You are on page 1of 1

விவிலிய வினாக்கள் - 2

(கொரிந்தியர் 1,2 - காலத்தியர், எபேசியர் திருமுகங்கள்)

பெயர்: மை. பிரான்சிஸ் தனராஜ்

அன்பியம்: முடியப்பர் குடும்ப எண்:


_____________________________________________________________________________
1. சண்டை சச்சரவுகள் இருப்பதாக பவுலுக்கு தெரிவித்தவர்கள் யார்?

குலோயி வீட்டார்

2. கிறிஸ்து எதற்காக பவுலை அனுப்பினாராம்?

திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே

4. திருமணமானவர்களுக்கு பவுலின் கட்டளை யாது?

“மனைவி கணவரிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது.” இது பவுலின் கட்டளையல்ல; மாறாக ஆண்டவருடையது. அப்படிப் பிரிந்து வாழ்ந்தால்
மறுமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது கணவருடன் ஒப்புரவாக வேண்டும். கணவரும் மனைவியை விலக்கிவிடக் கூடாது.

5. மூன்று கொடைகளில் எக்கொடை தலை சிறந்தது?

அன்பே தலைசிறந்தது

6. ஆண்டவரே வருக என்பதை பவுல் எவ்விதம் குறிப்பிடுகிறார்?

மாரனாதா!

7. துரோவா நகரில் பவுலின் மனம் ஏன் அமைதியின்றி தவித்தது?

தம்பி தீத்துவைக் காணாததால்

8. உலகப்போக்கிலான மனவருத்தம் விளைவிப்பது என்ன?

உலகப் போக்கிலான மனவருத்தம் சாவை விளைவிக்கும்.

9. கடவுளின் அன்புக்குரியவர் எவர்?

முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

10. யூதர்களிடம் பவுல் பெற்ற சாட்டையடிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

ஐந்துமுறை யூதர்கள் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள்

11. அந்தியோக்கியாவில் பவுல் யாரை எதிர்த்தார்?

கேபாவை எதிர்த்தார்

12. கலாத்தியருக்கு நற்செய்தி அறிவிக்க தமக்கு வாய்பளித்ததாக பவுல் எதைக் குறிப்பிடுகிறார்?

என் உடல்நலக் குறைவு தான் உங்களுக்கு முதன் முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்தது.

13. வாழ்வாக்கிய நிலத்தில் விதைப்போர் எதனை அறுவடை செய்வர்?

நிலைவாழ்வை அறுவடை செய்வர்

14. மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவதை உறுதிப்படுத்தும் அடையாளம் எது?

அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது.

15. எவருடைய மனங்கள் இருளடைந்திருக்கின்றன?

பிற இனத்தவர் மனம் இருளடைந்திருக்கிறது.

You might also like