You are on page 1of 6

தேசிய வகை ரவுப் தமிழ்ப்பள்ளி

காலாண்டு மதிப்பீடு 2021


நலக்கல்வி ஆண்டு 4
1. நலக்கல்வி தேர்வானது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது

பகுதி அ : தேர்வு (30 புள்ளிகள்)

பகுதி ஆ : ‘ SEGAK’ (70 புள்ளிகள்)

2. மாணவர்கள் பகுதி அ: பிரிவு அ இல் சரியான விடையைத்

தேர்ந்தெடுத்து வட்டமிட வேண்டும்

3. மாணவர்கள் பகுதி அ: பிரிவு ஆ இல் சரியான விடையை எழுத

வேண்டும்

4. மாணவர்கள் தேர்வின் விதிமுறைகளைக் கடைபிடித்து நடக்க வேண்டும்.

பெயர் : - ________________________________________________

ஆண்டு : - ______________________________________________
1. மாதவிலக்கு அல்லது மாதவிடாய் சுழற்சி சராசரி .................. நாட்களுக்கு ஒரு
முறை வரும்.
A . 28 B. 30 C. 15 D. 20

2.
 உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது

 உடலில் பாதிப்படைந்த அணுக்களையும்

உடல் திசுக்களையும் புதுப்பிக்கின்றது


மேற்கண்ட பயன்கள் எந்த சத்தைக் குறிக்கிறது?
A . மாவுச்சத்து B. ஊட்டச்சத்து
C. புரதச்சத்து D. கொழுப்புச்சத்து

3. கீழ்காணும் கூறுகளில் எது உணவு வாங்கும்போது நாம்


உறுதிசெய்து வாங்க வேண்டிய கூறு அல்ல
A.தயாரிக்கப் பயன்படும் பொருள்கள் B. காலாவதி திகதி
C. உணவில் அடங்கியுள்ள சத்துகள் D. உணவின் சுவை

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் எது மாணவர்களிடையே


காணப்படும் சமூகச் சீர்கேடுகளாகும் ?
i. திருடுதல்

ii. புகைத்தல்

iii. பகடிவதை

iv. ஓய்வு நேரத்தில் நூலகம் செல்லுதல்


A. I,II,IV B. I,II,III
C. I,III,IV D. I,II,III,IV

5. இருதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு நோய், சிறுநீரகப் பாதிப்பு


போன்றவை ....................... ஆகும்
A. பரவும் நோய்கள் B. பரவா நோய்கள்
C. எளிதில் குணமாகும் நோய்கள் D. எளிதில் குணமாகா
நோய்கள்
6.உனக்கு அரும்பு மீசை வளர்கிறது. நீ என்ன செய்வாய்?
A. அம்மாற்றத்தை எற்றுக் கொள்வேன்.
B. முகத்தை மூடிக்கொள்வேன்.
C. நண்பர்களுடன் சேர்வதைத் தவிர்ப்பேன்.

7. ‘Child Grooming’ என்பதன் பொருள் என்ன ?


A. சிறுவர் பாலியல்
B. தகாத நோக்கத்திற்காகச் சிறுவர்களின் நம்பிக்கையைப் பெற
நெருங்கிப்
பழகுதல்.
C. சிறுவர் கடத்தல்

8. பிழையான கூற்றினைத் தெரிவு செய்க.


A. மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்றுவலி ஏற்படும்
B. மாதவிடாய் சுழற்சி ஒருவருக்கொருவர் மாறுபடும்
C. பருவமடைந்த ஆண்களும் பெண்களும் பாலுறுப்புகளைச்
சுத்தமாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
D. பருவக் காலத்தில் ஆண்களும் பெண்களும் தலை குளிக்க கூடாது.

9.சிற்றுண்டி சாலையில் உணவு வாங்கும் பொழுது அதன் ஊழியர்


ஒருவர் உன் தொடையைக் கிள்ளி விட்டார். நீ என்ன செய்வாய்?
A. நண்பரிடம் கூறுவேன். B. ஆசிரியரிடம் கூறுவேன்.
C. யாரிடமும் கூறமாட்டேன்.

10.
 இருதய நோய்

 சிறுநீரகம் பாதிப்பு

 பெருங்குடல் வீக்கம்
மேலே குறிப்பிடப்பட்டவை மது அருந்துவதால் ஏற்படும் .....................
விளைவுகள் ஆகும்.
A. நீண்ட கால

B. இடைக்கால

C. குறுகிய கால

D. தற்காலிக

11. மனக்குழப்பம் என்பது ....


A. அடிக்கடி தலைவலி வருவது

B. சிக்கல்களுக்குத் தீர்வுகாண வழி தெரியாமல் தடுமாறும் நிலை


C. ஒருவரிடம் அடிக்கடி சண்டைப் போடுவது

D. மனத்தாலும் உடலாலும் பாதிப்படையும் நிலை

12. .................... என்பது ஒரு சமூகத்தின் முக்கிய அமைப்பாகும்

A. பள்ளிக்கூடம் B. குடும்பம்
C. மருத்துவமனை D. நாடு

(12 புள்ளிகள்)

பிரிவு ஆ
1. மது அருந்துவதால் ஏற்படும் குறுகிய கால விளைவுகள் மூன்றினை (3) எழுதுக.

i
ii
iii

(3
புள்ளிகள்)
2. பருவ காலத்தில் ஆண்களின் உடலிலும் பெண்களின் உடலிலும் ஏற்படும்
மாற்றங்களைப் பட்டியலிடுக.

ஆண் பெண்
( 2 புள்ளிகள் )

3.மனக்குழப்பத்தினாலும் மன அழுத்தத்தினாலும் ஏற்படும் விளைவுகள்


மூன்றினை (3) எழுதுக.

iii
i
ii

(3
4. சரியான கூற்றுக்கு (சரி) என்றும், தவறான கூற்றுக்கு (தவறு) என்றும்
புள்ளிகள்)
எழுதுக.
1. நாம் உணவு பொட்டலங்கள் வாங்கும்போது நெளிந்தோ, துருப்பிடித்தோ,

ஈரமாகவோ அல்லது துவாரம் விழுந்து

இருந்தால் அதை நாம் வாங்கக்கூடாது.

2. யாராவது உங்களைத் தனியாகச் சந்திக்க அழைத்தால் நீங்கள்

தாராளமாகச் செல்லலாம்.

3. உணவுக் கூம்பகம் என்பது வெவ்வேறு உணவுக் குழுக்களுக்குப்

பரிந்துரைக்கப்பட்ட அன்றாட உணவின் அளவும் அவற்றின்

தேவையும் ஆகும்.

4. நாம் போதுமான உடற்பயிற்சிகள் செய்வதினால் நோயின்றி

வாழ முடிகின்றது.

5. நாம், நம்மை மட்டுமல்லாது நமது குடும்ப உறுப்பினர்களையும்

நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் நேசிப்பது அவசியம்.

6. பிள்ளைகளின் கருத்துகளுக்குப் பெற்றோர்கள் மதிப்பளிக்க

வேண்டும்.

7. சிறார் பாலியல் தொல்லைகளுக்கு ஆளவது திட்டமிட்டு


நடைபெறாது

8. உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் படங்களையும்

சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

9. உங்கள் மீது அதிக அக்கறையும் பாசமும் காட்டுவதோடு அடிக்கடி

பரிசுகள், உணவுப் பண்டங்கள் வாங்கித் தரும் நபர்களிடம் நீங்கள்

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

10. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.

(10 புள்ளிகள்)

முடிவு
தயாரித்தவர் பார்வையிட்டவர் உறுதிபடுத்தியவர்
(குமாரி.கு. சங்கீர்த்தனா ) (திருமதி.மா.மணியரசி) (திருமதி.ச
பாட ஆசிரியர் பாடப்பணிக்குழுத் தலைவர்
துணைத்தலைமையாசிரியர்

You might also like