You are on page 1of 3

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில்

அனைவருக்கும் வியாபாரம் செய்ய அனுமதி கொடுங்கள்

அரசாங்கம் அனைவருக்கும் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும்.

பெரிய நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் சிறு வியாபாரிகளையும்

கருத்தில் கொண்டு, அனைவருக்கும் வியாபாரம் செய்ய அனுமதி

வழங்க வேண்டும் என மைக்கின் தேசிய தலைவர் டத்தோ ந

கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இந்திய ஜவுளி

கடைகளுக்கு வியாபாரம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

ஆனால் விக்டோரியாஸ் சீக்ரட் போன்ற ஆடம்பர உள்ளாடைக்

கடைகள், தளவாட கடைகள், பேரங்காடிகள், காலனி கடைகளுக்கு

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் சிறப்புச் சலுகை ஏன் என

அவர் கேள்வி எழுப்பினார்? நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

விதிக்கும்போது எந்தெந்த துறைகள் இயங்கலாம் என அரசாங்கல்

வெளியிட்டப் பட்டியலில் இத்துறையை தவறி விடப்பட்டிருப்பதாக

அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜவுலிக் கடைகளில் மற்ற கடைகள் போல் அல்லாதளிறுதிக்

காரியங்கலுக்குத் தேவையானப் பொருட்கள், திருமணத்திற்குத்

JKR 3190, Jalan Ledang, 50480 Kuala Lumpur, Malaysia


Tel No: (603) 2011 0478 Fax No: (603) 2011 0477 Email: info@maicci.org.my Website: www.maicci.org.my
தேவைப்படும் பொருட்கள், இந்துக்களின் வழிபாட்டுக்குத் தேவைப்படும்

பொருட்கள் விற்கப்படுகின்றன. அவ்வளாவு எளிதாக மற்றப் பல

சரக்குக் கடைகளிலும் அன்றாடப் பொருட்கள் விற்கப்படும்

கடைகளிலும் கிடைக்காது.

ஜவுலித் துறை தொடந்து செயல்பட அனுமதிக்கப்படாவிட்டால்,

கண்டிப்பாகப் பல வணிகர்கள் இத்துரையை விட்டே முழுதாய் விலக

வேண்டியக் கட்டயத்திற்குத் தள்ளப்படுவார்கள் என டத்தோ ந

கோபாலகிருஷ்ணன் கூறினார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், காலை 6.00 மணி தொடங்கி இரவு 8.00

மணி வரை மட்டுமே உணவகங்கள் இயங்க அனுமதி

வழங்கப்பட்டுள்ளது வேலை முடிந்து வடு


ீ திரும்பும் மக்களுக்குப் பல

சிக்கலை ஏற்படுத்துகிறது. இரவு 8.00 மணி வரை மட்டுமே

உணவகங்களை செயல்பட அனுமதித்திருப்பது உணவக

உரிமையாளர்கள் மட்டும் இல்லாமல், உணவு விநியோகிப்பாளர்களின்

வருமானம் பாதிக்கப்படுவதுடன் இரவு உணவு கிடைப்பதிலும்

தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அன்றாடக் கூலியாக வேலை செய்யும் உணவு

விநியோகிப்பாளர்களுக்கு இந்த நேரக் கட்டுப்பாட்டல் வருவாய்

குறையும். மேலும் இரவு 8.00 மணிக்கு கடையை மூட வேண்டும்

என்றால் இரவு 7.00 மணிக்கெல்லாம் அதற்கானத் தயார் நிலை

வேலையையும் கடையைக் கழுவும் பணிகளும் தொடங்கிவிடும்.


எனவே, அதற்கு மேல் உணவு சமைக்க முடியாது. இதனால்,

கடைகளையே நம்பியிருக்கும் பல வாடிக்கையாளர்களுக்கு இரவு

உணவு கிடைக்காதச் சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அவர்

தெரிவித்தார்.

இவ்விவகாரங்கள் குறித்து அனைத்துலக வாணிப & தொழில்துறை

அமைச்சு, உள்நாட்டு வாணிப, பயன ீட்டாளர் விவகார அமைச்சு மற்றும்

தேசியப் பாதுகாப்பு மன்றம் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர்

மேலும் தெரிவித்தார்.

டத்தோ ந கோபாலகிருஷ்ணன்

மைக்கின் தேசிய தலைவர்

19.01.2021

JKR 3190, Jalan Ledang, 50480 Kuala Lumpur, Malaysia


Tel No: (603) 2011 0478 Fax No: (603) 2011 0477 Email: info@maicci.org.my Website: www.maicci.org.my

You might also like