You are on page 1of 2

பாடம் : தமிழ் பயிற்சித்தாள்

வகுப்பு : 8

மதிப்பெண்கள்: 20

I. பத்தியைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை அளிக்க. (5x1=5)


இரா.பி. சேது தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர்
என பன்முகத்திறன் பெற்றவர். இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு
வந்தவர் இவரே என்பர். இவரது “தமிழின்பம்” என்னும் நூல் இந்திய அரசின்
சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் நூலாகும். ஆற்றங்கரையினிலே,
கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம், ஊரும் பேரும், மேடைப்பேச்சு
உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார். வ. உ. சிதம்பரனார் பேசுவதாக
அமைந்த கதைப்பகுதியை கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து
எடுக்கப்பட்ட நூல் ஆகும்.
வினாக்கள்
1. சொல்லின் செல்வர் என போற்றப்படுபவர் யார்?
2. செய்யுளுக்கே உரியது எது?
3. இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் எது ?
4. வ உ சிதம்பரனார் பேசுவதாக அமைந்த பாடப்பகுதி எந்த நூலில் இருந்து
எடுக்கப்பட்டுள்ளது?
5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பு ஒன்றினை வழங்குக?
II. கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அஃறிணை, உயர்திணை என்று
வகைப்படுத்துக (5x1=5)

( வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம்,


சுரதா, மரம் )

III. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (2)


IV. பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வேண்டி உனது பள்ளி தலைமை
ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுக (6)

V. கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளுக்கான வாய்ப்பாட்டினை எழுதி வருக(2)


க. , ச, ( எடுத்துக்காட்டு)
க்+ அ = க
க் + ஆ = கா

You might also like