You are on page 1of 2

பத்திரிக்கைச் செய்தி

கெடா மாநில தைப்பூச விடுமுறை நீக்கமா? - தமிழ்


இளைஞர் மணிமன்றப் பேரவை கண்டனம்
இம்மாதம் 28 ஆம் நாள் நடைபெறவுள்ள தைப்பூசக் கொண்டாட்டத்திற்குக் கெடா மாநிலத்தில்
விடுமுறை வழங்கப்படாது என கெடா மாநில மந்திரி பெசார் முகம்மாட் சனுசி முகம்மாட் நோர்
தெரிவித்ததை மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை வன்மையாக கண்டனத்தைத்
தெரிவிக்கிறது என்று தேசியத் தலைவர் கோபி குமரன் கூறினார்.

தைப்பூசம் என்பது இறைவனிடம் வேண்டி நோன்பு இருந்து பால் குடம், காவடி,


முடிக்காணிக்கை போன்ற நேர்த்திக் கடனை செலுத்தும் நல்ல திருநாள். நடமாட்டக் கட்டுப்பாட்டு
ஆணைக் காலக்கட்டத்தில், பல ஆண்டுக்காலமாக அரசாங்கம் வழங்கிவரும் பொது விடுமுறையை
மாற்றி வைக்கவோ அல்லது விடுமுறையைத் தடுக்கவோ சட்டத்தில் இடமில்லை. இக்காலச் சூழ்
நிலையினை அறிந்து பக்தர்கள் அருகில் இருக்கும் முருகன் கோயிலோ அல்லது வீட்டிலிருந்து
தங்களது நேர்த்திக் கடனை இறைவனுக்கு செலுத்துவர் என்று தலைவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை மீறினாலோ அல்லது


காவல் நிலையத்தில் உறுதி கடிதம் பெறாமல் இருந்தாலோ நடவடிக்கை எடுப்பது சரியான ஒன்று.
அதனைவிடுத்து பொது விடுமுறையை வழங்கப்படாது என்று சொல்வது மக்களுக்கு செய்யும்
பேரிழப்பாகும்.

பல வேலைகள் இருந்தாலும் இந்த ஒருநாளுக்காக தான் இந்துக்கள் ஒருமாத காலமாக


நோன்பு இருந்து , சைவம் இருந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். அதுமட்டுமின்றி
தைப்பூசம் என்பது நம் நாட்டில் கொண்டாடப்படும் மிக புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். இது
அரசாங்கம் அறிந்த ஒன்றே. கெடா மாநில மந்திரி பெசார் முகம்மாட் சனுசி முகம்மாட் நோர்
தெரிவித்ததை மீட்டெடுக்க வேண்டும். தைப்பூசமன்று கெடாவிற்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்
இல்லையேல் தமிழர்களின் இறை நம்பிக்கையின் மேல் கைவைப்பதற்கு சமம் என்று தேசியத்
தலைவர் கோபி குமரன் வன்மையாக தெரிவித்தார்.

நன்றி ; தமிழோடு உயர்வோம்.


திரு கோபி குமரன்
தேசியத் தலைவர்
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை
0176262628 / manimandramhq@gmail.com

You might also like