You are on page 1of 15

கற்பித்தலின் தன்மை மற்றும்

கட்டங்கள் (Nature and Phases of


Teaching)

Dr. R. PERIASAMY
ASSISTANT PROFESSOR,
DEPARTMENT OF EDUCATION,
TAMIL UNIVERSITY,
THANJAVUR – 613010
periarenga@gmail.com
Cell: 9443994931
கற்பித்தல்
மாணவர்களிடம் விரும்பத்தக்க நடத்தை
மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக செயல்பாடுகளாக
வடிவமைக்கப்பட்டது கற்பித்தல் – கிளார்க்

கற்பித்தல் என்பது கற்றலை ஏற்படுத்தும் நோக்கம்


கொண்ட ஒரு முறை சாந்த செயல்பாடு –
ஸ்மித்

அறிவார்ந்த பண்பட்ட ஆளுமை கொண்ட


ஒருவருவக்கும் பண்படுத்த வேண்டிய அறிவார்ந்த
செயல் புரிய வேண்டிய ஒருவருக்கும்
இடையேயுள்ள நெருக்கமான உறவினால்
ஏற்படுவது கற்பித்தல் – மோரிசன்
தொழில் என்றால் என்ன?

 தொழில் என்பது குறிப்பிட்ட பயிற்சியும், கல்வி அறிவும்


பெற்றவர்கள் தங்கள் திறமையான சேவைக்காகவும்,
வழிகாட்டுதல்களுக்காகவும், குறிப்பிட்ட ஊதியத்தைப்
பெற்றுக்கொண்டு செய்யும் வேலையாகும்.
கற்பித்தல் தொழில் சார்ந்த பண்புகள்
1. அறிவு செயல்திறன்களை மூலமாகக் கொண்டது
2. மூலப் பொருள்களைத் தேவையான பயிற்சிக்கு மாற்றுதல்
3. கல்வி சார்ந்த தொடர்பு முறை
4. சுய நிறுவன அமைப்பைச் சார்ந்தது
5. சமூக சேவை புரிதல்
6. பயிற்சி மற்றும் கற்கும் காலம் உடையது
7. தன்னாட்சி அமைப்பைக் கொண்டது
8. வடிவமைக்கப்பட்ட அறிவைக் கொண்டது
9. பொது ஒழுக்க நெறிமுறைகளைக் கொண்டது
10. பணியிடைப் பயிற்சியை வழங்கக் கூடியது
கற்பித்தலின் தன்மைகள்
ஒரு சிக்கலான சமூக தொடர் செயல்பாடு
ஒரு கலை
ஒரு அறிவியல்
உயர்தொழில் செயல்பாடு
ஆசிரியரிடமிருந்து வெளியீடாக
ஒருங்கிணைக்கப்பட்டு முறைப்டுத்தப்பட்ட
செயல்பாடுகளை கொண்டது
உற்றுநோக்கலாம், பகுத்தாய்வு செய்யலாம்
தகவல் தொடர்பு திறனின் ஆதிக்கம் கொண்டது
மாணவர் – ஆசிரியர் இடைவினை கொண்டது
பல அமைப்புகள் பல பாணியைக் கொண்டது
பல்வேறு கற்பித்தல் திறன்களை கொண்ட
கடினமான பணி
ஆசிரியரின் தொழில் சார்ந்த பண்புகள்
 1. பாடப் பொருளில் ஆழ்ந்த புலமை
 2. கற்பித்தல் திறனில் பயிற்சி பெற்றிருத்தல்
அறிமுகம்
வினாக் கேட்டல்
கண்டறிதல்
பயிற்சி அளித்தல்
விளக்கமளித்தல்
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்
காட்சிக் கேள்விக் கருவிகளைப் பயன்படுத்துதல்
கரும்பலகையைப் பயன்படுத்துதல்
அமைதி மற்றும் சைகைத் தொடர்பு
பல்வகைத் தூண்டல் திறன்களைப் பெற்றிருத்தல்
முடிக்கும் திறன்
 3. இதரப் பண்புகள்
 உண்மை, அன்பு மற்றும் நன்னடத்தை ஆகிய பண்புகள், இனம், மதம் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக்
கடந்து நிற்க வேண்டும். கற்பித்தல் தொழிலில் பொறுப்புணர்வுடனும் ஆற்றல் மிக்க மாணவர்களை
உருவாக்குதற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கற்பித்தலின் நிலைகள்

1. முன் கற்பித்தல் நிலை


2. கற்பித்தல் நிலை
3. பின் கற்பித்தல் நிலை
முன் கற்பித்தல் நிலை

முன் கற்பித்தல் நிலையில் கற்பித்தல் பாடப் பொருளை எவ்வாறு


அமைக்க வேண்டும் என்று திட்டமிடுவதாகும். பாடப்பொருளைத்
திட்டமிடுதல் என்பது மாணவர்களின் கற்றல் திறனை அடைய
வேண்டிய குறிக்கோளைக் கொண்டிருப்பதோடு, கற்பித்தல்
துணைக் கருவிகளின் பயன்பாடு மற்றும் அதற்கான
வழிமுறைகளைக் கொண்டிருப்பதாக அமைய வேண்டும்.
முன் கற்பித்தலின் படிநிலைகளாவன:

 பொருளாய்வு.
 கற்பித்தல் நிகழ்விற்கான பாடப்பொருளைத் தேர்ந்தெடுத்தல்.
 தேர்ந்தெடுத்த பாடப்பொருளிற்கான குறிக்கோள்களை அடைதல்.
 தீர்மானித்த குறிக்கோளை அடையக் கற்றல் அனுபவத்தை அடைதல்.
 பல்வேறு விதமான கற்றல் அனுபவங்களிலிருந்து பாடப் பொருளிற்கேற்ற
அனுபவத்தைத் தேர்ந்தெடுத்தல். எடுத்துக்காட்டாக விரிவுரை முறை, கலந்துரையாடல்
முறை, காட்சிக் கேள்விக் கருவிகளைக் கையாளுதல் எனத் தீர்மானிப்பது.
 கற்றலை மதிப்பீடு செய்தல். இந்நிலையில் குறிப்பிட்ட பாடப் பொருளில் அடைவை
மதிப்பிடுதல். எடுத்துக்காட்டாக எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும்
நடத்தைத் தேர்வு.
கற்பித்தல் நிலை
கற்பித்தல் நிலை என்பது ஏற்கெனவே திட்டமிட்ட பாடத்
திட்டத்தைச் செயல் முறைப்படுத்தும் நிலையாகும். இந்நிலையில்
கற்றல் குறிக்கோளை அடையத் திட்டமிட்ட படி செயல்படுத்தி
மாணவர்கள் கற்றலின் இலக்கை அடையச் செய்வதாகும்.
மாணவர்கள் கற்றலில் கவனமின்மையை உணர்ந்து கற்பித்தலை நிறுத்துதல்.

மாணவர்களின் புரிந்துகொள்ள இயலாத நிலையை உணர்ந்து எளிய முறையில்


விளக்குதல்.

கற்பித்தலில் கவனச் சிதறல் ஏற்படாமல் இருக்கப் பாடப் பொருளோடு


தொடர்புடைய கதைகளைக் கூற முடிவெடுத்தல்.

கற்றலில் கவனச் சிதைவு ஏற்பட்ட மாணவர்களை வேறு செயல்பாட்டிற்கு


அனுமதியளித்தல்.

மாணவர்களுக்கும் பாடப் பொருள் புரியாத நிலையில் வேறு கற்பித்தல்


முறைகளைக் கையாளத் தீர்மானித்தல்.
பின் கற்பித்தல் நிலை
கற்பித்தல் முறையைத் திட்டமிடல்
கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டுவர முடிவெடுத்தல்
முடிவுகளைப் பரிசீலனை செய்தல் (மாணவர்களின்
பிரச்சினைகள், தேவைகள் மற்றும் தேவையான மாற்றம்) குறித்து
முடிவெடுத்தல்
முன் கற்பித்தல் நிலைக்கும் பின் கற்பித்தல் நிலைக்கும்
இடையிலான காலம்
கற்பித்தலின் கூறுகள்
ஆசிரியர் பயிற்சி – திறன் – அறிவு
ஒழுக்கப் பண்பு – ஆசிரியர் நடத்தை
கற்றலில் வழிகாடுதல் மற்றும் அறவுரை
பகர்தல்
கலைத்திட்டம்
பாடத்திட்டம்
பாடப்பொருள்
கற்பிக்கும் முறைகள்
கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள்
வகுப்பறை மேலாண்மை
பயிற்சி (பணிமுன் பயிற்சி, பணியிடைப்
பயிற்சி)
சுதந்திரம் சுயக்கட்டுப்பாடு
கற்பித்தலில் ஈடுபாடு
கற்பித்தலின் கூறுகள்
மாணவர் முன்னேற்றத்தில் திட்டமிட்டு
செயல்படல்
கல்வி உளவியல்
கல்வி தொழில் நுட்பவியல்
குறையறி மற்றும் குறைதீர் கற்பித்தல்
THANK YOU

You might also like