You are on page 1of 3

கேள்வி பதில்கள்

1.தண்டியலங்காரம் காப்பியத்தை எவ்வாறு வகைப்படுத்துகிறது?

விடை : தண்டியலங்காரம் காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என

இரு வகைப்படுத்துகிறது.

2. பாவிகம் என்பது யாது?

விடை : காப்பியம் முழுவதிலும் ஊடுருவி நிற்கும், கவிஞன் வலியுறுத்த

விரும்பும் அடிப்படைக் கருத்தே பாவிகம் எனப்படும்.

3. ஐம்பெருங் காப்பியங்கள் என்பவை யாவை?

விடை : சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி,

குண்டலகேசி ஆகிய ஐந்தும் ஐம்பெருங் காப்பியங்களாகும்.

4. காவியம் என்று பெயர் பெறும் இலக்கியங்களைக் கூறுக.

விடை : நாககுமார காவியம், யசோதர காவியம், இயேசு காவியம், இராவண

காவியம் முதலான நூல்கள் காவியம் என்று பெயர் பெற்றுள்ளன.

5. தன்னேரில்லாத் தலைவனின் பண்புகள் யாவை?

விடை : மக்களில் நற்பண்பு மிக்கவர்களைக் காப்பியத் தலைவர்களாகக்

கொள்ளும் மரபு உள்ளது. தன்னேரில்லாத் தலைவன் என்பான் பேராண்மை,

எல்லாரையும் தன் வயப்படுத்தும் தன்மை, உயர்பண்புடைமை, விழுமிய

கல்வியறிவு, அனைவரையும் ஈர்க்கும் தோற்றப் பொலிவு, அனைவராலும்

விரும்பப்படும் தன்மை, தான் வாழும் காலத்திலேயே தன்னைப் பற்றிய

வரலாறு தோன்றக் காரணமாக இருத்தல் போன்ற தலைமைப் பண்புகள்

உடையவனாய் இருத்தல் வேண்டும்.

6. காப்பியத்தில் கதையமைப்பு எவ்வாறு அமைய வேண்டும்?

விடை : காப்பியத்தின் உயிர்நாடியே கதையாகும். அது காலத்திற்கும்,

ஆசிரியனின் நோக்கத்திற்கும் ஏற்ப அமையும். வாய்மொழிக் கதைகள்,

பழமரபுக் கதைகள், வரலாற்று நிகழ்ச்சிகள், கற்பித்துக் கொள்ளப்படுபவை


என்பனவற்றுள் ஏதேனும் ஒரு விதத்தில் காப்பியக் கதையின் அடிப்படை

அமைய வேண்டும்.

7. காப்பிய மரபுகள் சிலவற்றைக் கூறுக.

விடை : i) பாவிகம், காப்பியத்தின் சிறப்பு வாய்ந்த மரபாகும்.

ii) காப்பியத்தில் காப்பியக் கட்டமைப்பு சிறப்பாக அமைந்திருக்கும்.

iii) காப்பியம் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் முதலான பிரிவுகளைப்

பெற்றிருக்கும். சுவை, பாவம்(மெய்ப்பாடு) ஆகிய கூறுகளையும் கொண்டிருக்கும்

8. கிரேக்க மொழியில் உருவான காப்பியத்தின் பெயர் என்ன?

விடை : கிரேக்க மொழியில் ஹோமர் இயற்றிய காப்பியம் இலியாது ஆகும்.

9. வடமொழியில் படைக்கப்பட்ட காவியங்கள் எவை?

விடை : வால்மீகி முனிவரின் இராமாயணம், வியாசரின் மகாபாரதம்,

காளிதாசரின் ரகுவம்சம் முதலியவை.

10. காப்பியங்களைப் பாடுபொருள் அடிப்படையில் பாகுபாடு செய்ய முடியுமா?

விடை : காப்பியங்களைப் புலவர்கள் பாடுகின்ற பாடுபொருள் அடிப்படையில்

பாகுபாடு செய்ய முடியும். சான்றாக, நகைச்சுவைக் காப்பியம், தேசியக்

காப்பியம், புராணக் காப்பியம், சமயக் காப்பியம், அறக் காப்பியம்

முதலானவற்றைக் கொள்ளலாம்.

11. தமிழில் முதற்காப்பியங்களாகப் போற்றப்படுபவை எவை?

விடை : இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின்

மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன.

12. இதிகாசம் என்றால் என்ன?

விடை : கடவுளரும், கடவுளின் அம்சமானவர்களும், மானிடராகப் பிறந்து, பல

தெய்வீகச் செயல்களை ஆற்றி, இறுதியில் தெய்வீக நிலை எய்துவதைப் பற்றி

விரிவாகப் பேசுவன இதிகாசங்கள் எனப்படும்.


13. சேக்கிழார் இயற்றிய காப்பியம் யாது?

விடை : சேக்கிழார் இயற்றிய காப்பியம் பெரியபுராணம்

You might also like