன்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் !
தமிழரை அடையாளப்படுத்தும்
வரலாற்றை மீட்டெடுப்போம்!!
பாரம்பரியத்தைக் காப்போம்!!

தயாரிப்பு

தனிஷ்கா.த

ஜனரக்க்ஷா.ஆ

பிரசாந்தி.க

ஹர்ஷனா.சு

ரிஷிகேஷ்.வெ

தான்யா.ர.தீ

ஆதர்ஷா.எஸ்.எஸ்

You might also like