You are on page 1of 4

பட்ஜெட் ஆக்கம் பெறுமா? ஆட்டிப் படைக்குமா?

வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறுமா என்பதுதான் தற்போதைய முதன்மைச்


செய்தியாக வலம் வருகின்றது.

இந்த பட்ஜெட்டை யாரெல்லாம் ஆதரிப்பார்கள்? யாரெல்லாம் எதிர்ப்பார்கள்?

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கோவிட் 19 நோய்த் தொற்றுக் காரணமாக மலிந்த
பொருளாதாரத்தின் மீட்சிக்கு வழி வகுக்காது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஒதுக்கீடு
வழங்கப்படவில்லை என்பதைப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கின்றார்கள். இதனால்
உண்மையான காரணமா அல்லது இதில் ஏதேனும் அரசியல் நோக்கம் உள்ளதா?

தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிளவுபடாத ஆதரவை


வழங்குவார்களா என்பதில் மிகப் பெரிய சந்தேகம் எழுகின்றது. இன்னமும் தங்களின் நிலைப்பாட்டைப் பதிவு
செய்யாத நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இச்சூழ்நிலையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியைச் சார்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும்


தலைவர்கள் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து என்ன நினைக்கின்றார்கள்.

நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நிராகரிக்கப்பட்டால், என்ன நடக்கும். எம்மாதிரியான


மாற்றத்தை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். இந்த கோவிட் 19 நோய்த் தொற்று விஸ்வரூபம்
எடுத்துள்ள நிலையில், இதன் பாதிப்பு எப்படித் தாக்கும்.

பட்ஜெட் ஆக்கம் பெறுமா? ஆட்டிப் படைக்குமா?

https://www.google.com/amp/s/www.hmetro.com.my/node/636651/amp

https://m.malaysiakini.com/news/551654
https://ismaweb.net/2020/11/22/sokong-dulu-belanjawan-2021-kemudian-baru-bahas-apa-tak-puas-
hati/

கேள்வி 1

பட்ஜெட் : பெரும்பான்மை எதிர்ப்பு எதைப்பற்றயதானது ?

கேள்வி 2

பட்ஜெட் : எதிர்பப் ார்க்கப்பட்டது என்ன ?

கேள்வி 3

பட்ஜெட் : அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சில அரசியல் தலைவர்கள் கூறுவது "முதலில் பட்ஜெட்டை
ஆதரவு கொடுத்து அங்கீகரித்து விடுவோம், விவாதங்களையும் மாற்றங்களையும் பின்னர்
பார்த்துக்க்கொள்ளலாம்" என்கிறார்கள். ஆனால், ஆதர்வு கொடுக்க அழைக்கின்றவர்களே இன்னும் ஆதரவு
/ எதிர்ப்பு குறித்து தங்கள் நிலைப்பாட்டை இன்னும் பதிவு செய்யாமல் இருக்கிறார்களே ?

கேள்வி 4

பட்ஜெட் ஆதரவு தெரிவிப்பவர்களின் காரணம் என்னவாக இருக்கக் கூடும் ?

கேள்வி 5

வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட். இருந்தும் பற்றாக்குறை குறித்த விமர்சனங்களே அதிகம். அது ஏன் ?
கேள்வி 6

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு / எதிர்ப்பு உண்மையிலேயே மக்களின் நலனை முதன்மைபடுத்தியதா


?

கேள்வி 7

ஒரு சில அரசியல்வாதிகளின் கூற்றுபடி "அங்கீகரித்த பின்னர் விவாதங்களையும் மாற்றங்களையும்


பார்த்துக்க்கொள்ளலாம்" எனச் செய்தால், அதன் விளைவு என்ன ?

கேள்வி 8

பட்ஜெட் அங்கீகரிக்கப்பட வேண்டிய காலம் கடந்து விட்டால் அரசியலமைப்புச் சட்டப்படி தற்போதைய


அரசாங்கம் ஆட்சியை இழக்கக்கூடிய சூழல் ஏற்படலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போதைய அரசை கவிழ்க்க முன்னர் குறை கூறியவர்கள் போடும் சதித்திட்டமாக இருக்கக் கூடுமோ?

கேள்வி 9

மக்கள் கேட்கும் படி (பெரும்பான்மை) பட்ஜெட்டை மாற்றி அமைக்க முடியாதா ? அப்படி மாற்றி அமைப்பதில்
என்ன சிக்கல் உள்ளது ?

கேள்வி 10

மக்கள் கேட்கும்படி பட்ஜெட் மாற்றம் - சிக்கலை ஏற்படுத்தும்

மாற்றியமைக்காத பட்ஜெட் - உள்நாட்டுச் சிக்கலை ஏற்படுத்தும்

பட்ஜெட் அங்கீகரிப்பு கால தாமதம் - அதுவும் பல சிக்கலை உண்டாக்கும்

பட்ஜெட் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்றாலும் சிக்கல் தான்


இதற்கு என்னதான் தீர்வு ?

கேள்வி 11

பட்ஜெட் ஒதுக்கீடு - குறிப்பிட்ட சில துறை அல்லது மானியத்தைப் பற்றி மட்டும் விமர்சனம் செய்கிறவர்கள்
(நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் / அரசியல் தலைவர்கள்) ஏன் ஒட்டு மொத்த பட்ஜெட் குறித்துக்
கருத்துகளை முன் வைப்பதில் தயக்கம் காட்டுவதும் கல தாமதம் ஏற்படுத்துவதுமாக இருக்கிறார்கள்?

You might also like