You are on page 1of 3

உட்சேர்ப்புக் கல்வி திட்ட அறிமுகம்

உட்சேர்ப்புக் கல்வியின் வரையறை


• FLORIAN (2005) உட்சேர்ப்புக் கல்வி திட்டமானது பேறுக்குறைந்த
மாணவர்களைக் கல்வி, தொழில், சமூகம் ஆகியவற்றில் சிறந்த விளங்க
துணைப்புரியும்.
• SAPON SHEVIN (1994) உட்சேர்ப்புக் கல்வியானது பேறுகுறைந்த
மாணவர்களுக்கு முறையான கவனிப்பு வழங்கி பிற மாணவர்களைப் போல்
ஒரே வகுப்பில் பயில வாய்ப்பு தருவதாகும்.
• STAINBACK (1980) உட்சேர்ப்புக் கல்வித்திட்டம் பொருத்தமான
நடவடிக்கைகளை அவரவர் திறமைக்கு ஏற்ப ஆசிரியர் மாணவர்களால்
மேற்கொள்ளபடுவதாகும்.
உட்சேர்ப்புக் கல்வி திட்டம், வரலாறு
• 1945 ஆம் ஆண்டில் ( LEAgue of nations) அனைத்து மக்களும் சமமான
கல்வி பெற உரிமையுண்டு எனக் குறிப்பிட்டுள்ளனர்.
• இருந்தபோதும் சில பெற்றோர்கள் பேறுக்குறைந்த பிள்ளைகளுக்கு கல்வி
வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
• அதன் அடிப்படையில் பேறுக்குறைந்த பிள்ளைகளுக்குச் சிறப்பு பள்ளி
ஒன்றினை உருவாக்கினர்.
• 1893 ஆம் ஆண்டில் பார்வை குறைந்த மாணவர்களுக்கும் செவி புலன்
குறைந்த மாணவர்களுக்கும் தனியே சிறப்பு பள்ளி உருவாக்கப்பட்டது.
• 1899 ஆம் ஆண்டில் மாற்றுதிறனாளிகளுக்கு பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
• அந்த காலகட்டத்தில் சிறப்பு பள்ளிக்கான நீதி உதவி மாணவர்களின்
அடைவுநிலையைச் சார்ந்தே இருக்கும்.
• கல்வியில் பயில்வதில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களை ஒதுக்கி
வைப்பர்.
• இத்தகைய மாணவர்களை ஒதுக்கி வைப்பதும் மட்டுமல்லாமல்
ஆசிரியர்களும் வருமானத்தை முன்னிட்டு தேர்ந்தெடுத்த சில பள்ளிகளில்
மட்டுமே பணிப்புரிவர்.
• அதுமட்டுமல்லாமல் சில பள்ளி நிர்வாகங்கள் இத்தகைய சிறப்பு
மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கவில்லை.
• 1978 ஆம் ஆண்டில் (LAPORAN WARNOCK) யில் அனைத்து
மாணவர்களுக்கும் சமமான கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று
குறிபிடபட்டுள்ளது.
• 1800 ஆம் ஆண்டில் பேறுக்குறைந்த மாணவர்களுக்கு சாதாரண
மாணவர்களைப் போல் கல்வியில் கொடுக்கும் அனைத்து உரிமைகளையும்
வழங்கபட வேண்டுமென்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டுக்
கொண்டனர்.
• தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து தரப்பினராலும் உட்சேர்ப்புக் கல்வித்
திட்டத்தை ஏற்றுக் கொள்ளபட்டது .
உட்சேர்ப்புக் கல்வியில் நோக்கம்
• இக்கல்வியின் நோக்கமானது பேறுக்குறைந்த மாணவர்கள் மற்ற
மாணவர்களைப் போல் பள்ளியிலுள்ள அனைத்து வசதிகளைப் பயன்படுத்த
வாய்ப்பளிக்கிறது.
• பேறுக்குறைந்த மாணவர்கள் சமுதாயத்தில் இனணைந்து பயமின்றி தங்களை
ஈடுபடுத்திக் கொள்ள இக்கல்வியானது உதவுகிறது.
• பள்ளி நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் இக்கல்வி
துனணப்புரிகிறது.
உட்சேர்ப்புக் கல்வி குறியிலக்கு
• பேறுக்குறைந்த மாணவர்கள் கல்வியில் சம உரிமை வழங்க படுதல்
• பேறுக்குறைந்த மாணவர்களிடையே தன்னபிக்கையை வளர்த்தல்
• பேறுக்குறைந்த மாணவர்கள் மற்ற மாணவர்களோடு இணைந்து வாழ்வியல்
கல்வியை கற்று கொள்வதற்கு துணைப்புரியும்.
• பேறுக்குறைந்த மாணவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை
உருவாக்குவதற்கு.
தெரிதல் ( உட்சேர்ப்புக் கல்வி )
• உட்சேர்ப்புக் கல்வித்திட்டதிற்கு மனித உரிமை அடிப்படையாக திகழ்கிறது.
• ஒவ்வொரு மனிதர்களையும் சமமாக வழிநடத்தப்படும்.
• பேறுக்குறைந்த மாணவர்களுக்கு மற்ற மாணவர்களைப் போல் கல்வி பெற
வாய்ப்பு வழங்குதல்.
உட்சேர்ப்புக் கல்வித்திட்ட கொள்கைகள்
• பல உத்திகளைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை நடத்துதல்.
• பேறுக்குறைந்த மாணவர்களுக்கு கல்வியில் சம உரிமை வழங்குதல்.
• பேறுக்குறைந்த மாணவர்களுக்கு ஏற்ற பயிற்றுத்துணைப்பொருளைத்
தயாரித்தல்
• பேறுக்குறைந்த மாணவர்களின் திறமையை மதித்து, நடவடிக்கைகளை
ஈடுபாட வாய்பளித்தல்.
• முறையான பயிற்சியின் வழி பேறுக்குறைந்த மாணவர்களின் திறன்களை
வலுப்படுத்துதல்.
உட்சேர்ப்புக் கல்வியின் அமலாக்கம்
• உட்சேர்ப்புக் கல்வி திட்டத்தை அமல்படுத்த தேவையானவற்றை
அடையாளங்கண்டு இத்திட்டத்தை வழிநடத்துபவர்களுக்குத் தயாரித்துக்
கொடுத்தல்.
• உட்சேர்ப்புக் கல்வியானது ஒரு செயல்முறையாகும்.
• சுலபமான கல்விதிட்டத்தையும் ஆசிரியர் மாணவர்களுக்கான
நடவடிக்கைகளை உருவாக்குதல்.
• ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இத்திட்டத்தை ஈடுபடுத்த
வலுப்படுத்துதல்.

You might also like