You are on page 1of 5

BTMB3073 :தமிழ் இலக்கணம் கற்பித்தல் முறைமை

மாதிரி நாள் பாடத்திட்டம் (KSSR)


(விதிவருமுறை)
நுண்மைப் பயிற்றல்

பாடம் : தமிழ்மொழி
நாள் : 9.7.19 (செவ்வாய்கிழமை)
ஆண்டு : PT 1
மாணவர் வருகை : 6/6
கருப்பொருள் : இயற்கை
தலைப்பு : மழை
நேரம் : 13 நிமிடம் (காலை 10.30 – 8.43)
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னரே வாக்கியங்களை உருவாக்கி எழுதி உள்ளனர்.
உள்ளடக்கத்தரம் : 5.4 வாக்கிய வகைகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 5.4.3 செய்தி வாக்கியத்தை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
பாடநோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்
அ. செய்தி வாக்கியத்தை அறிந்து கூறுவர்.
சிந்தனைத்திறன் : அறிவோட்டவரை
விரவிவரும் கூறு : 1. இயற்கை ஈடுபாடு (பல்வகை நுண்ணறிவாற்றல்)
பயிற்றுத்துணைப்பொருள்: மடிக்கணினி, நீர்மப்படிக உருகாட்டி (LCD), திறமுனைப் படைப்பி (PP Presentation)
சிந்தனை மீட்சி
அ. 4/6 மாணவர்கள் கற்றல் தரத்தை முழுமையாக அடைந்துள்ளனர்.
 ஒவ்வொரு படியும் திட்டமிட்டவாறே செயல்படுத்தப்பட்டது.
 கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் மாணவர்கள் பெரும்பாலோர் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றனர்.
 மாணவர்கள் பெரும்பாலோர் செய்தி வாக்கியத்தின் தன்மைகளைச் சரியாகக் கூறினர்
 இன்றைய பாடம் எனக்கு மனநிறைவை அளித்தது.
வளப்படுத்தும் நடவடிக்கை
. மாணவர்கள் செய்தி வாக்கியங்களை உருவாக்கி, அவற்றைச் செய்தி வாசிப்பாளரைப் போல வாசித்தல்.
ஆ. 2/6 மாணவர்கள் கற்றல் தரத்தை முழுமையாக அடையவில்லை.
 மாணவர்களுள் சிலர் முழு ஈடுபாட்டைக் காட்டவில்லை; விளையாட்டுத்தனம் மிகுந்து இருந்தது.
 இந்நிலை எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
குறைநீக்கல் நடவடிக்கை
 மாணவர்கள் படத்தின் துணைகொண்டு செய்தி வாக்கியம் எழுதுவர்.
படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு
பீடிகை மழை 1. ஆசிரியர் மாணவர்களை நலம் உசாவுதல். முறைதிறம்:
(காணொலி) 2. ஒளிபரப்பப்படும் மழை தொடர்பான காட்சியில் காணப்படும்  வகுப்புமுறை
(± 4 நிமிடம்) தகவல்களை மாணவர்கள் செவிமடுத்தல்.
3. மழை தொடர்பாகக் கேள்விகள் கேட்டல். பயிற்றுத்துணைப்பொரு
அ. காணொலியில் ஒளிப்பரப்பட்ட செய்திகள் யாவை? ள்:
ஆ. மழை தொடர்பான உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள்?  நீர்மப்படிக உருகாட்டி
4. மழையைப் பற்றி மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறுதல்.  திறமுனைப்படைப்பி
5. இன்றைய பாடத்திற்கு மாணவர்களை இட்டுச்செல்லுதல்.
படி 1 மழை 1. ஆசிரியர் மழை தொடர்பான பல்வகை வாக்கியங்களை முறைதிறம்:
(± 13 நிமிடம்) (வாக்கியம்) மாணவர்களுக்குக் காண்பித்தல்.  வகுப்புமுறை
2. மாணவர்கள் அவ்வாக்கியங்களை உரக்க வாசித்தல்.
3. ஆசிரியர் தகவல்களைப் பெறக் கேள்விகள் கேட்டல். பயிற்றுத்துணைப்பொரு
அ. எந்த வாக்கியம் தகவலைத் தருகின்றது? ள்:
ஆ. ஒவ்வொரு வாக்கியத்திற்கும் என்ன வேறுபாடு உண்டு?  நீர்மப்படிக உருகாட்டி
4. மாணவர்கள், தகவல்கள் அடங்கிய வாக்கியங்களை  திறமுனைப்படைப்பி
அடையாளங்கண்டு கூறுதல்.
படி 2 மழை 1. மின்னட்டையில் எழுதப்பட்ட தகவல்களைக் கொண்ட பயிற்றுத்துணைப்பொரு
(± 15 நிமிடம்) (வாக்கியம்) வாக்கியங்களை ஆசிரியர் காண்பித்தல். ள்:
2. மாணவர்கள் அவ்வாக்கியங்களைச் சரியாக வாசித்தல்.  மின்னட்டை
3. ஆசிரியர், செய்தி வாக்கியம் தொடர்பான கேள்விகள் விரவிவரும் கூறு:
தொடுத்தல்.  ஆக்கம் புத்தாக்கம்
அ. வாக்கியத்தில் காணப்படும் நிறுத்தக்குறி யாது?
ஆ. எத்தனை தகவல்கள் வாக்கியத்தில் உள்ளன? முறைதிறம்:
இ. வாக்கியம் எவ்வாறு முழுமை பெற்றிருக்கின்றது?  குழுமுறை
4. இவ்வினாக்களுக்கு விடையளிக்கும் வண்ணம் மாணவர்கள்
குழுவில் கலந்துரையாடி விடை காணுதல்.
5. அவ்வாக்கியங்களின் தன்மைகளைக் குழுமுறையில்
கலந்துரையாடி எழுதி வாசித்தல்.
4. ஆசிரியரும் மாணவர்களும் கலந்துரையாடி செய்தி
வாக்கியங்களின் தன்மைகளைப் பட்டியலிட்டுக் கூறுதல்.
படி 3 இயற்கை வளம் 1. மூவர் கொண்ட பல்நிலை மாணவர்கள் குழுவில் முறைதிறம்:
(± 14 நிமிடம்) அமரச்செய்தல்.  குழுமுறை
2. செய்தி வாக்கியங்களின் தன்மைகளைத் துணையாகக் கொண்டு பயிற்றுத்துணைப்பொரு
மூன்று செய்தி வாக்கியங்கள் உருவாக்கி வெண்டாளில் ள்:
எழுதுதல்.
 வெண்டாள்
3. எழுதிய வாக்கியங்களை உரக்க வாசிக்கச் செய்தல்.
விரவிவரும் கூறுகள்:
4. ஆசிரியரும் மாணவரும் கலந்துரையாடி வாக்கியங்களைச்
 இயற்கை ஈடுபாடு
சரிசெய்தல்.
(பல்வகை
5. ஆசிரியர் செய்தி வாக்கியத்தின் தன்மைகளை வலியுறுத்திச் நுண்ணறிவாற்றல்)
செய்தி வாக்கியம் பற்றிய தெளிவான விளக்கம் தருதல்.
சிந்தனைத் திறன்:
 அறிவோட்டவரை
மதிப்பீடு இயற்கை 1. ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சித்தாளை வழங்குதல். முறைதிறம்:
(± 10 நிமிடம்) முதல்நிலை மாணவர்கள்:  தனியாள்முறை
 கொடுக்கப்பட்ட சொற்களைத் துணையாகக்கொண்டு
குறைந்தது மூன்று செய்தி வாக்கியங்களை எழுதுதல்.
இடைநிலை மாணவர்கள்:
 பொருத்தமான சொற்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட
வாசிப்புப் பத்தியை நிறைவு செய்தல்.
கடைநிலை மாணவர்கள்:
 கொடுக்கப்பட்ட வாக்கியங்களுள் செய்தி வாக்கியங்களைத்
தெரிவுசெய்து எழுதுதல். பண்புக்கூறு:
2. பலவீனமான மாணவர்களுக்கு ஆசிரியர் வழிகாட்டுதல்.  அன்புடைமை
3. ஆசிரியரும் மாணவரும் கலந்துரையாடி வினாக்களுக்கேற்ற
சரியான விடைகளை எழுதுதல்.
பாட முடிவு இயற்கை 1. செய்தி வாக்கியங்களின் தன்மைகளை மாணவர்கள்
(± 4 நிமிடம்) வலியுறுத்திக் கூறுதல்.
2. சில செய்தி வாக்கியங்களைச் சரியாக வாசித்தல்.
3. பிழை இருப்பின் ஆசிரியருடன் கலந்துரையாடித்
திருத்துதல்.
தொடர் வளப்படுத்தும் நடவடிக்கை
நடவடிக்கை மாணவர்கள் செய்தி வாக்கியங்களை உருவாக்கி, அவற்றைச் செய்தி
(வீட்டுப்பாடம்) வாசிப்பாளரைப்போல வாசித்துவர பணித்தல்.
குறைநீக்கல் நடவடிக்கை
மாணவர்கள் படத்தின் துணைகொண்டு செய்தி வாக்கியம் எழுதிவர
பணித்தல்.
சிந்தனை மீட்சி
அ. 4/6 மாணவர்கள் கற்றல் தரத்தை முழுமையாக அடைந்துள்ளனர்.
 ஒவ்வொரு படியும் திட்டமிட்டவாறே செயல்படுத்தப்பட்டது.
 கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் மாணவர்கள் பெரும்பாலோர் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றனர்.
 மாணவர்கள் பெரும்பாலோர் செய்தி வாக்கியத்தின் தன்மைகளைச் சரியாகக் கூறினர்; வாக்கியங்களை உருவாக்கி எழுதினர்.
 இன்றைய பாடம் எனக்கு மனநிறைவை அளித்தது.
வளப்படுத்தும் நடவடிக்கை
. மாணவர்கள் செய்தி வாக்கியங்களை உருவாக்கி, அவற்றைச் செய்தி வாசிப்பாளரைப் போல வாசித்தல்.

ஆ. 2/6 மாணவர்கள் கற்றல் தரத்தை முழுமையாக அடையவில்லை.


 மாணவர்களுள் சிலர் முழு ஈடுபாட்டைக் காட்டவில்லை; விளையாட்டுத்தனம் மிகுந்து இருந்தது.
 இந்நிலை எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
குறைநீக்கல் நடவடிக்கை
 மாணவர்கள் படத்தின் துணைகொண்டு செய்தி வாக்கியம் எழுதுவர்.

You might also like